Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Cukavāri
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
இன்னமுதுகனிபாகு கற்கண்டுசீனிதே
னெனருசித்திடவலியவந்
தின்பங்கொடுத்தநினை யெந்நேரநின்னன்ப
ரிடையறாதுருகிநாடி.
யுன்னியகருத்தவிழ வுரைகுளறியுடலெங்கு
மோய்ந்துயர்ந்தவசமாகி
யுணர்வரியபேரின்ப வநுபூதியுணர்விலே
யுணர்வார்களுள்ளபடிகாண்
கன்னிகையொருத்திசிற் றின்பம்வேம்பென்னினுங்
கைக்கொள்வள்பக்குவத்திற்
கணவனருள்பெறின்முனே சொன்னவாறென்னெ
னக் கருதிநகையாவளதுபோற்
சொன்னபடிகேட்குமிப் பேதைக்குநின்கருணை
தோற்றிற்சுகாரம்பமாஞ்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
2
Keep
அன்பின்வழியறியாத வென்னைத்தொடர்ந்தென்னை
யறியாதபக்குவத்தே
யாசைப்பெருக்கைப் பெருக்கிக்கொடுத்துநா
னற்றேனலந்தேனென
என்புலமயங்கவே பித்தேற்றிவிட்டா
யிரங்கியொருவழியாயினு
மின்பவெளமாகவந் துள்ளங்களிக்கவே
யெனைநீகலந்ததுண்டோ
தன்பருவமலருக்கு மணமுண்டுவண்டுண்டு
தண்முகைதனக்குமுண்டோ
தமியனேற்கிவ்வணந் திருவுளமிரங்காத
தன்மையாற்றனியிருந்து
துன்பமுறினெங்ஙனே யழியாதநின்னன்பர்
சுகம்வந்துவாய்க்குமுரையாய்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
3
Keep
கல்லேனுமையவொரு காலத்திலுருகுமென்
கன்னெஞ்சமுருகவிலையே
கருணைக்கிணங்காத வன்மையையுநான்முகன்
கற்பிக்கவொருகடவுளோ
வல்லான்வகுத்ததே வாய்க்காலெனும்பெரு
வழக்குக்கிழுக்குமுண்டோ
வானமாய்நின்றின்ப மழையாயிரங்கியெனை
வாழ்விப்பதுன்பரங்காண்
பொல்லாதசேயெனிற் றாய்தள்ளனீதமோ
புகலிடம்பிறிதுமுண்டோ
பொய்வார்த்தைசொல்லிலோதிருவருட்கயலுமாய்ப்
புன்மையேனாவனந்தோ
சொல்லான்முழக்கிலோ சுகமில்லைமௌனியாய்ச்
சும்மாவிருக்கவருளாய்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
4
Keep
என்பெலாநெக்குடைய ரோமஞ்சிலிர்ப்பவுட
லிளகமனதழலின்மெழுகா
யிடையறாதுருகவரு மழைபோலிரங்கியே
யிருவிழிகணீரிறைப்ப
அன்பினான்மூர்ச்சித்த வன்பருக்கங்ஙனே
யமிர்தசஞ்சீவிபோல்வந்
தானந்தமழைபொழிவை யுள்ளன்பிலாதவெனை
யார்க்காகவடிமைகொண்டாய்
புன்புலான்மயிர்தோ னரம்பென்புமொய்த்திடு
புலைக்குடிலிலருவருப்புப்
பொய்யல்லவேயிதனை மெய்யென்றுநம்பியென்
புந்திசெலுமோபாழிலே
துன்பமாயலையவோ வுலகநடையையவொரு
சொப்பனத்திலும்வேண்டிலேன்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
5
Keep
வெந்நீர்பொறாதெனுடல் காலின்முட்டைக்கவும்
வெடுக்கென்றசைத்தெடுத்தால்
விழியிமைத்தங்ஙனே தண்ணருளைநாடுவேன்
வேறொன்றையொருவர்கொல்லி
னந்நேரமையோவென் முகம்வாடிநிற்பதுவு
மையநின்னருளறியுமே
யானாலுமெத்தப் பயந்தவனியானென்னை
யாண்டநீகைவிடாதே
யிந்நேரமென்றிலை யுடற்சுமையதாகவு
மெடுத்தாலிறக்கவென்றே
யெங்கெங்குமொருதீர்வை யாயமுண்டாயினு
மிறைஞ்சுசுகராதியான
தொன்னீர்மையாளர்க்கு மானுடம்வகுத்தவரு
டுணையென்றுநம்புகின்றேன்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
6
Keep
பற்றுவனவற்றிடுநிராசையென்றொருபூமி
பற்றிப்பிடிக்கும்யோகப்
பாங்கிற்பிராணலய மென்னுமொருபூமியிவை
பற்றின்மனமறுமென்னவே
கற்றையஞ்சடைமௌனி தானேகனிந்தகனி
கனிவிக்கவந்தகனிபோற்
கண்டதிந்நெறியெனத் திருவுளக்கனிவினொடு
கனிவாய்திறந்துமொன்றைப்
பெற்றவனுமல்லேன் பெறாதவனுமல்லேன்
பெருக்கத்தவித்துளறியே
பெண்ணீர்மையென்னவிரு கண்ணீரிறைத்துநான்
பேய்போலிருக்கவுலகஞ்
சுற்றிநகைசெய்யவே யுலையவிட்டாயெனிற்
சொல்லவினிவாயுமுண்டோ
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
7
Keep
அரும்பொனேமணியே யென்னன்பேயென்னன்பான
வறிவேயெனறிவிலூறு
மானந்தவெள்ளமே யென்றென்றுபாடினே
னாடினேனாடிநாடி
விரும்பியேகூவினே னுலறினேனலறினேன்
மெய்சிலிர்த்திருகைகூப்பி
விண்மாரியெனவெனிரு கண்மாரிபெய்யவே
வேசற்றயர்ந்தேனியா
னிரும்புநேர்நெஞ்சகக் கள்வனானாலுமுனை
யிடைவிட்டுநின்றதுண்டோ
வென்றுநீயன்றுநா னுன்னடிமையல்லவோ
யாதேனுமறியாவெறுந்
துரும்பனேனென்னினுங் கைவிடுதனீதியோ
தொண்டரொடுகூட்டுகண்டாய்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
8
Keep
பாராதியண்டங்க ளத்தனையும்வைக்கின்ற
பரவெளியினுண்மைகாட்டிப்
பற்றுமனவெளிகாட்டி மனவெளியினிற்றோய்ந்த
பாவியேன்பரிசுகாட்டித்
தாராளமாய்நிற்க நிச்சிந்தைகாட்டிச்
சதாகாலநிஷ்டையெனவே
சகசநிலைகாட்டினை சுகாதீதநிலயந்
தனைக்காட்டநாள்செல்லுமோ
காராரவெண்ணரு மனந்தகோடிகணின்று
காலூன்றிமழைபொழிதல்போற்
கால்வீசிமின்னிப் படர்ந்துபரவெளியெலாங்
கம்மியானந்தவெள்ளஞ்
சோராதுபொழியவே கருணையின்முழங்கியே
தொண்டரைக்கூவுமுகிலே
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
9
Keep
பேதித்தசமயமோ வொன்றுசொனபடியொன்று
பேசாதுதுறவாகியே
பேசாதபெரியோர்க ணிருவிகற்பத்தினாற்
பேசார்கள்பரமகுருவாய்ப்
போதிக்குமுக்கணிறைநேர்மையாய்க்கைக்கொண்டு
போதிப்பதாச்சறிவிலே
போக்குவரவறவின்ப நீக்கமறவசனமாப்
போதிப்பதெவரையனே
சாதித்தசாதனமு மியோகியர்கணமதென்று
சங்கிப்பராதலாலே
தன்னிலேதானாயயர்ந்து விடுவோமெனத்
தனியிருந்திடினங்ஙனே
சோதிக்கமனமாயை தனியேவினாலடிமை
சுகமாவதெப்படிசொலாய்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
10
Keep
அண்டமுடிதன்னிலோ பகிரண்டமதனிலோ
வலரிமண்டலநடுவிலோ
வனனடுவிலோவமிர்த மதிநடுவிலோவன்ப
ரகமுருகிமலர்கடூவித்
தெண்டமிடவருமூர்த்தி நிலையிலோதிக்குத்
திகந்தத்திலோவெளியிலோ
திகழ்விந்துநாதநிலை தன்னிலோவேதாந்த
சித்தாந்தநிலைதன்னிலோ
கண்டபலபொருளிலோ காணாதநிலையெனக்
கண்டசூனியமதனிலோ
காலமொருமூன்றிலோ பிறவிநிலைதன்னிலோ
கருவிகரணங்களோய்ந்த
தொண்டர்களிடத்திலோ நீவீற்றிருப்பது
தொழும்பனேற்குளவுபுகலாய்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
11
Keep
எந்தநாள்கருணைக் குரித்தாகுநாளெனவு
மென்னிதயமெனைவாட்டுதே
யேதென்றுசொல்லுவேன் முன்னொடுபின்மலைவறவு
மிற்றைவரையாதுபெற்றேன்
பந்தமானதிலிட்ட மெழுகாகியுள்ளம்
பதைத்துப்பதைத்துருகவோ
பரமசுகமானது பொறுப்பரியதுயரமாய்ப்
பலகாலுமூர்ச்சிப்பதோ
சிந்தையானதுமறிவை யென்னறிவிலறிவான
தெய்வநீயன்றியுளதோ
தேகநிலையல்லவே யுடைகப்பல்கப்பலாய்த்
திரையாழியூடுசெலுமோ
சொந்தமாயாண்டநீ யறியார்கள்போலவே
துன்பத்திலாழ்த்தன்முறையோ
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
12
Keep
எந்நாளுமுடலிலே யுயிராமுனைப்போ
லிருக்கவிலையோமனதெனு
மியானுமென்னட்பாம் பிராணனுமெமைச்சடம
தென்றுனைச்சித்தென்றுமே
யந்நாளிலெவனோ பிரித்தானதைக்கேட்ட
வன்றுமுதலின்றுவரையு
மநியாயமாயெமை யடக்கிக்குறுக்கே
யடர்ந்தரசுபண்ணியெங்கண்
முன்னாகநீயென்ன கோட்டைகொண்டாயென்று
மூடமனமிகவுமேச
மூண்டெரியுமனலிட்ட மெழுகாயுளங்கருகன்
முறைமையோபதினாயிரஞ்
சொன்னாலுநின்னரு ளிரங்கவிலையேயினிச்
சுகம்வருவதெப்படிசொலாய்
சுத்தநிர்க்குணமான பரதெய்வமேபரஞ்
சோதியேசுகவாரியே.
Previous
←
Āṉantamāṉaparam
Next
Eṅkuniṟaikiṉṟaporuḷ
→