Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · புஷ்பக விமானம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
புஷ்பக
விமானம்
1
▾
Meaning
Keep
ஸ
தஸ்ய
மத்⁴யே
ப⁴வநஸ்ய
ஸம்ஸ்தி²தம்
மஹத்³
விமாநம்
மணிவஜ்ர
சித்ரிதம்
|
ப்ரதப்த
ஜாம்பூ³நத³
ஜால
க்ருத்ரிமம்
த³த³ர்ஶ
வீர:
பவநாத்மஜ:
கபி:
||
Prose passage
▾
Meaning
Keep
ராவண
கிருஹங்களுக்கு
நடுவில்
நவமணிகள்
இழைத்து
உருக்கியோடவிட்ட
தங்கத்தால்
செய்யப்பட்ட
பக்ஷிகளுடன்
விளங்கும்
ஒரு
பெரிய
விமானத்தை
ஹனுமான்
கண்டார்.
அது
அளவுக்கு
அடங்காதது;
ஒப்பில்லாதது;
விசுவகர்மா
அதை
நிர்மித்து,
“நான்
செய்த
வஸ்துக்களுள்
இதே
மிகவும்
சிலாக்கியமானது”
என்று
மெச்சினான்.
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
திக்குகளிலும்
தடையில்லாமல்
செல்லக்
கூடியது;
தேவ
விமானமானதால்
பூமியில்
படாமல்
ஆகாச
மார்க்கத்தில்
நின்று
கொண்டிருந்தது;
காந்தியால்
ஸூரிய
மார்க்கத்தைக்
குறிக்கும்
அடையாளம்
போலிருந்தது.
அதில்
ஒவ்வொரு
வேலையும்
மிகுந்த
பிரயத்தனத்தால்
செய்யப்பட்டது;
அதில்
இழைக்கப்பட்ட
ரத்தினங்கள்
ஸகல
விதத்திலும்
ஒப்பில்லாதவை;
அதிலுள்ள
விசித்திர
விசேஷங்கள்
தேவர்களுடைய
விமானங்களிலும்
இல்லை;
அதைப்பற்றிய
ஒவ்வொரு
விஷயமும்
அபூர்வமானது.
Prose passage
▾
Meaning
Keep
பூர்வ
காலத்தில்
ராவணன்
கோகர்ணக்ஷேத்திரத்தில்
பிரஹ்மாவைக்
குறித்துப்
பதினாயிரவருஷகாலம்
கோரமான
தவம்
செய்து
தன்
பராக்கிரமத்தால்
குபேரனை
ஜயித்து
இந்த
விமானத்தை
அடைந்தான்.
அது
பிரபுவின்
அபிப்பிராயத்தை
அறிந்து,
போகவேண்டிய
இடத்திற்கு
வாயுவேகமாய்ச்
செல்லும்.
அதில்
பல
விசித்திரமான
மாளிகைகள்
அமைக்கப்பட்டிருந்தன.
லோகத்தில்
அழகான
பதார்த்தங்கள்
யாவற்றிற்கும்
உபமானமாக
இருந்தன.
பிறரால்
தடுக்க
முடியாத
வேகத்தை
உடையது.
Prose passage
▾
Meaning
Keep
மஹாத்மாக்களான
பெரியோர்களுடைய
ஆசிரமம்போல்
பரிசுத்தமாயும்,
புண்ணியகர்மங்களால்
ஸம்பாதிக்கப்பட்ட
ஸ்வர்க்கத்தைப்போல்
ஸகல
போகங்களுக்கும்
இருப்பிடமாகவும்,
லக்ஷ்மீகடாக்ஷம்
பெற்ற
பாக்கியவான்களுடைய
கிருஹங்களைப்போல்
ஸகல
ஸம்பத்துக்களுடனும்
கூடினதாகவும்;
அபூர்வமான
செய்கைகளால்
அழிவற்ற
கீர்த்தியை
ஸம்பாதித்த
புண்ணியசாலிகளுடைய
இருப்பிடங்களைப்போல்
ஸகல
லோகங்களும்
கொண்டாடும்படியாகவும்
மதுரமான
கானம்
நர்த்தனம்
ரூபவதிகளான
ஸ்த்ரீகள்
திவ்விய
போகங்கள்,
அழகிய
வாஸஸ்தலங்கள்
முதலியவைகளால்
தேவேந்திரனுடைய
அமராவதியைப்
போலும்
விளங்கிற்று.
ஒப்பற்ற
வேகத்துடன்
ஆகாசத்தில்
தங்கியிருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
விசித்திரமான
கொடிமுடிகளையுடைய
மலைச்
சிகரத்தைப்போல்,
விசித்திரமான
பதார்த்தங்களுக்கு
இருப்பிடமாகவும்
விஸ்தாரமான
கட்டுக்களுடையதாயும்
மனோஹரமாயும்
சரத்
காலத்துச்
சந்திரனைப்போல்
நிர்மலமாயும்
இருந்தது.
குண்டலங்களால்
அலங்கரிக்கப்பட்ட
முகங்களுடன்
பருத்த
சரீரங்களுடனும்
ஆகாசத்தில்
அதி
வேகமாய்
ஸஞ்சரிக்கும்
ராக்ஷஸர்களைப்போலும்,
வட்டமாயும்
கோணலாயும்
அகலமாயும்
இருக்கிற
கண்களையுடைய
பூத
கணங்களைப்போலும்
அனேகமாயிரம்
பொம்மைகள்
மஹா
சாதுர்யமாய்
அதில்
செய்து
வைக்கப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
மஹா
விருக்ஷங்களடர்ந்த
வனத்தில்
நானா
வர்ணமுள்ள
புஷ்பங்களாலும்
பழங்களாலும்
தளிர்களாலும்
விளங்கும்
வஸந்த
காலத்திற்குரிய
நதிகள்,
நீரோடைகள்,
தென்றல்,
வண்டுகள்,
மயில்கள்,
குயில்கள்,
மான்
முதலிய
மிருகங்கள்,
அழகிய
ஸ்த்ரீ
புருஷர்கள்
முதலியவைகளால்
வஸந்த
ருதுவைக்காட்டிலும்
விசேஷ
அழகாய்
பிரகாசிக்கும்
அந்தப்
புஷ்பக
விமானத்தை
வானர
வீரரான
ஹநுமான்
கண்டு
ஆச்சரியமடைந்தார்.
8
▾
Meaning
Keep
வஸந்த
புஷ்போத்கர
சாரு
த³ர்ஶநம்
வஸந்த
மாஸாத³பி
காந்த
த³ர்ஶநம்
|
ஸ
புஷ்பகம்
தத்ர
விமாந
முத்தமம்
த³த³ர்ஶ
தத்³வாநர
வீர
ஸத்தம:
||
Previous
←
ராவணனுடைய அரண்மனை
Next
ராவணனுடைய அந்தப்புரம்
→