Contents
Sacred Lives
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Tāyumānavar · Āṉantakkaḷippu
Tap a verse for its meaning
Tamil
ISO 15919
Meaning
Continuous
1
Keep
சங்கர சங்கர சம்பு - சிவ
சங்கர சங்கர சங்கர சம்பு.
ஆதியனாதியுமாகி எனக்
கானந்த மாயறி வாய்நின்றி லங்குஞ்
சோதிமவுனியாய்த்தோன்றி அவன்
சொல்லாதவார்த்தையைச் சொன்னாண்டிதோழி
சங்கர சங்கர சம்பு.
2
Keep
சொன்னசொல்லேதென்றுசொல்வேன் என்னைச்
சூதாய்த் தனிக்கவே சும்மா விருத்தி
முன்னிலையேதுமில்லாதே சுக
முற்றச் செய்தேயெனைப் பற்றிக்கொண்டாண்டி
சங்கர சங்கர சம்பு.
3
Keep
பற்றியபற்றறவுள்ளே தன்னைப்
பற்றச்சொன் னான்பற்றிப்பார்த்த விடத்தே
பெற்றதையேதென்றுசொல்வேன் சற்றும்
பேசாத காரியம் பேசினான் றோழி
சங்கர சங்கர சம்பு.
4
Keep
பேசாவிடும்பைகள்பேசிச் சுற்றப்
பேயங்க மாகிப் பிதற்றித் திரிந்தேன்
ஆசாபிசாசைத்துரத்தி ஐய
னடியிணைக் கீழே யடக்கிக்கொண் டாண்டி
சங்கர சங்கர சம்பு.
5
Keep
அடக்கிப்புலனைப்பிரித்தே அவ
னாகிய மேனியி லன்பை வளர்த்தேன்
மடக்கிக்கொண்டானென்னைத்தன்னுட் சற்றும்
வாய்பேசா வண்ண மரபுஞ்செய் தாண்டி
சங்கர சங்கர சம்பு.
6
Keep
மரபைக்கெடுத்தனன்கெட்டேன் இத்தை
வாய்விட்டுச் சொல்லிடின் வாழ்வெனக் கில்லை
கரவுபுருஷனுமல்லன் என்னைக்
காக்குந் தலைமைக் கடவுள்காண் மின்னே
சங்கர சங்கர சம்பு.
7
Keep
கடலின்மடைவிண்டதென்ன இரு
கண்களு மானந்தக் கண்ணீர் சொரிய
உடலும்புளகிதமாக என
துள்ள முருக வுபாயஞ்செய் தாண்டி
சங்கர சங்கர சம்பு.
8
Keep
உள்ளதுமில்லதுமாய்முன் உற்ற
உணர்வது வாயுன் னுளங்கண்ட தெல்லாந்
தள்ளெனச்சொல்லியென்னையன் என்னைத்
தானாக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி
சங்கர சங்கர சம்பு.
9
Keep
பாராதிபூதநீயல்லை உன்னிப்
பாரிந் திரியங் கரணநீ யல்லை
யாராவுணர்வுநீயென்றான் ஐய
னன்பா யுரைத்தசொல் லானந்தந் தோழி
சங்கர சங்கர சம்பு.
10
Keep
அன்பருக்கன்பானமெய்யன் ஐய
னானந்த மோன னருட்குரு நாதன்
தன்பாதஞ்சென்னியில்வைத்தான் என்னைத்
தானறிந் தேன்மனந் தானிறந் தேனே
சங்கர சங்கர சம்பு.
11
Keep
இறப்பும்பிறப்பும்பொருந்த எனக்
கெவ்வண்ணம்வந்ததென்றெண்ணியான்பார்க்கின்
மறப்புநினைப்புமாய்நின்ற வஞ்ச
மாயா மனத்தால் வளர்ந்தது தோழி
சங்கர சங்கர சம்பு.
12
Keep
மனதேகல்லாலெனக்கன்றோ தெய்வ
மௌன குருவாகி வந்துகை காட்டி
எனதாம்பணியறமாற்றி அவ
னின்னருள் வெள்ளத் திருத்திவைத் தாண்டி
சங்கர சங்கர சம்பு.
13
Keep
அருளாலெவையும்பாரென்றான் அத்தை
யறியாதே சுட்டியென் னறிவாலே பார்த்தேன்
இருளானபொருள்கண்டதல்லாற் கண்ட
வென்னையுங் கண்டில னென்னேடி தோழி
சங்கர சங்கர சம்பு.
14
Keep
என்னையுந்தன்னையும்வேறா உள்ளத்
தெண்ணாத வண்ண மிரண்டற நிற்கச்
சொன்னதுமோவொருசொல்லே அந்தச்
சொல்லால் விளைந்த சுகத்தையென் சொல்வேன்
சங்கர சங்கர சம்பு.
15
Keep
விளையுஞ்சிவானந்தபூமி அந்த
வெட்ட வெளிநண்ணித் துட்ட விருளாங்
களையைக்களைந்துபின்பார்த்தேன் ஐயன்
களையன்றி வேறொன்றுங் கண்டிலேன் றோழி
சங்கர சங்கர சம்பு.
16
Keep
கண்டார்நகைப்புயிர்வாழ்க்கை இரு
கண்காண நீங்கவுங் கண்டோந் துயிறான்
கொண்டார்போற்போனாலும்போகும் இதிற்
குணமேது நலமேது கூறாய்நீ தோழி
சங்கர சங்கர சம்பு.
17
Keep
நலமேதுமறியாதவென்னைச் சுத்த
நாதாந்த மோனமா நாட்டந்தந் தேசஞ்
சலமேதுமில்லாமலெல்லாம் வல்லான்
றாளாலென் றலைமீது தாக்கினான் றோழி
சங்கர சங்கர சம்பு.
18
Keep
தாக்குநல்லானந்தசோதி அணு
தன்னிற் சிறிய வெனைத்தன் னருளாற்
போக்குவரவற்றிருக்குஞ் சுத்த
பூரண மாக்கினான் புதுமைகாண் மின்னே
சங்கர சங்கர சம்பு.
19
Keep
ஆக்கியளித்துத்துடைக்குந் தொழி
லத்தனை வைத்துமெள் ளத்தனை யேனுந்
தாக்கறநிற்குஞ்சமர்த்தன் உள்ள
சாக்ஷியைச் சிந்திக்கத் தக்கது தோழி
சங்கர சங்கர சம்பு.
20
Keep
சிந்தைபிறந்ததுமாங்கே அந்தச்
சிந்தை யிறந்து தெளிந்தது மாங்கே
எந்தநிலைகளுமாங்கே கண்ட
யான்றா னிரண்டற் றிருந்தது மாங்கே
சங்கர சங்கர சம்பு.
21
Keep
ஆங்கென்றுமீங்கென்றுமுண்டோ சச்சி
தானந்த சோதி யகண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டாற் பின்ன
ரொன்றென்றிரண்டென் றுரைத்திடலாமோ
சங்கர சங்கர சம்பு.
22
Keep
என்று மழியுமிக் காயம் இத்தை
யேதுக்கு மெய்யென் றிருந்தீ ருலகீர்
ஒன்று மறியாத நீரோ யம
னோலைவந் தாற்சொல்ல வுத்தர முண்டோ
சங்கர சங்கர சம்பு.
23
Keep
உண்டோ நமைப்போல வஞ்சர் மல
மூறித் ததும்பு முடலைமெய் யென்று
கொண்டோ பிழைப்பதிங் கையோ அருட்
கோலத்தைமெய்யென்று கொள்ளவேண்டாவோ
சங்கர சங்கர சம்பு.
24
Keep
வேண்டா விருப்பும் வெறுப்பும் அந்த
வில்லங்கத் தாலே விளையுஞ் சனனம்
ஆண்டா னுரைத்த படியே சற்று
மசையா திருந்துகொள் ளறிவாகி நெஞ்சே
சங்கர சங்கர சம்பு.
25
Keep
அறிவாருமில்லையோ வையோ என்னை
யாரென் றறியாத வங்கதேசத்தில்
வறிதே காமத்தீயிற் சிக்கி உள்ள
வான்பொருடோற்கவோ வந்தேனான் றோழி
சங்கர சங்கர சம்பு.
26
Keep
வந்த வரவை மறந்து மிக்க
மாதர்பொன் பூமி மயக்கத்தி லாழும்
இந்த மயக்கை யறுக்க எனக்
கெந்தைமெய்ஞ்ஞான வெழில்வாள்கொடுத்தான்
சங்கர சங்கர சம்பு.
27
Keep
வாளாருங் கண்ணியர் மோகம் யம
வாதைக் கனலை வளர்க்குமெய் யென்றே
வேளா னவனுமெய் விட்டான் என்னின்
மிக்கோர் துறக்கை விதியன்றோ தோழி
சங்கர சங்கர சம்பு.
28
Keep
விதிக்கும் பிரபஞ்ச மெல்லாஞ் சுத்த
வெயின்மஞ்ச ளென்னவே வேதாகமங்கள்
மதிக்கு மதனைமதியார் அவர்
மார்க்கந் துன்மார்க்கஞ் சன்மார்க்கமோ மானே
சங்கர சங்கர சம்பு.
29
Keep
துன்மார்க்க மாதர் மயக்கம் மனத்
தூயர்க்குப் பற்றாது சொன்னேன் சனகன்
தன்மார்க்க நீதிதிட் டாந்தம் அவன்
றானந்த மான சதானந்த னன்றோ
சங்கர சங்கர சம்பு.
30
Keep
அன்றென்று மாமென்று முண்டோ உனக்
கானந்தம் வேண்டி னறிவாகிச் சற்றே
நின்றாற் றெரியு மெனவே மறை
நீதியெம் மாதி நிகழ்த்தினான் றோழி
சங்கர சங்கர சம்பு - சிவ-
சங்கர சங்கர சங்கர சம்பு.
Previous
←
Pāṭukiṉṟapaṉuval
Next
Akaval
→