Contents
Direct Inquiry
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Śrī Dakṣiṇāmūrti Stotram · Sri Dakshinamurti Stotram
Script
Tamil
Devanāgarī
Both
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
0
▾
Meaning
Keep
உலக
சிருஷ்டிகர்த்தரான
பிரம்மதேவரின்
மானசிக
புத்திரரான
சனகர்
சனந்தனர்
சனத்சுஜாதர்
சனத்குமாரர்
என்னும்
நால்வரும்
சகசிருட்டியாதி
காரியங்கட்காகத்
தாம்
பிறப்பிக்கப்பட்டமையை
பிதாவால்
கேட்டு
அதில்
விரக்தியுற்றவராய்
உபசாந்தியையே
நாடி
அதனைத்
தெளிவிப்பாரைத்
தேடி
வரும்
அதிதீவிர
பக்குவர்களின்
பொருட்டு
பரம
காருணிகனான
சாக்ஷாத்
பரமேசுவரன்
ஆலின்கீழ்
தக்ஷிணாமூர்த்தமாக
மௌனமாய்த்
தன்னிலையில்
சின்முத்திரையோடு
இருக்க
கண்டதும்
காந்தம்
கண்ட
இரும்புபோல்
கவரப்பட்டவராய்
அவ்வாறே
அவர்
அருகில்
தம்
உண்மை
நிலையில்
அமர்ந்தனர்
அம்மோனமாம்
தன்னிலை
உண்மையை
உணரும்
சக்தி
இல்லா
உத்தம
அதிகாரிகட்குத்
தடையாய்க்
காணப்படும்
உலகமாய்
காண்பானாய்
காட்டும்
ஒளியாய்
விரிந்து
ஒடுங்கும்
சக்தி
தன்னை
அன்றி
இன்மையின்
எல்லாம்
தன்மயம்
என்னும்
சர்வாத்மத்துவத்தை
தொகுத்து
இத்தோத்திரத்தால்
ஆசாரிய
சங்கரர்
அறிவிக்கலாயினர்
மன்னும்
மா
முனிவரர்
சாந்தி
மன்னவே
தென்முக
மூர்த்தியாய்த்
திகழ்ந்து
மோனமாம்
தன்னிலை
திகழ்த்தி
இத்
துதியில்
தன்மயம்
சொன்ன
அச்
சங்கரன்
துன்னும்
என்
உளே
1
▾
Meaning
Keep
மவுனம்
ஆம்
உரையால்
காட்டும்
மாப்
பிரம
வத்து
வாலன்
சிவநிலைத்
தவர்
சற்
சீடர்
செறி
குருவரன்
சிற்
கையன்
உவகை
ஓர்
உருவன்
தன்னுள்
உவப்பவன்
களி
முகத்தன்
அவனை
யாம்
தென்பால்
மூர்த்தி
அப்பனை
ஏத்துவோமே
தாத்பர்யம்
மௌனமாகிய
வியாக்கியானத்தால்
தெரிவித்த
பரப்பிரம்ம
சொரூபனும்
பாலனும்
பிரஹ்ம
நிஷ்ட
முனிகளான
உத்தம
சிஷ்யர்கள்
சூழ
இருக்கும்
குரு
சிரேஷ்டனும்
சின்முத்திரைக்
கையனும்
ஆனந்த
மூர்த்தியும்
தன்னிலேயே
ரமிப்பவனும்
சந்தோஷ
முகனும்
ஆகிய
பரம
பிதாவான
அந்தத்
தக்ஷிணாமூர்த்தியை
நாம்
துதிப்போம்
2
▾
Meaning
Keep
உலகு
கண்ணாடி
ஊர்
நேர்
உறத்
தனுள்
அஞ்ஞானத்தால்
வெளியினில்
துயில்
கனாப்
போல்
விளங்கிடக்
கண்டு
ஞானநிலை
உறு
நேரம்
தன்னை
ஒருவனாய்
எவன்
நேர்
காண்பன்
தலையுறு
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
உலகமானது
கண்ணாடியில்
காணப்படும்
பட்டணம்
போல்
தனக்குள்ளாகவே
இருந்தும்
தன்
அறியாமையால்
நித்திரையால்
கனவுபோல
வெளியில்
இருப்பதாகப்
பார்த்து
விழித்ததும்
தன்னையே
காண்பது
போல
தன்னை
அறியும்
போது
தான்
ஒருவனே
இருப்பதாக
யார்
பார்க்கின்றானோ
ஆதி
குருவான
அந்தத்
தக்ஷிணாமூர்த்திக்கு
நமஸ்காரம்
3
▾
Meaning
Keep
வித்துளே
முளை
போல்
முன்னம்
விகற்பம்
இல்
இச்சகம்
பின்
கற்பித
மாயா
தேய
கால
கர்மத்தால்
பற்பல்
சித்திரம்
விரிப்பன்
யாவன்
சித்தனும்
மாயிகன்
போல்
சத்தியால்
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
முன்பு
விதைக்குள்
முளைபோலத்
தனக்குள்
வேற்றுமை
இன்றி
இருந்த
இவ்வுலகத்தை
பின்பு
மாயையால்
பொய்யாய்த்
தோற்றும்
தேசகாலகர்மவசத்தால்
அனேக
விசித்திரமாக
சித்தனையும்
ஜாலக்காரனையும்
போல
தன்
இச்சை
சக்தியால்
எவன்
வெளியில்
விரிக்கின்றானோ
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
குருவுக்கு
நமஸ்காரம்
4
▾
Meaning
Keep
எவன்
ஒளி
உண்மை
இன்மை
இயை
பொருள்
இலங்கும்
நேரே
எவனது
நீ
ஆனாய்
என்று
இசைத்து
உணர்த்துவன்
சேர்ந்தோரை
எவனை
நேர்
காணின்
மீண்டும்
இப்பவக்
கடல்
வீழ்வு
இல்லை
தவர்
உறு
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
எவனது
உண்மைப்
பிரகாசமே
பொய்யாய்த்
தோற்றும்
பொருள்களில்
விளங்குகிறதோ
எவன்
தன்னை
அடுத்தவர்களை
தத்துவமஸி
தத்
அது
துவம்
நீ
அஸி
ஆனாய்
என்னும்
வேதவாக்கால்
நேராக
அறிவிக்கின்றானோ
எவனைப்
பிரத்தியட்சமாய்க்
கண்டால்
பின்னும்
இச்
சம்சார
சாகரத்தில்
படிவதில்லையோ
தவத்தினர்
அடையும்
அந்தக்
குரு
தக்ஷிணாமூர்த்திக்கு
நமஸ்காரம்
5
▾
Meaning
Keep
பல
துளைக்
குடத்துள்
தீபப்
பாய்
கதிர்
போல்
யார்
ஞானம்
விழி
முதல்
பொறி
வாய்ப்
பாய்ந்து
வெளிசரித்து
அறிந்தேன்
என்ன
விளங்கிடும்
எவனைச்
சார்ந்து
விளங்கும்
இவ்வவனி
யாவும்
சலம்
அறு
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
அனேக
துவாரமுள்ள
குடத்தினுள்
இருக்கும்
தீபப்பிரகாசம்
போல
எவனது
ஞானம்
கண்
முதலான
இந்திரிய
வழியாய்
வெளிப்பட்டு
விளக்க
நான்
அறிகிறேன்
என்பதாக
சுயம்பிரகாசனான
எவனை
அனுசரித்தே
இந்த
ஜகம்
எல்லாம்
பிரகாசிக்கின்றதோ
அந்தச்
சலனம்
இல்லாத
தக்ஷிணாமூர்த்தி
குருவுக்கு
நமஸ்காரம்
6
▾
Meaning
Keep
உடல்
உயிர்
பொறிகள்
புந்தி
ஒன்று
பாழ்
அகமாத்
தேர்வர்
மடந்தையர்
பாலர்
அந்தர்
மடையர்
ஏய்
மூடவாதி
மடமையால்
விளையும்
அம்மா
மயக்கமே
மாய்க்கும்
ஞானத்
தடை
அறு
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
தேகம்
பிராணன்
இந்திரியங்கள்
புத்தி
இவை
ஒடுங்கின
சூன்யம்
இவற்றையே
தானாக
பெண்டுகள்
குழந்தைகள்
குருடர்
சடர்போல
உணரும்
மூடவாதிகளது
உண்மை
அறிவின்மையால்
உண்டான
அப்
பெருமயக்கத்தைப்
போக்கும்
மயக்கம்
இல்
ஞானகுருவான
அந்தத்
தக்ஷிணாமூர்த்திக்கு
நமஸ்காரம்
7
▾
Meaning
Keep
இராகு
பற்று
இரவி
திங்கள்
என
உளன்
மாயை
மூட
பரா
உளம்
ஒடுங்க
தூங்கி
பரவிட
உணரும்
காலம்
புரா
உறங்கினன்
நான்
என்று
போதனாம்
எவன்
புமானாய்
சராசர
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
ராகுவால்
பிடிபட்ட
சூரிய
சந்திரர்
போல்
எப்பொழுதும்
உள்ள
எவன்
மாயையின்
மறைப்பால்
புருட
ஜீவனாய்
விரிந்த
மனம்
ஒடுங்கும்போது
தூங்கி
மனம்
விரிந்து
விழிக்கும்போது
முன்
தூங்கினேன்
என்று
தனது
இருப்பை
உணர்கின்றானோ
அந்தச்
சராசர
சற்குருவான
தக்ஷிணாமூர்த்திக்கு
நமஸ்காரம்
8
▾
Meaning
Keep
குழவி
முன்
நனவு
முன்னாக்
கூறு
பல்
அவத்தை
எல்லாம்
சுழலினும்
கலந்து
இருந்தே
சொலிக்கும்
உள்
அகமா
நாளும்
கழல்
விழுவோர்க்கு
ஆர்
தன்னைக்
காட்டுவன்
சிற்
குறிப்பால்
தழல்
விழிக்
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
குழந்தைப்பருவ
முதலனவும்
நனவு
முதலனவும்
மற்றும்
எல்லா
அவத்தைகளும்
மாறி
மாறி
வரினும்
மாறாமல்
கலந்து
இருந்து
உள்ளே
நான்
என்பதாக
எப்போதும்
பிரகாசிக்கும்
தன்னை
சரணம்
அடைந்தவர்கட்குச்
சின்முத்திரையால்
எவன்
விளக்குகின்றானோ
ஞான
அக்கினி
நேத்திரனான
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
குருவுக்கு
நமஸ்காரம்
9
▾
Meaning
Keep
உலகை
யார்
இப்புமான்
நோக்குறும்
பல
நனாக்
கனாவில்
கலங்கியே
மாயையாலே
காரிய
காரணம்
பின்
தலைவனும்
தாசன்
சீடன்
குரு
மகன்
தந்தை
ஆதி
தலம்
உறு
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
உலகத்தை
காரியம்
காரணம்
தலைவன்
உரியவன்
தாஸன்
உரிமை
சீடன்
குரு
மகன்
பிதா
முதலிய
பேதங்களாக
மாயையால்
மயங்கி
நனவிலும்
கனவிலும்
காண்கின்ற
இப்
புருடன்
எவனோ
உலக
குருவான
அந்தத்
தக்ஷிணாமூர்த்திக்கு
நமஸ்காரம்
10
▾
Meaning
Keep
மண்
புனல்
அனல்
கால்
வானம்
மதி
கதிரோன்
புமானும்
என்று
ஒளிர்
சராசரம்
சேர்
இது
எவன்
எட்டு
மூர்த்தம்
எண்ணுவார்க்கு
இறை
நிறைந்தோன்
எவனின்
அன்னியம்
சற்று
இன்றாம்
தண்
அருட்
குருவாம்
அந்தத்
தக்ஷிணாமூர்த்தி
போற்றி
தாத்பர்யம்
பூமி
ஜலம்
நெருப்பு
காற்று
ஆகாசம்
சூரியன்
சந்திரன்
புருடன்
என்று
சராசரமாய்த்
தோற்றுமிது
எவனது
அஷ்டமூர்த்தமோ
விசாரிப்பார்க்கு
பரனாய்
எங்கும்
நிறைந்த
எவனைக்
காட்டிலும்
அன்னியம்
சிறிதும்
இல்லையோ
அவ்
அதிசாந்த
கிருபா
மூர்த்தியான
தக்ஷிணாமூர்த்தி
குருவுக்கு
நமஸ்காரம்
11
▾
Meaning
Keep
சருவமும்
தானா
நன்றாய்ச்
சாற்றும்
இத்தோத்திரத்தின்
சிரவணம்
தன்னால்
அர்த்த
சிந்தனம்
தியானம்
கானம்
புரிவதால்
எல்லாம்
தான்
ஆம்
பூதி
சேர்
ஈசன்
தன்மை
மருவிடும்
மற்றும்
எட்டு
ஆம்
மடிவு
அறு
செல்வம்
தானே
தாத்பர்யம்
சர்வாத்மத்வத்தை
எல்லாம்
தான்
ஆதலைத்
தெளிவாய்த்
தெரிவித்த
இத்
துதியை
கேட்டல்
பொருளை
விசாரித்தல்
அப்பொருளைத்
தியானித்தல்
துதித்தல்
செய்தலால்
சர்வாத்மத்வ
மஹா
சம்பத்துள்ள
ஈச்வரத்வம்
சித்தியாவதோடு
சாசுவதமான
அணிமாதி
அஷ்டைச்வரியமும்
தானே
சித்திக்கும்