Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதையைக் காணாமல் மாருதி துக்கித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதையைக்
காணாமல்
மாருதி
துக்கித்தது
1
▾
Meaning
Keep
ஸ
தஸ்ய
மத்⁴யே
ப⁴வநஸ்ய
மாருதி:
லதா
க்³ருஹாந்
சித்ர
க்³ருஹாந்
நிஶாக்³ருஹாந்
|
ஜகா³ம
ஸீதாம்
ப்ரதி
த³ர்ஶநோத்ஸுகோ
ந
சைவ
தாம்
பஶ்யதி
சாரு
த³ர்ஶநாம்
||
Prose passage
▾
Meaning
Keep
ஆஞ்ஜநேயர்
ஸீதையைக்
கண்டுபிடிப்பதிலேயே
நோக்கமுள்ளவராய்,
அந்தக்
கிருஹத்தில்
தேடிக்கொண்டு
போகையில்,
கொடிகளால்
செய்யப்பட்ட
வீடுகளையும்,
விசித்திர
ரூபங்களுடன்
கட்டப்பட்ட
வீடுகளையும்,
ராத்திரியில்
வஸிக்கத்
தகுந்த
வீடுகளையும்
கண்டு
அங்கெல்லாம்
ஜாக்கிரதையாய்த்
தேடினார்.
அழகிய
பார்வையுடைய
ஸீதையை
மாத்திரம்
காணவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
“ஐயோ
!
இந்த
லங்கா
நகரத்தில்
எல்லாவிடங்களிலும்
வெகு
ஜாக்கிரதையாகத்
தேடியும்
ரகுநாதனுடைய
பிரிய
பாரியையைக்
காணோமே.
பிராணநாயகனை
விட்டுப்
பிரிந்திருக்க
முடியாமல்
உயிரை
விட்டாளோ
?
ஸாதுக்களுடைய
மார்க்கத்திலிருந்து
நழுவாத
ஜனகபுத்திரி
தன்
கற்பை
ரக்ஷிப்பதில்
நோக்கமுள்ளவளாய்,
இந்த
குரூர
ராக்ஷஸனுக்கு
இணங்காமல்
அவனால்
கொல்லப்பட்டாளோ
?
ராகவனுடைய
திவ்விய
மங்கள
விக்ரஹத்தைக்
கண்டு
ஆனந்தித்த
ஸீதை,
தனக்குக்
காவலாய்
வைக்கப்பட்ட
ராக்ஷஸிகளின்
ஏற்றக்
குறைவான
சரீரங்களையும்
அவயவங்களையும்
விகார
வேஷத்தையும்
தேஜஸற்ற
முகங்களையும்
குரூர
காரியங்களையும்
கண்டு
பயத்தால்
உயிரை
விட்டாளோ
?
Prose passage
▾
Meaning
Keep
ஸுக்ரீவனோ
மஹா
பலவான்
;
மிகவும்
கடுமையாகத்
தண்டிப்பவன்.
அவன்
குறிப்பிட்ட
ஒரு
மாத
காலத்தையும்
வானரர்களுடன்
விளையாட்டில்
கழித்தேன்
;
ஸீதையையும்
கண்டு
பிடிக்கவில்லை
;
சத்துருவின்
பல
பராக்கிரமங்களையும்
அறியவில்லை;
இந்த
ஸ்திதியில்
மஹா
ராஜாவிற்கெதிரில்
போவதற்கும்
யோக்கியதை
உண்டோ
?
ராவணனுடைய
அந்தப்புரத்தில்
ஓரிடம்
விடாமல்
தேடினேன்
;
அவனுடைய
பத்தினிகளைக்
கண்டேனே
தவிர
மஹா
பதிவிரதையான
ஸீதையைக்
காணவில்லையே
!
நூறு
யோஜனை
விஸ்தீரணமுள்ள
மஹா
ஸமுத்திரத்தைத்
தாண்டினதும்,
நடுவில்
நேர்ந்த
விக்கினங்களை
ஜயித்ததும்,
ஸூக்ஷ்ம
ரூபத்துடன்
இந்த
நகரத்தில்
எங்கும்
தேடினதும்
வீணாயிற்றே
!
Prose passage
▾
Meaning
Keep
வந்த
காரியத்தை
முடிக்காமல்
திரும்பிப்
போனால்,
‘ஹநுமான்
ஸமுத்திரத்தைத்
தாண்டி
லங்கைக்குப்
போயிருக்கிறான்.
நம்முடைய
ஸகல
உத்தேசங்களையும்
நிறைவேற்றிக்கொண்டே
வருவான்.
நாம்
விசாரப்பட
வேண்டியதில்லை.
நமது
கஷ்டங்கள்
தீர்ந்தன’
என்று
என்
வரவை
ஆவலுடன்
எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும்
வானர
வீரர்களெல்லாம்
என்னைச்
சூழ்ந்துகொண்டு
என்ன
சொல்வார்கள்
?
Prose passage
▾
Meaning
Keep
‘வீர
சிகாமணியே
!
எங்களால்
முடியாத
காரியத்தைச்
செய்தாய்.
ராகவ
பத்தினியைக்
கண்டாயா
?
ராவணனுடைய
பல
பராக்கிரமங்களைப்
பூர்ணமாக
அறிந்து
வந்தாயா
?
நீ
அங்கே
செய்த
ஸகல
வியவஹாரங்களையும்
விஸ்தாரமாய்
எங்களுக்குச்
சொல்’
என்று
கேட்பார்களே.
என்ன
பதில்
சொல்வேன்
?
லங்கா
நகரத்தில்
எவ்வளவு
தேடியும்
ஜானகியைக்
காணவில்லை
என்று
சொல்வேனா
?
Prose passage
▾
Meaning
Keep
மற்ற
வானர
வீரர்கள்
அங்கதனிடத்தில்
தங்களுடைய
பலத்தைச்
சொல்லித்
தப்புவித்துக்
கொண்டார்கள்.
நான்
மாத்திரம்
வாயை
மூடிக்கொண்டிருந்து
ஜாம்பவான்
என்னை
ஸ்தோத்திரம்
செய்யும்பொழுது
மனமகிழ்ந்து
அசட்டுத்
தனமாய்ப்
பிதற்றிவிட்டேனே.
செய்ய
வேண்டிய
காரியத்தின்
ஸ்வபாவத்தை
ஆராய்ந்து
பாராமல்,
செய்து
முடிக்கிறேனென்று
ஒப்புக்கொண்டேன்.
புறப்படுகையில்
மௌனமாயிராமல்,
‘ராகவனுடைய
கோதண்டத்திலிருந்து
பிரயோகிக்கப்பட்ட
பாணத்தைப்போல்
ஒரு
க்ஷணத்தில்
லங்கைக்குப்
போவேன்.
அங்கே
ஸீதையைத்
தேடிக்
கண்டுபிடிப்பேன்.
காணாவிட்டால்
பதினான்கு
லோகங்களில்
எங்கிருந்தாலும்
போய்க்
கண்டுபிடிப்பேன்.
அங்கும்
காணாவிட்டால்,
மறுபடியும்
லங்கைக்கு
வந்து
ராவணனைக்
கட்டி
இழுத்துக்கொண்டு
வருவேன்.
அவனையும்
காணாவிட்டால்
லங்கையை
வேருடன்
பெயர்த்து
இங்கே
கொண்டு
வருவேன்’
என்று
வீரவாதம்
பேசினேனே.
Prose passage
▾
Meaning
Keep
என்னைப்
புகழ்ந்த
வயது
சென்ற
ஜாம்பவானும்
அவரை
அனுஸரித்துப்
பேசின
அங்கதனும்,
மற்ற
வானரவீரர்களும்
இப்பொழுது
என்னைப்
பலவிதமாய்
நிந்திப்பார்களே.
திரும்பிப்
போகாமல்
இங்கேயே
இருந்து
விடு
என்றால்,
நான்
குறிப்பிட்ட
காலம்
தாண்டினவுடன்,
வானரர்களெல்லோரும்
‘ஹநுமான்
களைத்து
ஸமுத்திரத்தில்
விழுந்திருப்பான்
;
அல்லது
சத்துருக்களால்
கொல்லப்பட்டிருப்பான்’
என்று
நிச்சயித்து
பிராயோபவேசம்
செய்து
உயிரை
விடுவார்களே”
என்று
சற்றுநேரம்
கவலைகொண்டு
பிறகு,
“என்ன
புத்தி
மோசம்
போனேன்
!
Prose passage
▾
Meaning
Keep
கவலை
உயிரை
வாங்குமே
;
காரியங்களைக்
கெடுக்குமே
;
ஸகல
ஸம்பத்திற்கும்
உத்ஸாஹமல்லவா
காரணம்
;
உத்ஸாஹமே
சிரேஷ்டமான
ஸுகத்தைக்
கொடுக்கும்.
எந்தக்
காரியத்தையும்
செய்யும்படி
மனிதனைத்
தூண்டிவிடுகிறது
உத்ஸாஹமல்லவா
?
மனிதன்
செய்யும்
ஸகல
காரியங்களையும்
ஸுலபமாகச்
செய்வது
உத்ஸாஹமே.
ஆகையால்
உத்ஸாஹத்துடன்
மறுபடியும்
பிரயத்தனம்
செய்கிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனால்
ஆளப்பட்ட
ஸ்தலங்களையும்
பானசாலைகளையும்,
புஷ்ப
கிருஹங்களையும்,
சித்திர
சாலைகளையும்,
கிரீடா
கிருஹங்களையும்,
வீடுகளைச்
சேர்ந்த
தோட்டங்களிலுள்ள
பாதைகளையும்,
புஷ்பகம்
முதலிய
விமானங்களையும்,
சுரங்கங்களையும்,
நாற்சந்திகளிலுள்ள
கிருஹங்களையும்,
வீடுகளுக்குத்
தொலைவில்
ஸ்வேச்சையாய்
விளையாடுவதற்காகக்
கட்டப்பட்ட
கிருஹங்களையும்
மறுபடியும்
தேடுகிறேன்”
என்று
மேலே
ஏறியும்
இறங்கியும்
நின்றுகொண்டும்
நடந்துகொண்டும்
வாசல்களையும்
கதவுகளையும்
திறந்துகொண்டும்,
உள்ளே
நுழைந்தும்
வெளியே
வந்தும்,
குகைகளில்
பிரவேசித்தும்,
வெளிக்
கிளம்பியும்
தேடிக்கொண்டே
போனார்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனுடைய
அந்தப்புரத்தில்
அவரால்
பரிசோதிக்கப்படாத
இடம்
கிடையாது.
கோட்டைக்குள்ளிருக்கும்
வீதிகளையும்
நாற்சந்திமரங்களுக்கடியிலுள்ள
மேடைகளையும்
துரவுகளையும்
குளங்களையும்
நன்றாய்த்
தேடிப்
பார்த்தார்.
நானா
ரூபமுள்ளவர்களும்
குரூபிகளும்
விகார
வேஷமுள்ளவர்களுமான
ராக்ஷஸிகளைக்
கண்டார்
;
ஜானகியைக்
காணவில்லை.
நிகரற்ற
ஸௌந்தரியத்தையுடைய
வித்யாதர
ஸ்த்ரீகளைக்
கண்டார்
;
ராகவனுக்கு
ஆனந்த
ஹேதுவான
ஸீதையைக்
காணவில்லை.
பூர்ணசந்திரனையொத்த
முகங்களையுடைய
உத்தமமான
நாக
கன்யைகளைக்
கண்டார்
;
லாவண்ய
நிதியான
வைதேஹியைக்
காணவில்லை.
யுத்தத்தில்
ஜயித்த
நாகர்களுடைய
கன்யைகளைப்
பலவந்தமாய்
அபகரித்துக்
கொண்டுவந்து
வைத்திருப்பதைக்
கண்டார்;
ஜனக
மஹாராஜனுக்கு
அருமையான
ஸீதையைக்
காணவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
வாயு
புத்திரனும்,
ஸூரியனை
அலக்ஷ்யமாய்த்
தாவிப்
பிடித்தவரும்,
புத்தியிலும்
யோசனையிலும்
ஒப்பில்லாதவருமான
ஆஞ்ஜநேயர்
மற்ற
ஸ்த்ரீ
ரத்தினங்களையும்
கண்டு
ஸீதையை
மாத்திரம்
காணாமல்
சொல்ல
முடியாத
துக்கத்தை
அடைந்தார்.
அளவற்ற
பராக்கிரமசாலியானாலும்
வானர
வீரர்களுடைய
பிரயத்தனங்களும்,
தான்
ஸமுத்திரத்தைத்
தாண்டினதும்
வீணானதைக்
கண்டு
மறுபடியும்
கவலைகொண்டு
புஷ்பகத்திலிருந்து
இறங்கி,
துக்கத்தால்
மனம்
நொந்து
மறுபடியும்
ஆலோசிக்கலானார்.
25
▾
Meaning
Keep
அவதீர்ய
விமாநாச்ச
ஹநூமாந்
மாருதாத்மஜ:
|
சிந்தா
முபஜகா³மாத²
ஶோகோபஹத
சேதந:
||
Previous
←
பானசாலை
Next
ஸீதையைக் காணாமல் மாருதி துக்கித்தது (தொடர்ச்சி)
→