Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி லங்காதேவதையை ஜயித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
லங்காதேவதையை
ஜயித்தது
1
▾
Meaning
Keep
ஸ
லம்ப³
ஶிக²ரே
லம்பே³
லம்ப³
தோயத³
ஸந்நிபே⁴
|
ஸத்வமாஸ்தா²ய
மேதா⁴வீ
ஹநூமாந்
மாருதாத்மஜ:
||
Prose passage
▾
Meaning
Keep
நீருண்ட
மேகம்
ஆகாச
வீதியில்
தொங்குவது
போலத்
தோன்றும்
லம்பமென்ற
பெயர்
பெற்ற
ஸுவேல
மலையின்
மேலிருந்து
மஹா
புத்திமானான
ஹனுமான்,
லங்கையில்
பிரவேசித்துத்
தேடுவதற்கு
வேண்டிய
திறமையை
அடைந்து,
ராத்திரி
காலத்தில்
அந்த
நகரத்தில்
புகுந்தார்.
அது
அழகிய
பூஞ்சோலைகள்
சூழ்ந்து
நீர்வளம்
மிகுந்து,
சரத்காலத்து
மேகங்களையொத்த
வீடுகளால்
விளங்கிற்று.
ஜனங்களுடைய
கோஷம்
ஸமுத்திரம்
கர்ஜிப்பது
போலிருந்தது.
ஸமுத்திரக்
காற்று
ஸுகமாய்
எப்பொழுதும்
வீசிக்கொண்டிருந்தது.
குபேரனுடைய
அளகாபுரியைப்போல்
நன்றாய்ப்
போஷிக்கப்பட்ட
சதுரங்க
பலத்தை
உடையது.
Prose passage
▾
Meaning
Keep
அழகிய
தோரண
வாசல்களில்
மதயானைகள்
கட்டப்பட்டிருந்தன:
வெண்மையான
தோரண
வாசல்கள்
அமைக்கப்பட்டிருந்தன.
ஸர்ப்பங்களுடைய
ராஜதானியான
போகவதியைப்போல்
நன்றாய்
ரக்ஷிக்கப்பட்டது.
உயர்ந்த
வீடுகளின்
உச்சியில்
மின்னற்
கொடிகள்
கொண்ட
மேகங்கள்
இருந்தன.
அவை
நக்ஷத்திரமண்டலத்தை
அளாவி
இருந்தனவன்றோ?
காற்று
மிருதுவாயும்
சுகமாயும்
வீசிக்கொண்டிருந்தது.
இந்திரனுடைய
அமராவதியோ
என்று
மலைக்கும்படி
இருந்தது.
பொன்னால்
செய்த
பெரிய
மதில்சுவரால்
சூழப்பட்டிருந்தது.
கொடிகளிலும்
த்வஜங்களிலும்
கட்டப்பட்டிருந்த
கிங்கிணிகள்
மதுரமாய்
சப்தித்துக்கொண்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
இவைகளைப்
பார்த்து
அடங்காத
ஆச்சரியம்கொண்டு,
ஹனுமான்
தங்கப்பிராகாரத்திற்கு
ஸமீபத்தில்
சென்றார்.
தங்கமயமான
கதவுகளும்,
வைடூரியங்களிழைத்த
மேடைகளும்,
நவரத்தினங்களாலும்
ஸ்படிகத்தாலும்
முத்துக்களாலும்
விசித்திரமாய்
வேலை
செய்யப்பட்ட
தரைகளும்,
உருக்கி
ஓடவிட்ட
தங்கத்தால்
அமைக்கப்பட்ட
மதயானைகளும்,
வைடூரியப்
படிக்கட்டுகளுடனும்,
ஸ்படிகத்தினால்
புழுதியற்று
பிரகாசிக்கும்
வெள்ளியால்
செய்யப்பட்ட
மேல்
மாடங்களும்,
ஆகாசத்தையளாவும்
அழகிய
ஸபைகளும்,
கிரௌஞ்சம்,
மயில்,
ராஜ
ஹம்ஸம்
முதலிய
பக்ஷிகளும்,
வாத்தியங்களும்,
பாட்டும்,
ஆபரணங்களும்
இனிமையாய்ச்
சப்திப்பதும்,
அமராவதியோ
என்று
பார்ப்பவர்கள்
மயங்கும்படி
ஆகாசத்தில்
பறந்து
போவதுபோல்
இருப்பதுமான
அந்த
நகரம்
ஆஞ்ஜநேயருக்கு
மேலும்
ஸந்தோஷத்தையும்
ஆச்சரியத்தையும்
விருத்தி
செய்தது.
Prose passage
▾
Meaning
Keep
விரும்பக்கூடிய
ஸகல
ஐசுவரியத்தாலும்
விளங்கும்
அந்த
ராக்ஷஸ
ராஜதானியைப்
பார்த்து,
“என்ன
ஆச்சரியம்!
இந்த
லங்கையை
எந்தச்
சத்துருவாவது
கண்ணெடுத்துப்
பார்க்கக்
கூடுமா?
எக்காலத்திலும்
ஆயுதபாணிகளாக
இதை
ரக்ஷிக்கும்
ராவண
ஸைன்யங்கள்
ஸாமான்யமா?
குமுதன்,
அங்கதன்,
ஸுஷேணன்,
மைந்தன்,
த்விவிதன்,
இவர்களுக்கே
இந்த
நகரம்
தெரிந்திருக்கும்;
ஆனால்
ஸுக்ரீவனும்,
குசபர்வனும்,
கேதுமாலனும்,
நானுமே
இதில்
பிரவேசிக்க
முடியும்”
என்று
கவலை
கொண்டார்.
பிறகு
ராமனுடைய
பராக்கிரமத்தையும்
லக்ஷ்மணனுடைய
வீரியத்தையும்
நினைத்து
அளவற்ற
ஸந்தோஷமடைந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
லங்கை
என்ற
ஸ்த்ரீக்கு
ரத்தினங்களிழைத்த
பிராகாரமே
வஸ்திரம்;
யானை,
குதிரை,
பசுக்களிருக்கும்
சாலைகளே
செவிக்கு
ஆபரணங்கள்;
மதில்களிலுள்ள
ஆயுத
சாலைகளே
ஸ்தனங்கள்;
அந்த
நகரத்தில்
ரத்தின
தீபங்களாலும்,
ஜ்வலிக்கும்
வீடுகளாலும்
இருட்டென்பதே
தெரியாது.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அநேக
அற்புதமான
காக்ஷிகளைப்
பார்த்துக்கொண்டு
மாருதி
செல்லுகையில்,
அந்த
நகரத்தைக்
காக்கும்
தேவதை,
ஹனுமான்
அந்த
நகரத்தில்
பிரவேசிக்க
முயலுவதைக்
கவனித்து,
விகாரமான
ஸ்த்ரீ
ரூபத்துடன்
அவருக்கெதிரே
தோன்றிக்
கோரமான
குரலுடன்,
“நீ
யார்?
காட்டில்
வஸிக்கும்
குரங்கு
இங்கே
வந்த
காரணமென்ன?
உன்
பிராணன்
போவதற்குமுன்
உண்மையைச்
சொல்.
மூடா!
குரூர
ராக்ஷஸர்கள்
இடைவிடாமல்
இதைக்
காத்து
வருகிறார்கள்;
ராவணேசுவரன்
இதைத்
தன்னுயிரைப்போல்
ரக்ஷிக்கிறான்.
நானே
இந்த
நகரத்தைக்
காக்கும்
தேவதை;
நீ
இதற்குள்
ஸுலபமாகப்
பிரவேசிக்கலாமென்று
வந்தாயோ?”
என்று
அதட்டினாள்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
மாருதி,
“பெண்ணே!
நீ
கேட்டதற்கு
நிஜமான
மறுமொழி
சொல்கிறேன்.
ஆனால்
நீ
யார்?
விகார
ரூபத்துடன்
இந்த
நகரத்து
வாசலில்
நின்றுகொண்டு
என்னைத்
தடுத்து
ஏன்
அதட்டுகிறாய்?”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
லங்காதேவதை
தான்
கேட்டதற்குப்
பதில்
சொல்லாமல்
தன்னை
எதிர்த்துக்
கேட்ட
ஹனுமானிடத்தில்
கோபம்கொண்டு,
“கேளடா
குரங்கே!
ராக்ஷஸராஜனான
ராவணேசுவரனுடைய
கட்டளைப்படி
இந்த
நகரத்தை
ரக்ஷித்துவருகிறேன்.
என்னை
ஒருவரும்
எதிர்க்க
முடியாது;
என்னை
அலக்ஷ்யம்
செய்து
நீ
இந்த
நகரத்தில்
செல்லமுடியுமோ?
இதோ
உன்
உயிரை
வாங்குகிறேன்
பார்.
நானே
லங்காபுரி;
எந்தத்திக்கிலும்
இதைக்
காத்து
வருகிறேன்.”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்கேட்டு,
ஹனுமான்
அவளை
ஜயிப்பதற்கு
வேண்டிய
சக்தியை
மேற்கொண்டு
மஹாபர்வதத்தைப்போல்
அசையாமல்
நின்று
விகாரமான
ஸ்த்ரீரூபம்
கொண்ட
அந்தத்
தேவதையை
நோக்கி,
“இந்த
லங்காபுரியையும்
இதிலுள்ள
வீடுகளையும்
அரண்மனைகளையும்
கோட்டைகளையும்
வனங்களையும்
தோட்டங்களையும்
சோலைகளையும்
நன்றாய்ப்
பார்க்கவேண்டுமென்று
எனக்கு
மிக்க
ஆசை
உண்டு;
அப்படியே
என்
இஷ்டப்படி
ஸகல
ஆச்சரியங்களையும்
பார்க்க
வந்திருக்கிறேன்”
என்று
மறுமொழி
சொன்னார்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
லங்காதேவதை,
“மூடா!
என்னை
ஜயித்தாலல்லவா
நீ
இந்தப்
பட்டணத்தில்
புக
முடியும்?”
என்று
கடுமையாய்
அதட்டினாள்.
அதற்கு
ஹனுமான்,
“பெண்ணே!
இருக்கட்டும்;
இந்த
நகரத்தை
நன்றாகச்
சுற்றிப்பார்த்துவிட்டுத்
திரும்பிப்போக
நிச்சயித்திருக்கிறேன்”
என்று
சாந்தமாய்ப்
பதில்
சொன்னார்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
அந்த
நகரதேவதை
பயங்கரமாய்க்
கர்ஜித்து,
ஆஞ்ஜநேயரை
ஓங்கி
அறைந்தாள்.
அந்த
வானரவீரன்
கோபம்கொண்டு,
இடிபோல்
சிரித்து,
ஸ்த்ரீயை
வலதுகையால்
அடிப்பது
தனக்குக்
குறைவாகையால்,
இடதுகை
விரல்களை
மடக்கி
அவளைக்
குத்தினார்;
அதே
காரணத்தால்
அவளிடத்தில்
மிகவும்
கோபிக்கவில்லை.
அந்தக்
குத்தைத்
தாங்கமுடியாமல்
அந்த
ராக்ஷஸி
தேகம்
கலங்கி,
விகாரமான
முகத்தையும்,
கண்களையும்
உடையவளாய்ப்
பூமியில்
விழுந்தாள்.
அதைப்பார்த்து
ஹனுமான்
அவள்
ஸ்த்ரீ
என்பதை
நினைத்து,
இரக்கம்
கொண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
லங்காதேவதை
பயத்தால்
நடுங்கி
வார்த்தைகள்
குளற
கர்வமழிந்து,
“வானர
சிரேஷ்டா!
கிருபை
செய்யும்;
மஹானுபாவா!
என்னைக்
காப்பாற்றும்.
தைரியம்
பலம்
முதலிய
உத்தம
குணங்களையுடைய
வீரர்கள்
ஸ்த்ரீகளைக்
கொல்வதில்லை.
நானே
இந்த
லங்காபுரி;
உமது
பராக்கிரமத்தால்
இன்று
ஜயிக்கப்பட்டேன்.
வேறொரு
விஷயம்
சொல்லுகிறேன்,
கேளும்;
இது
ஸத்தியம்.
Prose passage
▾
Meaning
Keep
முன்காலத்தில்
பிரஹ்மதேவர்
என்னைப்
பார்த்து,
“எந்த
ஸமயத்தில்
ஒரு
வானரன்
உன்னைப்
பராக்கிரமத்தால்
ஜயிப்பானோ,
அப்பொழுது
ராக்ஷஸகுலத்திற்குப்
பெரிய
பயம்
நேரும்”
என்று
வரம்
கொடுத்திருக்கிறார்.
இன்று
உம்மைப்
பார்த்தால்
அந்தஸமயம்
வந்துவிட்டதென்று
தோன்றுகிறது.
பிரஹ்மாவின்
வார்த்தைக்கு
இரண்டுண்டோ?
துராத்மாவான
ராவணனும்,
ஸமஸ்த
ராக்ஷஸர்களும்,
ஸீதையின்
பொருட்டு
மடியும்
காலம்
ஸமீபத்திலிருக்கிறது.
வானரோத்தம!
ராவணனால்
ரக்ஷிக்கப்பட்ட
இந்த
லங்கையில்
உமது
இஷ்டப்படி
பிரவேசித்து,
வேண்டிய
காரியங்களைச்
செய்யும்.
அனேக
சாபங்களால்
கொளுத்தப்பட்ட
இந்நகரில்
பிரவேசியும்;
இந்த
ராக்ஷஸ
ராஜதானியில்
உமது
இஷ்டப்படி
ஸகலவிடங்களிலும்
ஸீதையைத்
தேடும்”
என்றாள்.
52
▾
Meaning
Keep
ப்ரவிஶ்ய
ஶாபோபஹதாம்
ஹரீஶ்வர:
புரீம்
ஶுபா⁴ம்
ராக்ஷஸ
ராஜபாலிதாம்
|
யத்³ருச்ச²யா
த்வம்
ஜநகாத்மஜாம்
ஸதீம்
விமார்க³
ஸர்வத்ர
க³தோ
யதா²ஸுகம்
||
Previous
←
லங்கையின் வளப்பம்
Next
மாருதி லங்கையில் ஸீதையைத் தேடினது
→