Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவணனுடைய அந்தப்புரம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவணனுடைய
அந்தப்புரம்
1
▾
Meaning
Keep
தஸ்யாலய
வரிஷ்ட²ஸ்ய
மத்⁴யே
விபுல
மாயதம்
|
த³த³ர்ஶ
ப⁴வநஶ்ரேஷ்ட²ம்
ஹநூமாந்
மாருதாத்மஜ:
||
Prose passage
▾
Meaning
Keep
அந்த
உத்தமமான
விமானத்தின்
நடுவில்
மாருதி
ஒரு
சிறந்த
மாளிகையைக்
கண்டார்.
அது
ராவணன்
வஸிக்குமிடம்.
ஒரு
யோஜனை
நீளம்
அரையோஜனை
அகலம்
விஸ்தீர்ணமுள்ளதாய்
அநேக
உப்பரிகைகளுடன்
விளங்கிற்று.
Prose passage
▾
Meaning
Keep
அங்கெல்லாம்
ஒப்பில்லாத
அழகையுடைய
ஜனக
புத்திரியைத்
தேடிக்கொண்டு
மாருதி
திரிந்து,
பிறகு
ராக்ஷஸர்களுடைய
நேர்த்தியான
கிருஹங்களைப்
பார்த்துக்கொண்டே
ராவணனுடைய
கிருஹத்திற்கு
வந்து
சேர்ந்தார்.
மூன்று
நான்கு
தந்தங்களையுடைய
உத்தமமான
யானைகள்
அங்கங்கே
கட்டப்பட்டிருந்தன.
ஆயுதபாணிகளான
ஸேவகர்கள்,
நெருங்கியிராமல்,
நான்குபுறத்திலும்
அதைச்
சூழ்ந்து
காத்துக்கொண்டிருந்தார்கள்.
அங்கே
ராவணனுடைய
பத்தினிகளான
ராக்ஷஸ
ஸ்த்ரீகளும்,
திக்விஜயம்
செய்தபோது
ஜயித்த
அரசர்களுடைய
கிருஹங்களிலிருந்து
பலாத்காரமாய்க்
கொண்டுவரப்பட்ட
ராஜ
கன்யைகளும்
தூங்கிக்
கொண்டிருந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படித்
திமிங்கிலம்,
முதலை,
மீன்
முதலிய
ஜலஜந்துக்களால்
நிறைந்து,
மலைகளைப்
போன்ற
அலைகள்
பெருங்காற்றால்
அடிக்கப்பட்டுக்
கொந்தளிக்க,
நீருண்ட
மேகங்களைப்போல்
கர்ஜித்துப்
பொங்கிக்
கொதிக்கும்
மஹா
ஸமுத்திரத்தைப்
போலிருக்கும்
அந்த
ராவண
கிருஹம்,
கோரரூபிகளாய்
ஸஹிக்க
முடியாத
தேஜஸையுடைய
ராக்ஷஸர்களால்
நிறைந்திருப்பதை
ஆஞ்ஜநேயர்
கண்டார்.
ஸகல
ஐசுவரியங்களுக்கும்
அதிபதியான
குபேரனுடைய
செல்வமும்,
தேவராஜனான
மஹேந்திரனுடைய
வைபவமும்,
பகவானுக்கு
நித்யவாஹனமாக
இருக்கப்பெற்ற
கருடனுடைய
அபார
தேஜஸும்
எல்லாம்
சேர்ந்து
எப்பொழுதும்
ராவணனுடைய
மாளிகையில்
குறையாமலிருந்தன.
லங்கையில்
வஸிக்கும்
ராக்ஷஸர்களின்
கிருஹங்களில்,
குபேரன்
யமன்
வருணன்
முதலியவர்கள்
அனுபவிக்கும்
செல்வமும்
ஐசுவரியமும்
போகங்களும்
அவைகளுக்கு
மேலானவைகளும்
காணப்பட்டன.
Prose passage
▾
Meaning
Keep
பூர்வத்தில்
விசுவகர்மா
பிரஹ்மாவிற்காக
அந்த
விமானத்தைத்
தெய்வ
லோகத்தில்
ஸிருஷ்டித்தான்.
பிறகு
குபேரன்
பிரஹ்மாவைக்
கோரமான
தவத்தால்
ஸந்தோஷப்படுத்தி
அதை
அடைந்தான்.
ஸகல
ரத்தினங்களாலும்
அலங்கரிக்கப்பட்ட
அந்த
விமானத்தை
ராவணன்,
குபேரனைத்
தன்
பராக்கிரமத்தால்
ஜயித்து
அவனிடத்திலிருந்து
அபகரித்தான்.
தங்கத்தாலும்,
வெள்ளியாலும்
விசித்திரமாய்ச்
செய்யப்பட்ட
ஸ்தம்பங்களில்
செந்நாய்களைப்
போன்ற
பிரதிமைகள்
அமைக்கப்பட்டிருந்தன.
அந்த
விமானம்
காந்தியால்
ஜ்வலிப்பதுபோல்,
மேரு
மந்தரம்
முதலிய
பர்வதங்களுக்கு
ஸமானமாய்,
ஆகாசத்தை
அளாவிற்று.
சிறு
கட்டடங்கள்
மங்களகரமான
ரூபங்களுடன்
மறைவாய்க்
கட்டப்பட்டிருந்தன.
ஸூரியன்
அக்னி
முதலியவர்களுடைய
காந்தியும்
இதன்
காந்திக்கு
ஈடல்ல.
விசுவகர்மா
செய்த
அநேக
வஸ்துக்களில்
இதே
ஸகல
விதத்திலும்
சிரேஷ்டமானது.
Prose passage
▾
Meaning
Keep
தங்கப்
படிக்கட்டுகளையுடைய
அநேக
அழகான
மேடைகளாலும்,
தங்கம்
ஸ்படிகம்
முதலிய
அபூர்வ
வஸ்துக்களால்
நிர்மிக்கப்பட்ட
ஜன்னல்களாலும்,
இலைக்கதவு
ஜன்னல்களாலும்,
இந்திரநீலம்
மஹநீலம்
முதலிய
அபூர்வமான
மணிகளால்
இழைக்கப்பட்ட
திண்ணைகளாலும்,
பவழம்
ஒப்பில்லாத
முத்துக்கள்
விலையற்ற
ரத்தினங்கள்
முதலியவைகளால்
அலங்கரிக்கப்பட்ட
தரைகளாலும்,
நேர்த்தியான
பரிமளத்துடன்
பால
ஸூரியனைப்போல்
சிவந்த
சந்தனத்தாலும்,
உதய
பர்வதத்திலிருந்து
கிளம்பும்
ஆதித்தியனைப்போல்
ஜ்வலிக்கும்
அந்தப்
புஷ்பக
விமானத்தில்
ஆஞ்ஜநேயர்
ஸீதையைத்
தேட
உத்தேசித்து
ஏறினார்.
(மஹா
நீலமென்பது
ஸிம்ஹளத்வீபத்தில்
உண்டாகும்
என்று
ரத்தின
சாஸ்திரம்
கூறுகிறது.)
Prose passage
▾
Meaning
Keep
அங்குள்ள
பலவித
பானங்களிலிருந்தும்
பக்ஷ்யங்களிலிருந்தும்
அன்னங்களிலிருந்தும்
கிளம்பும்
வாஸனை
நான்கு
பக்கத்திலும்
பரவிற்று.
அதை
வாயு
பகவான்
மனுஷ்ய
ரூபமெடுத்து
வந்ததுபோல்
ஆஞ்ஜநேயர்
முகர்ந்தார்.
தூர
தேசத்திலிருந்து
வந்தவனை
அவனுடைய
பிரியமான
பந்துக்கள்
அன்புடன்
அழைப்பதுபோல்,
ராவணனுடைய
போஜன
கிருஹத்திலிருந்து
வீசும்
பரிமளமானது
ஆஞ்ஜநேயரை
“ராவணன்
இருக்குமிடத்திற்கு
வா”
என்று
அழைப்பது
போலிருந்தது.
அந்த
வழியாகவே
சென்று
ராக்ஷஸேசுவரனுடைய
பானசாலையைக்
கண்டார்.
அது
அதிகப்
பிரியமான
உத்தம
ஸ்த்ரீயைப்போல்
ராவணனுக்கு
ஸந்தோஷத்தைக்
கொடுத்தது.
Prose passage
▾
Meaning
Keep
நவரத்தினங்களிழைத்த
படிக்கட்டுகள்
இருந்தன.
சிலவிடங்கள்
ஸ்படிகத்தாலும்
தந்தத்தாலும்
இழைக்கப்பட்டிருந்தன.
சிலவிடங்களில்
பொன்
வெள்ளி
முதலிய
வஸ்துக்களால்
அலங்கரிக்கப்பட்ட
ரத்தின
ஸ்தம்பங்கள்
அமைக்கப்பட்டிருந்தன.
மேடுபள்ளமில்லாமல்
இழைக்கப்பட்டு
சித்திர
வேலைகளால்
அலங்கரிக்கப்பட்ட
மிகவும்
உயரமான
இன்னும்
அநேக
ஸ்தம்பங்களால்
அந்த
விமானம்
இறக்கைகளை
விரித்துகொண்டு
ஆகாசத்தில்
பறப்பதுபோலிருந்தது.
தரையில்
விரிக்கப்பட்ட
கம்பளத்தில்,
மலை
ஸமுத்திரம்
நதி
பள்ளத்தாக்கு
மைதானம்
விருக்ஷம்
வனம்
நகரம்
கிராமம்
முதலியவைகளுடன்
பூலோகம்
சித்திர
ரூபமாய்
வேலை
செய்யப்பட்டிருந்தது.
அதைப்
பார்க்கையில்
அநேக
ராஜாக்களாலும்
சக்கரவர்த்திகளாலும்
ஆளப்பட்ட
ராஜ்யங்களெல்லாம்
அந்த
விமானத்தில்
இருப்பதுபோல்
தோன்றிற்று.
Prose passage
▾
Meaning
Keep
அநேக
உத்தம
ஜாதி
பக்ஷிகள்
கொழுப்படைந்து
கூவிக்கொண்டிருந்தன.
சந்தனம்,
அகில்,
பன்னீர்,
புனுகு,
ஜவ்வாது,
குங்குமம்,
அத்தர்
முதலியவைகளின்
பரிமளம்
வீசிக்கொண்டிருந்தது.
விலையற்ற
ஆஸனங்களும்
விரிப்புகளும்
நிறைந்திருந்தன.
சிலவிடங்கள்
அகிற்
கட்டையின்
தூபத்தால்
கறுத்திருந்தன.
சிலவிடங்கள்
ராஜ
ஹம்ஸங்களைப்போல்
வெண்மையாக
இருந்தன.
பலவித
புஷ்பங்கள்
எங்கும்
வாரி
இறைக்கப்பட்டிருந்தன.
வஸிஷ்ட
மஹரிஷியிடத்திலிருக்கும்
தோஷமற்ற
காமதேனுவைப்போல்
அந்த
விமானம்
ஸகல
மனோரதங்களையும்
பூர்த்தி
செய்தது.
மனத்துக்கு
அளவற்ற
ஸந்தோஷத்தைக்
கொடுத்து
துக்கத்தை
நாசம்
செய்து
ஸகல
ஸம்பத்தையும்
தேக
காந்தியையும்
உண்டு
பண்ணிற்று.
Prose passage
▾
Meaning
Keep
பஞ்சேந்திரியங்களுக்கும்
அவைகளுக்குப்
பிரியமான
விஷய
போகங்களைக்
கொடுத்துப்
பெற்ற
தாயைப்போல்
திருப்தி
செய்யும்
அந்த
விமானத்தைக்
கண்டு
ஹனுமான்
பிரமித்து,
“இது
யாகயக்ஞங்களை
ஸம்பூர்ணமாய்
நடத்திய
புண்யவான்கள்
அடையும்
ஸ்வர்க்க
லோகமோ!
தேவகணங்கள்
வஸிக்கும்
தேவ
லோகமோ
!
தேவ
ராஜாவான
மஹேந்திரனுடைய
ராஜதானியான
அமராவதியோ
!
கடின
தபஸால்
மஹாத்மாக்கள்
அடையும்
பிரஹ்ம
லோகமோ
!”
என்று
திகைத்து
நின்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அங்கே
தங்க
ஸ்தம்பங்களில்
பிரகாசிக்கும்
ரத்தின
தீபங்கள்
சுத்தமான
வத்திகளுடனும்
தெளிவான
தைலங்களுடனும்
அசையாமல்
கொழுந்துவிட்டெரிந்தன.
அதைப்
பார்க்கையில்,
கைதேர்ந்த
சூதர்களால்
ஜயிக்கப்பட்ட
ஸாமான்ய
சூதர்கள்,
அவர்களை
மறுபடியும்
ஜயித்துத்
தாங்களிழந்த
திரவியங்களை
அடைவதற்கு
ஆழ்ந்த
யோசனை
செய்து
கொண்டிருப்பதைப்போல்
தோன்றிற்று.
கணக்கில்லாத,
தீபங்களுடைய
பிரகாசத்தையும்,
பிறரால்
அஸாத்தியமான
தவத்தைச்
செய்து
வேதவேதாங்கங்களைக்
கரைகடந்து
நித்திய
நைமித்திக
கர்மங்களைக்
குறைவில்லாமல்
நடத்தி
வந்து
ஸகல
லோகங்களும்
பெயரைக்
கேட்டவுடனே
நடுங்கும்
பிரதாபத்தையுடைய
ராவணேசுவரனுடைய
ஸஹஜமான
தேஜஸையும்,
அவனுடைய
பத்தினிகள்
அணிந்திருக்கும்
ஆபரணங்களுடைய
காந்தியையும்
கண்டு,
ஹனுமான்,
“இந்த
விமானம்
நெருப்புப்பற்றி
எரிகிறதோ
!”
என்று
ஸந்தேகித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அங்கே
விரித்திருக்கும்
கம்பளங்களில்
அநேக
உத்தம
ஸ்த்ரீகள்
நாநாவர்ணமுள்ள
வஸ்திரங்களையும்
மாலைகளையும்
தரித்துக்கொண்டு
பற்பல
வேஷங்களால்
அலங்கரிக்கப்பட்டு,
கிரீடைசெய்ததாலும்
மதுபானத்தாலும்
அர்த்தராத்திரியில்
அயர்ந்து
நித்திரை
செய்வதைக்
கண்டார்.
பகற்காலங்களில்
அந்தப்புரத்தில்
சப்திக்கும்
ஆபரணங்கள்,
அர்த்தராத்திரியில்
ஸகல
ஸ்த்ரீகளும்
சோர்ந்து
தூங்குவதால்
கொஞ்சம்கூட
சப்தமற்றிருப்பதைக்கண்டு
மாருதி,
“இது
ராத்திரிகாலத்தில்
தூங்கும்
ஹம்ஸங்களாலும்
அவைகளின்
மேலிருக்கும்
வண்டுகளாலும்
பிரகாசிக்கும்
தாமரையோடையோ!”
என்று
நினைத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
ஸ்த்ரீகள்
தாமரைமலரின்
பரிமளத்தைப்போல்
ஸுகந்தம்
வீசும்
முகங்களுடனும்,
மறைக்கப்பட்ட
பற்களுடனும்,
மூடின
கண்களுடனும்
நித்திரை
செய்துகொண்டிருந்தார்கள்.
(நான்கு
ஜாதி
ஸ்த்ரீகளில்
இவர்கள்
உத்தமமான
பத்மினீ
ஜாதியைச்
சேர்ந்தவர்கள்.
தூங்கும்போது
பற்கள்
வெளிப்படுவதும்,
கண்கள்
பாதி
திறந்திருப்பதும்,
குறட்டை
விடுவதும்,
வாயிலிருந்து
துர்க்கந்தமான
காற்று
வீசுவதும்
தாழ்ந்த
ஜாதிஸ்த்ரீகளின்
லக்ஷணம்.
Prose passage
▾
Meaning
Keep
தூங்கும்பொழுது
அங்கங்கள்
அசையாமலிருப்பதும்,
வாய்
மூடியிருப்பதும்,
முகம்
பிரஸன்னமாயிருப்பதும்,
மிருதுவாய்
மூச்சு
விடுவதும்,
சுவாசம்
ஸுகந்தமாயிருப்பதும்,
ஸ்வப்னாவஸ்தையில்
பிதற்றாமலிருப்பதும்,
உத்தமஸ்த்ரீகளின்
லக்ஷணங்கள்.)
உதய
காலத்தில்
தாமரைப்புஷ்பங்கள்,
ஸூரியகிரணங்களால்
எழுப்பப்பட்டு
மலர்ந்து
எல்லோர்க்கும்
ஆநந்தத்தைக்
கொடுத்து,
ஸூரியன்
அஸ்தமித்தவுடன்
இதழ்கள்
மூடி
நித்திரை
செய்வதுபோல,
அந்த
ஸ்த்ரீகள்
தங்கள்
நாயகனுடைய
கடாக்ஷம்
தங்களுக்குக்
கிடைக்க
வேண்டுமென்று
காலையில்
அவனுக்கு
முன்னே
எழுந்திருந்து
காத்துக்கொண்டிருந்து,
பகலெல்லாம்
அவனுடன்
ஆநந்தமாய்க்
காலத்தைக்
கழித்து,
ராத்திரியில்
அவன்
நித்திரை
செய்தபிறகு
களைப்பால்
தாங்களும்
அயர்ந்து
நித்திரை
செய்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
சிரமத்தால்
வஸ்திரங்கள்
நழுவ,
ஸ்வேச்சையாய்
நித்திரை
செய்யும்
அந்த
ரூபவதிகளைக்
கண்டும்,
ஆஞ்ஜநேயருடைய
இந்திரியங்கள்
கொஞ்சம்கூடக்
கலங்காமல்
விசேஷ
காந்தியுடன்
விளங்கினார்.
“அழகிலும்
நிறத்திலும்
பரிமளத்திலும்
ஆநந்தத்தைக்
கொடுப்பதிலும்
இந்த
ஸ்த்ரீகளுடைய
முகங்கள்
கமலங்களைப்போலிருக்கின்றன.
தேனைக்
குடித்து
மதங்கொண்ட
வண்டுகள்
இவைகளைப்
புஷ்பமென்றெண்ணி
அடிக்கடி
வந்து
மொய்க்கும்
என்பதற்கு
ஸந்தேகமில்லை”
என்று
மாருதி
எண்ணினார்.
Prose passage
▾
Meaning
Keep
கருத்துச்
சுருண்ட
மயிர்களுடனும்
மின்னற்கொடிபோல்
விளங்கும்
அங்கங்களுடனும்
நித்திரை
செய்யும்
ஸ்த்ரீகளால்
நிறைந்த
ராவணனுடைய
அந்தப்புரம்,
சரத்காலத்தில்
நக்ஷத்திரங்கள்
நிறைந்த
நிர்மலமான
ஆகாசம்போல்
பிரகாசித்தது.
அவர்களுக்கு
நடுவில்
நித்திரை
செய்யும்
ராவணன்
நக்ஷத்திரமண்டலங்களுக்கு
நடுவில்
பௌர்ணிமையில்
பூர்ணகலைகளுடன்
விளங்கும்
சந்திரனைப்போல்
தோன்றினான்.
Prose passage
▾
Meaning
Keep
ஒப்பில்லாத
புண்ணியகர்மங்களால்
நக்ஷத்திரங்களாய்ப்
பிரகாசித்து,
தாங்கள்
செய்த
புண்ணியம்
முடியும்போது
மிகுதியுள்ள
ஸ்வல்பபுண்ணியத்தால்
பூமியில்
நழுவி
விழுந்த
பாக்கியசாலிகளோ
என்று
ஆஞ்ஜநேயர்
அந்த
ஸ்த்ரீகளைக்
கண்டு
பிரமித்தார்.
மங்களகரமான
பிரகாசத்தையுடைய
பெரிய
நக்ஷத்திரங்களைப்போல்
அந்த
ஸ்த்ரீகளுடைய
தேககாந்தியும்
ரூபமும்
தெளிவும்
ஸ்பஷ்டமாய்
விளங்கின.
மதுபானத்தாலும்
விளையாட்டுகளாலும்
ரதிக்ரீடையாலும்
பருத்த
புஷ்பமாலைகளும்
ஹாரங்களும்
கலைந்து
நழுவி,
ஆபரணங்கள்
சிதறி,
சிரமத்தால்
களைத்து
முகம்
வாடி
அயர்ந்து
தூங்கினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
சில
உத்தம
ஸ்த்ரீகளுடைய
நெற்றிகளில்
திலகங்கள்
அழிந்திருந்தன.
சில
ஸ்த்ரீகளின்
சிலம்புகள்
கழன்றிருந்தன.
சிலருடைய
முத்துஹாரங்கள்
பக்கங்களில்
நழுவிக்
கிடந்தன.
முத்துஹாரங்களும்,
அரை
நூல்மாலைகளும்
அறுந்து,
வஸ்திரங்கள்
நழுவி
ரதி
சிரமத்தால்
பிரக்ஞையற்று
நித்திரை
செய்யும்
அந்தப்
பெண்கள்,
வெகுதூரம்
ஓடிக்களைத்து
சிரமநிவிருத்திக்காகப்
பூமியில்
மணலில்
விழுந்து
புரளும்
பெண்குதிரைகளைப்போல்
காணப்பட்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
சிலர்
நேர்த்தியான
குண்டலங்களைத்
தரித்திருந்தார்கள்
;
சிலருடைய
மாலைகள்
வாடி
அறுந்திருந்தன.
மஹாபலவானான
ராவணனால்
அனுபவிக்கப்பட்டு,
வனத்திலுள்ள
புஷ்பக்கொடிகள்
மதயானையால்
மிதிக்கப்பட்டதுபோல்
அவர்கள்
காணப்பட்டார்கள்.
சிலருடைய
ஸ்தனங்களுக்கு
நடுவில்
ஸூரிய
சந்திரர்களைப்போல்
ஜ்வலிக்கும்
முத்துஹாரங்கள்
தாமரையோடையில்
இரண்டு
புஷ்பங்களுக்கு
நடுவில்
நித்திரை
செய்யும்
ராஜ
ஹம்ஸத்தைப்போல்
பிரகாசித்தன.
சிலருடைய
மார்பில்
விளங்கும்
வைடூரிய
மாலைகள்
ஹம்ஸங்களைப்போலும்
தங்கச்சரடுகள்
சக்ரவாக
பக்ஷிகள்
போலும்
தோன்றின.
Prose passage
▾
Meaning
Keep
சரத்
காலத்தில்
தெளிவாக
ஓடும்
நதிகளைப்போன்ற
அந்த
ஸ்த்ரீகளுடைய
பின்
பாகங்களே
மணற்
குன்றுகள்
;
ஹாரங்களே
ஹம்ஸங்கள்
;
ஸ்தனங்களே
சக்ர
வாகங்கள்
;
நேத்திரங்களே
கருநெய்தல்
புஷ்பங்கள்
;
உதடுகளே
இளந்
தளிர்கள்
;
பாதங்களே
தாமரைகள்
;
கழுத்துகளே
சங்குகள்
;
கண்களே
மீன்கள்
;
நாபிகளே
சுழல்கள்
;
கீர்த்திக்குக்
காரணமான
தேக
காந்தியே
இரு
கரைகள்
;
சிருங்கார
சேஷ்டைகளே
முதலைகள்
;
ஆபரணங்களே
மலர்ந்த
தாமரைகள்
;
சதங்கைகளே
மொட்டுகள்.
Prose passage
▾
Meaning
Keep
சிலருடைய
மிருதுவான
அங்கங்களிலும்
ஸ்தனங்களுடைய
நுனிகளிலும்
உள்ள
சுபமான
ஆபரணங்கள்,
அவர்களிடத்தில்
ஆசை
கொண்ட
காமுகர்களைப்போல்
தோன்றின.
சிலருடைய
முகங்களிலிருந்து
வீசும்
சுவாஸக்
காற்றால்
அசைக்கப்பட்ட
வஸ்திரங்களின்
நுனிகள்
அடிக்கடி
முகங்களில்
தாக்கின.
அவை
மேலே
எழும்பி
விழும்பொழுது
விசித்திர
வர்ணங்களுடைய
கொடிகளைப்போல்
காணப்பட்டன.
அங்கே
நித்திரை
செய்துகொண்டிருந்த
சில
காந்திமதிகளின்
மூச்சுக்
காற்றின்
வேகத்தால்
அவர்கள்
தரித்த
குண்டலங்கள்
மெள்ள
மெள்ள
அசைந்தன.
ஸ்வபாவமாகவே
அவர்களுடைய
சுவாஸம்
ஸுகந்தமாக
இருக்கும்
;
சர்க்கரை
கலந்த
மதுவின்
வாஸனையால்
அது
இன்னும்
பரிமளமாகவும்
ஸுகமாகவும்
ராவணன்மேல்
வீசிற்று.
Prose passage
▾
Meaning
Keep
சிலர்
பான
மயக்கத்தாலும்,
நித்திரையாலும்
தேக
ஸ்வாதீனமற்றுத்
தூங்கும்பொழுது,
தங்களுக்கருகில்
படுத்திருக்கும்
சக்களத்திகளுடைய
முகங்களைத்
தங்கள்
பிரியநாயகனான
ராவணனுடைய
முகமென்றெண்ணிக்
காமப்
பரவசர்களாய்
அடிக்கடி
முத்தமிட்டார்கள்.
அந்த
ஸ்த்ரீகளும்
ராவணனிடத்திலுள்ள
ஆசையால்
அவன்
முத்தமிடுகிறானென்றெண்ணி
மறுபடியும்
முத்தம்
கொடுத்தார்கள்.
இப்படி
நாயகனிடத்திலுள்ள
ஆசையால்
சக்களத்திகள்
ஒருவர்க்கொருவர்
தெரியாமல்
தங்களிஷ்டத்தையே
பூர்த்தி
செய்துகொண்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
சிலர்
ஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்ட
கைகளையும்,
சிலர்
பீதாம்பரங்களையும்
தலையணையாக
வைத்துக்கொண்டு
தூங்கினார்கள்.
பான
மயக்கத்தாலும்
ஒருவர்க்கொருவர்
ஸ்நேஹ
விசேஷத்தாலும்
ஒரு
ஸ்த்ரீ
மற்றொரு
ஸ்த்ரீயின்
மார்பில்
தலை
வைத்து
நித்திரை
செய்தாள்.
அவளுடைய
தோளில்
தலை
வைத்து
மற்றொருத்தி
நித்திரை
செய்தாள்.
ஒருத்தி
தன்
தோழியின்
மடியில்
தலை
வைத்து
நித்திரை
செய்தாள்.
அவளுடைய
புஜங்களில்
தலை
வைத்து
இரண்டு
ஸ்த்ரீகள்
நித்திரை
செய்தார்கள்.
துடைப்
பக்கம்
இடுப்புப்
பின்பாகம்
முதலிய
அங்கங்கள்
ஒன்றோடொன்று
பற்றி,
இப்படி
நித்திரை
செய்யும்
அந்தப்
பெண்கள்,
புஜங்களாகிற
நூலால்
தொடுக்கப்பட்டு,
மதுவின்
பரிமளத்துடன்
சுருண்ட
தலை
மயிரென்ற
வண்டுகள்
மொய்க்கும்
புஷ்ப
மாலையைப்
போல்
விளங்கினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனுடைய
பத்தினிகளால்
நிறைந்த
அந்தப்புரம்
வஸந்தருதுவில்
ஒரு
புஷ்ப
வனத்தைப்போல்
தோன்றிற்று.
அவர்களுடைய
கைகளே
கொடிகள்
;
தோள்களே
தண்டுகள்
;
விரல்களே
தளிர்கள்;
இடுப்பில்
வஸ்திரத்தின்
முடிகளே
புஷ்பக்
கொத்துக்கள்;
கறுத்துச்
சுருண்ட
தலைமயிரே
வண்டுகள்;
மூச்சுக்
காற்றே
தென்றல்
;
இப்படித்
தூக்கக்
கலக்கத்தால்
ஒருவர்
மேலொருவர்
கைகால்களைப்
போட்டுக்கொண்டு
காற்றால்
ஒன்று
சேர்க்கப்பட்ட
புஷ்பக்
கொடிகள்போல்
விளங்கினார்கள்.
அந்தக்
கூட்டத்தில்
ஒவ்வொருத்தியின்
ஆபரணங்களையும்
அவயவங்களையும்
தனித்தனியாய்
அறிவது
அஸாத்தியம்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணன்
விழித்துக்
கொண்டிருக்கையில்
அவர்களைப்
பிறர்
பார்ப்பது
அஸாத்தியமாகையால்,
அங்குள்ள
ரத்தின
ஸ்தம்பங்களில்
வைக்கப்பட்ட
நானா
வர்ணமுள்ள
ரத்தின
தீபங்களும்,
அவன்
தூங்கின
பிறகு,
மதுபானத்தாலும்
சிரமத்தாலும்
நித்திரையாலும்
வஸ்திரங்கள்
ஆபரணங்கள்
நழுவினதை
அறியாமல்
தூங்கும்
ராவண
பத்தினிகளை
இமை
கொட்டாமல்
ஆசையுடன்
பார்ப்பதுபோல்,
அசைவற்றுக்
கொழுந்துவிட்டெரிந்தன.
ராஜ
ரிஷிகள்
பிதிருக்கள்
தைத்தியர்கள்
கந்தர்வர்கள்
ராக்ஷஸர்கள்
முதலியவர்களுடைய
கன்யைகள்
ராவணனிடத்தில்
ஆசை
வைத்து
வந்தவர்களே.
யுத்தத்தில்
பிரியமுள்ள
ராவணனால்
சிலர்
தங்களுடைய
பந்துக்களை
ஜயித்துக்
கொண்டுவரப்பட்டவர்கள்.
சிலர்
அவனுடைய
அழகிலும்
தேஜஸிலும்
ஐசுவரியத்திலும்
பராக்கிரமத்திலும்
ஈடுபட்டு
வலுவில்
ஆசை
மீறி
அவனை
வந்தடைந்தவர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்களில்
ராவணனுடைய
பராக்கிரமத்தால்
மாத்திரம்
கட்டுப்பட்டிருந்தவர்கள்
ஒருவருமில்லை.
எல்லோரும்
அவனிடத்தில்
மோஹித்தவர்களே.
ஸ்த்ரீ
ரத்தினமான
ஜானகியைத்
தவிர
மற்ற
யாவரும்
ராவணனை
விரும்பி
வந்தவர்கள்.
வேறொருவனால்
விவாஹம்
செய்யப்பட்டவர்களுமல்லர்
;
உத்தம
குலத்தில்
பிறந்து
உத்தமமான
பத்மினீ
ஜாதி
ஸ்த்ரீகளல்லாதவர்கள்
அங்கில்லை;
ஸகல
சுப
லக்ஷணங்களாலும்
அமைந்திராதவர்கள்
அங்கில்லை
;
ஸர்வாபரணங்களாலும்
அலங்கரிக்கப்படாதவர்கள்
அங்கில்லை
;
ராவணனுக்கு
ஸமஸ்த
உபசாரங்களையும்
பரம
ப்ரீதியுடன்
செய்யாதவர்கள்
அங்கில்லை.
அவனுக்குத்
தகுந்த
தேகபலம்
இல்லாதவர்கள்
அங்கில்லை
;
அவனுடைய
அன்பிற்குப்
பாத்திரமில்லாதவர்கள்
அங்கில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ஹநுமான்
மஹா
புத்திமானாக
இருந்தாலும்
அவர்களைப்
பார்த்து
ஜாதி
ஸ்வபாவத்திற்குத்
தகுந்த
விபரீத
புத்தியை
அடைந்து,
“இந்த
ஸ்த்ரீகளையெல்லாம்
கன்யைகளாக
இருக்கும்பொழுதே
ராவணன்
கொண்டு
வந்து
விவாஹம்
செய்ததுபோல்,
ஸீதையையும்
ராகவன்
பாணிக்கிரஹணம்
செய்வதற்கு
முன்
கொண்டுவந்து
விவாஹம்
செய்திருந்தால்
அவனுக்கு
க்ஷேமமுண்டாயிருக்குமே”
என்று
அகஸ்மாத்தாக
எண்ணினார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அந்த
ஹநுமான்,
“ஸீதையைப்
போன்ற
பதிவிரதை
எந்த
லோகத்திலுமுண்டோ
!
இந்த
ராவணன்
பிரஹ்ம
தேவருடைய
குலத்தில்
பிறந்தும்
அவளை
அபகரித்து
மஹா
பாபத்தை
ஸம்பாதித்தான்”
என்று
மிகவும்
துக்கத்தை
அடைந்து,
“அக்னியையும்
கொளுத்தும்படியான
ஸீதையின்
பதிவிரதா
தர்மத்திற்கு
என்றைக்காவது
பங்கம்
வருமோ
?
வீணான
அபவாதத்தைச்
சுமத்தினதே
தவிர
வேறென்ன
?”
என்று
எண்ணினார்.
74
▾
Meaning
Keep
புநஶ்ச
ஸோசிந்தய
தா³ர்த
ரூபோ
த்⁴ருவம்
விஶிஷ்டா
கு³ணதோ
ஹி
ஸீதா
|
அதா²யமஸ்யாம்
க்ருதவாந்
மஹாத்மா
லங்கேஶ்வர
:
கஷ்ட
மநார்ய
கர்ம
||
Previous
←
புஷ்பக விமானம்
Next
ராவணனுடைய அந்தப்புரம்
→