Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதையைக் காணாமல் மாருதி துக்கித்தது (தொடர்ச்சி)
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதையைக்
காணாமல்
மாருதி
துக்கித்தது
(தொடர்ச்சி)
25
▾
Meaning
Keep
விமாநாத்து
ஸுஸங்க்ரம்ய
ப்ராகாரம்
ஹரியூத²ப:
|
ஹநூமாந்
வேக³வாநாஸீத்³
யதா²
வித்³யுத்³
க⁴நாந்தரே
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
மஹா
வேகசாலியான
ஹநுமான்
இந்திர
நீலக்கல்லால்
அலங்கரிக்கப்பட்ட
கோட்டைமதில்
மேலேறி
நிற்கையில்
கறுத்த
மேகங்களுக்கு
நடுவில்
பிரகாசிக்கும்
மின்னலைப்போல்
தோன்றினார்.
ராவண
கிருஹத்தில்
எங்கு
தேடியும்
ஸீதையைக்
காணாமல்
பின்வருமாறு
யோசித்தார்.
“ராமனுடைய
ஆஜ்ஞையை
நிறைவேற்ற
முயன்ற
நான்
இந்த
லங்கா
நகரத்தை
வேண்டியவரையில்
தேடினேன்.
உத்தம
லக்ஷணங்கள்
பொருந்திய
அவயவங்களையுடைய
ஸீதையை
மாத்திரம்
காணவில்லை.
குட்டைகள்,
குளங்கள்,
ஏரிகள்,
வாய்க்கால்கள்,
நதிகள்,
சதுப்பு
நிலங்கள்
நிறைந்த
வனங்கள்,
புதர்கள்,
மலைகள்
ஒன்றுவிடாமல்
தேடிப்
பார்த்தேன்;
ஜானகி
மாத்திரம்
காணப்படவில்லையே!
‘ராவண
கிருஹத்தில்
ஸீதை
இருக்கிறாள்;
அதோ
பாருங்கள்’
என்று
சொன்ன
ஸம்பாதியின்
வார்த்தைப்படி
இங்கே
அவளைக்
காணேனே!
Prose passage
▾
Meaning
Keep
எது
எப்படியிருந்தாலும்,
ஜானகி
காம
பரவசமாய்,
துஷ்ட
நடத்தையுள்ள
ராவணனிடத்தில்
மோகித்து
அவனுக்கு
உட்பட்டிருப்பாளோ?
அவள்
ஸாமான்ய
ஸ்த்ரீயா?
யாகயக்ஞங்களுக்கும்
பிரஹ்மவித்யைக்கும்
வாஸஸ்தலமான
விதேஹ
வம்சத்தில்
பிறந்தவளல்லவா?
சதானந்தர்
யாக்ஞவல்க்யர்
முதலிய
பிரஹ்ம
நிஷ்டர்களால்
பரிசுத்தமான
மிதிலா
நகரத்தில்
அவதரித்தவளல்லவா?
மஹரிஷிகளும்
உபதேசத்திற்காக
வந்து
அடுக்கும்படியான
ஜனகரென்ற
பிரஹ்மவித்திற்குப்
பிறந்தவளல்லவா?
மற்ற
ஜீவகோடிகளைப்போல்
ஸ்த்ரீ
புருஷ
ஸம்பந்தத்தால்
பிறக்காமல்.
யாக
காலத்தில்
யாக
பூமியை
உழும்பொழுது
கலப்பை
நுனியால்
வெளிப்படுத்தப்
பட்டவளன்றோ?
Prose passage
▾
Meaning
Keep
ஒருவேளை
ராவணன்
ஸீதையை
எடுத்துக்கொண்டு
ஆகாச
மார்க்கமாகப்போகையில்,
‘இதற்குள்
ராமன்
பர்ணசாலைக்கு
வந்து,
ஸீதையைக்
காணாமல்
தேடி,
ஜடாயு
முதலியவர்களால்
நான்
கொண்டு
போகிறேனென்றறிந்து,
பாணப்
பிரயோகம்
செய்தால்
என்ன
செய்வேன்?
அது
எங்கிருந்தாலும்
விடாதே.
மாரீசனைப்
படுத்தினபாடு
தெரியாதா?’
என்று
நினைத்து
நடுங்கி
ஸீதையை
நழுவ
விட்டிருக்கலாம்.
Prose passage
▾
Meaning
Keep
அவள்
மலைகளைப்போன்ற
அலைகள்
கொந்தளிக்கும்
ஸமுத்திரத்தை
ஒரு
நாளும்
காணாதவள்;
தேவகணங்கள்
ஸஞ்சரிக்கும்
ஆகாச
வீதியில்
அதிவேகமாய்ச்
செல்லும்போது
முதலை
திமிங்கிலம்
நீர்ப்
பாம்பு
முதலிய
ஜல
ஜந்துக்களைக்
கண்டு
பயத்தால்
பிரக்ஞையற்றுக்
கீழே
விழுந்து
இறந்தாளோ?
மிக்க
செல்வமாய்
வளர்க்கப்
பட்டவளாகையால்
மஹா
பலவானான
ராவணனுடைய
புஜங்களால்
பிடிக்கப்பட்டு
அவன்
போகும்
அதிவேகத்தை
ஸஹிக்காமல்
உயிரை
விட்டிருப்பாளோ?
Prose passage
▾
Meaning
Keep
அல்லது,
மஹா
பதிவிரதையாகையால்
பர
புருஷனால்
தொடப்பட்ட
தேகத்தைச்
சுருக்கிக்
கொண்டு
ராவணன்
ஸமுத்திரத்திற்குமேல்
வர
வர
உயரக்
கிளம்பிப்
போகையில்
ஸமுத்திரத்தில்
விழுந்திருப்பாளோ?
அல்லது,
ராவணன்
தன்
இஷ்டத்திற்கிணங்கும்படி
அவளைப்
பலாத்காரம்
செய்திருப்பான்;
உயிரை
விட்டாலும்
விடுவாளே
அன்றி
ஸம்மதிப்பாளா?
அதைக்
கண்டு
ராவணன்
கோபபரவசனாய்
தனியாயும்
அனாதையாயும்
இருக்கும்
ஜானகியைத்
தின்றிருப்பான்.
அல்லது
ராவண
பத்னிகள்
சக்களத்தி
துவேஷத்தால்
ஸாதுவான
ஜானகியைப்
பங்கிட்டுத்
தின்று
விட்டார்களோ?
Prose passage
▾
Meaning
Keep
அல்லது
ராமமூர்த்தியின்
திவ்விய
மங்கள
விக்ரஹத்தையும்,
கோடி
மன்மத
ஸௌந்தரியத்தையும்,
பூர்ண
சந்திரனைப்
போன்ற
முகத்தையும்,
மலர்ந்த
செந்தாமரையைப்
போன்ற
நேத்திரங்களையும்
நினைத்து
நினைத்துருகி,
‘இனி
அவரை
நான்
பார்க்கப்
போகிறதில்லை’
என்று
மனம்
தளர்ந்து
உயிரை
விட்டாளோ?
‘ஹா!
ராம!
லக்ஷ்மண!
ஹா!
அயோத்யா!’
என்று
கதறிக்
கொண்டே
பிராணனை
விட்டாளோ?
Prose passage
▾
Meaning
Keep
சீ!
இப்படி
எண்ணுவதெல்லாம்
புத்திஹீனம்.
ஸீதையைக்
கொஞ்சம்கூட
அபாயமில்லாமல்
லங்கையில்
கொண்டுபோய்
வைப்பது
ராவணனுக்கு
ஒரு
பெரிய
காரியமா?
ஹிமய
மலையைப்போல்
கலங்காத
தைரியத்தையுடைய
வீர
சிரேஷ்டர்களுடைய
வம்சத்தில்
பிறந்த
ஜானகிக்குப்
பயமென்பதும்
உண்டோ?
பதிவிரதா
தர்மமென்ற
நெருப்புக்
கொழுந்தால்
சூழப்பட்ட
ஜானகியை
ராவணன்
ஹிம்ஸை
செய்யவும்
முடியுமோ?
Prose passage
▾
Meaning
Keep
தான்
ஆசை
கொண்டு,
ஸகல
அபாயங்களையும்
லக்ஷியம்
செய்யாமல்,
மஹா
பாதகத்தைச்
செய்யத்
துணிந்த
ராவணன்
ஸீதையைத்
தின்றிருப்பான்
என்று
எண்ணவும்
முடியுமோ?
ராக்ஷஸேசுவரனுக்கு
மிக்கப்
பிரியமான
ஸீதையை
அவனுடைய
பத்தினிகள்
கண்ணெடுத்துப்
பார்க்கவும்
துணிவார்களோ?
ராமனுடைய
நிஜ
ஸ்வரூபத்தையும்,
தேஜஸையும்
பராக்கிரமத்தையும்
பலத்தையும்
வீரியத்தையும்
பூர்ணமாக
அறிந்த
ஸீதை,
அவர்
தன்னை
மறந்து
விடுவாரென்றும்,
அவருக்கு
ராவணனை
ஜயிப்பது
அஸாத்தியமென்றும்
எண்ணி
நம்பிக்கையற்று
உயிரை
விடுவாளோ?
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
உயிரோடிருக்கிறாள்;
லங்கையிலேயே
இருக்கிறாள்.
ஆனால்
பஞ்சவர்ணக்
கிளியைக்
கூட்டிலடைத்து
வைப்பதைப்போல்
எங்கேயோ
ரஹஸ்யமான
இடத்தில்
ராவணனால்
ஒளித்து
வைக்கப்பட்டுக்
கஷ்டப்பட்டுக்
கொண்டிருக்கிறாளென்பது
நிச்சயம்.
ஸ்த்ரீ
புருஷ
ஸம்பந்தமில்லாமல்
யாக
பூமியில்
பிறந்து,
ஜனக
ராஜரிஷியால்
வளர்க்கப்பட்டு,
ஸகலலோக
நாதனான
ராமமூர்த்தியைப்
பர்த்தாவாக
அடைந்து
பிரபஞ்சத்தை
மயக்க
வந்த
மாயையைப்போல்
அழகால்
ஸமஸ்த
பிராணிகளையும்
மோகிக்கச்
செய்யும்
ஜானகி,
எவ்விதத்திலும்
தனக்குத்
தகாத
மஹா
பாபிக்கு
ஸ்வாதீனப்பட்டிருப்பாளோ?
ராவணன்
அவளை
எங்கேயாவது
பூமிக்குள்
ஒளித்துவைத்திருப்பானோ?
வரும்
வழியில்
மயங்கி
ஸமுத்திரத்தில்
விழுந்தாளோ?
ராகவனைப்
பிரிந்திருக்க
முடியாமல்
உயிரை
விட்டாளோ?
Prose passage
▾
Meaning
Keep
ஸீதையிடத்தில்
அபாரப்
பிரியமுள்ள
ராமனிடத்தில்
இதைத்
தெரிவிப்பது
அயுக்தம்.
சொன்னால்
பெரும்
கெடுதி
நேரும்;
சொல்லாவிட்டால்
ஸ்வாமிக்குத்
துரோகம்
செய்தவனாவேன்;
ஒன்றிற்கொன்று
விரோதமாக
இருக்கிறது.
என்ன
செய்யலாம்?
இந்த
ஸங்கடதசையில்
கால
தேசத்திற்கு
ஒத்தபடி
நான்
செய்ய
வேண்டியதென்ன?”
என்று
ஆஞ்சநேயர்
சிந்திக்கலானார்.
Prose passage
▾
Meaning
Keep
“ஸீதையைக்
காணாமல்
இங்கிருந்து
கிஷ்கிந்தைக்குச்
சென்றதால்
என்ன
பிரயோஜனம்?
ஸமுத்திரத்தை
தாண்டினதும்,
லங்கையில்
பிரவேசித்ததும்,
ராவணனைப்
பார்த்ததும்
வீணாகும்.
ஸுக்ரீவ
மஹாராஜனும்,
கிஷ்கிந்தையிலுள்ள
வானரர்களும்,
ராம
லக்ஷ்மணர்களும்
என்னை
என்ன
சொல்லமாட்டார்கள்?
Prose passage
▾
Meaning
Keep
“எப்படித்
தேடியும்
ஸீதையைக்
காணவில்லை”
என்ற
கோரமான
வார்த்தையை
ராமனிடத்தில்
சொன்னால்,
அந்த
க்ஷணத்திலேயே
உயிரை
விடுவாரே
என்
கடுமையான
வாக்கியங்கள்
நாராசங்களைப்போல்
அவருடைய
ஹிருதயத்தைக்
குரூரமாய்த்
துளைத்து,
இந்திரியங்களை
வேரறுக்கும்;
அதற்குப்
பிறகும்
பிராணன்
தரிக்குமோ?
ஸஹிக்கமுடியாத
துக்கத்தால்
ராமன்
உயிரைவிட
நிச்சயிப்பதைக்
கண்டு,
தனது
உடல்
உயிர்
ஆவியை
அவருக்கு
அர்ப்பணம்
செய்த
லக்ஷ்மணன்
பிழைத்தும்
இருப்பாரோ?
மஹாபுத்திமானல்லவா?
ராமலக்ஷ்மணர்கள்
இறந்ததைக்
கேட்டவுடன்
பரதன்
உயிரை
விடுவார்.
அவருடைய
நிழலைப்போன்ற
சத்ருக்னன்
ஒரு
நிமிஷமாவது
அவனை
விட்டிருப்பாரோ?
லோக
பாலர்களைப்போன்ற
புத்திரர்களைப்
பறிகொடுத்துக்
கௌஸல்யை
ஸுமித்திரை
கைகேயி
என்ற
ராஜபத்தினிகள்
பிழைத்தும்
இருப்பார்களோ?
Prose passage
▾
Meaning
Keep
ஸுக்ரீவ
மஹாராஜன்
சொன்ன
சொல்
தவறாதவன்;
ராமனாலடைந்த
பரமோபகாரத்திற்குத்
தன்னால்
பிரத்யுபகாரம்
செய்ய
முடியாமல்
அவர்
துக்கத்தால்
இறப்பதைப்
பார்க்க
ஸஹிப்பாரோ?
வெகு
காலம்
கஷ்டங்களை
அனுபவித்துப்
பலவிதமாய்
அவமானம்
செய்யப்பட்டுத்
தன்
பர்த்தாவிற்கு
க்ஷேமம்
பிறக்குமோ
என்று
தெய்வங்களை
வேண்டிய
ருமை,
ஸுக்ரீவனும்
இறந்து
விதவையாய்க்
காலம்
கழிக்க
நினைப்பாளோ?
உத்தம
பதிவிரதையல்லவா?
வாலியைப்
பறிகொடுத்து
நடைபிணம்
போலிருக்கும்
தீக்ஷ்ணபுத்தியுள்ள
தாரை
ஸுக்ரீவனையும்
இழந்து
உயிரோடிருப்பாளா?
நிகரற்ற
மாதாபிதாக்களுமில்லாமல்,
தகப்பனுக்கு
தகப்பனாயிருந்த
ஸுக்ரீவனும்
இறந்து,
குழந்தை
அங்கதன்
அகாலமரணமடைவானென்பதில்
ஸந்தேகமுண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
தங்களுக்கு
ஸகலவிதத்திலும்
கதியான
அரசர்கள்
மடிந்த
பிறகு
வானரர்கள்
கைகளாலும்
முஷ்டிகளாலும்
தலைகளில்
அறைந்துகொண்டு
பிராணனை
விடுவார்கள்.
மஹாராஜாவால்
மிருதுவான
வார்த்தைகளாலும்
வெகுமானங்களாலும்
கௌரவத்தாலும்
பெருமைப்படுத்தப்பட்ட
வானரசிரேஷ்டர்கள்
அவர்
இறந்த
பிறகும்
மானஹீனமாய்
ஜீவனம்
செய்வார்களா?
வீடுகளிலும்
வனங்களிலும்
மலைகளிலும்
கூடி
ஸந்தோஷமாய்
விளையாடுவார்களோ?
ஸுக்ரீவனுக்கு
நேர்ந்த
கஷ்டத்தை
நினைத்து
மந்திரி
பிரதானிகளுடனும்
பெண்டு
பிள்ளைகளுடனும்
மலைச்சிகரங்களிலிருந்து
விழுந்து
மடிவார்கள்;
விஷத்தைத்
தின்றோ,
நெருப்பில்
விழுந்தோ,
தூக்குப்
போட்டுக்கொண்டோ,
உபவாசம்
செய்தோ,
ஆயுதங்களாலோ
எந்தவிதத்திலாவது
தற்கொலை
செய்து
கொள்வார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
நான்
போனவுடன்
பெருங்கூச்சலும்
அழுகையும்
கிளம்பும்;
இக்ஷ்வாகு
வம்சம்
மடியும்;
வானரர்களும்
நிர்மூலமாவார்கள்.
இப்படி
எல்லோரையும்
கொல்லும்
நான்
இங்கிருந்து
கிஷ்கிந்தைக்குப்
போக
நினைப்பேனோ?
ஸீதையைக்
காணாமல்
மஹாராஜாவின்
முகத்தில்
எப்படி
விழிப்பேன்?
Prose passage
▾
Meaning
Keep
நான்
போகாமல்
இங்கேயே
இருந்துவிட்டால்,
தர்மாத்மாக்களும்
பராக்கிரமசாலிகளுமான
ராமலக்ஷ்மணர்களும்
ஸமுத்திரக்
கரையில்
என்னை
எதிர்பார்த்திருக்கும்
வானர
வீரர்களும்,
‘மாருதி
காரியத்தை
எப்படியாவது
முடித்துக்கொண்டே
வருவான்’
என்ற
நம்பிக்கையால்
உயிரை
வைத்துக்கொண்டிருப்பார்கள்.
நான்
பழம்
கிழங்கு
ஜலம்
நிறைந்த
ஸமுத்திரக்கரையோரங்களில்
வானப்பிரஸ்த
விரதத்தை
அனுஷ்டித்துக்கொண்டு
அகஸ்மாத்தாய்
என்
கைகளிலும்
வாயிலும்
விழும்
பதார்த்தங்களைத்
தின்று
காலம்
கழிப்பேன்;
அல்லது,
சிதையை
அடுக்கி
நெருப்பில்
விழுந்து
இறப்பேன்;
ஸமுத்திரத்தில்
குதித்து
உயிரை
விடுவேன்.
உபவாஸம்
செய்து
தேகத்திலிருந்து
ஆத்மாவைப்
பிரிக்க
யத்தனம்
பண்ணிக்கொண்டிருக்கையில்
காக்கைகளும்
நாற்கால்
ஜந்துக்களும்
என்
தேகத்தைத்
தின்றுவிடும்.
இவ்வித
மரணம்
மஹரிஷிகளால்
மெச்சப்பட்டதே.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
ராத்திரி
நன்றாக
ஆரம்பித்தது;
முதலில்
லங்காதேவதையை
ஜயித்தேன்;
சந்திரனும்
எனக்கு
விசேஷ
உபகாரம்
செய்தான்;
ஸீதையைத்
தேடும்
உத்தமகாரியத்தில்
ஸஹாயம்
செய்ததென்றும்,
ஹநுமான்
ஸீதையைக்
கண்டுபிடித்த
ராத்திரி
என்றும்
அபாரகீர்த்தியால்
அலங்கரிக்கப்படும்
என்று
எண்ணியிருந்தேன்;
ஸீதையைக்
காணாமல்
இதெல்லாம்
வீணாயிற்று.
தபஸ்வியாக
இருந்து
மரத்தடிகளில்
காலம்
கழிப்பேனேயொழிய
ஸீதையைக்
காணாமல்
திரும்பிப்
போகமாட்டேன்.
போனால்
என்னை
ஆவலுடன்
எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும்
அங்கதனும்
மற்ற
வானரர்களும்
உடனே
பிராணனை
விடுவார்கள்.
நான்
இறப்பதில்
அநேகம்
கெடுதிகளுண்டு;
உயிரோடிருந்தால்
என்றைக்காவது
க்ஷேமம்
நேரும்.
ஆகையால்
உயிரை
வைத்துக்கொள்வதே
நலம்.”
Prose passage
▾
Meaning
Keep
இப்படிப்
பலவிதமாய்
யோசித்தும்
ஆஞ்ஜநேயருக்குத்
துக்கம்
தீரவில்லை.
“அல்லது,
மஹாபலவானான
லங்காபதியைக்
கொல்லட்டுமா?
அதனால்
வேறு
பிரயோஜனமில்லாவிட்டாலும்
அந்தப்
பாபி
செய்த
அக்கிரமத்திற்குப்
பழிவாங்கின
திருப்தியாவது
உண்டாகும்.
அல்லது,
யாகபசுவை
அக்னிதேவதைக்கு
வெகுமானமாய்க்
கொண்டு
போவதுபோல்,
ராவணனைக்
கட்டி
ஆகாசமார்க்கமாய்க்
கொண்டுபோய்
ராமனுடைய
பாதத்தில்
போடட்டுமா?”
என்று
ஹநுமான்
துக்கத்தாலும்
கவலையாலும்
பீடிக்கப்பட்டு
மறுபடியும்
ஆலோசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“ஸீதையைக்
காணும்
வரையில்
இங்கேயிருந்து
லங்கையை
அடிக்கடி
தேடுவேன்.
அல்லது,
ஸம்பாதி
சொன்ன
வார்த்தையை
நம்பி,
‘ஸீதை
லங்கையில்
இருக்கிறாள்’
என்று
சொல்லி
ராமனை
அழைத்து
வந்தாலென்ன?
ஐயோ!
ஸீதை
இங்கு
இல்லாவிட்டால்
வானரகுலத்தைச்
சாம்பலாக்குவாரே!
ஆகையால்
இங்கேயே
இந்திரியங்களை
அடக்கிக்கொண்டு
உபவாஸம்
செய்வேன்;
பாபம்!
என்னால்
வானரர்களெல்லாம்
நாசமடைய
வேண்டுமா?”
Prose passage
▾
Meaning
Keep
என்று
நாற்புறங்களிலும்
கவனித்துப்
பார்த்து,
“மோசம்
போனேனே!
என்ன
புத்திஹீனம்!
இதோ
ஆகாசத்தையளாவும்
அசோகமரங்களடர்ந்த
சோலையை
நான்
இதுவரையில்
தேடவில்லையே;
ஜானகியை
ஏன்
இங்கே
வைத்திருக்கக்
கூடாது?
இந்த
க்ஷணமே
தேடுகிறேன்.
வஸுக்கள்
ருத்திரர்கள்
ஆதித்தியர்கள்
அச்வினிகள்
மருத்துக்கள்
முதலிய
தேவகணங்களை
நமஸ்கரிக்கிறேன்.
எனக்கு
ஸஹாயம்
செய்து
நான்
ராக்ஷஸகுல
காலனாகும்படி
ஆசீர்வதிக்கட்டும்.
வெகுகாலம்
கடுந்தவம்
செய்தவனுக்கு
ஸித்தியைக்
கொடுக்கும்
தேவதையைப்போல்
ரகுகுலகீர்த்தியை
விளங்கச்
செய்யும்
ஸீதையைக்
கொண்டு
ராமனிடத்தில்போய்
ஒப்புவிப்பேன்”
என்று
மஹாதேஜஸ்வியான
ஆஞ்ஜநேயர்
சற்று
நேரம்
யோசித்து,
கவலையால்
இந்திரியங்கள்
கலங்கி,
“இப்பொழுதாவது
காரியம்
கைகூடுமோ?”
என்று
எண்ணிக்கொண்டே
எழுந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“ராமலக்ஷ்மணர்களுக்கும்
ஜானகிக்கும்
ருத்திரன்
இந்திரன்
யமன்
வாயு
சந்திரன்
ஸூரியன்
மருத்துக்கள்
முதலிய
தேவதைகளுக்கும்
நமஸ்காரம்”
என்று
ஸூரியபுத்திரனும்
தன்
பிரபுவுமான
ஸுக்ரீவனை
மனத்தால்
வந்தனம்
செய்து
ஸகல
திக்குகளையும்
நன்றாய்ப்
பரிசோதித்துப்
பார்த்து,
ஒருவரும்
இல்லை
என்றறிந்து
அசோகவனத்தை
உற்றுப்
பார்த்தார்.
அங்கே
போய்த்
தேட
நிச்சயித்து
மேலே
செய்யவேண்டிய
காரியங்களை
ஆலோசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“அசோகவனத்தில்
ஜலம்
நிறைந்திருக்கும்;
கணக்கில்லாத
ராக்ஷஸர்கள்
ஸஞ்சரித்துக்
கொண்டிருப்பார்கள்.
ஸகலவித
ஸாதனங்களாலும்
பரிஷ்காரமாக
இருக்கும்.
மரங்களைப்
பாதுகாக்க
அனேகம்
பெயர்கள்
ஏற்படுத்தப்பட்டிருப்பார்கள்.
ஸர்வஜகத்திற்கும்
பிராணாதாரமான
என்
பிதாவும்
கடுமையாய்
வீசக்காணேன்.
ராவணனைச்
சேர்ந்தவர்கள்
காணாமலிருப்பதற்கும்
ராமகாரியம்
ஸித்திக்கும்
பொருட்டும்
என்
தேகத்தைச்
சுருக்கியிருக்கிறேன்.
மஹரிஷிகளும்
தேவதைகளும்
நான்
ஸீதையைப்
பார்க்கும்படி
ஆசீர்வதிக்கட்டும்.
ஸ்வயம்புவான
பிரஹ்மதேவரும்
அக்னி
வாயு
வருணன்
மஹேந்திரன்
ஸூரியசந்திரர்கள்
அச்வினிகள்
மருத்துக்கள்
ருத்திரன்
முதலியவர்களும்
என்
காரியம்
ஸித்திக்கும்படி
அனுக்கிரகிக்கட்டும்.
ஸகல
பூதங்களும்
அவைகளுக்கு
நாதனான
விஷ்ணுவும்
நான்
போகும்
வழியில்
என்
கண்ணில்
படுகிறவர்களும்
படாதவர்களும்
என்
காரியம்
கைகூடும்படி
ஆசீர்வதிக்கட்டும்.
Prose passage
▾
Meaning
Keep
சிறந்த
மூக்கையும்,
வெண்மையான
பற்களையும்,
நிலவு
போன்ற
சிரிப்பையும்,
செந்தாமரை
இதழ்போன்ற
கண்களையும்
உடையதாய்
பூர்ண
சந்திரனைப்போல்
ஸகல
பிரபஞ்சத்திற்கும்
ஆனந்தத்தைக்
கொடுக்கும்
ஸீதாதேவியின்
திருமுகமண்டலத்தை
இந்தத்
தேவதைகளுடைய
கிருபையால்
எப்பொழுது
பார்ப்பேன்?
மஹாநீசன்,
பாபத்திற்கு
அஞ்சாதவன்,
ஸகல
லோகங்களும்
நடுங்கும்படியான
குரூரகிருத்தியங்களைச்
செய்கிறவன்,
கோரரூபியானாலும்
எல்லோரும்
மோகிக்கும்படியான
வேஷத்தைத்
தரிக்கிறவன்;
தன்
ஜனங்களை
விட்டுத்
தனியாய்த்
தவிக்கும்
மஹாபதிவிரதையான
ஜானகியைப்
பலாத்காரம்
செய்து
கொண்டுவந்திருக்கிறானே!
அவளை
இப்பொழுது
பார்ப்பது
எப்படி?”
என்று
சிந்தித்தார்.
69
▾
Meaning
Keep
க்ஷுத்³ரேண
பாபேந
ந்ருஶம்ஸ
கர்மணா
ஸுதா³ருணாலங்க்ருத
வேஷதா⁴ரிணா
|
பலாபி⁴பூ⁴தா
ஹ்யப³லா
தபஸ்விநீ
கத²ம்
நு
மே
த்³ருஷ்டி
பதே²த்³ய
ஸா
ப⁴வேத்
Previous
←
ஸீதையைக் காணாமல் மாருதி துக்கித்தது
Next
அசோகவனம்
→