Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராக்ஷஸிகள்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராக்ஷஸிகள்
1
▾
Meaning
Keep
தத:
குமுத³ஷண்டா³போ
நிர்மலோ
நிர்மலம்
ஸ்வயம்
|
ப்ரஜகா³ம
நப⁴ஶ்சந்த்³ரோ
ஹம்ஸோ
நீல
மிவோத³கம்
||
Prose passage
▾
Meaning
Keep
கருத்த
ஜலத்தில்
ஹம்ஸம்
விளையாடுவது
போல்,
களங்கமற்ற
ஆகாசத்தில்
தெளிவாய்
யாதொரு
மருவில்லாமல்,
ஆம்பல்
மலர்க்
கொத்துக்களைப்போல்
காந்தியையுடைய
சந்திரன்
பிரகாசித்தான்.
ராமகாரியத்தில்
தானும்
கூடிய
ஸஹாயத்தைச்
செய்ய
வந்தது
போல்,
தன்
காந்தியால்
ஸகல
பதார்த்தங்களையும்
ஆஞ்ஜநேயருக்கு
ஸ்பஷ்டமாய்த்
தெரிவித்துக்கொண்டும்,
குளிர்ந்த
கிரணங்களால்
அவருடைய
சிரமத்தைப்
போக்கிக்கொண்டும்
இருந்தான்.
பிறகு
ஹநுமான்,
அதிக
பாரத்தால்
ஜலத்தில்
முழுகும்
கப்பலைப்போல்
துக்கம்
தாங்காமல்
சோகஸமுத்திரத்தில்
முழுகும்
பூரணசந்திரனையொத்த
முகத்தையுடைய
ஸீதையைக்
கண்டார்.
ஸீதையை
நன்றாய்
உற்றுப்
பார்க்கையில்
அவளுக்கு
ஸமீபத்திலிருந்த
ராக்ஷஸிகளையும்
பார்த்தார்.
Prose passage
▾
Meaning
Keep
ஒரே
கண்ணுடையவளையும்,
ஒரே
காதுடையவளையும்;
தலையை
மூடிக்கொண்டிருக்கும்
காதுடையவளையும்;
காதில்லாதவளையும்,
முளைகளைப்
போன்ற
காதுடையவளையும்;
மேல்
நோக்கியிருக்கும்
மூக்கையுடையவளையும்;
தலைபெருத்தவளையும்,
கொஞ்சம்
தலை
மயிருடையவளையும்;
தலைமயிர்
முளைக்காதவளையும்;
கம்பளியைப்
போன்ற
மயிரால்
மூடப்பட்டவளையும்;
தொங்குகிற
காதையும்,
முகத்தையும்,
வயிற்றையும்,
ஸ்தனங்களையும்,
உதடுகளையுமுடையவளையும்;
மோவாய்க்
கட்டையில்
உதடுள்ளவளையும்,
தொங்கும்
முழங்காலையுடையவளையும்;
ஏற்றக்குறைவான
அங்கங்களையுடையவளையும்;
கூனியையும்;
குள்ளமானவளையும்;
விஸ்தாரமான
பின்பாகத்தையுடையவளையும்;
கோரப்பல்லுடையவளையும்;
மஞ்சள்வர்ணமான
கண்களையுடையவளையும்;
வளைந்த
முகத்தையுடையவளையும்;
மூக்கு
உதடுகளில்லாத
முகத்தையுடையவளையும்;
பயங்கரமான
ரூபமுடையவர்களையும்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
மேலும்,
விகாரவேஷமுள்ளவர்களையும்;
மஞ்சள்
வர்ணமுடையவர்களையும்;
கறுத்தவர்களையும்;
எப்பொழுதும்
கோபமுடையவர்களையும்;
கலஹத்தில்
பிரியமுடையவர்களையும்;
இரும்புத்தடி
சூலம்
உலக்கை
முதலிய
ஆயுதங்களைத்
தரித்தவர்களையும்;
பன்றி,
மான்,
எருமை,
புலி,
ஆடு,
நரி,
யானை,
பசு,
குதிரை,
கழுதை
இவைகளைப்போல்
முகமுடையவர்களையும்;
யானை,
குதிரை,
ஒட்டகம்
இவைகளைப்போல்
பாதங்களையுடையவர்களையும்;
கழுத்தில்
அழுந்தின
தலையையுடையவர்களையும்;
ஒரு
கை
ஒரு
காலுடையவர்களையும்;
கழுதை,
நாய்,
பசு,
யானை,
குரங்கு
இவைகளைப்போல்
காதுகளையுடையவர்களையும்;
மூக்கில்லாதவர்களையும்;
மூக்குப்
பெருத்தவர்களையும்;
குறுக்காயிருக்கும்
மூக்குடையவர்களையும்;
முகத்திற்கு
மேலுள்ள
மூக்குள்ளவர்களையும்;
கால்
பெருத்தவர்களையும்;
காலில்
மயிர்
வளர்ந்தவர்களையும்;
யானை
பசு
இவைகளைப்போல்
கால்களையுடையவர்களையும்;
அளவுக்கு
மிஞ்சின
ஸ்தனம்,
கழுத்து,
தலை,
வயிறு,
முகம்,
கண்களையுடையவர்களையும்;
நீண்ட
நாக்கு
நகங்களையுடையவர்களையும்;
புகைபோன்ற
தலைமயிருடையவர்களையும்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்கள்
எப்பொழுதும்
மாம்ஸங்களைப்
புசித்து,
மதுவைக்
குடிப்பதிலேயே
ஆசையுடையவர்கள்;
ரத்தத்தை
பிரியமாய்க்
குடிப்பவர்கள்.
சரீரமெங்கும்
மாம்ஸமும்
ரத்தமும்
பூசியிருக்கும்.
பார்ப்பவர்களுக்கு
மயிர்க்கூச்சமுண்டாகும்.
இவர்கள்,
அந்த
விருக்ஷத்தைச்
சுற்றிலும்
உட்கார்ந்திருந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்களுக்கு
நடுவில்
ஸீதை,
கறுத்த
மேகங்களுக்கு
நடுவில்
தோன்றி
மறையும்
பூர்ணசந்திரனைப்போல்
காணப்பட்டாள்.
அதிக
செல்வாக்குள்ள
விதேஹராஜவம்சத்தில்
பிறந்தவள்;
எல்லோரும்
கொண்டாடும்படியான
நடத்தையுடையவள்;
பிரஹ்மஞானியான
ஜனகருடைய
புத்திரி;
சோகத்தால்
பீடிக்கப்பட்டுக்
காந்தியற்றவள்;
அழுக்கடைந்த
தலைமயிருடன்,
புண்ணியம்
நசித்து
ஆகாசத்திலிருந்து
பூமியில்
விழுந்த
நக்ஷத்திரத்தைப்
போன்றவள்;
பதிவிரதா
தர்மத்தை
அனுஷ்டிப்பதில்
பெயர்
பெற்றவள்;
பர்த்தாவைப்
பார்க்க
அதிருஷ்டமில்லாதவள்;
சிரேஷ்டமான
ஆபரணங்களால்
அலங்கரிக்கப்படாவிட்டாலும்,
பர்த்தாவின்
ஸ்நேஹமென்ற
ஆபரணத்தாலேயே
பிரகாசிப்பவள்;
தன்
இனத்திலிருந்து
பிரிக்கப்பட்டு
ஸிம்ஹத்தால்
பிடிக்கப்பட்ட
பெண்யானையைப்போல்
தன்
ஜனங்களைவிட்டுப்பிரிந்து
ராவணனால்
சிறையில்
வைக்கப்பட்டவள்.
Prose passage
▾
Meaning
Keep
மழைக்காலத்தின்
முடிவில்
மேகங்களால்
சூழப்பட்டு
பிரகாசமற்றிருக்கும்
சந்திரனுடைய
கலையைப்
போன்றவள்;
மங்கள
ஸ்நானமில்லாததால்
தேகம்
அழுக்கடைந்து
அழகு
குறைந்திருப்பவள்.
தந்திகள்
பூட்டாத
வீணையைப்
போன்றவள்;
பர்த்தாவான
ராமமூர்த்தியுடன்
வஸிக்கத்தக்கவள்;
ராக்ஷஸிகளுக்கு
நடுவில்
இருக்கத்
தகாதவள்;
குரூரக்ரஹங்களால்
பீடிக்கப்படும்
ரோஹிணீ
நக்ஷத்திரத்தைப்
போன்றவள்;
புஷ்பங்கள்
உதிர்ந்த
கொடியைப்போன்றவள்;
தேகமெங்கும்
அழுக்கடைந்தும்
ஸஹஜமான
அழகால்
விளங்குகிறவள்;
சேற்றால்
மூடப்பட்ட
தாமரைக்கொடி
போல்
பிரகாசிப்பவள்;
கிழிந்த
அழுக்கு
வஸ்திரத்தை
உடுத்தியிருந்தும்
காந்தியால்
ஜ்வலிப்பவள்.
Prose passage
▾
Meaning
Keep
முகத்திலோ
ஸந்தோஷக்குறி
இல்லை;
தன்
பர்த்தாவின்
தேஜஸையும்
பராக்கிரமத்தையும்
நினைக்க
நினைக்கத்
தைரியமடைபவள்.
கண்ணீரால்
கலங்கிக்
கறுத்த
நேத்திரங்களையுடையவள்.
தனது
பதிவிரதாக்னியையே
காவலாக
உடையவள்.
மான்
குட்டிபோல்
பயத்தால்
அங்குமிங்கும்
பார்ப்பவள்.
அவளுடைய
உஷ்ணமானபெருமூச்சினால்
சுற்றிலுமிருக்கும்
மரங்களிலுள்ள
தளிர்களை
வாடச்
செய்பவள்
போலிருப்பவள்.
சோகங்கள்
ஒன்றுசேர்ந்து
உருவெடுத்ததுபோலும்,
துக்க
ஸமுத்திரத்தின்
அலைகளைப்
போலும்
இருப்பவள்;
மிக்கப்
பொறுமையுடையவள்;
உத்தம
லக்ஷணப்படி
அமைக்கப்பட்ட
அங்கங்களுடன்
ஆபரணங்களில்லாமலேயே
பிரகாசிப்பவள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படிப்பட்ட
கஷ்டதசையிலும்
காந்தியைக்
கைவிடாமலிருக்கும்
ஜானகியைக்
கண்டு
ஹநுமான்
ஸந்தோஷத்தால்
கண்ணீர்விட்டு,
“ராமலக்ஷ்மணர்களுடைய
அனுக்கிரஹத்தாலல்லவா
இந்த
மஹா
புண்யவதியின்
தரிசனம்
கிடைத்தது”
என்று
அவர்களை
மனத்தால்
அடிக்கடி
நமஸ்கரித்தார்.
பிறகு
ஸீதையைப்
பார்த்து
ஆனந்தம்
பொங்க,
அந்த
விருக்ஷத்திலேயே
மறைந்திருந்தார்.
31
▾
Meaning
Keep
நமஸ்க்ருத்வா
ஸ
ராமாய
லக்ஷ்மணாய
ச
வீர்யவாந்
|
ஸீதாத³ர்ஶந
ஸம்ஹ்ருஷ்டோ
ஹநுமாந்
ஸம்வ்ருதோப⁴வத்
||
Previous
←
ஸீதையைக் கண்டு ஹநுமான் துக்கித்தது
Next
ராவணன் அசோகவனத்திற்கு வந்தது
→