Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதை
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதை
1
▾
Meaning
Keep
தஸ்மிந்நேவ
தத:
காலே
ராஜபுத்ரீ
த்வநிந்தி³தா
|
ரூபயௌவந
ஸம்பந்நம்
பூ⁴ஷணோத்தம
பூ⁴ஷிதம்
||
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
ஆபரணங்களாலும்
அலங்கரிக்கப்பட்டு,
ரூபத்திலும்
யௌவனத்திலும்
நிகரில்லாத
ராவணன்
தன்னிடத்தில்
ஆசை
கொண்டு
தன்னைப்பார்க்க
வருவதைப்
பதிவிரதைகளுக்குள்
சிரேஷ்டையான
ஜானகி
என்ற
ராஜபுத்திரி
கண்டு,
பெரும்
காற்றிலடிபட்ட
இளம்
வாழையைப்போல்
நடுங்கினாள்.
உடனே,
துடைகளால்
வயிற்றையும்
கைகளால்
ஸ்தனங்களையும்
மறைத்துக்கொண்டு,
என்ன
நேருமோ
என்று
கண்ணீர்
சொரிய
உட்கார்ந்திருந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனும்
ஸமீபத்தில்
வந்து
ராக்ஷஸிகளுக்கு
நடுவில்
ஸீதை
உட்கார்ந்திருப்பதையும்,
ஸமுத்திரத்தில்
முழுகும்
கப்பலைப்போல்
அவள்
துக்கத்தால்
பீடிக்கப்படுவதையும்
கண்டான்.
வெறும்
தரையில்
ஆஸனமில்லாமல்,
ஸகல
பூஷணங்களையும்
தரிக்கத்
தகுந்தவளாயிருந்தும்
யாதொரு
ஆபரணமும்
இல்லாமல்,
அழுக்கையே
ஆபரணமாக
அணிந்து
கொண்டு,
பூமியில்
வெட்டித்தள்ளப்பட்ட
மரக்கிளைபோலவும்,
சேற்றால்
பூசப்பட்ட
தாமரைக்கொடிபோலும்
சற்று
பிரகாசித்தும்
சற்று
பிரகாசிக்காமலும்
இருந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஆத்மஞானியான
ராமமூர்த்தியை
ஸ்தூலதேகத்தால்
அடையமுடியாமல்,
எண்ணங்களாகிய
குதிரைகளை
மனமென்ற
ரதத்தில்
பூட்டி
அதிவேகமாய்
அவருடைய
ஸமீபத்தை
அடைய
முயல்பவள்போல்
அவள்
காணப்பட்டாள்.
முகம்
வாடி
அழுது
கொண்டு
தனியாக
ராமனைக்குறித்துக்
கவலைப்படுவதும்
அவரை
தியானிப்பதுவுமே
தொழிலாக
இருந்தாள்.
அவளுடைய
துக்கம்
எப்பொழுது
முடியுமென்று
அவளுக்குத்
தெரியாது.
ராகவனே
கதி
என்று
நம்பியிருந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
மந்திரத்தால்
தடைபட்டுப்
புரண்டுகொண்டிருக்கிற
நாகராஜனுடைய
ஸ்த்ரீபோலும்,
கேதுவால்
பீடிக்கப்பட்ட
ரோஹிணீ
நக்ஷத்திரம்போலும்,
நல்ல
ஆசாரமுள்ள
தர்மவான்களுடைய
குலத்தில்
பிறந்து
ஹீனமான
குலத்தில்
விவாஹம்
செய்யப்பட்டவளைப்போலும்,
(ஸ்த்ரீகளுக்கு
விவாஹமும்
புருஷர்களுக்கு
உபநயனமும்
இரண்டாவது
ஜன்மம்)
வீணாய்
அபவாதத்தினால்
கெடுக்கப்பட்ட
கீர்த்தியைப்போலும்,
அடிக்கடி
அப்யாஸம்
செய்யாததால்
மறந்துபோன
வேதவித்யையைப்
போலும்,
அழிந்த
புகழைப்போலும்,
அவமானத்தையடைந்த
சிரத்தையைப்போலும்,
வரவரக்
குறைந்த
தேவபூஜையைப்
போலும்,
பிரயோஜனத்தை
அடையாத
ஆசையைப்போலும்,
உத்தேசத்திற்கு
மிகவும்
குறைந்த
தனலாபத்தைப்போலும்,
அலக்ஷ்யம்
செய்து
தடுக்கப்பட்ட
பிரபுக்களுடைய
உத்திரவைப்
போலும்,
கெட்ட
காலங்களில்
திக்குகள்
நெருப்புப்பட்டு
எரிவதுபோலும்,
பூஜாத்திரவியங்கள்
அபகரிக்கப்பட்டதுபோலும்,
பனி
முதலியவைகளால்
எரிக்கப்பட்ட
தாமரையோடையைப்போலும்,
வீரர்களை
இழந்த
ஸேனையைப்போலும்,
இருள்
சூழ்ந்த
வெளிச்சத்தைப்
போலும்,
ஜலம்
வற்றின
நதியைப்போலும்,
அசுத்த
பதார்த்தங்கள்
தொட்ட
அக்னிகுண்டத்தைப்
போலும்,
அணைந்துபோன
அக்னிஜ்வாலையைப்போலும்,
ராகுவால்
பீடிக்கப்பட்ட
சந்திரனை
உடைய
பௌர்ணிமா
ராத்திரியைப்போலும்,
யானையால்
குழப்பப்பட்டு
தாமரைத்
தண்டு
புஷ்பம்
பக்ஷிகள்
முதலியன
அழிந்த
தாமரை
ஓடையைப்போலும்,
வெள்ளத்தால்
அடித்துக்கொண்டுபோகப்பட்ட
ஜலத்தையுடைய
நதியைப்போலும்,
கரையில்
பிடுங்கிப்
போட்டவுடன்
உஷ்ணத்தால்
வாடும்
தாமரைக்
கொடிபோலும்,
தன்
நாயகனை
விட்டுத்
தன்னைப்
பிரித்து
ஸ்தம்பத்தில்
இறுக்கிக்கட்டப்பட்டு
துக்கத்தால்
பெருமூச்சுவிட்டுக்கொண்டிருக்கும்
பெண்
யானையைப்
போலும்,
கறுத்து
நீண்ட
பின்னலால்
சரத்காலத்தில்
கறுத்த
வனங்களால்
விளங்கும்
பூமியைப்போலும்
தோன்றினாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸ்நானம்
அலங்காரம்
முதலியவை
இல்லாததால்
கிருஷ்ணபக்ஷ
ராத்திரியைப்போல்
விளங்கவில்லை.
மிகவும்
செல்வமாய்
வளர்க்கப்பட்டு
சுத்தமான
அவயவங்களையுடையவளாகையால்
நவமணிகளிழைத்த
உத்தமகிருஹத்தில்
வஸிக்கத்
தகுந்தவள்.
உபவாஸத்தாலும்
கவலையாலும்
பயத்தாலும்
எப்போதும்
பர்த்தாவையே
தியானித்துக்கொண்டிருந்ததாலும்
மிகவும்
இளைத்திருந்தாள்.
ஸந்தோஷமற்று
ஜலத்தையே
ஆகாரமாகக்கொண்டு
ராமன்
ராவணனைச்
சீக்கிரமாய்
வதம்
செய்யவேண்டுமென்று
தன்
இஷ்டதேவதையைக்
கைகூப்பி
மனத்தால்
பிரார்த்திப்பவள்
போலிருந்தாள்.
தோஷமற்ற
நடத்தையை
உடையவள்;
அழகிய
கண்களையும்
இமைகளையும்
உடையவள்;
தன்னை
ரக்ஷிப்பவர்கள்
இன்னும்
வரவில்லையே
என்று
அழுதுகொண்டிருந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
தன்
பர்த்தா
அனுஷ்டிக்கும்
தர்மத்தையே
தானும்
அனுஷ்டித்துக்கொண்டு,
அவரைப்
பிரிந்த
துக்கத்தால்
தவித்துக்கொண்டிருக்கும்
ஸீதையை
ராவணன்
கபடவார்த்தைகளால்
பலவிதமாய்
மயக்கப்
பார்த்தான்.
அதனால்
தன்
நாசத்தையும்
தேடிக்கொண்டான்.
23
▾
Meaning
Keep
ஸமீக்ஷமாணாம்
ருத³தீ
மநிந்தி³தாம்
ஸுபக்ஷ்ம
தாம்ராயத
ஶுக்ல
லோசநாம்
|
அநுவ்ரதாம்
ராம
மதீவ
மைதி²லீம்
ப்ரலோப⁴யாமாஸ
வதா⁴ய
ராவண:
||
Previous
←
ராவணன் அசோகவனத்திற்கு வந்தது
Next
ராவணன் ஸீதையைப் பிரார்த்தித்தது
→