Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · சந்திரோதய வர்ணனை
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
சந்திரோதய
வர்ணனை
1
▾
Meaning
Keep
தத:
ஸ
மத்⁴யம்க³த
மம்ஶுமந்தம்
ஜ்யோத்ஸ்நா
விதாநம்
மஹது³த்³வமந்தம்
|
த³த³ர்ஶ
தீ⁴மாந்
தி³வி
பா⁴நுமந்தம்
கோ³ஷ்டே²
வ்ருஷம்
மத்தமிவ
ப்⁴ரமந்தம்
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அளவற்ற
காந்தியுள்ள
சந்திரன்
ஸகல
திக்குகளிலும்
நிலவை
வியாபிக்கச்
செய்துகொண்டு,
பசுக்களின்
மந்தையில்
ஸ்வேச்சையாக
உலாவும்
மதம்கொண்ட
காளையைப்போல்
ஆகாசத்தின்
நடுவில்
பிரகாசிப்பதை
மஹாபுத்திமானான
மாருதி
கண்டார்.
ஸகல
பிராணிகளுக்கும்
ஆனந்தத்தைக்
கொடுப்பதால்
சந்திரன்
பாபங்களுடைய
பலனான
துக்கத்தை
நாசம்
செய்பவர்;
ஸமுத்திரங்களைப்
பொங்கச்
செய்பவர்.
ஸகலப்
பிராணிகளையும்
விளங்கச்
செய்பவர்.
இவ்விதமான
சந்திரன்
ஆகாசவீதியில்
சென்றுகொண்டிருப்பதை
ஹனுமான்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
லோகத்தில்
மந்தரபர்வதமும்,
பிரதோஷகாலத்தில்
ஸமுத்திரமும்,
தடாகங்களில்
செந்தாமரையும்,
மிகுந்த
காந்திபெற்று
விளங்குவதுபோல்,
சந்திரனிடத்தில்
காந்தியும்
தேஜஸும்
விசேஷமாய்
விளங்கின.
நிலாவினால்
வெளுத்த
ஆகாசத்தில்
ஸஞ்சரிப்பதால்
வெள்ளிக்கூட்டில்
விளையாடும்
ராஜஹம்ஸத்தைப்
போலும்,
வெண்மையான
மந்தரகிரியின்
குகையிலிருக்கும்
ஸிம்ஹத்தைப்
போலும்,
கறுத்த
மதயானைமேலிருக்கும்
யுத்தவீரனைப்போலும்,
சந்திரன்
ஆகாசத்தில்
பிரகாசித்தான்.
கூர்மையான
கொம்புகளையுடைய
காளையைப்போலும்,
மஹாபர்வதத்தின்
வெண்மையான
சிகரத்தைப்போலும்,
தங்கப்பூண்
கட்டின
தந்தங்களுள்ள
மதயானையைப்போலும்,
சந்திரன்
ஸகல
கலைகளுடன்
விளங்கினான்.
Prose passage
▾
Meaning
Keep
பனித்துளிகளென்ற
சேறு
நீங்கி,
தன்
தேஜஸால்
சுக்கிரன்
பிருஹஸ்பதி
முதலிய
கிரஹங்களை
மறைத்ததால்
சுத்தமாய்ப்
பிரகாசித்து,
மிகவும்
வெளுத்திருப்பதால்
தன்
களங்கம்
நன்றாய்
வெளிப்பட,
சந்திரன்
ஒப்பில்லாத
மஹிமையுடன்
காணப்பட்டான்.
குகைக்கு
வெளியிலுள்ள
கற்பாறையில்
உட்கார்ந்திருக்கும்
ஸிம்ஹத்தைப்போலும்,
பெரிய
யுத்தகளத்தில்
ஸஞ்சரிக்கும்
மதயானையைப்போலும்,
ராஜ்யாபிஷேகம்
பெற்ற
அரசனைப்போலும்
சந்திரன்
பிரகாசித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
மிகுந்த
காந்தியுடன்
சந்திரன்
உதித்ததால்
இருள்
நீங்கிற்று;
மாம்ஸத்தைப்
புசிக்கும்
ராக்ஷஸர்கள்
வெளியில்
ஸஞ்சரிக்க
ஆரம்பித்தார்கள்;
அழகிய
ஸ்த்ரீகள்
கோபம்,
கர்வம்
முதலியவைகளை
விட்டார்கள்;
ஸ்வர்க்கத்தைப்போல்
ஸகலவிதமான
ஆனந்தத்திற்கும்
காரணமான
காலமும்
ஸமீபித்தது.
Prose passage
▾
Meaning
Keep
வீணை
முதலிய
வாத்தியங்களின்
நாதம்
மதுரமாய்க்
கேட்டது;
பதிவிரதைகள்
தங்களுடைய
நாயகர்களுடன்
நித்திரை
செய்தார்கள்.
ராத்திரியில்
ஸஞ்சரிக்கும்
ஜந்துக்களும்
ராக்ஷஸர்களும்
ஆச்சரியகரமான
குரூர
ஸ்வபாவத்துடன்
விளையாட
ஆரம்பித்தார்கள்.
ராக்ஷஸர்களுடைய
கிருஹங்களிலுள்ள
ஜனங்கள்
மதுபானத்தால்
மயங்கிச்
செய்யும்
தொழில்களை
மறந்தார்கள்.
யானை,
குதிரை,
ரதம்
முதலிய
வாஹனங்களும்
ஆஸனங்களும்
நிறைந்திருந்தன.
வீரலக்ஷ்மி
எங்கும்
விளங்கிற்று.
Prose passage
▾
Meaning
Keep
வீடுகளில்
சிலர்
ஒருவருக்கொருவர்
பரிஹாஸம்
செய்துகொண்டிருந்தார்கள்;
சிலர்
நீண்டு
பருத்த
கைகளை
ஒருவர்மேலொருவர்
போட்டார்கள்;
குடிமயக்கத்தால்
சிலர்
பிதற்றினார்கள்;
சிலர்
ஒருவரையொருவர்
அதட்டினார்கள்.
சிலர்
வீரவாதம்செய்து
மார்பு
தட்டினார்கள்;
சிலர்
கைகால்களைத்
தங்கள்
நாயகிகள்மேல்
போட்டார்கள்;
சிலர்
அவர்களின்
பிரீதியை
ஸம்பாதிக்கும்
பொருட்டு
அனேக
வேஷங்களைத்
தரித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
சிலர்
பெரிய
வில்லுகளை
எடுத்து
நாணேற்றினார்கள்;
சில
ஸ்த்ரீகள்
நேர்த்தியான
பரிமளத்
திரவியங்களைப்
பூசிக்கொண்டார்கள்;
சிலர்
அயர்ந்து
நித்திரை
செய்து,
விழித்துக்கொண்டு
நாயகனுடன்
கூடி,
மறுபடியும்
தூங்கினர்;
சில
ரூபவதிகள்
நாயகர்களுடன்
ஸுகமனுபவித்து
ஸந்தோஷமாகச்
சிரித்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள்;
சிலர்
புருஷனிடத்தில்
கோபம்கொண்டு
பெருமூச்சு
விட்டார்கள்.
மேகங்களைப்போல்
கர்ஜிக்கும்
யானைகளாலும்,
பிறரால்
கொண்டாடப்பட்ட
நல்லொழுக்கமுள்ளவர்களாலும்,
தங்களுக்கு
எதிரிகள்
கிடைக்காததால்
பெருமூச்சுவிடும்
வீரர்களாலும்,
அந்த
லங்காபுரி
மஹாஸர்ப்பங்கள்
சீறிக்கொண்டிருக்கும்
பெரிய
மடுவைப்போல்
விளங்கிற்று.
Prose passage
▾
Meaning
Keep
மேன்மையான
புத்தியுடையவர்களையும்,
பிரியமாய்ப்
பேசுகிறவர்களையும்,
ஆஸ்திக
புத்தியுள்ளவர்களையும்,
லோகத்தில்
விசேஷ
கீர்த்தி
பெற்றவர்களையும்,
பலவித
ரூபங்களையும்
ஆசாரங்களையுமுடையவர்களையும்,
அழகான
பெயரையுடைய
அனேக
ராக்ஷஸர்களையும்
மாருதி
பார்த்துக்கொண்டே
சென்றார்.
அழகிய
ரூபமுடையவர்களையும்,
பலவித
குணங்களையுடையவர்களையும்,
தங்களுடைய
குணங்களுக்குத்
தகுந்த
ரூபத்தையுடையவர்களையும்,
சில
ஸ்த்ரீகள்
தேக
காந்தியால்
எங்கும்
பிரகாசிக்கச்
செய்வதையும்,
சிலர்
அழகில்லாமல்
குரூபிகளாயிருப்பதையும்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
விவாஹப்
பருவத்தை
அடைந்திருப்பவர்களையும்,
கபடமில்லாத
சுத்தஸ்வபாவமுடையவர்களையும்,
மஹாபதிவிரதைகளையும்,
நாயகனிடத்திலும்
மதுபானத்திலும்
ஆசைகொண்டவர்களையும்,
மஹிமையுள்ள
நக்ஷத்திர
கணங்களைப்போன்ற
ராக்ஷஸ
ஸ்த்ரீகளையும்
கண்டார்.
தேக
காந்தியால்
ஜ்வலிப்பவர்களையும்,
வெட்கம்
மேற்கொண்டவர்களையும்,
ஸந்தோஷம்
மேலிட்டவர்களையும்,
ராத்திரிகாலத்தில்
புஷ்பத்தால்
மூடப்பட்ட
பெண்பக்ஷியைப்போல்
நாயகனை
ஆலிங்கனம்
செய்துகொண்டு
தூங்குகின்றவர்களையும்
பார்த்தார்.
வேறு
சில
தர்மபுத்தியுள்ள
பத்தினிகள்
பர்த்தாக்களுடைய
பிரீதிக்குப்
பாத்திரமாய்,
அவர்களிடத்தில்
ஆசைகொண்டு,
மாளிகையின்மேல்
நிலவில்
அவர்களுடைய
மடியில்
உட்கார்ந்திருப்பதையும்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
மேற்போர்வை
விலகித்
தூங்கும்
சில
பெண்கள்
தங்கக்கொடிகள்
போலும்,
சிலர்
உருக்கியோடவிட்ட
உத்தமமான
தங்கம்போலும்
கணவனைவிட்டுப்
பிரிந்த
சிலர்
வெளுத்த
சந்திரனைப்போலும்
காணப்பட்டார்கள்.
சிலர்
தங்களுடைய
ஆசை
நாயகர்களைத்
தேடிச்சென்று,
அவர்களுடன்
ஆனந்தமாக
அனுபவிப்பதையும்
பார்த்தார்.
பூர்ண
சந்திரனைப்போல
பிரகாசிக்கும்
முகங்களையும்,
வளைந்த
இமைகளால்
அலங்கரிக்கப்பட்ட
நேத்திரங்களையும்,
மின்னற்கொடிபோன்ற
ஆபரணங்களையும்
பார்த்தார்.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்
நிகரில்லாத
ரூபவதியாய்,
தர்மமார்க்கத்தைவிட்டு
நழுவாத
ஜனக
மஹாராஜ
புத்திரியாய்ப்
பிறந்து,
நன்றாக
வளர்ந்து
புஷ்பங்களால்
விளங்கும்
கொடியைப்போல்
லாவண்யமுடையவளாய்,
லோகநாதனான
ராமனுக்குத்
தகுந்த
அற்புதரூபத்துடன்
அவதரித்த
ஸீதையை
மாத்திரம்
காணவில்லை.
அனாதிகாலமாயுள்ள
பதிவிரதாதர்மத்தை
அனுஷ்டித்து,
ராமனைப்
பார்க்காமல்
உயிரை
வைத்துக்கொள்வதில்லை
என்று
நிச்சயித்து,
அவரிடத்தில்
நீங்காத
ஆசைகொண்டவளாய்,
அவருடைய
மனத்திலேயே
குடிபுகுந்தவளாய்,
உத்தம
ஸ்த்ரீகளுக்குச்
சிரோமணியாய்
விளங்கும்
ஜானகியை
மாத்திரம்
காணவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
விரஹாக்னியால்
கொளுத்தப்பட்டு,
இடைவிடாமல்
பெரும்
கண்ணீர்
நெஞ்சையடைக்க,
முன்,
ராமனுடன்
ஸுகமாய்
வஸிக்கும்பொழுது
விலையுயர்ந்த
ஹாரங்களை
அணிந்து,
அழகான
இமையுடையவளாக,
குயில்போன்ற
மதுரத்வனியுடன்,
வனத்தில்
மேகத்தைக்
கண்டு
ஆனந்தத்தால்
தோகையை
விரித்தாடும்
மயிலைப்போன்ற
ஸீதையை
மாத்திரம்
காணவில்லை.
மங்கின
கிரணங்களை
உடைய
சந்திரனைப்போல்
இளைத்து,
புழுதி
மூடின
தங்கப்பிரதிமைபோல்
அழுக்கடைந்து,
அம்பு
பாய்ந்த
காயம்
மேலே
மாத்திரம்
ஆறி,
உள்ளே
அம்பும்
புண்ணும்
இருந்து
உபத்திரவிப்பதுபோல்
ஹிருதயத்தில்
துக்கமென்ற
நெருப்பு
எரிக்க,
பெருங்காற்றாலடிக்கப்பட்டுச்
சிதறின
மேகக்கூட்டத்தைப்போல்
தன்
எண்ணங்களெல்லாம்
பாழான
ஸீதையை
மாத்திரம்
பார்க்கவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
நெடுநேரம்
தேடியும்,
லோகநாதனும்
பேசும்
திறமையுள்ளவர்களுக்குள்
சிரேஷ்டருமான
ராமனுடைய
தர்மபத்தினியைக்
காணாமல்
புத்தி
மயங்கினவன்போல்
மிகுந்த
கவலை
கொண்டார்.
27
▾
Meaning
Keep
ஸீதாமபஶ்யந்
மநுஜேஶ்வரஸ்ய
ராமஸ்ய
பத்நீம்
வத³தாம்
வரஸ்ய
|
ப³பூ⁴வ
து³க்கா²பி⁴ஹதஶ்
சிரஸ்ய
ப்லவங்க³மோ
மந்த³
இவாசிரஸ்ய
||
Previous
←
மாருதி லங்கையில் ஸீதையைத் தேடினது
Next
மாருதி பிரபுக்களுடைய வீடுகளில் தேடியது
→