Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Eṅkuniṟaikiṉṟaporuḷ
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
அவனன்றியோரணுவு மசையாதெனும்பெரிய
வாப்தர்மொழியொன்றுகண்டா
லறிவாவதேதுசில வறியாமையேதிவை
யறிந்தார்களறியார்களார்
மௌனமொடிருந்ததா ரென்போலுடம்பெலாம்
வாயாய்ப்பிதற்றுமவரார்
மனதெனவுமொருமாயை யெங்கேயிருந்துவரும்
வன்மையொடிரக்கமெங்கே
புவனம்படைப்பதென் கர்த்தவியமெவ்விடம்
பூதபேதங்களெவிடம்
பொய்மெயிதமகிதமேல் வருநன்மைதீமையொடு
பொறைபொறாமையுமெவ்விட
மெவர்சிறியரெவர்பெரியரெவருறவரெவர்பகைஞர்
யாதுமுனையன்றியுண்டோ
விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
2
Keep
அன்னேயனேயெனுஞ் சிலசமயநின்னையே
யையாவையாவென்னவே
யலறிடுஞ்சிலசமய மல்லாதுபேய்போல
வலறியேயொன்றுமிலவாய்ப்
பின்னேதுமறியாம லொன்றைவிட்டொன்றைப்
பிதற்றிடுஞ்சிலசமயமேற்
பேசரியவொளியென்றும் வெளியென்றுநாதாதி
பிறவுமேநிலயமென்றுந்
தன்னேரிலாததோ ரணுவென்றுமூவிதத்
தன்மையாங்காலமென்றுஞ்
சாற்றிடுஞ்சிலசமய மிவையாகிவேறதாய்ச்
சதாஞானவானந்தமா
யென்னேயெனேகருணை விளையாட்டிருந்தவா
றெம்மனோர்புகலவெளிதோ
விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
3
Keep
வேதமுடனாகம புராணமிதிகாசமுதல்
வேறுமுளகலைகளெல்லா
மிக்காகவத்துவித துவிதமார்க்கத்தையே
விரிவாவெடுத்துரைக்கு
மோதரியதுவிதமே யத்துவிதஞானத்தை
யுண்டுபணுஞானமாகு
மூகமனுபவம்வசன மூன்றுக்குமொவ்வுமீ
துபயவாதிகள்சம்மத
மாதலினெனக்கினிச் சரியையாதிகள்போது
மியாதொன்றுபாவிக்கநா
னதுவாதலாலுன்னை நானென்றுபாவிக்கி
னத்துவிதமார்க்கமுறலா
மேதுபாவித்திடினு மதுவாகிவந்தருள்செ
யெந்தைநிகுறையுமுண்டோ
விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
4
Keep
சொல்லானதிற்சற்றும் வாராதபிள்ளையைத்
தொட்டில்வைத்தாட்டியாட்டித்
தொடையினைக்கிள்ளல்போற் சங்கற்பமொன்றிற்
றொடுக்குந்தொடுத்தழிக்கும்
பொல்லாதவாதனை யெனுஞ்சப்தபூமியிடை
போந்துதலைசுற்றியாடும்
புருஷனிலடங்காத பூவைபோற்றானே
புறம்போந்துசஞ்சரிக்குங்
கல்லோடிரும்புக்கு மிகவன்மைகாட்டிடுங்
காணாதுகேட்டவெல்லாங்
கண்டதாக்காட்டியே யணுவாச்சுருக்கிடுங்
கபடநாடகசாலமோ
யெல்லாமும்வலதிந்த மனமாயையேழையா
மென்னாலடக்கவசமோ
விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
5
Keep
கண்ணாரநீர்மல்கி யுள்ளநெக்குருகாத
கள்ளனேனானாலுமோ
கைகுவித்தாடியும் பாடியும்விடாமலே
கண்பனித்தாரைகாட்டி
யண்ணாபரஞ்சோதி யப்பாவுனக்கடிமை
யானெனவுமேலெழுந்த
வன்பாகிநாடக நடித்ததோகுறைவில்லை
யகிலமுஞ்சிறிதறியுமேற்
றண்ணாருநின்னதரு ளறியாததல்லவே
சற்றேனுமினிதிரங்கிச்
சாசுவதமுத்திநிலை யீதென்றுணர்த்தியே
சகசநிலைதந்துவேறொன்
றெண்ணாமலுள்ளபடி சுகமாயிருக்கவே
யேழையேற்கருள்செய்கண்டா
யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
6
Keep
காகமானதுகோடி கூடிநின்றாலுமொரு
கல்லின்முன்னெதிர்நிற்குமோ
கர்மமானதுகோடி முன்னேசெய்தாலுநின்
கருணைப்பிரவாகவருளைத்
தாகமாய்நாடினரை வாதிக்கவல்லதோ
தமியனேற்கருட்டாகமோ
சற்றுமிலையென்பதுவும் வெளியாச்சுவினையெலாஞ்
சங்கேதமாய்க்கூடியே
தேகமானதைமிகவும் வாட்டுதேதுன்பங்கள்
சேராமல்யோகமார்க்க
சித்தியோவரவில்லை சகசநிட்டைக்குமென்
சிந்தைக்கும்வெகுதூரநா
னேகமாய்நின்னோடிருக்குநாளெந்தநா
ளிந்நாளின்முற்றுறாதோ
விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
7
Keep
ஒருமைமனதாகியே யல்லலறநின்னருளி
லொருவனான்வந்திருக்கி
னுலகம்பொறாததோ மாயாவிசித்ரமென
வோயுமோவிடமில்லையோ
வருளுடையநின்னன்பர் சங்கைசெய்திடுவரோ
வலதுகிர்த்தியகர்த்தரா
யகிலம்படைத்தெம்மை யாள்கின்றபேர்சில
ரடாதென்பரோவகன்ற
பெருமைபெறுபூரணங் குறையுமோபூதங்கள்
பேய்க்கோலமாய்விதண்டை
பேசுமோவலதுதான் பரிபாககாலம்
பிறக்கவிலையோதொல்லையா
மிருமைசெறிசடவினை யெதிர்த்துவாய்பேசுமோ
வேதுளவுசிறிதுபுகலா
யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
8
Keep
நில்லாதுதேகமெனு நினைவுண்டுதேகநிலை
நின்றிடவுமௌனியாகி
நேரேயுபாயமொன் றருளினையையோவிதனை
நின்றனுட்டிக்கவென்றாற்
கல்லாதமனமோ வொடுங்கியுபரதிபெறக்
காணவிலையாகையாலே
கையேற்றுணும்புசிப் பொவ்வாதெநாளுமுன்
காட்சியிலிருந்துகொண்டு
வல்லாளராயியம நியமாதிமேற்கொண்ட
மாதவர்க்கேவல்செய்து
மனதின்படிக்கெலாஞ் சித்திபெறலாஞானம்
வாய்க்குமொருமனுவெனக்கிங்
கில்லாமையொன்றினையு மில்லாமையாக்கவே
யிப்போதிரங்குகண்டா
யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
9
Keep
மரவுரியுடுத்துமலைவன நெற்கொறித்துமுதிர்
வனசருகுவாயில்வந்தால்
வன்பசிதவிர்த்துமனல் வெயிலாதிமழையால்
வருந்தியும்மூலவனலைச்
சிரமளவெழுப்பியு நிரினிடைமூழ்கியுந்
தேகநமதல்லவென்று
சிற்சுகவபேக்ஷையாய் நின்னன்பர்யோகஞ்
செலுத்தினாரியாம்பாவியேம்
விரவுமறுசுவையினொடு வேண்டுவபுசித்தரையில்
வேண்டுவவெலாமுடுத்து
மேடைமாளிகையாதி வீட்டினிடைவைகியே
வேறொருவருத்தமின்றி
யிரவுபகலேழையர்கள் சையோகமாயினோ
மெப்படிப்பிழைப்பதுரையா
யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
10
Keep
முத்தனையமூரலும் பவளவாயின்சொலு
முகத்திலகுபசுமஞ்சளு
மூர்ச்சிக்கவிரகசன் னதமேற்றவிருகும்ப
முலையின்மணிமாலைநால
வைத்தெமைமயக்கியிரு கண்வலையைவீசியே
மாயாவிலாசமோக
வாரிதியிலாழ்த்திடும் பாழானசிற்றிடை
மடந்தையர்கள்சிற்றின்பமோ
புத்தமிர்தபோகம் புசித்துவிழியிமையாத
பொன்னாட்டும்வந்ததென்றாற்
போராட்டமல்லவோ பேரின்பமுத்தியிப்
பூமியிலிருந்துகாண
வெத்தனைவிகாதம்வரு மென்றுசுகர்சென்றநெறி
யிவ்வுலகமறியாததோ
விகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
11
Keep
உன்னிலையுமென்னிலையு மொருநிலையெனக்கிடந்
துளறிடுமவத்தையாகி
யுருவுதான்காட்டாத வாணவமுமொளிகண்
டொளிக்கின்றவிருளென்னவே
தன்னிலைமைகாட்டா தொருங்கவிருவினையினாற்
றாவுசுகதுக்கவேலை
தட்டழியமுற்றுமில் லாமாயையதனாற்
றடித்தகிலபேதமான
முன்னிலையொழிந்திட வகண்டிதாகாரமாய்
மூதறிவுமேலுதிப்ப
முன்பினொடுகீழ்மே னடுப்பக்கமென்னாமன்
முற்றுமானந்தநிறைவே
யென்னிலைமையாய்நிற்க வியல்புகூரருள்வடிவ
மெந்நாளும்வாழிவாழி
யிகபரமிரண்டினிலு முயிரினுக்குயிராகி
யெங்குநிறைகின்றபொருளே.
Previous
←
Cukavāri
Next
Caccitāṉantacivam
→