Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · அசோகவனம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
அசோகவனம்
1
▾
Meaning
Keep
ஸ
முஹூர்தமிவ
த்⁴யாத்வா
மநஸா
சாதி⁴க³ம்ய
தாம்
|
அவப்லுதோ
மஹாதேஜா:
ப்ரகாரம்
தஸ்ய
வேஶ்மந:
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படிச்
சற்றுநேரம்
ஆலோசித்து
அசோகவனத்திற்குப்போக
நிச்சயித்து,
மஹாதேஜஸ்வியான
ஹநுமான்
அதன்
மதில்
சுவரைத்
தாண்டினார்.
பிராகாரத்தின்
மேலிருந்து
பார்க்கையில்
ஆனந்தத்தால்
அவருடைய
ஸகல
அவயவங்களும்
பூரித்தன.
வஸந்த
ருதுவில்
முதலில்
புஷ்பித்த
ஆச்சா
அசோகம்
சம்பகம்
மா
முதலிய
பலவித
விருக்ஷங்களைக்
கண்டார்;
பிறகு
வில்லிலிருந்து
பிரயோகிக்கப்பட்ட
நாராசத்தைப்போல்,
மாந்தோப்புகளால்
மறைக்கப்பட்டுக்
கொடிகளால்
சூழப்பட்ட
மரச்சோலைகளில்
பாய்ந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அங்கே
குயில்களும்
மயில்களும்
வண்டுகளும்
இன்னும்
பலவகைப்
பக்ஷிகளும்
மதுரமாய்ச்
சப்தித்துக்கொண்டிருந்தன;
மான்
முதலிய
மிருகங்கள்
கூட்டங்கூட்டமாய்
ஸஞ்சரித்தன;
வெள்ளிமயமாயும்
தங்கமயமாயும்
விளங்கும்
அனேக
விருக்ஷங்கள்
பாலஸூரியர்களைப்போல்
புஷ்பங்களாலும்
பழங்களாலும்
பிரகாசித்தன.
விசித்திரமான
காடுகளில்
ஸகலப்
பிராணிகளும்
ஆனந்தமாய்
விளையாடிக்கொண்டிருந்தன.
அழகிலும்
சீலத்திலும்
நிகரில்லாத
ஜானகியைத்
தேடிக்கொண்டு
போகையில்
ஸுகமாய்த்
தூங்கிக்கொண்டிருந்த
பக்ஷிகளை
எழுப்பினார்;
அவை
நான்கு
புறங்களிலும்
பறந்து
இறக்கைகளால்
மரங்களை
அடித்து
நானா
வர்ணமுள்ள
புஷ்பங்களை
உதிர்த்தன.
மலர்களால்
தூவப்பட்ட
தேகத்தையுடைய
ஹநுமான்
அசோகவனத்தில்
புஷ்பத்தால்
செய்யப்பட்ட
மலையைப்போல்
தோன்றினார்.
மரச்சோலைகளிலிருந்து
ஸகல
திக்குகளிலும்
பாயும்
ஆஞ்ஜநேயரை
வஸந்தருதுவின்
தேவதை
என்று
அங்கிருந்த
ஸகலப்
பிராணிகளும்
நினைத்தன.
Prose passage
▾
Meaning
Keep
மரங்களிலிருந்து
உதிர்ந்த
பலவகைப்
புஷ்பங்களால்
அலங்கரிக்கப்பட்ட
பூமியானது
ஆபரணங்களணிந்த
ஸுந்தரியைப்போல்
விளங்கிற்று.
மஹாபலவானான
ஹநுமான்
அந்த
மரங்களை
வேகமாய்
அசைக்கும்பொழுது
அவை
விசித்திரமான
புஷ்பங்களைச்
சொரிந்தன.
சூதாட்டத்தில்
பந்தயம்
வைத்து
தோற்று
ஆடையாபரணங்களைக்
கழற்றிவைத்த
சூதாடிகளைப்போல்,
புஷ்பங்களையும்
பழங்களையும்
இலைகளையும்
உதிர்த்த
அந்த
விருக்ஷங்கள்
அழகு
குறைந்து
நின்றன.
பெருங்காற்றில்
அடிபட்டவைபோல்,
புஷ்பங்களும்
பழங்களும்
இலைகளுமற்றுப்
பக்ஷிகளுமில்லாமல்
வஸிக்கத்
தகாதவைகளாயின.
Prose passage
▾
Meaning
Keep
நாயகனுடன்
ரதிகேளி
அனுபவித்த
யௌவனஸ்த்ரீ,
கலைந்த
கேசங்களுடனும்
சந்தனப்பூச்சுகளும்
மகரிகாபத்திரங்களும்
திலகமும்
அழிந்தும்,
ஆசையுடன்
அதரபானம்
செய்யப்பட்டதால்
பற்களைப்போல்
வெண்மையான
உதடுகளுடனும்,
நகங்களாலும்
பற்களாலும்
காயம்பட்ட
தேகத்துடனும்
விளங்குவதுபோல்,
அசோகவனம்
ஹநுமானுடைய
கால்களாலும்
கைகளாலும்
வாலாலும்
துவைக்கப்பட்டுச்
சின்னபின்னமான
மரங்களுடன்
விளங்கிற்று.
மழைக்காலத்தில்
வாயுபகவான்
விந்திய
மலையில்
தங்கியிருக்கும்
மேகக்கூட்டங்களைச்
சிதறடிப்பதுபோல்,
அந்த
வானரவீரன்
பெருங்கொடிகளை
அறுத்தெறிந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அங்கே
தங்கம்
வெள்ளி
நவமணிகள்
முதலியவைகள்
இழைத்த
தரைகளைக்
கண்டார்;
விசித்திரமான
ரூபங்களுடன்
அனேகம்
குளங்கள்
வெட்டப்பட்டிருந்தன;
படிகளில்
நவரத்தினங்கள்
பிரகாசித்தன;
ஸ்படிகத்தால்
தளவரிசை
போடப்பட்டிருந்தது;
முத்து
பவழம்
முதலிய
விலையுயர்ந்த
வஸ்துக்களின்
பொடிகளே
மணல்கள்,
அமிருதத்தைப்போல்
ருசியுள்ள
ஜலம்
நிறைந்திருந்தது;
அதில்
தாமரை
கருநெய்தல்
முதலிய
புஷ்பங்கள்
அழகாய்
மலர்ந்திருந்தன;
அவைகளின்மேல்
நீர்ப்பறவைகள்
மதுரமாய்க்
கூவிக்கொண்டிருந்தன;
நான்கு
புறங்களிலிருந்தும்
ஆறுகள்
வந்து
விழுந்தன;
கரைகளில்
பொன்மயமான
விருக்ஷங்களும்,
ஸந்தானம்
முதலிய
ஸ்வர்க்கலோகத்து
விருக்ஷங்களும்,
புதர்களும்
இடைவெளியில்லாமல்
செழித்து
வளர்ந்தன.
Prose passage
▾
Meaning
Keep
சிறிது
தூரத்திற்கப்பால்
ஒரு
க்ரீடாபர்வதத்தைக்
கண்டார்.
அது
மேகத்தைப்போல்
கறுத்து,
உன்னதமான
சிகரத்தையும்
விசித்திரமான
கொடிமுடிகளையுடையதாய்,
கற்பாறைகளாலமைக்கப்பட்ட
அறைகளுடன்,
நானாவிருக்ஷங்களால்
நிறைந்து
வெகு
மனோஹரமாய்
விளங்கிற்று.
நாயகனுடன்
கோபித்துக்கொண்டு
திடீரென்று
அவன்
மடியிலிருந்து
குதித்தோடும்
யுவதியைப்போல்
ஒரு
நதி
அந்தப்
பர்வதத்திலிருந்து
கீழே
விழுந்தது.
அவளுடைய
தோழிகளும்
பந்துக்களும்
போகவேண்டாமென்று
தடுப்பதுபோல்,
அதன்
ஜலத்தில்
நனைந்த
நுனிகளுடன்
அனேகம்
மரங்கள்
இருகரைகளிலும்
செழித்து
வளர்ந்தன.
நாயகனிடத்தில்
கோபம்
தணிந்து
திரும்பிவரும்
நாயகியைப்போல்
மரங்களால்
தடுக்கப்பட்ட
ஜலம்
எதிர்த்து
வந்தது.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
நதிக்கு
ஸமீபத்தில்,
பலவகைப்
பறவைக்
கூட்டங்களால்
அலங்கரிக்கப்பட்ட
தாமரையோடைகள்
இருந்தன.
வெகு
நீளமாக
அமைக்கப்பட்ட
அனேக
நடவாவிகள்
குளிர்ந்த
ஜலத்தால்
நிறைந்து,
நவமணிகள்
இழைத்த
படிகளுடனும்,
முத்துப்
பொடியால்
செய்த
மணல்களுடனும்
காணப்பட்டன.
கரைகளில்
விசித்திரமான
மாடி
வீடுகளும்
பலவகை
மிருகங்களால்
நிறைந்த
ஆச்சரியமான
வனங்களும்,
காடுகளும்
விசுவகர்மாவால்
அமைக்கப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
பழங்களாலும்
புஷ்பங்களாலும்
தழைத்த
சில
பெரிய
விருக்ஷங்களுக்கு
நான்கு
புறங்களிலும்
விஸ்தாரமான
மேடைகள்
கட்டப்பட்டிருந்தன.
அதன்மேல்
தங்கமேடைகளும்
வெய்யில்
மழை
முதலியவைகளைத்
தடுப்பதற்காகப்
பந்தல்களும்
போடப்பட்டிருந்தன.
அங்கே
ஒரு
சிம்சுபாவிருக்ஷம்
கொடிகளாலும்
இலைகளாலும்
சூழப்பட்டு
தங்கமயமாய்
பிரகாசித்தது.
அதைச்
சுற்றிலும்
தங்கமேடைகள்
போடப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
இன்னும்
அனேக
விசித்திரமான
பிரதேசங்களையும்,
பூமிப்
பிளப்புகளையும்,
மலையருவிகளையும்,
நெருப்புக்
கொழுந்துபோல்
ஜ்வலிக்கும்
தங்கமயமான
விருக்ஷங்களையும்
கண்டார்.
“ஸுவர்ணமயமான
மேருபர்வதத்தின்
காந்தியால்
ஸூரியன்
தங்கமயமாய்த்
தோன்றுவதுபோல்,
இந்த
விருக்ஷங்களின்
தேஜஸால்
என்
தேகம்
முழுவதும்
தங்கமயமாய்த்
தோன்றுகிறது”
என்றார்.
அனேக
மஹாவிருக்ஷங்களால்
சூழப்பட்ட
அந்த
சிம்சுபா
மரத்தில்
விசித்திரமான
த்வனியுள்ள
அனேக
சிறு
மணிகள்
கட்டப்பட்டிருந்தன;
அவைகள்
காற்றாலசைக்கப்படும்பொழுது
மதுரமான
சப்தமுண்டாயிற்று.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
இலைகளாலும்
புஷ்பங்களாலும்
தளிர்களாலும்
அரும்புகளாலும்
விளங்கும்
அந்த
மரத்திலேறி
ஆஞ்ஜநேயர்
இப்படி
ஆலோசித்தார்.
“ராமனை
எப்போது
காண்பேனென்று
ஆவலாக
எதிர்பார்க்கும்
ஜானகியை
இங்கிருந்து
காணலாம்.
கவலையால்
தூக்கம்
பிடிக்காமல்
அங்குமிங்கும்
அலைந்து
கொண்டு
ஒரு
வேளை
இவ்விடத்திற்கு
வரக்கூடாதா?
சம்பகம்
சந்தனம்
முதலிய
சிரேஷ்டமான
விருக்ஷங்களால்
விளங்கும்
இந்த
அசோக
வனத்தில்
அவளுக்குப்
பிரியமிருக்கும்;
இந்தத்
தாமரையோடையில்
பக்ஷிகள்
இன்பமாய்
கூவுகின்றன.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதைக்கு
வனங்களில்
ஸஞ்சரிப்பதில்
விசேஷ
ஆனந்தம்;
ராமனை
விட்டுப்
பிரிந்து
இளைத்து
அந்தத்
தாபத்தைப்
போக்குவதற்காக
இங்கே
வருவாள்;
வனத்தில்
ஸஞ்சரிக்கும்
பிராணிகளுடைய
க்ஷேமத்தில்
அவளுக்கு
வெகு
கவலை,
அனேக
வருஷங்களாய்
வனங்களில்
திரிந்து
பழகினவள்;
யௌவனப்
பருவத்திலிருப்பவள்;
ஜனங்களுடைய
கூட்டத்தை
நீக்கித்
தனியாய்
ராமனை
தியானிக்கவும்
அவருடன்
ஆனந்தமாகக்
கடந்த
காலத்தை
ஞாபகம்
செய்யக்கூடிய
இந்த
வனங்களைப்
பார்க்கவும்
இங்கே
நிச்சயமாய்
வருவாள்;
அல்லது
தெளிந்த
ஜலத்தையுடைய
இந்த
நதியில்
காலை
ஸந்தியாதேவதையை
உபாஸிக்க
வருவாள்;
இது
அவள்
ஸஞ்சரிக்கத்
தகுந்த
வனம்;
அவளும்
இந்த
வனத்திற்குத்
தகுந்த
ஆபரணம்;
அவள்
உயிரோடு
மாத்திரமிருந்தால்
இந்த
நதிக்
கரைக்கு
வராமல்
இருக்கமாட்டாள்”
என்று
மஹா
மேதாவியான
மாருதி,
பூவும்
இலைகளும்
நிறைந்த
அந்த
சிம்சுபா
விருக்ஷத்தில்
மறைந்திருந்து,
நான்கு
புறங்களிலிருந்தும்
ஸீதையின்
வரவை
எதிர்பார்த்துக்
கொண்டு
நான்கு
திக்குகளையும்
கவனித்தார்.
51
▾
Meaning
Keep
ஏவம்
து
மத்வா
ஹநுமாந்
மஹாத்மா
ப்ரதீக்ஷமாணோ
மநுஜேந்த்³ர
பத்நீம்
|
அவேக்ஷமாணஶ்
ச
த³த³ர்ஶ
ஸர்வம்
ஸுபுஷ்பிதே
பர்ண
க⁴நே
நிலீந:
||
Previous
←
ஸீதையைக் காணாமல் மாருதி துக்கித்தது (தொடர்ச்சி)
Next
ஹநுமான் ஸீதையைக் கண்டது
→