Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதையைக் கண்டு ஹநுமான் துக்கித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதையைக்
கண்டு
ஹநுமான்
துக்கித்தது
1
▾
Meaning
Keep
ப்ரஶஸ்ய
து
ப்ரஶஸ்தவ்யாம்
ஸீதாம்
தாம்
ஹரிபுங்க³வ:
|
கு³ணாபி⁴ராமம்
ராமம்
ச
புநஶ்
சிந்தாபரோ
ப⁴வத்
||
Prose passage
▾
Meaning
Keep
அனந்தகல்யாண
குணபூர்ணரான
ராமனையும்
எல்லோரும்
கொண்டாடத்தகுந்த
ஸீதையையும்
புகழ்ந்து
மாருதி
மறுபடியும்
கவலையுடன்
யோசித்தார்.
இப்படி
கொஞ்ச
நேரமிருந்து
கண்ணீர்
சொரிய
ஸீதையின்
நிலைமையை
நினைத்து
பிரலாபித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“வஸிஷ்டர்
முதலிய
மஹரிஷிகளால்
பழக்கப்பட்ட
லக்ஷ்மணனாலும்
பூஜிக்கத்தகுந்தவள்;
லோக
குருவான
ரகுநாதனுடைய
பார்யை;
இவளையே
துக்கம்
பீடிக்குமானால்,
காலகதியே
பெரிது.
அதை
மீற
முடியாதென்று
சொல்ல
வேண்டியிருக்கிறது.
ராமலக்ஷ்மணர்களுடைய
நடத்தை
இவளுக்கு
நன்றாகத்
தெரியுமாகையால்,
வருஷாகாலத்தில்
கங்காநதி
கலங்காததுபோல்,
மஹாகஷ்டங்கள்
நேர்ந்தபொழுதும்
அதைரியப்படவில்லை.
ஒரே
வயதும்
ஸ்வபாவமும்
நடத்தையும்
வம்சமும்
லக்ஷணங்களுமுடைய
இவர்களிருவரும்
ஒருவருக்கொருவர்
தகுந்தவர்களே.”
Prose passage
▾
Meaning
Keep
இப்படிப்
புதிதாக
உருக்கின
தங்கத்தையொத்த
தேககாந்தியுடன்,
ஸகலப்
பிராணிகளுக்கும்
ஆனந்தத்தைக்
கொடுத்துக்கொண்டு
மஹாலக்ஷ்மியைப்போல்
விளங்கும்
ஸீதையைப்
பார்த்து
ஆஞ்ஜநேயர்
ராமமூர்த்தியை
ஸ்மரித்துப்
பின்வருமாறு
சொன்னார்
“ராமா!
இவளுக்காகவல்லவா
மஹாபலவானான
வாலியையும்
ராவணனுக்கு
ஸமமான
பராக்கிரமமுள்ள
கபந்தனையும்
ஸம்ஹரித்தீர்
தேவேந்திரன்
சம்பராஸுரனைக்
கொன்றதுபோல்
பயங்கரமான
பராக்கிரமமுள்ள
விராதனை
வதம்
செய்தீர்.
நெருப்புக்
கொழுந்துகள்
போன்ற
பாணங்களால்
பதினாலாயிரம்
கோரராக்ஷஸர்களை
ஜனஸ்தானத்தில்
லீலையாய்
நாசம்
செய்தீர்.
கரனையும்
தூஷணனையும்
திரிசிரஸையும்
யுத்தகளத்தில்
மடித்தீர்.
Prose passage
▾
Meaning
Keep
வாலியால்
அனுபவிக்கப்பட்ட
வானர
ராஜ்யமும்
ஐசுவரியமும்
ஸாமான்யமா?
பிறருக்குக்
கிடைக்குமோ?
ஸகல
ஜனங்களும்
கொண்டாடக்
கூடியதன்றோ?
இவளுக்காகவல்லவா
அவற்றையெல்லாம்
ஸுக்ரீவனுக்குக்
கொடுத்தீர்.
விசாலமான
நேத்திரங்களையுடைய
இவளுக்காகவன்றோ
நானும்
மஹாஸமுத்திரத்தைத்
தாண்டி
இந்த
லங்காபுரியைப்
பார்த்தேன்.
ஸமுத்திரத்தை
மாலையாய்த்
தரித்த
இந்த
பூமியையும்
மற்ற
லோகங்களையும்
இவளுக்காக
ராமன்
தலைகீழாக
மாற்றினாலும்
தகுமென்றே
நான்
எண்ணுகிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
பூலோகம்
புவர்லோகம்
ஸ்வர்க்கமென்ற
திரிலோகங்களுக்கும்
ஏக
சக்ராதிபதியாயிருப்பது
பெரிதா?
ஜானகியை
அடைவது
பெரிதா?
திரிலோகமும்
ஜானகியின்
காலில்
ஒட்டின
தூசி
பெறுமோ?
ஸகல
தர்மங்களையும்
குறைவில்லாமல்
அனுஷ்டிக்கும்
மஹாத்மாவான
ஜனகராஜரிஷி
யாகத்திற்காகப்
பூமியை
உழும்பொழுது,
அதைப்
பிளந்துகொண்டு,
தாமரைத்தூள்களைப்போன்ற
மங்களகரமான
யக்ஞபூமியின்
புழுதிபடிந்த
தேகத்துடன்
கலப்பை
உழுத
நிலத்தினின்றும்
கிளம்பிய
புண்யவதியல்லவோ?
பதிவிரதாதர்மமே
உருவெடுத்து
வந்ததல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
சிரேஷ்டமான
ஆசாரத்தையுடையவரும்
பிரதாபசாலியும்
யுத்தகளத்தில்
பின்வாங்காதவருமான
தசரத
சக்க்ரவர்த்திக்கு
இந்தக்
கீர்த்திசாலி
மூத்த
நாட்டுப்
பெண்ணல்லவா?
ஸமஸ்த
தர்மங்களையும்
அவைகளை
நடத்தும்
விதத்தையும்
பதார்த்தங்களின்
தத்துவத்தையும்
பூர்ணமாக
அறிந்த
ராமனுக்கு
இவள்
பிரியபார்யை
அன்றோ?
இப்பொழுது
கோர
ராக்ஷஸிகளின்
வசத்தில்
அகப்பட்டிருப்பது
என்ன
கொடுமை!
பர்த்தாவிடத்தில்
தனக்குள்ள
பிரீதியையே
பெரிதாக
எண்ணி,
ஸகல
ராஜபோகங்களையும்
விட்டு,
வனவாஸ
துக்கங்களைக்
கொஞ்சமாவது
நினையாமல்
மனுஷ்ய
ஸஞ்சாரமற்ற
கோரமான
வனத்திற்கு
வந்தாளல்லவா?
பழங்களையும்
கிழங்குகளையும்
ஸந்தோஷமாய்ப்
புஜித்துக்கொண்டு,
பர்த்தாவின்
சுச்ரூஷையிலேயே
பிரீதிவைத்து,
அயோத்யையில்
தன்
அந்தப்புரத்திலிருக்கும்
பொழுது
அடைந்த
ஆனந்தத்தைவிட
அதிகமான
ஆனந்தத்தை
அடைந்தவளல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
யாதொரு
கஷ்டத்தையும்
அனுபவிக்கத்
தகாதவள்;
உத்தமமான
ஸுவர்ணத்தைப்போன்ற
தேககாந்தியுள்ளவள்;
எப்பொழுதும்
புன்சிரிப்பும்
நல்லவார்த்தையும்
உடையவள்;
இந்தக்
கொடுமையையும்
பொறுமையாய்
ஸஹித்துக்
கொண்டிருக்கிறாள்.
ராவணனால்
நிர்ப்பந்தம்
செய்யப்பட்டும்,
சிரேஷ்டமான
ஆசாரத்தைக்
கைவிடாமலிருக்கும்
இந்த
உத்தமியைத்
தாகத்தால்
தவிப்பவன்
தண்ணீர்ப்பந்தலைக்
கண்டு
களிப்பதுபோல்
ஸ்ரீராமன்
அவசியம்
பார்க்கவேண்டும்.
ராஜ்யலக்ஷ்மியை
இழந்த
அரசனுக்குப்
பூமண்டலாதிபத்தியம்
கிடைத்தது
போல்
ராமன்
இவளை
மறுபடியும்
அடைந்தால்
பரம
ஸந்தோஷத்தை
அடைவார்.
தனக்கு
ஸஹஜமான
ஸகல
போகபோக்யங்களை
இழந்தும்,
தன்
இஷ்டமித்திர
பந்துஜனங்களை
விட்டுப்பிரிந்தும்,
‘எப்படியும்
ராமன்
இங்கே
வருவார்,
அவரை
அடைவேன்’
என்ற
ஆசையால்
இன்னும்
உயிரை
வைத்துக்
கொண்டிருக்கிறாள்.
ராகவனிடத்தில்
தன்னுடைய
நினைவு
முழுவதையும்
வைத்து
அவரையே
தியானித்துக்கொண்டு,
இந்த
ராக்ஷஸிகளையும்
இந்த
வனங்களையும்
மரங்களையும்
கண்ணெடுத்தும்
பார்க்கவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ஸ்த்ரீகளுக்கு
ஸகல
ஆபரணங்களைக்காட்டிலும்
பர்த்தாவே
சிரேஷ்டமான
ஆபரணம்.
அதைத்
தரிக்கத்
தகுந்த
இவள்
ராமனைப்
பிரிந்ததால்
காந்தியற்றிருக்கிறாள்.
ஜகத்பிரபுவான
ராமன்
இவளைப்
பிரிந்து
இன்னும்
தேகத்தை
வைத்துக்
கொண்டிருக்கிறாரே!
துக்கத்தால்
நசிக்கவில்லையே!
இது
யாருக்கு
ஸாத்தியம்!
ஸ்த்ரீகளுக்குத்
தலைமயிரின்
நுனி
முற்றிலும்
கறுத்திருப்பது
அபூர்வம்;
அந்த
உத்தமலக்ஷணம்
பொருந்தின
இவள்
சுருண்ட
தலைமயிரையுடைய
ராமனையும்
மயக்குகிறாள்.
இவளுடைய
நேத்திரங்கள்
மலர்ந்த
செந்தாமரையைப்
பழிக்கின்றன;
ராமனுடைய
மடியில்
விளையாடத்
தகுந்தவள்;
ராக்ஷஸிகளுக்கு
நடுவில்
அகப்பட்டுக்கொண்டு
தவிக்கிறாள்.
Prose passage
▾
Meaning
Keep
இதைக்
கண்டு
கேவலம்
குரங்கான
எனக்குக்கூட
மனம்
கலங்குகிறது;
பரம
தயாளுவான
ராமமூர்த்திக்கு
எப்படியிருக்கும்!
ஸுகதுக்கங்களைத்
துறந்த
எனக்கே
இப்படியிருந்தால்
காமஸுகங்களை
அனுபவிக்கத்
தகுந்த
ராமனுக்கு
எப்படியிருக்கும்!
இவ்வளவு
அபராதம்
செய்த
ராவணனைப்
பதிவிரதாக்னியால்
சாம்பலாக்காமலிருக்கும்
இவளுடைய
பொறுமை
பூமிதேவிக்கும்
வருமோ?
ராம
லக்ஷ்மணர்களால்
காப்பாற்றப்பட்ட
இவள்
கோரமான
நேத்திரங்களையுடைய
ராக்ஷஸிகளால்
ரக்ஷிக்கப்படுகிறாள்.
இவள்
மரத்தடியில்
உட்கார்ந்திருக்கிறாள்!
Prose passage
▾
Meaning
Keep
வெகுகாலமாய்
அழகாய்
விளங்கின
தாமரையோடை
பனிக்காலத்தில்
புஷ்பங்கள்
கருகி,
பார்க்க
விகாரமாக
இருப்பதுபோல்,
பன்னிரண்டு
வருஷகாலம்
ராமனுடன்
ஏகாந்தமாய்
ஸகல
ஸுகங்களையும்
அனுபவித்துத்
திடீரென்று
இந்தக்
கஷ்டம்
நேர்ந்ததால்
காந்தியற்றிருக்கிறாள்.
கஷ்டஸுகங்கள்
மாறி
மாறிவந்தால்
ஒருவிதமாய்ப்
பொறுக்கமுடியும்;
இவளுக்குக்
கஷ்டத்தைத்
தவிர
வேறு
அனுபவம்
கிடையாது.
சக்கரவாகபக்ஷிகள்
பகலில்
பிரிந்திருந்தும்,
ராத்திரி
வந்தவுடன்
சேருவோம்
என்ற
நிச்சயத்தால்
துக்கத்தைப்
பொறுத்துக்கொண்டிருக்கின்றன;
இவளுக்கு
மறுபடியும்
ராமனைச்
சேரும்
காலம்
தெரிந்திருந்தால்
இந்தக்
கஷ்டத்தைப்
பொறுத்திருப்பாள்;
அதுவோ
தெரியவில்லை
இப்படிப்பட்ட
கஷ்டங்களை
அனுபவிக்க
வளர்க்கப்பட்டவளும்
அல்ல:
ஜனகமஹாராஜனால்
வெகு
செல்வமாய்
வளர்க்கப்பட்டவள்.
வஸந்தருதுவால்
புஷ்பித்திருக்கும்
இந்த
அசோக
மரங்கள்
இவளுக்குச்
சோகத்தையே
விருத்தி
செய்கின்றன.
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
லோகங்களுக்கும்
ஆனந்தத்தைக்
கொடுக்கும்
சந்திரனும்
ஒரே
காலத்தில்
நெருப்புப்
பொறி
போன்ற
ஆயிரம்
கிரணங்களை
உடையவனாய்
சோகத்தைப்
பெருக்குகின்றான்”
என்று
கூறி
இப்படி
அனேக
காரணங்களால்
இவளே
ஸீதை
என்று
நிச்சயித்து,
பலத்திலும்
வேகத்திலும்
ஒப்பில்லாத
ஆஞ்ஜநேயர்,
அந்த
சிம்சுபா
விருக்ஷத்திலேயே
மறைந்திருந்தார்.
32
▾
Meaning
Keep
இத்யேவ
மர்த²ம்
கபிரந்வவேக்ஷ்ய
ஸீதேய
மித்யேவ
நிவிஷ்டபு³த்³தி⁴:
|
ஸம்ஶ்ரித்ய
தஸ்மிந்
நிஷஸாத³
வ்ருக்ஷே
ப³லீ
ஹரீணாம்
ரிஷப⁴ஸ்
தரஸ்வீ
||
Previous
←
ஹநுமான் ஸீதையைக் கண்டது
Next
ராக்ஷஸிகள்
→