Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · பானசாலை
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
பானசாலை
1
▾
Meaning
Keep
அவதூ⁴ய
சதாம்
பு³த்³தி⁴ம்
ப³பூ⁴வா
வஸ்தி²தஸ்
ததா³
|
ஜகா³ம
சாபராம்
சிந்தாம்
ஸீதாம்
ப்ரதி
மஹாகபி:
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
கொஞ்சம்
யோசித்து
அவள்
ஸீதையல்ல
என்று
தெளிந்து,
ஜானகி
எங்கே
இருக்கக்
கூடுமென்று
மறுபடியும்
கவலைகொண்டார்.
“ராமனை
விட்டுப்
பிரிந்து
அவர்
படும்
கஷ்டங்களை
அறிந்தும்
ஜானகிக்குத்
தூக்கம்
வருமோ
?
அன்னம்
வேண்டியிருக்குமோ?
அலங்காரம்
செய்துகொள்ளவும்
தோன்றுமோ
?
பானங்களையும்
பக்ஷ்யங்களையும்
அனுபவிக்கப்
புத்தியுண்டாகுமோ
?
தேவேந்திரனாயிருந்தாலும்
ராமனைத்
தவிர
வேறு
புருஷனை
ஸ்வப்பனத்திலும்
நினைப்பாளோ
?
ஸகல
லோகங்களிலும்
ராமனைப்போன்ற
வேறொருவருமுண்டோ
?
ஆகையால்
இவள்
ஸீதையல்ல;
வேறு
யாரோ”
என்று
முடிவு
செய்து
பானசாலையில்
மறுபடியும்
தேடினார்.
Prose passage
▾
Meaning
Keep
அங்கே
சிலர்
சொக்கட்டான்
சோழி
அம்மானை
சூது
சதுரங்கம்
முதலிய
விளையாட்டுகளால்
களைத்தும்,
சிலர்
பாட்டினால்
சிரமமடைந்தும்,
சிலர்
நாட்டியத்தால்
அலுத்தும்,
சிலர்
மதுபானம்
செய்து
மயங்கியும்,
சிலர்
முரவம்
மிருதங்கம்
முதலிய
வாத்தியங்களைத்
தலையணையாய்
வைத்துக்கொண்டும்,
சிலர்
பீடங்களின்மேலும்,
சிலர்
நேர்த்தியான
விரிப்புகளின்மேலும்,
பிரக்ஞையற்றுத்
தூங்கினார்கள்.
அவர்களிலும்
ஸீதையைக்
காணாமல்
மறுபடியும்
ராவணன்
படுத்திருக்கும்
இடத்திற்கு
வந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அவனுடைய
ஸ்த்ரீகளெல்லாம்
மஹா
பக்தியுடன்
தங்களுடைய
பர்த்தாவின்
ரூபத்தையும்
குணங்களையும்
எப்பொழுதும்
புகழ்பவர்கள்
;
யுக்தமாய்ப்
பாடவும்
அதன்
தாத்பரியத்தைத்
தெளிவாக
எடுத்துச்
சொல்லவும்
ஸாமர்த்தியமுடையவர்கள்;
தேச
காலங்களை
அறிந்து
நடப்பவர்கள்
;
ஸமயோசிதமாய்ப்
பேசுகிறவர்கள்.
ராவணன்
அவர்களுடன்
காம
சாஸ்திரப்படி
ஸகல
போகங்களையும்
அனுபவித்து,
அயர்ந்து
தூங்குவதைக்
கண்டார்.
அவர்களுக்கு
நடுவில்
அந்த
ராக்ஷஸேசுவரன்
சிரேஷ்டமான
பசுக்களுக்கு
நடுவில்
விளங்கும்
காளையைப்போலும்,
வனத்தில்
பெண்
யானைகளால்
சூழப்பட்ட
மதயானையைப்போலும்
விளங்கினான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
விரும்பக்கூடிய
ஸகல
பதார்த்தங்களாலும்
நிறைந்த
பான
பூமிக்கு
மாருதி
வந்தார்.
அங்கே
மான்
எருமை
பன்றி
முதலிய
மிருகங்களின்
மாம்ஸங்கள்
குப்பல்
குப்பல்களாய்
வைக்கப்பட்டிருந்தன.
விசாலமான
தங்கத்
தட்டுகளில்
தின்று
மிகுந்த
மயில்,
கோழி,
மான்,
பன்றி,
சல்யம்,
வார்த்ராணஸம்
முதலிய
பறவை
மிருகங்களின்
மாம்ஸங்கள்
தயிரிலும்
ருசகமென்ற
உப்பிலும்
பக்குவம்
செய்து
வைத்திருந்ததைக்
கண்டார்.
வெகு
சாதுரியமாய்ப்
பக்குவம்
செய்யப்பட்ட
க்ரிகரம்
சகோரமென்ற
பக்ஷிகள்
எருமைகள்
ஆடுகள்
ஏகசல்யமென்ற
மீன்
முதலியவைகளின்
மாம்ஸங்களும்
நானாவிதமான
துவையல்களும்
பானங்களும்
தின்பண்டங்களும்
புஜிக்கப்பட்டு
மிகுந்திருப்பதைக்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
உப்புப்
புளிப்பேற்றிய
அநேக
வ்யஞ்ஜனங்களாலும்,
வெள்ளைக்கடுகு
கலந்த
ஆறு
வகை
ரஸங்கள்
பொருந்திய
பக்ஷ்யங்களாலும்,
ஸ்த்ரீ
புருஷர்கள்
குடிமயக்கத்தில்
கழற்றியெறிந்த
ஹாரம்
சிலம்பு
முதலிய
பூஷணங்களாலும்,
பான
பாத்திரங்களில்
ஊறும்
பலவகைப்
பழங்களாலும்,
அந்தப்
பானசாலை
புஷ்பங்களால்
பூமிதேவியை
அர்ச்சிப்பதுபோல்
விளங்கிற்று.
அங்கங்கே
போட்டிருக்கும்
படுக்கைகளாலும்
ஆஸனங்களாலும்
அந்தக்
கிருஹம்
நெருப்பில்லாமலேயே
கொழுந்துவிட்டெரிவது
போலிருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
அதி
ஸமர்த்தர்களான
சமையற்காரர்களால்
விதம்
விதமாகப்
பக்குவம்
செய்து
தனித்தனியாய்
வைக்கப்பட்ட
மாம்ஸங்களைக்
கண்டார்
;
ஸமுத்திர
மதன
காலத்தில்
உண்டான
வாருணி
என்ற
பானத்தின்
வகைகளும்,
சர்க்கரை
தேன்
புஷ்பங்கள்
பழங்கள்
முதலியவைகளிலிருந்து
இறக்கின
பானங்களும்,
சாதுரியமாய்ச்
செய்யப்பட்ட
பானங்களும்,
வாஸனைப்
பொடிகளும்
ஏராளமாய்
வைக்கப்பட்டிருந்தன.
(திராக்ஷை,
இலுப்பை,
பேரீச்சை,
பனை,
கரும்பு,
கொம்புத்தேன்,
அடைத்தேன்,
வெல்லம்,
தென்னை
முதலியவைகளிலிருந்து
பலவித
பானங்கள்
செய்யப்படும்.)
தங்கத்தாலும்
ஸ்படிகத்தாலும்
செய்யப்பட்ட
போஜன
பாத்திரங்களாலும்,
தங்கக்
கூஜாக்களாலும்
அந்தப்
பானபூமி
நிறைந்திருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
தங்கக்
குடங்களிலும்
வெள்ளிக்
குடங்களிலும்
சிரேஷ்டமான
பானங்கள்
ஊற்றி
வைக்கப்பட்டிருந்தன.
தங்கத்தாலும்
வெள்ளியாலும்
செய்யப்பட்டு
ரத்தினங்கள்
இழைத்த
அநேக
பான
பாத்திரங்கள்
சாராயம்
குடிப்பதற்காக
ஸித்தமாக
இருந்தன.
சில
இடங்களில்
பாத்திரங்களில்
வைக்கப்பட்ட
பானங்கள்
குடிக்கப்படாமலேயே
இருந்தன
;
சிலவிடங்களில்
பாதி
குடிக்கப்பட்டிருந்தன
;
சிலவிடங்களில்
முழுவதும்
குடிக்கப்பட்டிருந்தன
;
ஓரிடத்தில்
பலவித
பக்ஷ்யங்களும்,
ஓரிடத்தில்
பானங்களின்
மிகுதியும்,
ஓரிடத்தில்
புஜித்த
அன்னத்தின்
மிகுதியும்
காணப்பட்டது
;
ஓரிடத்தில்
கிண்டிகள்
உடைந்து
கிடந்தன
;
ஓரிடத்தில்
கடங்கள்
உருண்டு
கிடந்தன
;
ஓரிடத்தில்
மாலைகளும்
பழங்களும்
ஜலத்தில்
கிடந்தன
;
ஓரிடத்தில்
ஸ்த்ரீகளுக்காக
அநேகம்
படுக்கைகள்
போடப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
சில
ஸ்த்ரீகள்
ஒருவரையொருவர்
இறுகத்
தழுவிக்கொண்டும்,
சிலர்
தூங்குகிறவர்களுடைய
வஸ்திரங்களை
உடுத்துக்கொண்டும்
நித்திரை
மேலிட்டுத்
தூங்கினார்கள்.
மிருதுவான
தென்றலைப்போல்
அவர்களுடைய
சுவாஸக்
காற்று
அவர்கள்
அணிந்த
வஸ்திரங்களையும்
மாலைகளையும்
சற்று
அசைத்தது.
அந்தப்
பானசாலையில்
வீசும்
காற்று,
குளிர்ந்த
சந்தனம்
தேனின்
ரஸம்
சாராயம்
நானாவித
புஷ்ப
மாலைகள்
பலவகைத்
தூபங்கள்
முதலியவைகளில்
தாக்கி
அவைகளின்
குளிர்ச்சியையும்
பரிமளத்தையும்
ராவணன்
படுத்திருந்த
புஷ்பக
விமானத்தில்
வீசிற்று.
அங்கேயிருந்த
சில
ஸ்த்ரீகள்
கறுப்பும்
வெளுப்பும்
கலந்த
வர்ணமுடையவர்கள்
;
சிலர்
கறுத்தவர்கள்
;
சிலர்
தங்கக்
கொடிபோன்ற
அவயவங்களையுடையவர்கள்.
ரதி
சிரமத்தாலும்
தூக்கத்தாலும்
பிரக்ஞையற்றிருக்கும்
அந்தப்
பெண்கள்
ஸூரியாஸ்தமன
காலத்தில்
மூடியிருக்கும்
தாமரைகளைப்
போல்
விளங்கினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
மஹா
தேஜஸ்வியான
ஹனுமான்
இப்படி
ராவணனுடைய
அந்தப்புரம்
முழுவதையும்
வெகு
ஜாக்கிரதையாகத்
தேடியும்
ஜானகியைக்
காணவில்லை.
“பர
ஸ்த்ரீகள்
பர்த்தாவுடன்
ஸ்வேச்சையாய்த்
தூங்கும்போது
பார்த்துவிட்டேனே.
என்னுடைய
பிரஹ்மசரிய
தர்மத்திற்குக்
குறைவு
நேருமே.
இவர்களைக்
கண்டதால்
என்
மனத்தில்
யாதொரு
விகாரமும்
இல்லாவிட்டாலும்,
பர
ஸ்த்ரீகளைப்
பார்ப்பது
பாபமல்லவா?”
என்று
சற்றுநேரம்
நினைத்து,
பிறகு
“இந்தக்
கவலை
நமது
காரியத்தைக்
கெடுத்துவிடும்”
என்று
அதையொழித்து,
தனக்கு
ஸ்வபாவமான
தைரியத்தையும்
புத்திக்
கூர்மையையும்
கைக்கொண்டு,
நடக்கவேண்டிய
காரியத்தின்
குண
தோஷங்களை
யோசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“ராவண
பத்தினிகள்
ஸ்வேச்சையாகத்
தூங்கும்போது
என்னால்
நன்றாகப்
பார்க்கப்பட்டார்கள்
;
ஆனால்
என்
மனத்தில்
யாதொரு
காம
விகாரமும்
உண்டாகவில்லை.
ஸகல
புண்ணிய
பாப
கர்மங்களைச்
செய்வதிலும்
இந்திரியங்களை
ஏவுகிறது
மனமல்லவா
?
என்
மனத்திலோ
கொஞ்சமாவது
களங்கமில்லை.
Prose passage
▾
Meaning
Keep
இவர்களைப்
பார்க்காமலேயே
இருக்கலாமே
என்றால்,
ஜானகியை
ஸ்த்ரீகள்
இருக்கும்
இடத்தில்
தேடாமல்
வேறு
எங்கே
தேடமுடியும்
?
ஒவ்வொரு
வஸ்துவையும்
அந்த
ஜாதி
வஸ்துக்கள்
இருக்குமிடத்தில்
தேடினால்
கண்டு
பிடிக்கலாமே
தவிர
மான்களுக்கு
நடுவில்
ஸ்த்ரீயைத்
தேடுவார்களுண்டோ
?
சுத்தமான
மனத்துடன்
ராவணனுடைய
அந்தப்புரம்
முழுவதிலும்
தேடிப்
பார்த்தும்,
ஜானகியைக்
காணவில்லையே.
தேவ
கன்யைகளையும்
கந்தர்வ
கன்யைகளையும்
நாக
கன்யைகளையுமல்லவா
கண்டேன்
;
ராகவ
பத்தினியான
ஜானகியைக்
காணக்
கிடைக்கவில்லையே!”
என்று
சற்று
நேரம்
கவலை
கொண்டார்.
மறுபடியும்
தைரியமடைந்து
அந்தப்
பானசாலையைத்
விட்டு
ராவணனுடைய
சயன
கிருஹத்தில்
தேட
ஆரம்பித்தார்.
46
▾
Meaning
Keep
ஸ
பூ⁴யஸ்து
பரம்
ஸ்ரீமாந்
மாருதிர்
யத்ந
மாஸ்தி²த:
|
ஆபாநபூ⁴மி
முத்ஸ்ருஜ்ய
தாம்
விசேதும்
ப்ரசக்ரமே
||
Previous
←
ராவணனுடைய அந்தப்புரம்
Next
ஸீதையைக் காணாமல் மாருதி துக்கித்தது
→