Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Cittarkaṇam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
திக்கொடுதிகந்தமும் மனவேகமென்னவே
சென்றோடியாடிவருவீர்
செம்பொன்மகமேருவொடு குணமேருவென்னவே
திகழ்துருவனளவளாவி
உக்ரமிகுசக்ரதர னென்னநிற்பீர்கையி
லுழுந்தமிழுமாசமனமா
வோரேழுகடலையும் பருகவல்லீரிந்த்ர
னுலகுமயிராவதமுமே
கைக்கெளியபந்தா வெடுத்துவிளையாடுவீர்
ககனவட்டத்தையெல்லாங்
கடுகிடையிருத்தியே யட்டகுலவெற்பையுங்
காட்டுவீர்மேலுமேலும்
மிக்கசித்திகளெலாம் வல்லநீரடிமைமுன்
விளங்கவருசித்தியிலையோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
2
Keep
பாட்டளிதுதைந்துவளர் கற்பகநனீழலைப்
பாரினிடைவரவழைப்பீர்
பத்மநிதிசங்கநிதி யிருபாரிசத்திலும்
பணிசெயுந்தொழிலாளர்போற்
கேட்டதுகொடுத்துவர நிற்கவைப்பீர்பிச்சை
கேட்டுப்பிழைப்போரையுங்
கிரீடபதியாக்குவீர் கற்பாந்தவெள்ளமொரு
கேணியிடைகுறுகவைப்பீ
ரோட்டினையெடுத்தா யிரத்தெட்டுமாற்றாக
வொளிவிடும்பொன்னாக்குவீ
ருரகனுமிளைப்பாற யோகதண்டத்திலே
யுலகுசுமையாகவருளான்
மீட்டிடவும்வல்லநீ ரென்மனக்கல்லையனன்
மெழுகாக்கிவைப்பதரிதோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
3
Keep
பாரொடுநன்னீராதி யொன்றொடொன்றாகவே
பற்றிலயமாகுபோழ்து
பரவெளியின்மருவுவீர் கற்பாந்தவெள்ளம்
பரந்திடினதற்குமீதே
நீரிலுறைவண்டாய்த் துவண்டுசிவயோகநிலை
நிற்பீர்விகற்பமாகி
நெடியமுகிலேழும் பரந்துவருஷிக்கிலோ
நிலவுமதிமண்டலமதே
ஊரெனவிளங்குவீர் பிரமாதிமுடிவில்விடை
யூர்தியருளாலுலவுவீ
ருலகங்கள்கீழ்மேல தாகப்பெருங்காற்
றுலாவினற்றாரணையினான்
மேருவெனவசையாம னிற்கவல்லீருமது
மேதக்கசித்தியெளிதோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
4
Keep
எண்ணரியபிறவிதனின் மானுடப்பிறவிதா
னியாதினும்மரிதரிதுகா
ணிப்பிறவிதப்பினா லெப்பிறவிவாய்க்குமோ
வேதுவருமோவறிகிலேன்
கண்ணகனிலத்துநா னுள்ளபொழுதேயருட்
ககனவட்டத்தினின்று
காலூன்றிநின்றுபொழி யானந்தமுகிலொடு
கலந்துமதியவசமுறவே
பண்ணுவதுநன்மையிந் நிலைபதியுமட்டுமே
பதியாயிருந்ததேகப்
பவுரிகுலையாமலே கௌரிகுண்டலியாயி
பண்ணவிதனருளினாலே
விண்ணிலவுமதியமுத மொழியாதுபொழியவே
வேண்டுவேனுமதடிமைநான்
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
5
Keep
பொய்திகழுமுலகநடையென்சொல்கேனென்சொல்
கேன் பொழுதுபோக்கேதென்னிலோ
பொய்யுடனிமித்தம் புசிப்புக்கலைந்திடல்
புசித்தபின்கண்ணுறங்கல்
கைதவமலாமலிது செய்தவமதல்லவே
கண்கெட்டபேர்க்கும்வெளியாய்க்
கண்டதிதுவிண்டிதைக் கண்டித்துநிற்றலெக்
காலமோவதையறிகிலேன்
மைதிகழுமுகிலினங் குடைநிழற்றிடவட்ட
வரையினொடுசெம்பொன்மேரு
மால்வரையின்முதுகூடும் யோகதண்டக்கோல்
வரைந்துசயவிருதுகாட்டி
மெய்திகழுமஷ்டாங்க யோகபூமிக்குள்வளர்
வேந்தரேகுணசாந்தரே
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
6
Keep
கெசதுரகமுதலான சதுரங்கமனமாதி
கேள்வியினிசைந்துநிற்பக்
கெடிகொண்டதலமாறு மும்மண்டலத்திலுங்
கிள்ளாக்குசெல்லமிக்க
தெசவிதமதாய்நின்ற நாதங்களோலிடச்
சிங்காசனாதிபர்களாய்த்
திக்குத்திகந்தமும் பூரணமதிக்குடை
திகழ்ந்திடவசந்தகால
மிசையமலர்மீதுறை மணம்போலவானந்த
மிதயமேற்கொள்ளும்வண்ண
மென்றைக்குமழியாத சிவராசயோகமா
யிந்த்ராதிதேவர்களெலாம்
விசயசயசயவென்ன வாசிசொலவேகொலு
விருக்குநும்பெருமையெளிதோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
7
Keep
ஆணிலேபெண்ணிலே யென்போலவொருபேதை
யகிலத்தின்மிசையுள்ளதோ
வாடியகறங்குபோ லோடியுழல்சிந்தையை
யடக்கியொருகணமேனும்யான்
காணிலேன்றிருவருளை யல்லாதுமௌனியாய்க்
கண்மூடியோடுமூச்சைக்
கட்டிக்கலாமதியை முட்டவேமூலவெங்
கனலினையெழுப்பநினைவும்
பூணிலேனிற்றைநாட் கற்றதுங்கேட்டதும்
போக்கிலேபோகவிட்டுப்
பொய்யுலகனாயினே னாயினுங்கடையான
புன்மையேனின்னமின்னம்
வீணிலேயலையாமன் மலையிலக்காகநீர்
வெளிப்படத்தோற்றல்வேண்டும்
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
8
Keep
கன்னலமுதெனவுமுக் கனியெனவும்வாயூறு
கண்டெனவுமடியெடுத்துக்
கடவுளர்கடந்ததல வழுதழுதுபேய்போற்
கருத்திலெழுகின்றவெல்லா
மென்னதறியாமையறி வென்னுமிருபகுதியா
லீட்டுதமிழென்றமிழினுக்
கின்னல்பகராதுலக மாராமைமேலிட்
டிருத்தலாலித்தமிழையே
சொன்னவனியாவனவன் முத்திசித்திகளெலாந்
தோய்ந்தநெறியேபடித்தீர்
சொல்லுமெனவவர்நீங்கள்சொன்னவவையிற்சிறிது
தோய்ந்தகுணசாந்தனெனவே
மின்னல்பெறவேசொல்ல வச்சொல்கேட்டடிமை
மனம் விகசிப்பதெந்தநாளோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
9
Keep
பொற்பினொடுகைகாலில் வள்ளுகிர்படைத்தலாற்
போந்திடையொடுக்கமுறலாற்
பொலிவானவெண்ணீறு பூசியேயருள்கொண்டு
பூரித்தவெண்ணீர்மையா
லெற்படவிளங்குகக னத்திலிமையாவிழி
யிசைந்துமேனோக்கமுறலா
லிரவுபகலிருளான கனதந்திபடநூறி
யிதயங்களித்திடுதலாற்
பற்பலவிதங்கொண்ட புலிகலையினுரியது
படைத்துப்ப்ரதாபமுறலாற்
பனிவெயில்கள்புகுதாம னெடியவான்றொடர்நெடிய
பருமரவனங்களாரும்
வெற்பினிடையுறைதலாற் றவராசசிங்கமென
மிக்கோருமைப்புகழ்வர்காண்
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
10
Keep
கல்லாதபேர்களே நல்லவர்கணல்லவர்கள்
கற்றுமறிவில்லாதவென்
கர்மத்தையென்சொல்கேன் மதியையென்சொல்லு
கேன் கைவல்யஞானநீதி
நல்லோருரைக்கிலோ கர்மமுக்கியமென்று
நாட்டுவேன்கர்மமொருவ
னாட்டினாலோபழைய ஞானமுக்கியமென்று
நவிலுவேன்வடமொழியிலே
வல்லானொருத்தன்வர வுந்த்ராவிடத்திலே
வந்ததாவிவகரிப்பேன்
வல்லதமிழறிஞர்வரி னங்ஙனேவடமொழியின்
வசனங்கள்சிறிதுபுகல்வேன்
வெல்லாமலெவரையு மருட்டிவிடவகைவந்த
வித்தையென்முத்திதருமோ
வேதாந்தசித்தாந்த சமரசநன்னிலைபெற்ற
வித்தகச்சித்தர்கணமே.
Previous
←
Karuṇākarakkaṭavuḷ
Next
Āṉantamāṉaparam
→