Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவணனுடைய அந்தப்புரம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவணனுடைய
அந்தப்புரம்
1
▾
Meaning
Keep
தத்ர
தி³வ்யோபமம்
முக்²யம்
ஸ்ப²டிகம்
ரத்நபூ⁴ஷிதம்
|
அவேக்ஷமாணோ
ஹநுமாந்
த³த³ர்ஶ
ஶயநாஸநம்
||
Prose passage
▾
Meaning
Keep
அவ்விடத்தில்
ஸ்படிகத்தால்
செய்யப்பட்டு
ரத்தினங்கள்
இழைத்துத்
தேவேந்திரனுடைய
சயனம்
போன்ற
ஓர்
மஞ்சத்தைக்
கண்டார்.
அதற்கு
நான்கு
புறத்திலும்
தந்தத்தாலும்
தங்கத்தாலும்
அலங்கரிக்கப்பட்ட
கால்களுடன்
வைடூரியங்கள்
பதித்து
விலையற்ற
விரிப்புகளால்
மூடப்பட்ட
அநேக
ஆஸனங்கள்
போடப்பட்டிருந்தன.
அங்கே
ஒரு
பக்கத்தில்
முத்து
ஹாரங்களாலும்,
ரத்தின
மாலைகளாலும்
அலங்கரிக்கப்பட்டுப்
பூர்ண
சந்திரனைப்போல்
வெண்மையான
ஒரு
குடையைக்
கண்டார்.
உருக்கி
ஓடவிட்ட
ஆயிரத்தெட்டுமாற்று
அபரஞ்சித்
தங்கத்தால்
செய்யப்பட்ட
அந்த
மஞ்சம்
ஸூரியனைப்போல்
ஜ்வலித்தது.
Prose passage
▾
Meaning
Keep
அசோகம்
முதலிய
மாலைகள்
கட்டித்
தொங்கவிடப்பட்டிருந்தன.
மெல்லிய
ரோமங்களையுடைய
ஆடு
முதலிய
மிருகங்களின்
தோல்களும்,
விலையுயர்ந்த
சால்வைகளும்,
விரிப்புகளும்,
பஞ்சணை
மெத்தைகளும்
பரப்பப்பட்டிருந்தன.
நானா
வர்ணமுள்ள
புஷ்பங்கள்
வாரி
இறைக்கப்பட்டிருந்தன.
குங்குமம்,
கஸ்தூரி,
ஜவ்வாது,
புனுகு,
அத்தர்,
அகில்,
சந்தனக்கட்டை
முதலிய
வாஸனைத்
திரவியங்களின்
பரிமளம்
நிறைந்திருந்தது.
வெண்சாமரங்களைக்
கையிலேந்தி
வீசிக்கொண்டிருக்கும்
பெண்
பிரதிமைகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
அதில்
மழைக்காலத்தில்
நீருண்ட
மேகம்போல்
கறுத்த
தேகத்துடனும்,
யானைத்
துதிக்கைகளைப்போல்
பருத்த
நீண்டு
உருண்ட
கைகளுடனும்,
நெருப்புப்
பொறிபோல்
சிவந்த
நேத்திரங்களுடனும்,
ஸூரியனைப்போல்
ஜ்வலிக்கிற
குண்டலங்களால்
விளங்கும்
முகத்துடனும்,
பிரதாபலங்கேசுவரன்
நித்திரை
செய்துகொண்டிருந்தான்.
அவன்
தரித்த
ஒப்பற்ற
பீதாம்பரம்
கறுத்த
மேகங்களுக்கு
நடுவில்
பாயும்
மின்னற்கொடிபோல்
பிரகாசித்தது.
மார்பிலும்
கைகளிலும்
பூசப்பட்ட
உத்தமமான
சிவப்புச்சந்தனம்
ஸந்தியாகாலத்தில்
மின்னற்
கொடிகளுடன்
விளங்கும்
சிவந்த
மேகம்போல்
காணப்பட்டது.
சிரேஷ்டமான
ஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தான்.
இஷ்டமான
ரூபத்தை
எடுக்கக்கூடியவனானதால்
தன்
பத்தினிகள்
கண்டு
மோகிக்கும்படி
மன்மதனைப்போல்
ரூபம்
தரித்திருந்தான்.
ராத்திரியில்
நெடுநேரம்
க்ரீடித்ததாலும்
மதுபானத்தாலும்
களைத்து
அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
ராக்ஷஸ
ஸ்த்ரீகளுக்கு
பிரியநாயகனும்
ராக்ஷஸர்களுக்கு
ஸகல
க்ஷேமங்களையும்
கொடுப்பவனுமிருக்கும்
ராவணனைப்
பார்த்து,
“மரங்கள்
புதர்கள்
காடுகள்
நிறைந்த
மந்தரபர்வதம்
அசைவற்று
நித்திரை
செய்கிறதோ
!”
என்று
மாருதி
நினைத்தார்.
இப்படி
ஸூரியனைப்
போலும்
அக்னியைப்போலும்
பிரகாசிக்கும்
அந்த
மஞ்சத்தில்
மஹாஸர்ப்பத்தைப்போல்
பெருமூச்சு
விட்டுக்கொண்டு
நித்திரை
செய்யும்
ராவணனைப்
பார்த்து,
“ராம
பத்தினியைத்
தேடிவந்த
நான்
அவளைப்
பார்ப்பதற்குமுன்
அவளை
அபகரித்த
மஹாபாபியைப்
பார்க்கும்படி
நேரிட்டதே”
என்று
துக்கமடைந்தார்.
பயம்
கொண்டவன்
பிசாசம்
முதலிய
துஷ்டஜந்துக்களுக்கெதிரில்
நிற்க
முடியாமல்
ஒதுங்குவதுபோல்,
“இந்த
மஹாபாபியின்
ஸமீபத்திலிருப்பது
தகாது”
என்று
சற்றுப்
பின்வாங்கினார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
படிக்கட்டுகளின்
வழியாய்
வேறொரு
பக்கத்திலுள்ள
ஒரு
மேடையின்மேலேறி
அந்த
ராக்ஷஸேசுவரனை
உற்றுப்
பார்த்தார்.
யானைத்
துதிக்கைகளைப்
போன்ற
புஜங்களுடனும்
பரிமளம்
வீசுகிற
சந்தனப்
பூச்சுகளுடனும்
விளங்கும்
அந்த
தசமுகன்
படுத்திருக்கும்
மஞ்சமானது
மத
ஜலத்தைப்
பெருகவிட்டுக்கொண்டிருக்கும்
யானையுடன்
கூடின
மலையருவிபோல்
தோன்றிற்று.
அவனுடைய
புஜங்கள்
முழங்கால்
வரையில்
நீண்டு
தெய்வலோகத்தில்
நாட்டிய
இந்திரத்வஜங்கள்
போல்
விளங்கின.
உருக்கி
அடித்த
இருப்புலக்கைகள்போல்
கடினமாய்
யானைகளின்
துதிக்கைகளைப்போல்
அடி
பெருத்து
வரவரச்
சிறுத்திருந்தன.
ஒன்றிற்கொன்று
பேதமில்லாமல்
மஹாபலமுள்ளவைகளாய்,
கெட்டியாய்ப்
பொருத்தப்பட்ட
இடைவெளிகளுடன்,
உத்தம
லக்ஷணங்களமைந்த
நகங்களாலும்
கட்டைவிரல்களாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தன.
விலையற்ற
மோதிரங்கள்
அணிந்த
விரல்களுடன்,
இரண்டு
ஐந்துதலை
மஹாநாகங்கள்
படுத்திருப்பதுபோல்
காணப்பட்டன.
Prose passage
▾
Meaning
Keep
தங்கத்தோள்வளைகள்
அணிந்த
புஜங்களில்
இந்திரனுடன்
யுத்தம்
செய்யும்
காலத்தில்
ஐராவதத்தின்
தந்தங்களாலும்,
விஷ்ணுவுடன்
யுத்தம்
செய்யும்
காலத்தில்
சக்கராயுதத்தாலும்
உண்டான
காயங்களின்
வடுக்கள்
கறுத்த
ஆகாசத்தில்
சந்திரர்களைப்போல்
பிரகாசித்தன.
முயலின்
ரத்தத்தைப்போல்
சிவந்து
சிரேஷ்டமான
பரிமளமும்
மிகுந்து
குளிர்ச்சியுமுள்ள
சந்தனத்தால்
நன்றாய்ப்
பூசப்பட்டு,
விசித்திரமாக
அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நேர்த்தியான
கந்தங்களால்
வாஸனையேறினவை
;
உத்தம
ஸ்த்ரீகளால்
பிடிக்கப்பட்டவை;
யக்ஷர்,
பன்னகர்,
கந்தர்வர்,
தேவர்,
அஸுரர்
முதலியவர்களைக்
கதற
அடித்தவை.
மிருகங்களையும்
பக்ஷிகளையும்
தின்று
மயங்கிக்
கோபத்தால்
சீறிக்கொண்டு
மந்தரகிரியின்
நடுவில்
தூங்கும்
மலைப்பாம்புகளைப்போல்
அந்தப்
புஜங்கள்
படுக்கையில்
கிடப்பதைக்
கண்டார்.
பர்வதத்தைப்
போன்ற
சரீரத்தையுடைய
ராவணனுக்கு
உத்தமலக்ஷணங்கள்
பொருந்திய
இரண்டு
புஜங்களும்
மந்தரகிரியின்
இரண்டு
சிகரங்களைப்
போல்
விளங்கின.
Prose passage
▾
Meaning
Keep
அவனுடைய
மூச்சுக்காற்று
மாங்கனி
புன்னை
மகிழம்பூ
முதலியவைகளிலிருந்து
இறக்கின
மதுவின்
வாஸனையாலும்,
ஷட்ரஸங்களுடன்
புஜித்த
அன்னத்தின்
வாஸனையாலும்,
சிரேஷ்டமான
பானங்களின்
வாஸனையாலும்
அந்த
சயனகிருஹம்
முழுவதையும்
மணக்கும்படி
செய்தது.
நவரத்னங்களாலும்
முத்துக்களாலும்
அலங்கரிக்கப்பட்ட
தங்கக்கிரீடம்
கொஞ்சம்
நழுவி
இருந்தது.
குண்டலங்களுடைய
காந்தி
முகமெங்கும்
பரவியது.
பருத்து
நீண்டு
அகன்ற
மார்பில்
சிவந்த
சந்தனம்
பூசப்பட்டிருந்தது.
ஹாரங்கள்
ஜ்வலித்தன.
சிரேஷ்டமான
பட்டு
உத்தரீயங்கள்
கொஞ்சம்
நழுவி
இருந்தன.
இடுப்பில்
பீதாம்பரத்தைத்
தரித்திருந்தான்.
சிவந்த
கண்களுடனும்
உளுந்துமலையைப்போன்ற
தேகத்துடனும்,
மஹா
ஸர்ப்பத்தைப்போல்
மூச்சுவிட்டுக்
கொண்டு,
கங்காப்
பிரவாஹத்தின்
மத்தியில்
அயர்ந்து
தூங்கும்
மதயானையைப்போல்
தோன்றினான்.
நான்கு
பக்கங்களிலுமுள்ள
தங்க
ஸ்தம்பங்களில்
ஏற்றிய
தீபகாந்தியால்
ஸகல
திக்குகளும்
பிரகாசித்தன.
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
ஸகல
பாகங்களையும்
நன்றாகத்
தெரியச்
செய்யும்
மின்னற்கொடிகள்
பாயும்
மேகத்தைப்போல்
மஹாசரீரத்தையுடைய
ராவணனையும்,
அவனிடத்தில்
பரமப்பிரீதிவைத்த
ஸ்த்ரீகள்
அவனுடைய
பாதத்தடியில்
தூங்குவதையும்
ஹநுமார்
கண்டார்.
பூர்ண
சந்திரனுக்கு
ஸமமான
காந்திபொருந்திய
முகங்களுடன்,
அழகிய
குண்டலங்களாலும்
வாடாத
மாலைகளாலும்
அலங்கரிக்கப்பட்ட
அநேக
ஸ்த்ரீகளைக்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
சிலர்
நாட்டியத்தாலும்
வாத்தியங்களாலும்
ராவணனை
ஸந்தோஷப்படுத்தி
அவனால்
சிரேஷ்டமான
ஆபரணங்களை
வெகுமதியாகக்
கொடுக்கப்பட்டு,
அவனுடைய
புஜங்களிலும்
மடியிலும்
கொஞ்சி
விளையாடி,
அப்படியே
தூங்கிவிட்டார்கள்.
சிலர்
வஜ்ர
வைடூரியங்களால்
இழைக்கப்பட்ட
தோள்வளைகள்
அணிந்த
புஜங்களையே
தலையணையாய்
வைத்துத்
தூங்கினதால்,
தோள்வளைகளும்
காதில்
தரித்த
குண்டலங்களும்
கலந்து
பிரகாசித்தன.
சந்திரனையொத்த
முகங்களாலும்,
நக்ஷத்திரங்களைப்
போன்ற
குண்டலங்களாலும்
அந்த
விமானம்
ஆகாசத்தைப்போல்
விளங்கிற்று.
யௌவனக்கொழுப்பால்
ராவணனுடன்
வெகுநேரம்
கிரீடித்துக்
களைத்து,
அவர்கள்
இருந்தவிடத்திலேயே
தூங்கிவிட்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஒரு
ஸுந்தரி
பரதசாஸ்திரத்தில்
மிகவும்
திறமையுள்ளவள்.
நர்த்தனத்தாலும்
அபிநயத்தாலும்
ராவணனை
ஸந்தோஷப்படுத்தி
அயர்ந்து
தூங்குகையிலும்
அவயவங்களை
நாட்டிய
லக்ஷணங்களுக்கு
இசைந்தபடியே
வைத்துக்கொண்டு
தூங்கிவிட்டாள்.
ஒரு
பெண்மணி
அத்புதமாய்
வீணைவாசித்து
ராவணனை
மகிழச்செய்து,
அந்த
வீணையை
அணைத்துக்கொண்டே
தூங்குகையில்,
புஷ்பங்களாலும்
இலைகளாலும்
விளங்கும்
தாமரைக்கொடி
நதிப்பிரவாகத்தில்
அடித்துக்கொண்டு
போகப்படும்பொழுது
அகஸ்மாத்தாய்
ஸந்தித்த
ஒரு
ஓடத்தைப்
பற்றிக்கொண்டு
நிற்பதுபோல்
தோன்றினாள்.
கைக்குழந்தையை
மிக்க
பிரேமையுடன்
இடுப்பில்
வைத்துகொண்டிருப்பவளைப்போல்,
ஒருத்தி
மட்டுகமென்ற
வாத்தியத்தை
அணைத்துக்கொண்டே
தூங்கிவிட்டாள்.
Prose passage
▾
Meaning
Keep
நெடுநாளாகக்
காணாத
நாயகனைச்
சேர்ந்து
ஆசையுடன்
அணைவதுபோல்,
ஒருத்தி
படஹமென்ற
வாத்தியத்தை
அணைத்துக்கொண்டே
நித்திரை
செய்தாள்.
தன்
பிரியநாயகனை
அணைவதற்கு
ஸமயம்
நேராமல்,
தவித்துக்கொண்டிருந்த
காமினி,
அகஸ்மாத்தாய்
நாதனை
ஏகாந்தத்தில்
ஸந்தித்து,
ஆசை
மீறி
இறுகத்
தழுவுவதுபோல்,
ஒருத்தி
புல்லாங்குழலை
இறுகத்
தழுவிக்கொண்டே
உறங்கினாள்.
நாயகனுடன்
ஸ்வேச்சையாய்ப்படுத்திருக்கும்
கமலாக்ஷியைப்போல்,
நாட்டியத்தில்
தேர்ந்தவளும்
மிருதுபாஷிணியுமான
ஒரு
ஸ்த்ரீரத்னம்
விபஞ்சியை
அணைத்துக்கொண்டே
தூங்கினாள்.
ஒருத்தி
மதத்தால்
கண்கள்
சுழல,
பருத்து
மிருதுவாய்த்
தங்கக்கொடிபோன்ற
அவயவங்களால்
மிருதங்கத்தை
ஆலிங்கனம்
செய்துகொண்டே
தூங்கிவிட்டாள்.
Prose passage
▾
Meaning
Keep
சிறுத்த
இடையுள்ள
ஒருத்தி
மதுபானத்தால்
களைத்து
பணவத்தைப்
புஜங்களுக்கும்
விலாவிற்கும்
நடுவில்
அணைத்துக்கொண்டே
தூங்கினாள்.
ஒருத்தி
ஒரு
டிண்டிமத்தை
மார்பிலும்
வேறொரு
டிண்டிமத்தைப்
புஜத்திலும்
அணைத்துக்கொண்டு
தூங்கும்பொழுது,
பிரியநாயகனை
மார்புடன்
ஆலிங்கனம்
செய்துகொண்டு,
குழந்தையையும்
கட்டியணைப்பவளைப்
போல்
தோன்றினாள்.
ஒருத்தி
ஆடம்பரத்தை
புஜங்களால்
இறுகத்
தழுவிக்
கொண்டே
தூங்கிவிட்டாள்.
ஒருத்தி
கலசத்தைக்
கவிழ்த்துத்
தலையணையாய்
வைத்துக்கொண்டு
தூங்குகையில்
அதில்
மிகுந்திருந்த
குங்குமம்
சந்தனம்
கலந்த
ஜலம்
அவளுடைய
தேகத்தில்
பெருக,
கோடை
காலத்தில்
வாடாமல்
இருப்பதற்காக
ஜலம்
தெளித்துவைக்கப்பட்ட
புஷ்பமாலையைப்போல்
காணப்பட்டாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஒருத்தி
தூக்கம்
தாங்கமுடியாமல்,
தங்கக்
கலசங்களைப்போன்ற
ஸ்தனங்களைக்
கைகளால்
மறைத்துக்கொண்டே
தூங்கிவிட்டாள்.
ஒருத்தி
மதத்தால்
மெய்மறந்து,
தன்
ஸமீபத்தில்
படுத்திருந்த
ஸகியை
நாயகன்
என்றெண்ணி
இறுகத்
தழுவிக்கொண்டே
தூங்கினாள்.
காமினிகள்
நாயகர்களை
இறுகத்
தழுவுதல்
போல்
உத்தம
ஸ்த்ரீகள்
அநேகர்
விசித்திரமான
வாத்தியங்களைப்
புஜங்களாலும்
ஸ்தனங்களாலும்
அணைத்துக்கொண்டே
தூங்கினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்களைப்
பார்த்துக்கொண்டுபோகையில்,
ஹநுமான்
ஓரிடத்தில்
தனியாய்
திவ்வியாலங்காரங்களுடன்
ஒரு
சயனத்தையும்
அதில்
அழகே
உருவெடுத்து
வந்ததுபோலிருக்கும்
ஒரு
ஸ்த்ரீ
நித்திரை
செய்வதையும்
கண்டார்.
முத்துக்களாலும்
நவமணிகளாலும்
இழைக்கப்பட்ட
ஆபரணங்களை
அணிந்துகொண்டு,
உருக்கியோடவிட்ட
ஆயிரத்தெட்டு
மாற்றுத்
தங்கத்தைப்
போல்
ஜ்வலிக்கும்
தேக
காந்தியுடன்,
தன்
தேஜஸாலும்
கலைகளாலும்
அந்த
விமானத்திற்கு
ஒரு
சிரேஷ்டமான
ஆபரணம்போல்
விளங்கும்
அந்தப்
பெண்மணி
மந்தோதரி
என்று
கீர்த்திபெற்ற
ராவணனுடைய
பட்ட
மஹிஷி.
அவனுக்கு
உயிருக்குயிரானவள்;
அந்தப்புரத்திற்கு
அதிபதி.
Prose passage
▾
Meaning
Keep
ஆஞ்ஜநேயர்
அவளுடைய
அபூர்வமான
ரூபத்தையும்
யௌவனத்தையும்
கவனித்து
இவள்
ஸீதையாக
இருக்கலாமென்று
நினைத்து,
ஸந்தோஷம்
தாங்காமல்,
தோள்தட்டி
வாலை
முத்தமிட்டு
ஆனந்தமடைந்தார்
;
குதித்து
விளையாடினார்
;
பாடினார்
;
ஆடினார்
;
உலாவினார்
;
ஸ்தம்பங்களில்
ஏறிக்
குதித்தார்
;
இப்படி
வானரர்களுக்கு
ஸ்வபாவமான
சேஷ்டைகளை
எல்லாம்
செய்தார்.
55
▾
Meaning
Keep
ஆஸ்போ²டயாமாஸ
சுசும்ப³
புச்ச²ம்
நநந்த³சிக்ரீட³
ஜகௌ³
ஜகா³ம
ஸ்தம்பா⁴
நரோஹந்
நிபபாத
பூ⁴மௌ
நித³ர்ஶயந்
ஸ்வாம்
ப்ரக்ருதிம்
கபீநாம்
||
Previous
←
ராவணனுடைய அந்தப்புரம்
Next
பானசாலை
→