Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Āṉantamāṉaparam
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
கொல்லாமையெத்தனை குணக்கேட்டைநீக்குமக்
குணமொன்றுமொன்றிலேன்பாற்
கோரமெத்தனைபக்ஷ பாதமெத்தனைவன்
குணங்களெத்தனைகொடியபாழ்ங்
கல்லாமையெத்தனை யகந்தையெத்தனைமனக்
கள்ளமெத்தனையுள்ளசற்
காரியஞ்சொல்லிடினு மறியாமையெத்தனை
கதிக்கென்றமைத்தவருளிற்
செல்லாமையெத்தனை விர்தாகோஷ்டியென்னிலோ
செல்வதெத்தனைமுயற்சி
சிந்தையெத்தனைசலன மிந்த்ரசாலம்போன்ற
தேகத்தில்வாஞ்சைமுதலா
யல்லாமையெத்தனை யமைத்தனையுனக்கடிமை
யானேனிவைக்குமாளோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
2
Keep
தெருளாகிமருளாகி யுழலுமனமாய்மனஞ்
சேர்ந்துவளர்சித்தாகியச்
சித்தெலாஞ்சூழ்ந்தசிவ சித்தாய்விசித்ரமாய்த்
திரமாகிநானாவிதப்
பொருளாகியப்பொருளை யறிபொறியுமாகியைம்
புலனுமாயைம்பூதமாய்ப்
புறமுமாயகமுமாய்த் தூரஞ்சமீபமாய்ப்
போக்கொடுவரத்துமாகி
இருளாகியொளியாகி நன்மைதீமையுமாகி
யின்றாகிநாளையாகி
யென்றுமாயொன்றுமாய்ப் பலவுமாயாவுமா
யிவையல்லவாயநின்னை
யருளாகிநின்றவர்க ளறிவதல்லாலொருவ
ரறிவதற்கெளிதாகுமோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
3
Keep
மாறுபடுதர்க்கந் தொடுக்கவறிவார்சாண்
வயிற்றின்பொருட்டதாக
மண்டலமும்விண்டலமு மொன்றாகிமனதுழல
மாலாகிநிற்கவறிவார்
வேறுபடுவேடங்கள் கொள்ளவறிவாரொன்றை
மெணமெணென்றகம்வேறதாம்
வித்தையறிவாரெமைப் போலவேசந்தைபோன்
மெய்ந்நூல்விரிக்கவறிவார்
சீறுபுலிபோற்சீறி மூச்சைப்பிடித்துவிழி
செக்கச்சிவக்கவறிவார்
திரமென்றுதந்தம் மதத்தையேதாமதச்
செய்கைகொடுமுளறவறிவா
ராறுசமயங்கடொறும் வேறுவேறாகிவிளை
யாடுமுனையாவரறிவா
ரண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
4
Keep
காயிலையுதிர்ந்தகனி சருகுபுனன்மண்டிய
கடும்பசிதனக்கடைத்துங்
கார்வரையின்முழையிற்கருங்கல்போலசையாது
கண்மூடிநெடிதிருந்துந்
தீயினிடைவைகியுந் தோயமதின்மூழ்கியுந்
தேகங்களென்பெலும்பாய்த்
தெரியநின்றுஞ்சென்னி மயிர்கள்கூடாக்குருவி
தெற்றவெயிலூடிருந்தும்
வாயுவையடக்கியு மனதினையடக்கியு
மௌனத்திலேயிருந்து
மதிமண்டலத்திலே கனல்செல்லவமுதுண்டு
வனமூடிருந்துமறிஞ
ராயுமறைமுடிவான வருணாடினாரடிமை
யகிலத்தைநாடன்முறையோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
5
Keep
சுத்தமுமசுத்தமுந் துக்கசுகபேதமுந்
தொந்தமுடனிர்த்தொந்தமும்
ஸ்தூலமொடுசூக்ஷ்மமு மாசையுநிராசையுஞ்
சொல்லுமொருசொல்லின்முடிவும்
பெத்தமொடுமுத்தியும் பாவமொடபாவமும்
பேதமொடபேதநிலையும்
பெருமையொடுசிறுமையு மருமையுடனெளிமையும்
பெண்ணினுடனானுமற்று
நித்தமுமனித்தமு மஞ்சனநிரஞ்சனமு
நிட்களமுநிகழ்சகளமு
நீதியுமநீதியு மாதியொடநாதியு
நிர்விஷயவிஷயவடிவு
மத்தனையுநீயலதெ ளத்தனையுமில்லையெனின்
யாங்களுனையன்றியுண்டோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
6
Keep
காராருமாணவக் காட்டைக்களைந்தறக்
கண்டகங்காரமென்னுங்
கல்லைப்பிளந்துநெஞ் சகமானபூமிவெளி
காணத்திருத்திமேன்மேற்
பாராதியறியாத மோனமாம்வித்தைப்
பதித்தன்புநீராகவே
பாய்ச்சியதுபயிராகு மட்டுமாமாயைவன்
பறவையணுகாதவண்ண
நேராகநின்றுவிளை போகம்புசித்துய்ந்த
நின்னன்பர்கூட்டமெய்த
நினைவின்படிக்குநீ முன்னின்றுகாப்பதே
நின்னருட்பாரமென்று
மாராருமறியாத சூதானவெளியில்வெளி
யாகின்றதுரியமயமே
யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
7
Keep
வானாதிபூதமா யகிலாண்டகோடியாய்
மலையாகிவளைகடலுமாய்
மதியாகியிரவியாய் மற்றுளவெலாமாகி
வான்கருணைவெள்ளமாகி
நானாகிநின்றவனு நீயாகிநின்றிடவு
நானென்பதற்றிடாதே
நானானெனக்குளறி நானாவிகாரியாய்
நானறிந்தறியாமையாய்ப்
போனாலதிட்டவலி வெல்லவெளிதோபகற்
பொழுதுபுகுமுன்கண்மூடிப்
பொய்த்துயில்கொள்வான்றனை யெழுப்பவசமோவி
னிப் போதிப்பதெந்தநெறியை
யானாலுமென்கொடுமை யநியாயமநியாய
மார்பாலெடுத்துமொழிவே
னண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
8
Keep
பொய்யினேன்புலையினேன்கொலையினேனின்னருள்
புலப்படவறிந்துநிலையாப்
புன்மையேன்கல்லாத நன்மையேனன்மைபோற்
பொருளலாப்பொருளைநாடும்
வெய்யனேன்வெகுளியேன் வெறியனேன்சிறிய
னேன் வினையினேனென்றென்னைநீ
விட்டுவிடநினைவையேற் றட்டழிவதல்லாது
வேறுகதியேதுபுகலாய்
துய்யனேமெய்யனே யுயிரினுக்குயிரான
துணைவனேயிணையொன்றிலாத்
துரியனேதுரியமுங் காணாவதீதனே
சுருதிமுடிமீதிருந்த
வையனேயப்பனே யெனுமறிஞரறிவைவிட்
டகலாதகருணைவடிவே
யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
9
Keep
எத்தனைவிதங்கடான் கற்கினுங்கேட்கினுமென்
னிதயமுமொடுங்கவில்லை
யானெனுமகந்தைதா னெள்ளளவுமாறவிலை
யாதினும்மபிமானமென்
சித்தமிசைகுடிகொண்ட தீகையொடிரக்கமென்
சென்மத்துநானறிகிலேன்
சீலமொடுதவவிரத மொருகனவிலாயினுந்
தெரிசனங்கண்டுமறியேன்
பொய்த்தமொழியல்லான் மருந்துக்குமெய்ம்மொழி
புகன்றிடேன்பிறர்கேட்கவே
போதிப்பதல்லாது சும்மாவிருந்தருள்
பொருந்திடாப்பேதைநானே
யத்தனைகுணக்கேடர் கண்டதாக்கேட்டதா
வவனிமிசையுண்டோசொலா
யண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
10
Keep
எக்காலமுந்தனக் கென்னவொருசெயலிலா
வேழைநீயென்றிருந்திட்
டெனதாவியுடல்பொருளுமௌனியாய்வந்துகை
யேற்றுநமதென்றவன்றே
பொய்க்காலதேசமும் பொய்ப்பொருளில்வாஞ்சை
யும் பொய்யுடலைமெய்யென்னலும்
பொய்யுறவுபற்றலும் பொய்யாகுநானென்னல்
பொய்யினும்பொய்யாகையான்
மைக்காலிருட்டனைய விருளில்லையிருவினைகள்
வந்தேறவழியுமில்லை
மனமில்லையம்மனத் தினமில்லைவேறுமொரு
வரவில்லைபோக்குமில்லை
யக்காலமிக்கால மென்பதிலையெல்லா
மதீதமயமானதன்றோ
வண்டபகிரண்டமு மடங்கவொருநிறைவாகி
யானந்தமானபரமே.
Previous
←
Cittarkaṇam
Next
Cukavāri
→