Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவணன் ஸீதையைப் பிரார்த்தித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவணன்
ஸீதையைப்
பிரார்த்தித்தது
1
▾
Meaning
Keep
ஸ
தாம்
பதிவ்ரதாம்
தீ³நாம்
நிராநந்தா³ம்
தபஸ்விநீம்
|
ஸாகாரைர்
மது⁴ரைர்
வாக்யைர்
ந்யத³ர்ஶயத
ராவண:
||
Prose passage
▾
Meaning
Keep
பர்த்தாவையே
தெய்வமாக
உடையவளாய்,
அவரை
விட்டுப்
பிரிந்ததால்
மனம்
வாடித்
துன்பமடைந்து,
சந்தோஷமற்றிருக்கும்
ஸீதையைத்
தனக்கு
இணங்கும்படி
மதுரமான
வார்த்தைகளால்
ராவணன்
தன்
அபிப்பிராயத்தை
வெளியிட்டான்.
அவளோ
மஹாபதிவிரதை;
ஸகல
லோகங்களையும்
தன்
தவத்தின்
மஹிமையால்
நாசம்
செய்யக்கூடியவள்.
Prose passage
▾
Meaning
Keep
“யானைத்
துதிக்கையைப்
போன்ற
துடைகளையுடையவளே!
என்னைப்
பார்த்தவுடன்
உனது
வயிற்றையும்
ஸ்தனங்களையும்
மறைத்துக்கொண்டு
என்
கண்ணில்
படாமலிருக்க
வேண்டுமென்று
விரும்புகிறாய்போலும்,
விசாலமான
நேத்திரங்களையுடையவளே!
ஸமஸ்த
பிராணிகளுடைய
மனத்தை
அபகரிப்பவளே!
உன்மேல்
ஆசைவைத்தேன்.
என்னிடத்தில்
தயவு
செய்.
நீ
ஏன்
என்னைக்
கண்டு
பயப்படுகிறாய்?
இங்கே
மனுஷ்யர்களாவது,
இஷ்டமான
ரூபத்தை
எடுக்கக்கூடிய
ராக்ஷஸர்களாவது
உனக்குப்
பயத்தை
உண்டுபண்ணக்கூடியவர்கள்
எவருமில்லை.
பர
ஸ்த்ரீகளை
பலாத்காரமாய்க்
கொண்டுவருவதும்
அவர்களைச்
சேர்வதும்
ராக்ஷஸர்களுக்கு
ஸ்வதர்மம்.
இதில்
ஸந்தேகமுண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
அளவற்ற
ஆசை
என்மனத்தில்
எழுந்தாலும்,
என்னிடத்தில்
உனக்குப்
பிரியமுண்டாகாதவரையில்
உன்னைத்
தொடமாட்டேன்.
ஸுந்தரீ!
இவ்விடத்தில்
உனக்குப்
பயமுண்டோ?
என்னை
நம்பு;
என்னிடத்தில்
உனக்கு
நிஜமான
பிரேமை
உண்டாகட்டும்.
வீணாய்த்
துக்கத்திற்கு
இடம்
கொடுத்து
தேகத்தைக்
கெடுத்துக்கொள்ளாதே.
Prose passage
▾
Meaning
Keep
உன்
அழகான
தலைமயிரை
ஒரே
பின்னலாய்த்
தொங்கவிட்டிருப்பதும்,
வெறும்
தரையில்
படுப்பதும்,
அழுக்கடைந்த
ஒற்றை
வஸ்திரத்தைத்
தரிப்பதும்,
காரணமில்லாமல்
உபவாஸமிருப்பதும்
உனக்குத்
தகாது.
என்னைப்
புருஷனாக
அடைந்து
உத்தமமான
புஷ்பமாலைகளையும்
சந்தனம்
முதலிய
பூச்சுக்களையும்,
விசித்திரமான
வஸ்திரங்களையும்
அழகான
ஆபரணங்களையும்
அகில்
முதலிய
தூபங்களையும்
படுக்கைகளையும்
ஆஸனங்களையும்,
பாட்டு
ஆட்டம்
வாத்தியம்
முதலியவைகளையும்,
உயர்ந்த
அன்னபானங்களையும்
அனுபவிக்கலாம்.
Prose passage
▾
Meaning
Keep
ஸ்த்ரீரத்தினமே!
ஸகல
லக்ஷணங்களும்
பொருந்தின
உன்
அவயவங்களில்
அவைகளுக்குத்
தகுந்த
ஆபரணங்களைத்
தரிக்கக்கூடாதா?
என்னிடத்தில்
வந்து
சேர்ந்தபிறகும்
அலங்காரம்
செய்துகொள்வதற்குத்
தகாதவளாய்
எப்படி
ஆவாய்?
ஆற்றில்
ஓடும்
ஜலப்பிரவாகம்
எப்படித்
திரும்பிவராதோ
அப்படி
உனது
யௌவனம்
அதி
சீக்கிரமாய்
சென்று
விடும்.
அதற்குள்
என்னை
அடைந்து
ஸுகமாக
இரு.
Prose passage
▾
Meaning
Keep
ஸகலப்
பிரபஞ்சத்தையும்
ஸிருஷ்டித்த
பிரஹ்மா
உன்னை
ஸிருஷ்டித்த
பிறகு,
“இனி
இதைக்
காட்டிலும்
உத்தமமான
ரூபத்தை
என்னால்
ஸிருஷ்டிக்க
முடியாது”
என்று
தொழிலை
விட்டுவிட்டாற்போலிருக்கிறது.
உன்னைப்போன்ற
அழகுள்ள
ஸ்த்ரீ
எங்கும்
இல்லாமலிருப்பதே
இதற்கு
அடையாளம்.
ரூபத்தாலும்
யௌவனத்தாலும்
பிரகாசிக்கும்
உன்னை
அடைந்து
உன்
அழகில்
ஈடுபட்டு
மயங்காதவனுமுண்டோ?
உன்னை
ஸிருஷ்டித்த
பிரஹ்மாவே
உன்னைக்கண்டு
மோகிப்பதில்
ஸந்தேகமில்லை.
பூர்ணசந்திரனைப்போன்ற
முகத்தையுடையவளே!
உன்
தேகத்தில்
எந்தப்பக்கத்தில்
என்
பார்வை
விழுகிறதோ
அங்கேயிருந்து
அதைத்
திருப்பமுடியவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதே!
என்னைப்
புருஷனாக
அடை
ஏன்
இந்த
அறிவின்மை
உனக்கு?
நான்
அநேக
லோகங்களிலிருந்து
கொண்டுவந்த
ஸகல
ஸ்த்ரீகளுக்கும்
நீ
பட்ட
மஹிஷியாக
இரு.
உனக்கு
ஸகல
மங்களங்களும்
உண்டாகட்டும்.
நான்
திக்விஜயம்செய்து
அந்தந்த
லோகங்களிலிருக்கும்
அபூர்வமான
வஸ்துக்களைக்
கொண்டுவந்திருக்கிறேன்.
அவைகளும்
நானும்
இந்த
லங்காபுரியும்
உன்னுடையவை.
உனக்காக
இந்தப்பூமி
முழுவதையும்
ஜயித்து
உன்
பிதாவான
ஜனகமகாராஜாவிற்குக்
கொடுக்கிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
பலத்திலும்,
பராக்கிரமத்திலும்
வீரியத்திலும்
தைரியத்திலும்
என்னைப்போன்றவனுண்டோ?
தேவர்களையும்
அஸுரர்களையும்
யுத்தத்தில்
அடிக்கடி
தோற்கடித்து
அவர்களுடைய
ஸைன்யங்களை
நாசம்
செய்து
கொடிகளையும்
த்வஜங்களையும்
அறுத்து,
எனக்கெதிரில்
நிற்கமுடியாமல்
துரத்தியிருக்கிறேன்.
உனது
ரூபத்திற்கும்
அழகிற்கும்
தகுந்தபடி,
ஸாமர்த்தியமுள்ள
ஸ்த்ரீகள்
வஸ்திரங்களாலும்
ஆபரணங்களாலும்
உன்னை
அலங்கரிக்கட்டும்.
நான்
பார்த்து
அளவற்ற
ஆனந்தமடைவேன்.
Prose passage
▾
Meaning
Keep
இங்கிருக்கும்
ஸமஸ்த
போக
பதார்த்தங்களில்,
வஸ்திரம்
ஆபரணம்
மது
மாம்ஸம்
ஆஸனம்
வாகனம்
இன்னும்
எது
உனக்குப்
பிரியமோ
அவைகளை
எல்லாம்
உன்
இஷ்டப்படி
அனுபவி.
பூமியையும்
தனங்களையும்
தடையில்லாமல்
வேண்டியவர்களுக்குக்
கொடு.
உன்
கண்ணில்
பட்ட
ஸகலப்
பிராணிகளும்
உனக்கு
அடிமைகளே;
நீ
அவர்களை
இஷ்டப்படி
அதிகாரம்
செய்யலாம்.
என்னிடத்தில்
அந்தரங்கமான
பிரீதி
வை.
உன்
மூலமாய்
உனது
பந்துக்களும்
என்
அனுக்கிரஹத்தால்
க்ஷேமத்தை
அடையட்டும்.
Prose passage
▾
Meaning
Keep
என்
ஐசுவரியத்தையும்
செல்வத்தையும்
கீர்த்தியையும்
கவனித்துப்
பார்.
உடுக்கத்
துணியில்லாமல்,
உண்ணச்சோறில்லாமல்,
படுக்க
இடமில்லாமல்
பரதையாய்க்
காட்டில்
அலையும்
ராமனால்
உனக்கென்ன
பிரயோஜனம்?
தபஸ்விகளைப்போல்
ஆகார
நியமத்துடன்
மரவுரி
மான்தோல்
முதலியவைகளைத்
தரித்து
வெறுந்தரையில்
படுத்து
வனத்தில்
மிருகங்களுடன்
திரிகிறவன்
உனக்குத்
தகுந்தவனா?
ராஜ்யலக்ஷ்மியும்
ஜயலக்ஷ்மியும்
அவனைக்
கைவிட்டன.
அவன்
இதுவரையில்
பிழைத்திருக்கிறானோ
இல்லையோ?
Prose passage
▾
Meaning
Keep
மழைக்
காலத்தில்,
கொக்குகள்
கூட்டம்
கூட்டமாய்
முன்னே
நிறைந்துள்ள
மேகங்களால்
மறைக்கப்பட்ட
நிலவைக்
காண
முடியாததுபோல
என்னால்
இங்கே
கொண்டுவந்து
வைக்கப்பட்ட
உன்னை
ராமன்
பார்க்கவும்
முடியுமோ?
ஹிரண்யகசிபு
இந்திரன்
கவர்ந்து
சென்ற
தன்
மனைவியைத்
திரும்பவும்
அடைந்தது
போல்
ராமன்
உன்னை
எந்த
உபாயத்தாலும்
அடைய
முடியாது.
Prose passage
▾
Meaning
Keep
கருடனிடத்தில்
அகப்பட்ட
மஹாஸர்ப்பத்தைப்போல்,
உன்
நேத்திரங்களையும்
பல்வரிசையையும்
புன்சிரிப்பையும்
லீலாவினோதங்களையும்
பார்த்து
என்
மனம்
மயங்குகிறது.
அழுக்கடைந்த
பட்டுவஸ்திரத்தைத்
தரித்துக்கொண்டு,
உபவாஸத்தால்
இளைத்திருக்கும்
தேகத்துடன்,
யாதொரு
அலங்காரமும்
இல்லாமல்
காந்தி
குறைந்திருக்கும்
உன்னைப்
பார்த்து
என்
பாரியைகளிடத்தில்
ஸுகத்தை
அனுபவிக்க
மனம்
வரவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
என்
அந்தப்புரத்தில்
கணக்கில்லாத
ஸ்த்ரீரத்தினங்கள்
இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம்
நீயே
பிரபு.
அப்ஸரஸ்கள்
மஹாலக்ஷ்மிக்குக்
கைங்கரியம்
செய்வதுபோல்,
ஸகல
லோகங்களிலும்
உத்தம
ஸ்த்ரீகளென்று
பிரஸித்தி
பெற்றவர்களெல்லாம்
உனக்குப்
பணிவிடை
செய்யட்டும்.
குபேரனிடத்திலுள்ள
ரத்தினங்களும்
ஸகல
லோகங்களும்
நானும்
உன்
ஸ்வாதீனத்தில்
இருக்கிறோம்.
இவைகளை
இஷ்டப்படி
அனுபவிக்கத்
தடையென்ன?
Prose passage
▾
Meaning
Keep
தவம்
செய்வதிலாவது
தேகபலத்திலாவது
பராக்கிரமத்திலாவது
பிரதாபத்திலாவது
கீர்த்தியிலாவது
ராமன்
எனக்கு
ஈடாவானா?
நேர்த்தியான
பானங்களைக்
குடி;
வனங்களிலும்
தோட்டங்களிலும்
உன்
இஷ்டப்படி
விளையாடு;
இங்குள்ள
ஸகல
போகங்களையும்
அனுபவி:
இந்தப்
பூமியையும்
அதிலுள்ள
ஸமஸ்த
தனங்களையும்
உனக்குக்
கொடுத்தேன்.
என்னுடன்
உன்
இஷ்டப்படி
க்ரீடைசெய்;
உனது
பந்துக்களும்
உன்னை
அடைந்து
ஸகல
ஸௌக்யங்களையும்
அனுபவிக்கட்டும்;
பயத்தை
விடு.
ஸகல
ஆபரணங்களாலும்
உன்னை
அலங்கரித்துக்கொண்டு,
அநேக
வர்ணமுள்ள
புஷ்பங்களாலும்
அவைகளில்
மொய்க்கும்
வண்டுகளாலும்
மறைந்த
மரங்களையுடைய
ஸமுத்திரக்கரையிலுள்ள
வனங்களில்
என்னுடன்
ஆனந்தமாகக்
காலத்தைப்
போக்குவாயாக”
என்றான்.
36
▾
Meaning
Keep
குஸுமித
தருஜால
ஸந்ததாநி
ப்⁴ரமரயுதாநி
ஸமுத்³ர
தீரஜாநி
|
கநகவிமல
ஹார
பூ⁴ஷிதாங்கீ³
விஹர
மயா
ஸஹ
பீ⁴ரு
காநநாநி
||
Previous
←
ஸீதை
Next
ஸீதை ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்தது
→