Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Vampaṉēṉ
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
வம்பனேன் கள்ளங்கண்டு மன்னருள் வெள்ளரா
ய, வும்பர்பா லேவல்செய்யென் றுணர்த்தினை யோ
கோவானோர், தம்பிரானேநீ செய்ததயவுக்குங் கை
ம்மாறுண்டோ, வெம்பிரா னுய்ந்தேனுய்ந்தே னினி
யொன்றுங் குறைவிலேனே.
2
Keep
குறைவிலா நிறைவாய்ஞானக் கோதிலானந்தவெ
ள்ளத், துறையிலே படிந்துமூழ்கித் துளைந்துநான்
றோன்றாவாறுள், ளுறையிலே யுணர்த்திமோனவொ
ண்சுடர் வைவாடந்த, விறைவனே யுனைப்பிரிந்திங்
கிருக்கிலே னிருக்கிலேனே.
3
Keep
இருநிலமாதி நாதமீறதா மிவை கடந்த, பெரு
நில மாயதூய பேரொளிப் பிழம்பாய் நின்றுங், கரு
தரு மகண்டானந்தக் கடவுணின் காட்சிகாண, வ
ருகவென் றழைத்தாலன்றி வாழ்வுண்டோ வஞ்ச
னேற்கே.
4
Keep
வஞ்சனை யழுக்காறாதி வைத்திடும் பாண்டமான,
நெஞ்சனை வலிதின்மேன்மே னெக்குநெக் குருகப்
பண்ணி, யஞ்சலிசெய்யுங் கையுமருவிநீர் விழியுமா
கத், தஞ்சமென் றிரங்கிக்காக்கத் தற்பராபர முன
க்கே.
5
Keep
உனக்குநா னடித்தொண்டாகி யுன்னடிக் கன்பு
செய்ய, வெனக்குநீ தோற்றியஞ் சேலென்னுநா
ளெந்தநாளோ, மனக்கிலேசங்க டீர்ந்தமாதவர்க் கி
ரண்டற் றோங்குந், தனக்குநே ரில்லாவொன்றே சச்
சிதானந்த வாழ்வே.
6
Keep
வாழ்வென வயங்கி யென்னை வசஞ்செய்து மருட்
டும் பாழ்த்த, ஊழ்வினைப்பகுதி கெட்டிங் குன்னை
யுங் கிட்டுவேனோ, தாழ்வெனுஞ் சமயநீங்கித் தமை
யுணர்ந்தோர் கட்கெல்லாஞ், சூழ்வெளிப்பொருளே
முக்கட்சோதியே யமரரேறே.
7
Keep
ஏறுவாம் பரியாவாடை யிருங்கலையுரி யாவென்
றும், நாறுநற் சாந்தநீறா நஞ்சமே யமுதாக்
கொண்ட, கூறருங் குணத்தே யுன்றன் குரைகழல்
குறுகினல்லா, லாறுமோ தாபசோப மகலுமோ
வல்லறானே.
8
Keep
தானமுந் தவமும் யோகத்தன்மையு முணராவெ
ன்பால், ஞானமுந் தெவிட்டாவின்ப நன்மையுநல்
குவாயோ, பானலங்கவர்ந்த தீஞ்சொற் பச்சிளங்
கிள்ளைகாண, வானவரிறைஞ்ச மன்றுள் வயங்கிய
நடத்தினானே.
9
Keep
நடத்தியிவ் வுலகையெல்லா நாதநீ நிறைந்ததன்
மை, திடத்துட னறிந்தானந்தத் தெள்ளமு தருந்
திடாதே, விடத்திர ளனையகாம வேட்கையிலழுந்தி
மாயைச், சடத்தினை மெய்யென்றெண்ணித் தளர
வோ தனியனேனே.
10
Keep
தனிவளர் பொருளேமாறாத் தண்ணருங் கருணை
பூத்த, வினியகற் பகமேமுக்க ணெந்தையே நினக்
கன்பின்றி, நனிபெருங் குடிலங்காட்டு நயனவேற்
கரியகூந்தல், வனிதையர் மயக்கிலாழ்ந்து வருந்த
வோ வம்பனேனே.
Previous
←
Collaṟkariya
Next
Civaṉceyal
→