Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஹநுமான் ஸீதையைக் கண்டது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஹநுமான்
ஸீதையைக்
கண்டது
1
▾
Meaning
Keep
ஸ
வீக்ஷமாணஸ்
தத்ரஸ்தோ²
மார்க³மாணஶ்ச
மைதி²லீம்
|
அவேக்ஷமாணஶ்ச
மஹீம்
ஸர்வாம்
தாமந்வவைக்ஷத
||
Prose passage
▾
Meaning
Keep
ஹநுமான்
அந்த
மரத்தின்
மேலிருந்து
நான்கு
பக்கங்களிலும்
ஸீதையைத்
தேடிக்கொண்டு,
பூமியையும்
மரச்
சோலைகளையும்
உற்றுப்
பார்த்தார்.
கல்பகம்
முதலிய
தேவ
விருக்ஷங்களின்
ஜோதியால்
திக்குகள்
பிரகாசித்தன;
குயில்கள்
மதுரமாய்க்
கூவின;
அசோக
மரங்கள்
புஷ்பங்களாலும்
பழங்களாலும்
பால
ஸூரியனைப்
போலும்,
நெருப்பைப்
போலும்
ஜ்வலித்தன;
ஸகல
ருதுக்களில்
உண்டாகும்
புஷ்பங்களும்
அங்கே
காணப்பட்டன;
விசித்திர
ரூபமுள்ள
புஷ்பங்கள்
ஆபரணங்களைப்
போல்
காணப்பட்டன.
Prose passage
▾
Meaning
Keep
பழங்களாலும்
புஷ்பங்களாலும்
இலைகளாலும்
அடிமுதல்
நுனிவரையில்
மறைக்கப்பட்டு
பாரம்
தாங்காமல்
பூமியில்
புரளும்
அசோகம்
முதலிய
அனேகம்
விருக்ஷங்களைக்
கண்டார்.
பக்ஷிக்
கூட்டங்கள்
கணக்கில்லாமல்
வந்து
விழுந்து,
கிளைகளில்
இலைகளே
இல்லாமல்
செய்து
விடுவன
போலிருந்தன.
நடவாவிகளில்
தங்க
மயமான
தாமரை
முதலிய
புஷ்பங்கள்
பிரகாசித்தன.
திவ்வியமான
வாஸனையாலும்
ரஸத்தாலும்
அந்த
வனம்
மனத்தை
அபகரித்தது.
மனிதர்
பார்த்து
ஸந்தோஷிக்கும்
ஸகல
விதமான
பக்ஷிகளும்
மிருகங்களும்
அங்கே
காணப்பட்டன.
Prose passage
▾
Meaning
Keep
உப்பரிகைகளாலும்,
அரசர்களின்
அரண்மனைகளாலும்,
பலவகை
ஆஸனங்களாலும்
கம்பளங்களாலும்
அலங்கரிக்கப்பட்ட
அனேகம்
சுரங்கங்களாலும்
நெருக்கமாக
இருந்தது.
எவ்விடமும்
அழகாக
அலங்கரிக்கப்பட்டு,
இந்திரனுடைய
நந்தனமென்ற
வனத்தை
ஒத்திருந்தது.
அந்த
விருக்ஷங்களின்
காந்தியால்
அந்தப்
பிரதேசம்
முழுவதும்
நெருப்புப்
பிடித்து
எரிவதுபோல்
தோன்றிற்று.
ஆழமாய்
வேரூன்றிச்
செழிக்கும்
புன்னை
ஏழிலைப்பாலை
சம்பகம்
முதலிய
மரங்களும்,
தங்கம்
நெருப்பு
மை
முதலியவைகளைப்போல்
வர்ணமுள்ள
அசோக
மரங்களும்
அங்கே
காணப்பட்டன.
அதி
மனோஹரமாய்
வர்ணிக்க
முடியாததாய்
விசேஷ
சோபையுடன்
இந்திரனுடைய
நந்தவனத்தை
ஒத்து,
குபேரனுடைய
சைத்ரரதத்தைப்
பரிகாஸம்
செய்வது
போலிருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
புஷ்பங்களாகிற
நக்ஷத்திரங்களால்
ஆகாசத்தைப்
போலவும்,
புஷ்பங்களாகிற
ரத்தினங்களால்
ஐந்தாவது
ஸமுத்திரத்தைப்போலவும்,
ஸகல
ருதுக்களிலும்
புஷ்பிக்கும்
மரங்களாலும்
தேன்
மணம்
வீசும்
மரங்களாலும்
பல
வகைப்
பக்ஷிகளாலும்
மிருகங்களாலும்
அவைகளின்
விசித்திரமான
த்வனிகளாலும்
வாசனைகளாலும்
அந்த
அசோக
வனம்
பரிசுத்தமான
கந்தமாதன
பர்வதத்தைப்
போலும்
தோன்றியது.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
வனத்தில்
சற்று
தூரத்திற்கப்பால்
யாக
சாலை
போல்
கட்டப்பட்ட
ஒரு
மாளிகையைக்
கண்டார்.
அது
வெகு
உயரமாய்
ஆயிரம்
ஸ்தம்பங்களுடன்
வெண்மையாகக்
கைலாஸ
பர்வதத்தைப்
போலிருந்தது.
அதன்
பவழப்
படிகளும்
தங்க
மேடைகளும்
கண்ணைப்
பறித்தன.
பிறகு
அந்தச்
சிம்சுபா
விருக்ஷத்திற்கு
அருகிலுள்ள
மாளிகையின்
அருகில்
ஒரு
ஸ்த்ரீ
இருப்பதைக்
கண்டார்.
அவளைச்
சுற்றிலும்
ராக்ஷஸிகள்
கண்கொட்டாமல்
காத்துக்
கொண்டிருந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
நெடுநாளாய்
ஆகாரமில்லாமல்
துரும்புபோல்
இளைத்திருந்தாள்;
புழுதிபடிந்த
தேகத்தில்
அழுக்குப்
படிந்து
கிழிந்த
தங்க
மயமான
ஒற்றை
வஸ்திரம்
சுற்றப்பட்டிருந்தது;
தாமரை
மலர்
அற்ற
தடாகம்போல்
யுவதிகளுக்கு
உசிதமான
ஆபரணங்களின்றி
அவள்
காணப்பட்டாள்!
கண்ணீர்
தாரை
தாரையாய்ப்
பெருகிக்
கொண்டிருந்தது;
சரத்காலத்தில்
கருத்து
வனவரிசைகளால்
விளங்கும்
பூமியைப்போன்ற
சுருண்டு
நீண்ட
தலைமயிர்
கருநாகத்தைப்போல்
ஒற்றைப்
பின்னலாய்
இடுப்பிற்குக்
கீழ்
வரையில்
தொங்கிக்
கொண்டிருந்தது.
தைரியமற்று
அடிக்கடி
பெருமூச்சு
விட்டுக்
கொண்டிருந்தாள்;
மிகுந்த
லஜ்ஜையுடன்
தன்
பர்த்தாவை
விட்டுப்
பிரிந்த
துக்கத்தால்
வாடித்
தவித்துக்கொண்டிருந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்
ஸகலப்
பிரபஞ்சத்தையும்
பதிவிரதாக்கினியால்
கொளுத்தக்
கூடியவள்;
அவள்
படும்பாட்டைப்
பார்த்துக்
கருங்கல்லும்
உருகும்;
ராமத்
தியானத்தாலும்
அவரைப்
பிரிந்த
சோகத்தாலும்
மெய்மறந்தவள்;
மனம்
குன்றித்
துக்கத்தைத்
தவிர
வேறு
கதியில்லாதவள்;
தன்
பிரிய
ஜனங்களை
விட்டு
ராக்ஷஸிகளின்
நடுவில்
அவள்
இருப்பது,
தன்
இனத்தை
விட்டுப்
பிரிந்த
பெண்மான்
நாய்களால்
சூழப்பட்டதுபோல்
இருந்தது;
கஷ்டத்தையே
அறியாதவள்;
பரம
ஸுகத்தையே
அனுபவிக்கத்
தகுந்தவள்;
சொல்ல
முடியாத
துக்கத்தால்
வாட்டப்படுகிறவள்;
அவளுடைய
ரூபத்தையும்
அழகையும்
சற்று
யோசித்துப்
பார்த்த
பிறகுதான்
இவள்
ஜானகி
என்று
அறிய
முடியும்;
சுக்கிலபக்ஷத்தின்
ஆரம்பத்தில்
நிர்மலமான
சந்திர
ரேகையைப்போலும்,
புகையால்
மூடப்பட்ட
அக்னி
ஜ்வாலையைப்
போலும்,
பிரிய
நாயகனான
சந்திரனை
அடைய
வேண்டிய
ரோஹிணியை
அங்காரகனென்ற
குரூரக்
கிரஹம்
பிடித்ததுபோலும்
தோன்றினாள்.
Prose passage
▾
Meaning
Keep
அழுக்கடைந்து
இளைத்த
தேகத்தையும்
விசாலமான
நேத்திரங்களையுமுடைய
அந்தப்
பெண்ணை,
நன்றாய்க்
கவனித்துப்
பார்க்கையில்
தகுந்த
காரணங்களால்
இவளே
ஸீதை
என்று
மாருதி
நிச்சயித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“இஷ்டமான
ரூபத்தை
எடுக்கக்கூடிய
ராவணன்
எடுத்துக்
கொண்டு
போகையில்
எவளைக்
கண்டேனோ
அவளுக்கும்
இவளுக்கும்
ரூபத்தில்
பேதமில்லை.
பூர்ண
சந்திரனைப்
போன்ற
முக
மண்டலத்தையும்,
மன்மதனுடைய
வில்லைப்போன்ற
புருவங்களையும்,
தாமரை
இதழ்களைப்போல்
மலர்ந்து
செவ்வரி
படர்ந்து
மான்
குட்டியைப்போல்
மிரண்டிருக்கும்
நேத்திரங்களையும்,
கருத்த
தலைமயிரையும்,
கருத்து
வளைந்திருக்கும்
இமைகளையும்
கோவைக்
கனிபோன்ற
உதடுகளையும்,
சிறுத்த
இடையையும்
கவனிக்கையில்
அவளென்றே
தோன்றுகிறது.
Prose passage
▾
Meaning
Keep
தேக
காந்தியால்
ஸகல
திக்குகளும்
இருள்
நீங்கி
பிரகாசிக்கின்றன;
அங்கங்கள்
பொருத்தமாக
அமைக்கப்பட்டிருக்கின்றன;
மன்மதனின்
பத்தினியான
ரதியைப்போல்
அழகுள்ளவள்,
பூர்ணிமா
சந்திரனைப்போல்
ஸகலப்
பிராணிகளும்
பார்க்க
விரும்பக்கூடியவள்;
அவயவங்கள்
உத்தம
லக்ஷணங்கள்
பொருந்தி
இருக்கின்றன;
பூமியில்
உட்கார்ந்து
பெருமூச்சு
விடுவதால்
தவம்
செய்பவளைப்போல்
தோன்றுகிறாள்;
ஆனால்
நாகராஜனுடைய
பத்தினியைப்போல்
நெருங்க
முடியாதவள்;
புகைக்
கூட்டத்தால்
மறைக்கப்பட்ட
அக்னி
ஜ்வாலையைப்போல்
பெரும்
துக்கத்தால்
மறைந்த
பிரகாசத்தை
உடையவள்;
ஸந்தேகமான
அர்த்தங்களையுடைய
மனு
முதலிய
மஹரிஷிகளின்
ஸ்மிருதி
வாக்கியங்களைப்போலும்,
க்ஷீணமான
ஸம்பத்தைப்போலும்,
அவநம்பிக்கையால்
தடையுற்ற
சிரத்தையைப்
போலும்,
நிறைவேறாத
ஆசையைப்போலவும்,
விக்கினங்களால்
தடைப்பட்ட
காரிய
ஸித்தியைப்போலும்,
கலங்கின
புத்தியைப்
போலும்,
அநியாயமான
அபவாதத்தால்
கெடுக்கப்பட்ட
கீர்த்தியைப்போலும்,
நீருண்ட
மேகங்களால்
மறைக்கப்பட்ட
சந்திர
காந்தியைப்போலும்,
வேதசுருதிகளின்
ஆதாரமில்லாமையால்
பிரசித்தியற்ற
வேத
விரோதமான
வித்தையைப்போலும்,
(அடிக்கடி
வேதாத்யயனம்
செய்யாததால்)
மறைந்துபோன
வித்தையைப்
போலும்
காணப்படுகிறாள்;
தன்
பிரிய
நாயகனான
ராமனைப்
பிரிந்து
அவரை
அடைவேனா
என்று
ஏக்கம்
பிடித்து,
ராவணன்
தொட்டு
எடுத்ததால்
தேகம்
குன்றி,
அனாதையாய்
என்ன
ஆபத்து
நேருமோ
என்று
நான்கு
புறங்களிலும்
பயத்துடன்
பார்த்துக்
கொண்டிருக்கிறாள்.
கண்ணீரால்
முகம்
கறுத்து,
உத்தம
பூஷணங்களை
அணிந்துகொள்ளத்
தகுந்தவளானாலும்,
ஆபரணங்கள்
இல்லாமலிருக்கிறாள்”
என்று
யோசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
ஹநுமான்
அவளை
அடிக்கடி
பார்த்தும்
அவருக்கு
ஸந்தேகம்
தீரவில்லை.
வியாகரணமும்
சாஸ்திர
பரிசயமும்
இல்லாதவன்,
ஒரு
வாக்கியத்திற்கு
விபரீதமான
அர்த்தத்தை
தரும்
வாக்கியத்தை
கஷ்டப்பட்டு
அறிவதுபோல்
யாதொரு
அலங்காரமும்
இல்லாத
ஸ்திதியில்,
இவள்
தான்
ஜானகி
என்று
கஷ்டப்பட்டு
அறிந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
விசாலமான
நேத்திரங்களையும்
சுத்தமான
நடத்தையையும்
உடைய
ஸீதையை
வேறு
சில
காரணங்களால்
அடையாளம்
கண்டுபிடித்தார்.
அவள்
இருக்குமிடத்தைச்
சுற்றிலும்
கவனித்துப்
பார்க்கையில்
அவள்
எந்த
ஆபரணங்களை
அணிந்திருந்ததாக
ராமன்
தனக்குச்
சொல்லியிருந்தாரோ
அவையெல்லாம்
மரக்
கிளைகளில்
தொங்க
விடப்பட்டிருந்தன;
விசித்திரமாய்ச்
செய்யப்பட்ட
கம்மல்,
கர்ணப்பூ
முதலிய
கர்ணாபரணங்களும்,
பவளத்தாலும்
நவமணிகளாலும்
பிரகாசிக்கும்
கடகம்
சங்கிலி
மோதிரம்
முதலிய
பூஷணங்களும்
பர்த்தாவைப்
பிரிந்த
விரஹாக்கினியால்
கறுத்திருக்கின்றன.
“வெகுகாலம்
அணிந்தபடியால்
அவைகளைக்கழற்றின
பிறகும்
அந்த
அடையாளங்கள்
இருக்கின்றன.
ஆகையால்,
ராமன்
எனக்குச்
சொன்ன
பூஷணங்கள்
இவைகளே”
என்று
நிச்சயித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“ஜானகியினுடைய
தேகத்திலிருந்து
எந்த
ஆபரணங்கள்
கழன்று
விழுந்தனவோ,
அவை
இங்கே
இல்லை;
எவை
விழவில்லையோ
அவை
இங்கே
இருக்கின்றன.
ஸீதையை
அபகரித்துக்
கொண்டுபோகையில்
ரிசியமூகபர்வதத்தில்
விழுந்த
தங்கமயமான
பச்சை
உத்தரீயத்தையும்,
மதுரமாய்
சப்திக்கும்
ஆபரணங்களையும்
விட்டெறிந்தவள்
இவளே.
இப்பொழுது
தரித்திருக்கும்
வஸ்திரம்
வெகுநாளானதால்
அழுக்கடைந்து
கிழிந்திருக்கிறது;
ஆனாலும்
என்னால்
ரிசியமூகபர்வதத்தில்
பார்க்கப்பட்ட
வஸ்திரத்தின்
வர்ணத்திலும்
காந்தியிலும்
பேதமில்லை.
ராகவனுடைய
பிரியமான
மஹிஷியும்
பதிவிரதையும்
ஸுவர்ண
காந்தியுடையவளுமான
இவள்
மறைந்தாளாயினும்
ராமனுடைய
மனத்தில்
எப்போதும்
குடியிருக்கிறாள்.
அவளே
இவள்
என்பதில்
ஸந்தேகமில்லை.
எவளைக்
குறித்து
ராமன்
வெகுகாரணங்களால்
பரிதவிக்கிறாரோ,
அவள்
இவளே.
Prose passage
▾
Meaning
Keep
“ஒவ்வொருவனும்
தன்னைச்
சேர்ந்த
ஸ்த்ரீகளுக்கு
ஆபத்து
நேரும்பொழுது
அவர்களை
ரக்ஷிப்பது
ஸஹஜம்;
நான்
அப்படிச்
செய்ய
முடியாமல்
போயிற்றே”
என்று
இரக்கத்தாலும்,
“அண்டினவர்களைக்
கைவிடுவதில்லை
என்பது
நமது
பிரதிக்ஞையன்றோ?
எல்லோரும்
தடுக்கும்போது
என்னையே
ரக்ஷகனாய்
ஆசிரயித்து
வனத்துக்கு
வந்து
என்னுடன்
ஸகல
கஷ்டங்களை
அனுபவித்தவளைக்
கைவிட்டேனே”
என்ற
உருக்கத்தாலும்
“புருஷனில்
பாதி
பாரியை
என்ற
சுருதிப்படி
அக்னிஸாக்ஷியாய்
நம்மைப்
பர்த்தாவாக
அடைந்தவளை
இழந்தேனே”
என்ற
சோகத்தாலும்;
“என்
அன்பிற்குரிய
நாயகியைப்
பிரிந்தும்
இன்னம்
இந்தப்
பாழும்
பிராணன்
போகவில்லையே”
என்ற
விரஹாக்கினியாலும்
ராமர்
தவிக்கிறார்.
இவ்விருவர்களுடைய
சரீரமும்,
கரசரணாதி
அவயவங்களுடைய
மேன்மையும்
ஒரேவிதமாக
இருக்கின்றன.
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
இந்தப்
பெண்மணி
அவருக்குத்
தகுந்தவளே.
இவளுடைய
மனம்
அவரிடத்திலேயே
வேரூன்றி
இருக்கிறது;
அவருடைய
மனமும்
இவளிடத்திலேயே
நாடியிருக்கிறது;
அதனால்தான்
இவ்விருவரும்
உயிரை
வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மால்யவானென்ற
பர்வதத்தில்
ராகவன்
ஸீதையின்
பிரிவை
ஸஹிக்காமல்
புலம்பினபொழுது,
“இதென்ன
விபரீதம்!
வஸிஷ்ட
மஹரிஷியின்
சிஷ்யராம்;
வேதவேதாந்தங்களைக்
கரைகடந்தவராம்;
ஸகல
கஷ்டங்களையும்
ஸஹிக்க
வல்ல
க்ஷத்திரிய
வீரராம்;
யாரோ
ஒரு
ஸ்த்ரீயை
விட்டுப்
பிரிந்ததற்காக
இவ்வளவு
பாடுபடுகிறாரே!”
என்று
நான்
நித்தியப்
பிரஹ்மசாரியானதாலும்;
விஷயங்களில்
விரக்தனாகையாலும்
பரிஹாஸம்
செய்தேன்.
Prose passage
▾
Meaning
Keep
இப்போது
இவளுடைய
ஸௌந்தரியத்தையும்
தீன
ஸ்திதியையும்
கண்டபிறகு
எனக்குப்
புத்தி
வந்தது.
இந்த
ஸமுத்திரத்தைத்
தாண்டினது
ஒருபெரிய
காரியம்
என்று
எண்ணியிருந்தேன்.
இவளைப்
பிரிந்தும்
இன்னும்
ராமன்
தேகத்தை
வைத்துக்கொண்டிருப்பதால்
ஒரு
பெரிய
செய்யமுடியாததைச்
செய்து
வருகிறார்
என்று
நினைக்க
வேண்டும்.
அவருடைய
சோகத்தால்
அவர்
அழியவில்லை.
இந்த
உத்தம
ஸ்த்ரீயைப்
பிரிந்து
ஒரு
முகூர்த்தமாவது
அவர்
பிழைத்திருப்பது
அஸாத்தியமான
காரியம்.
Prose passage
▾
Meaning
Keep
அவருக்கென்ன?
மஹாப்பிரபு;
ராஜ்யத்தை
ஆளவும்
யானை
குதிரைகளை
பழக்கவும்
யுத்தம்
செய்யவும்
மாத்திரம்
தெரியுமே
ஒழிய
உத்தம
ஸ்த்ரீயின்
பிரீதியைக்
கொஞ்சமாவது
அனுபவித்தவரல்ல.
என்ன
பிரபு!
தனக்குக்
கீர்த்தியையும்
தேஜஸையும்
விருத்தி
செய்யும்
இவளைப்
பிரிந்தும்
பிரபுத்வமுண்டோ?
தன்னை
அண்டினவர்களைக்
கைவிடும்
பிரபுவும்
உண்டோ?
ஸீதையோ
பர்த்தாவிற்கு
உட்பட்டவள்;
அவருடைய
ஆக்ஞையில்லாமல்
தன்
தேகத்தைவிடக்கூடாது;
ராமனோ
ஸ்வதந்திரர்;
இந்தத்தேகம்
தானல்லவே;
ஒரு
காரியத்திற்காக
எடுத்துக்
கொண்டது
தானே.
போகங்களை
அனுபவிப்பதற்காகத்
தேகத்தை
வைத்துக்கொள்கிறதோ,
துக்கத்தை
அனுபவிப்பதற்காக
வைத்துக்
கொள்ளுகிறதோ?
பலவந்தமாய்
பிராணனை
விடலாமோ
என்றால்,
பிராணனைப்
போக்க
சோகம்
ஒன்றே
போதாதோ?”
Prose passage
▾
Meaning
Keep
என்று
எண்ணி,
அழுக்கடைந்த
வஸ்திரத்துடன்
உபவாஸத்தால்
இளைத்து
நாயகனையே
தியானித்துக்கொண்டிருக்கும்
ஸீதையைப்
பார்த்து
ஹநுமான்
ஸந்தோஷமடைந்தார்.
தன்
புத்தியில்
குடிகொண்டிருக்கும்
ராமமூர்த்தியை
தியானித்து,
“உம்மைத்
திரும்பி
அடையும்படி
தன்
பதிவிரதாதர்மத்தைக்
காப்பாற்றிக்கொண்டிருக்கும்
உத்தமியைப்
பத்தினியாக
அடைந்த
நீரன்றோ
பாக்கியசாலி”
என்று
ஸ்தோத்திரம்
செய்தார்.
54
▾
Meaning
Keep
ஏவம்
ஸீதாம்
ததா³
த்³ருஷ்ட்வா
ஹ்ருஷ்ட:
பவநஸம்ப⁴வ:
|
ஜகா³ம
மநஸா
ராமம்
ப்ரஶஶம்ஸ
ச
தம்
ப்ரபு⁴ம்
||
Previous
←
அசோகவனம்
Next
ஸீதையைக் கண்டு ஹநுமான் துக்கித்தது
→