Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவணனுடைய அரண்மனை
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவணனுடைய
அரண்மனை
1
▾
Meaning
Keep
ஸ
வேஶ்ம
ஜாலம்
ப³லவாந்
த³த³ர்ஶ
வ்யாஸக்த
வைடூ³ர்ய
ஸுவர்ணஜாலம்
|
யதா²
மஹத்
ப்ராவ்ருஷி
மேக⁴ஜாலம்
வித்³யுத்
பிநத்³த⁴ம்
ஸவிஹங்க³ஜாலம்
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
பலவானான
ஹனுமான்,
மின்னற்
கொடிகளோடும்
பக்ஷிக்
கூட்டங்களோடும்
கூடின
மழைக்
காலத்து
மேகங்களைப்போல்,
நவரத்தினங்களிழைத்த
தங்க
ஜன்னல்களுடன்
விளங்கும்
கிருஹ
வரிசைகளைப்
பார்த்தார்.
உத்தமமான
சங்கம்
வில்
முதலிய
ஆயுதங்களால்
பிரகாசிக்கும்
அனேக
கட்டடங்களையும்,
வீடுகளின்மேல்
அமைக்கப்பட்டிருக்கும்
உப்பரிகைகளையும்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனுடைய
அரண்மனை
சில்ப
சாஸ்திர
விதிகளின்படி
யாதொரு
தோஷமும்
இல்லாமல்
கட்டப்பட்டது;
அதிலுள்ள
பலவித
ஐசுவரியங்களால்
ஜ்வலித்துக்
கொண்டிருந்தது;
தேவர்களும்
அஸுரர்களும்
ராவணனிடத்திலுள்ள
பயத்தால்
அதைக்கண்டு
தேவாலயத்தைப்போல்
நமஸ்கரித்தார்கள்.
அதைக்
குபேரனிடத்திலிருந்து
ராவணன்
தன்
பலத்தால்
அபகரித்தான்.
லங்கையிலுள்ள
மற்ற
வீடுகளை
விசுவகர்மா
நிர்மித்தான்.
இவைகளை
மயன்
அமைத்தானென்ற
பெயரே
தவிர
ஸகலவித
யுக்திகளையும்
யோசனைகளையும்
சொல்லிக்
கட்டுவித்தவன்
ராவணனே;
அதுவும்
ஸுலபமான
காரியமல்ல.
பூமியிலுள்ள
அரண்மனைகளுக்குள்
இவைகளுக்கே
ஸகல
குணங்களும்
விசேஷமாய்ப்
பொருந்தியிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
மாருதி
அங்கே
ஸீதையைத்
தேடிக்கொண்டு
போகையில்,
ராவணனுடைய
புஷ்பக
விமானத்தைக்
கண்டார்.
அது
வேகமாய்
ஆகாசத்தில்
கிளம்பும்
மேகத்தைப்போல்
விஸ்தாரமாக,
சுத்தமான
ஸுவர்ணத்தால்
செய்யப்பட்டுப்
பார்ப்பவர்களை
மயக்கும்படியான
அழகுடன்,
ராவணனுடைய
பலத்திற்கும்
பிரதாபத்திற்கும்
தகுந்த
வாகனமாக
இருந்தது.
ஸ்வர்க்கமே
ஸகல
வைபவங்களுடன்
அகஸ்மாத்தாய்
பூலோகத்திற்கு
வந்ததோ
என்று
சொல்லும்படி
இருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
உத்தமமான
ரத்தினங்கள்
இழைக்கப்பட்டு,
காந்தியால்
ஜ்வலித்தது.
மலைச்
சிகரத்தைப்போல்
நானா
விருக்ஷங்களின்
புஷ்பங்களாலும்,
புஷ்பத்
தூளிகளாலும்
மூடப்பட்டிருந்தது.
(புஷ்பகம்
என்ற
பெயர்
கிடைத்ததற்கு
இதுவே
காரணம்).
மேகங்களுக்கு
நடுவில்
மின்னற்
கொடிகள்
பாய்வதுபோல்,
உத்தம
ஸ்த்ரீகள்
அங்குமிங்கும்
ஸஞ்சரித்துக்
கொண்டிருந்தார்கள்.
ராஜ
ஹம்ஸங்களால்
சுமக்கப்பட்டு
ஸகல
ஐசுவரியங்களும்
நிறைந்திருக்கும்
புண்ணிய
புருஷர்களுடைய
தேவ
விமானங்களை
ஒத்திருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
அனேக
தாதுக்களால்
விளங்கும்
பர்வத
சிகரம்போலும்,
நவக்ரஹங்களாலும்
நக்ஷத்திரங்களாலும்
சந்திரனாலும்
நானா
வர்ணமுள்ள
மேகக்
கூட்டங்களாலும்
பிரகாசிக்கும்
ஆகாசத்தைப்போலும்
கணக்கில்லாத
ரத்தினங்களால்
ஜ்வலித்தது.
அதில்
மலைகள்
நிறைந்த
தேசங்களும்,
மரங்கள்
நிறைந்த
மலைகளும்,
புஷ்பங்கள்
நிறைந்த
மரங்களும்,
சிறு
இதழ்கள்
நிறைந்த
புஷ்பங்களும்
விசித்திரமாக
எழுதப்பட்டிருந்தன.
வெண்மையான
கிருஹங்களும்
அழகான
புஷ்பங்களால்
விளங்கும்
தடாகங்களும்,
மெல்லிய
தாதுக்களுடன்
கூடின
தாமரைகளும்,
சிரேஷ்டமான
நானா
வனங்களும்
அங்கே
எழுதப்பட்டிருந்தன.
ரத்தினங்களுடைய
காந்தியால்
ஜ்வலித்துக்கொண்டு,
லங்கையிலுள்ள
உத்தம
கிருஹங்களைக்
காட்டிலும்
மிகவும்
பெரிதாய்
விளங்கிற்று.
Prose passage
▾
Meaning
Keep
அங்கே
ஹம்ஸம்
மயில்
முதலிய
பக்ஷிகள்,
பவழங்களால்
செய்யப்பட்ட
மூக்குகளோடும்
கால்களோடும்
வெள்ளியால்
அமைக்கப்பட்டு
வைடூரியம்
முதலிய
ரத்தினங்களால்
இழைக்கப்பட்டிருந்தன.
இன்னும்
அனேக
பக்ஷிகள்
புஷ்பம்போல்
மெல்லிய
சிறகுகளுடனும்,
விளையாடும்பொழுது
தொங்கியும்
வளைந்தும்
இருக்கிற
இறக்கைகளுடனும்,
பார்க்கையிலேயே
காம
விகாரத்தை
உண்டுபண்ணக்
கூடிய
அழகுடனும்
ஸுவர்ணத்தாலும்
பவழத்தாலும்
செய்யப்பட்டிருந்தன.
பலவகை
ஸர்ப்பங்கள்
தங்கத்தாலும்
வெள்ளியாலும்
ரத்தினங்களாலும்
செய்யப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
அழகான
துதிக்கைகளையுடைய
யானைகள்
நீரோடைகளில்
இறங்கி,
தாமரை
மலர்த்
தூளிகள்
படிந்த
தேகங்களுடன்,
கருநெய்தல்
இலைகளைத்
துதிக்கைகளால்
தானே
வர்ஷிக்கும்படி
செய்யப்பட்ட
பிரதிமைகளும்,
அவைகளால்
அபிஷேகம்
செய்யப்பட்டு,
மங்களகரமான
திருக்கைகளுடன்,
ஒரு
ஹஸ்தத்தில்
தாமரை
மலரைத்
தரித்துக்கொண்டிருக்கும்
ஜகன்மாதாவான
மஹாலக்ஷ்மியின்
விக்கிரகமும்
வெகு
சாதுரியமாக
அமைக்கப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
அழகிய
புஷ்பங்களாலும்
தளிர்களாலும்
தழைத்துப்
பரிமளம்
வீசும்
மஹா
விருக்ஷத்தைப்போலும்,
மனோகரமான
குகைகளால்
விளங்கும்
மஹா
பர்வதமானது
பனியும்
குளிரும்
நீங்கி
வஸந்த
காலத்தில்
புஷ்பங்களாலும்
பழங்களாலும்
தளிர்களாலும்
பிரகாசிப்பதுபோலும்
இருக்கும்
அந்த
மங்களகரமான
விமானத்தை
ஆஞ்ஜநேயர்
அடிக்கடிச்
சுற்றிப்
பார்த்து
அடங்காத
ஆச்சரியமடைந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
எல்லோராலும்
பூஜிக்கப்பட்டு
ராவணேசுவரனால்
பரிபாலிக்கப்பட்ட
அந்த
லங்காபுரியை
நன்றாகத்
தேடியும்,
ராமசந்திரனுடைய
அனந்த
கல்யாண
குணங்களில்
ஈடுபட்டு,
எப்பொழுதும்
அவரையே
தியானித்துக்கொண்டு
ஸகல
லோகங்களாலும்
கொண்டாடப்படும்
ஜானகியைக்
காணாமல்
மாருதி
மிகுந்த
துக்கமடைந்தார்.
அவர்
ஆத்ம
ஸ்வரூபத்தை
நன்றாக
அறிந்தவர்;
ஸன்மார்க்கத்தில்
நிலைபெற்றவர்;
மஹானுபாவர்;
பிறர்
அறிய
முடியாத
விஷயங்களையும்
பிரத்யக்ஷமாய்ப்
பார்க்கக்கூடிய
சக்தியையுடையவர்:
லங்கை
முழுவதையும்
வெகு
ஜாக்கிரதையாகச்
சுற்றிப்
பார்த்தும்
ஸீதையைக்
காணாமல்
பலபல
யோசனை
செய்து
விசேஷ
மனோ
வியாகுலத்தை
அடைந்தார்.
17
▾
Meaning
Keep
ததஸ்ததா³
ப³ஹுவித⁴
பா⁴விதாத்மந:
க்ருதாத்மநோ
ஜநகஸுதாம்
ஸுவர்த்மந:
|
அபஶ்யதோ
ப⁴வத³தி
து³க்கி²தம்
மந:
ஸுசக்ஷுஷ:
ப்ரவிசரதோ
மஹாத்மந:
||
Previous
←
மாருதி பிரபுக்களுடைய வீடுகளில் தேடியது
Next
புஷ்பக விமானம்
→