Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Akilāṇṭanāyaki
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
வட்டமிட்டொளிர் பிராணவாயுவெனு
நிகள மோடுகம னஞ்செயு
மனமெனும்பெரிய மத்தயானையையென்
வசமடக்கிடின்மு மண்டலத்
திட்டமுற்றவள ராஜயோகமிவன்
யோக மென்றறிஞர்புகழவே
யேழையேனுலகி னீடுவாழ்வனினி
யிங்கிதற்கு மனுமானமோ
பட்டவர்த்தனர் பராவுசக்ரதர
பாக்யமான சுபயோகமும்
பாரகாவியகவித்வ நான்மறை
பராயணஞ் செய்மதியூகமு
மட்டசித்தியு நலன் பருக்கருள
விருதுகட்டிய பொனன்னமே
யண்டகோடிபுகழ் காவைவாழுமகி
லாண்டநாயகியெனம்மையே.
Previous
←
Malaivaḷarkātali
Next
Periyanāyaki viruttam
→