Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி பிரபுக்களுடைய வீடுகளில் தேடியது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
பிரபுக்களுடைய
வீடுகளில்
தேடியது
1
▾
Meaning
Keep
ஸ
நிகாமம்
விமாநேஷு
விஷண்ண:
காமரூபத்⁴ருக்
|
விசசார
கபிர்
லங்காம்
லாக⁴வேந
ஸமந்வித:
||
Prose passage
▾
Meaning
Keep
தேஜஸ்வியும்
விரும்பிய
வடிவம்
தாங்கும்
சக்தியுடையவருமான
மாருதி,
விமானங்களின்மேல்
சற்றுநேரம்
ஒன்றும்
தோன்றாமல்
உட்கார்ந்திருந்து,
பிறகு
தைர்யம்
கொண்டு
மறுபடியும்
லங்காபுரியில்
ஜாக்கிரதையாய்த்
தேட
ஆரம்பித்து
ராவணேசுவரனுடைய
அரண்மனைக்கு
வந்து
சேர்ந்தார்.
அது
ஸூரியனைப்போல்
காந்தியுள்ள
மதில்சுவர்களால்
சூழப்பட்டு,
ஸிம்ஹங்கள்
பெரும்காட்டைக்
காப்பதுபோல்
கோரமான
ராக்ஷஸர்களால்
ரக்ஷிக்கப்பட்டிருந்தது.
விசித்திரமான
வெள்ளித்தோரணங்கள்
தங்கவேலை
செய்யப்பட்டு
வாசலில்
விளங்கின.
அழகிய
அறைகளும்
வாசற்படிகளும்
அமைக்கப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
கணக்கில்லாத
யானைவீரர்களும்
சோர்வில்லாத
காலாள்வீரர்களும்,
கொல்லமுடியாத
உத்தமமான
போர்க்குதிரைகளும்,
ரதவீரர்களும்
அதை
இமைகொட்டாமல்
காத்துக்கொண்டிருந்தார்கள்.
தங்கம்,
வெள்ளி,
தந்தம்
முதலியவைகளால்
அலங்கரிக்கப்பட்டு
ஸிம்ஹம்,
புலி
முதலியவைகளின்
தோல்களால்
பரப்பப்பட்டு,
மேகங்களைப்போல
சப்திக்கும்
உத்தமரதங்கள்
எப்பொழுதும்
ஸஞ்சரித்துக்கொண்டே
இருந்தன.
நானாரத்னங்களாலும்,
உத்தமமான
ஆஸனங்களாலும்,
பாத்திரங்களாலும்
நிறைந்திருந்தது.
சிறந்த
மஹாரதர்களாலும்
மஹாரதங்களின்
சப்தத்தாலும்
விளங்கிற்று.
அனேகமாயிரம்
அபூர்வமான
அழகிய
மிருகங்களும்
பக்ஷிகளும்
அவைகளுக்குத்
தகுந்தபடி
வளர்க்கப்பட்டு
நாற்புறங்களிலும்
ஸஞ்சரித்துக்கொண்டிருந்தன.
நன்றாய்ப்
பழக்கப்பட்ட
எல்லைக்
காப்போர்களும்
ராக்ஷஸர்களும்
தங்கள்
உயிரைப்போல்
அதைப்
பாதுகாத்துக்கொண்டிருந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அழகிய
ஸ்த்ரீகளால்
எங்கும்
நிறைந்து,
அவர்களுடைய
ஸந்தோஷத்வனியாலும்
அவர்கள்
தரித்த
சிரேஷ்டமான
ஆபரணங்களின்
சப்தத்தாலும்
ஸமுத்திரம்
பொங்கிக்
கர்ஜிப்பதுபோலிருந்தது.
அரசர்களுக்குத்
தகுந்த
ஸகல
பதார்த்தங்கள்
நிறைந்து,
சந்தனம்,
அகில்
முதலிய
வாசனைத்திரவியங்களால்
பரிமளித்து,
ஸிம்ஹங்கள்
மிகுந்தபெருங்காட்டைப்போல்
மஹாஜனங்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அங்கே
பேரிகை,
மிருதங்கம்,
சங்கம்
முதலிய
வாத்தியங்கள்
எப்பொழுதும்
முழங்கிக்கொண்டிருந்தன;
பிரதிதினமும்
கந்தம்,
புஷ்பம்,
தூபம்
முதலியவைகளால்
பூஜை
செய்யப்பட்டது;
அமாவாஸ்யை,
பௌர்ணிமை
முதலிய
பருவகாலங்களில்
அங்கே
ஹோமங்கள்
விதிப்படி
நடக்கும்;
ராக்ஷஸர்கள்
தங்கள்
பிரபுவின்
கிருஹமென்று
அதைப்
பூஜித்துவந்தார்கள்.
ஸமுத்திரத்தைப்போல்
கம்பீரமாய்
சத்தமில்லாமலும்
இருந்தது.
விலையுயர்ந்த
ரத்னங்களிழைத்த
பாத்திரங்களும்
ஆபரணங்களும்
எங்கும்
காணப்பட்டன.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
காந்திமிகுந்த
யானை,
குதிரை,
ரதங்களால்
நிறைந்து
பிரகாசிக்கும்
அந்த
அரண்மனையைப்
பார்த்து
ஆஞ்ஜநேயர்
இது
லங்கைக்குப்
பூஷணமென்றே
நினைத்து
ஆச்சரியமடைந்தார்.
ராவணனுடைய
கிருஹத்தின்
ஸமீபத்தில்
சென்று,
ராக்ஷஸர்கள்
வஸிக்கும்
வீடுகளையும்
தோட்டங்களையும்
ஒவ்வொன்றாய்ப்
பார்த்துக்கொண்டு
சிறிதும்
பயமில்லாமல்
உப்பரிகைகளில்
ஸஞ்சரித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
வெளிப்பிரகாரத்திற்குள்
பிரதான
ராக்ஷஸர்களும்
ராவணனுடைய
புத்திரர்களும்
ஸஹோதரர்களும்
வஸிக்கும்
வீடுகளில்
தேடிப்பார்த்து,
பிரஹஸ்தன்
மஹாபார்சுவன்
கும்பகர்ணன்
விபீஷணன்
மஹோதரன்
விரூபாக்ஷன்
வித்யுஜ்ஜிஹ்வன்
வித்யுன்மாலி
வஜ்ரதம்ஷ்ட்ரன்
சுகன்
ஸாரணன்
இந்திரஜித்
ஜம்புமாலி
ஸுமாலி
ரச்மிகேது
ஸூரியசத்ரு
வஜ்ரகாயன்
தூம்ராக்ஷன்
ஸம்பாதி
வித்யுத்ரூபன்
கனன்
விகனன்
சுகநாஸன்
வக்ரன்
சடன்
விகடன்
ஹ்ரஸ்வகர்ணன்
தம்ஷ்ட்ரன்
ரோமசன்
யுத்தோன்மத்தன்
மத்தன்
த்வஜக்ரீவன்
நாதி
இந்த்ரஜிஹ்வன்
ஹஸ்திமுகன்
கராளன்
பிசாசன்
சோணிதாக்ஷன்
முதலியவர்களுடைய
வீடுகளை
ஒவ்வொன்றாய்த்
தேடினார்.
அங்கங்கே
அந்த
பாக்கியசாலிகள்
அனுபவிக்கும்
அளவற்ற
ஐசுவரியங்களைக்
கண்டு
ஆச்சரியப்பட்டார்.
Prose passage
▾
Meaning
Keep
அவைகளைத்
தாண்டி
ராவணனுடைய
அரண்மனைக்கு
வந்து
பார்க்கையில்,
அங்கே
அந்தப்புரத்து
வாசலைக்காக்கும்
கோரதிருஷ்டியுள்ள
ராக்ஷஸிகள்
அரசனுக்கருகில்
முறைவைத்துக்
காத்துக்கொண்டிருந்தார்கள்.
சில
ராக்ஷஸிகள்
சூலம்,
சக்தி
முதலிய
அனேக
ஆயுதங்களைத்
தரித்து
நின்றார்கள்;
அங்கங்கே
பல
ராக்ஷஸ
ஸைன்யங்கள்
அணிவகுக்கப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
பருத்த
சரீரமுள்ள
அனேக
ராக்ஷஸர்கள்
ஸகலாயுதபாணிகளாய்க்
காத்துக்கொண்டிருந்தார்கள்;
வாயுவேகமுள்ள
அனேகம்
சிவப்புக்
குதிரைகளும்,
வெள்ளைக்
குதிரைகளும்
அங்கே
கட்டப்பட்டிருந்தன;
உத்தமஜாதியில்
பிறந்த
அநேக
யானைகள்,
வர்ஷிக்கும்
மேகங்களைப்போலும்
நீர்த்தாரைகள்
நிறைந்த
மலைகளைப்போலும்
மதஜலம்
பெருக,
ஸகல
லக்ஷணங்களும்
அழகும்
பொருந்தினவைகளாய்
அங்கே
ஸஞ்சரித்துக்கொண்டிருந்தன.
அவை
சத்ருஸைன்யங்களை
நாசம்
செய்யும்;
அவைகளிலுள்ள
யானைகளை
ஹிம்ஸிக்கும்;
கஜவித்யைப்படி
நன்றாகப்
பழக்கப்பட்டவை;
யுத்தத்தில்
ஐராவதத்திற்கு
ஸமமானவை;
நீருண்ட
மேகங்களைப்போல்
கர்ஜிப்பவை.
Prose passage
▾
Meaning
Keep
காலாட்படைகள்
ஆயிரக்கணக்காய்,
தேகம்
முழுவதும்
ஸாதாரண
தங்கத்தாலும்,
ஜம்பூநதியிலுண்டாகும்
தங்கத்தாலும்
செய்யப்பட்ட
ஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டு,
பாலஸூரியனைப்போல்
பிரகாசித்தார்கள்.
நானாரூபமுள்ள
அழகான
பல்லக்குகளுக்கோ
கணக்கில்லை.
விசித்திரமான
லதாகிருஹங்களும்,
நேர்த்தியான
சித்திரங்களால்
அலங்கரிக்கப்பட்ட
கிருஹங்களும்,
பலவித
விளையாட்டுகளுக்காகக்
கட்டப்பட்டிருக்கும்
கிருஹங்களும்,
மரத்தால்
செய்யப்பட்ட
கிரீடா
பர்வதங்களும்,
இரவிலும்
பகலிலும்
ஸ்த்ரீகளுடன்
அனுபவிப்பதற்காக
ஏற்பட்ட
பல
கிருஹங்களும்
எங்கே
பார்த்தாலும்
அமைக்கப்பட்டிருந்தன.
மயில்களுக்காக
அனேக
கூடுகள்
கட்டப்பட்டிருந்தன.
ராவணனுடைய
பிரதாபங்களுக்கு
அடையாளமாய்
அனேக
கொடிகள்
கட்டப்பட்டிருந்தன.
நவரத்தினங்கள்
முத்துக்கள்
பவழங்கள்
தங்கநாணயங்கள்
வெள்ளிநாணயங்கள்
முதலிய
ஸகல
ஐசுவரியங்களாலும்
பொக்கிஷங்கள்
நிறைந்திருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
மஹாபுத்திமான்களும்
ஸமர்த்தர்களுமான
சில்பிகளால்
நிர்மிக்கப்பட்டு,
மந்தரகிரியைப்போல்
உன்னதமாயும்,
ஸகலதாதுக்களாலும்
மிருகங்களாலும்
நிறைந்து,
பரமசிவன்
வஸிக்கும்
கைலாஸகிரியைப்போல்
ஆகாசத்தையளாவி
வெண்மையாய்
பூதராக்ஷஸகணங்களுக்கு
இருப்பிடமாயும்
விளங்கும்
அந்தத்
தசக்ரீவனுடைய
அரண்மனையைக்
கண்டு
மாருதி
ஆச்சரியம்
கொண்டார்.
ஸூரியன்
தனது
கிரணங்களால்
பிரகாசிப்பதுபோல்,
அது
ரத்தினங்களுடைய
ஒளியாலும்
ராவணனுடைய
தேஜஸாலும்
ஜ்வலித்தது.
Prose passage
▾
Meaning
Keep
உயர்ந்த
தங்கத்தால்
விசித்திரமாயமைக்கப்பட்ட
படுக்கைகளும்,
ஆஸனங்களும்,
முக்கியமான
பானபாத்திரங்களும்,
போஜனபாத்திரங்களும்,
அங்கே
காணப்பட்டன.
நெருங்கியிராமல்,
விஸ்தாரமான
இடைவெளிகளுடன்
கட்டப்பட்டிருக்கும்
உன்னதமான
அநேக
உப்பரிகைகளும்,
மிகவும்
நீண்ட
கட்டுகளையுடைய
பல
கிருஹங்களும்
காணப்பட்டன.
குடித்து
மிகுந்த
பானங்கள்
அங்கே
அனேக
ரத்தினபாத்திரங்களில்
வைக்கப்பட்டிருந்தன;
குடிவெறியால்
கூத்தாடும்
ஸ்த்ரீகளின்
சிலம்புகளும்
ஒட்டியாணச்
சலங்கைகளும்
ஒலிப்பதும்,
பேரிகை
மத்தளம்
மிருதங்கம்
முதலிய
வாத்தியங்கள்
சப்திப்பதும்
மதுரமாய்ச்
செவியில்
பட்டன.
ஸகல
லக்ஷணங்களும்
பொருந்திய
ஸ்த்ரீ
ரத்தினங்களால்
பிரகாசித்து,
அழகிலும்
காந்தியிலும்
ஐசுவரியத்திலும்
குபேரனுடைய
கிருஹத்தைப்
போன்ற
ராவணனுடைய
அரண்மனையில்
ஆஞ்ஜநேயர்
பிரவேசித்தார்.
41
▾
Meaning
Keep
ப்ராஸாத³
ஸங்கா⁴தயுதம்
ஸ்த்ரீரத்ந
ஶத
ஸங்குலம்
|
ஸுவ்யூட⁴
கக்ஷ்யம்
ஹநுமாந்
ப்ரவிவேஶ
மஹாக்³ருஹம்
||
Previous
←
சந்திரோதய வர்ணனை
Next
ராவணனுடைய அரண்மனை
→