Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவணன் ஸீதையைப் பயமுறுத்தினது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவணன்
ஸீதையைப்
பயமுறுத்தினது
1
▾
Meaning
Keep
ஸீதாயா
வசநம்
ஶ்ருத்வா
பருஷம்
ராக்ஷஸாதி⁴ப:
|
ப்ரத்யுவாச
தத:
ஸீதாம்
விப்ரியம்
ப்ரியத³ர்ஶநாம்
||
Prose passage
▾
Meaning
Keep
ஸகலப்
பிராணிகளும்
பார்த்து
ஆனந்திக்கக்கூடிய
பார்வையையுடைய
ஸீதை
இப்படிச்
சொல்லியும்,
ராவணன்
அவளுடைய
கடும்
வார்த்தைகளை
ஸஹிக்காமல்
கோபங்கொண்டு,
“லோகத்தில்
புருஷன்
ஸ்த்ரீகளைத்
தன்
வசப்படுத்தவேண்டுமென்று
எவ்வளவு
நல்ல
வார்த்தை
சொன்னாலும்,
எவ்வளவு
ஸமாதானம்
செய்தாலும்,
அவர்களுக்கு
அவனிடத்தில்
அலக்ஷ்யபுத்தியும்
கர்வமும்
விருத்தியாகுமே
தவிர
அவர்கள்
ஸ்வாதீனப்
படுவதில்லை.
Prose passage
▾
Meaning
Keep
மிரண்டு
ஓடுகிற
குதிரைகளை
ஸமர்த்தனான
ஸாரதி
அடக்குவதுபோல,
நான்
உன்னிடத்தில்
வைத்த
ஆசை
என்
கோபத்தை
அடக்குகிறது.
காமத்தின்
கதி
வெகு
விபரீதமாக
இருக்கிறது
பார்.
நாம்
ஆசை
வைக்கும்
வஸ்துவிடத்தில்
ஸ்நேஹமும்
தயையும்
விருத்தியாகிறதேயன்றி
அதன்
தோஷங்களும்
கெடுதிகளும்
தோன்றுவதில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
கபடவேஷமுள்ள
ராமனிடத்தில்
ஆசைகொண்டிருக்கும்
உன்னை
அவமானம்
செய்து
கொல்லவேண்டியது;
அதற்கோ
மனம்
வரவில்லை.
நீ
சொன்ன
ஒவ்வொரு
கடும்
வார்த்தைக்கும்
உன்னை
அப்பொழுதே
சித்திரவதை
செய்யவேண்டியது.
நான்
உனக்கு
கெடுவிட்ட
பன்னிரண்டு
மாதங்களில்
இரண்டு
மாதங்கள்
பாக்கி
இருக்கின்றன.
அதற்குள்
நீ
என்னைச்
சேராவிட்டால்
மறுநாளே
என்
சமையற்காரர்கள்
உன்னைச்
சித்திரவதைசெய்து
என்
காலை
போஜனத்திற்காகப்
பக்குவம்
செய்வார்கள்”
என்று
பேரிடிபோல்
கர்ஜித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்கேட்ட
தேவகந்தர்வ
கன்னியைகள்,
தாங்களும்
அனுபவித்த
கஷ்டங்களை
நினைத்து,
ஜானகியைப்
பார்த்துப்
பரிதவித்து,
சிலர்
ரஹஸ்யமாய்
“ஸீதே!
பயப்படாதே;
இந்த
அல்பன்
உன்னை
என்ன
செய்யக்கூடும்?”
என்ற
கருத்தை
வெளிப்படுத்த
உதட்டை
அசைத்தனர்;
சிலர்
கண்களைச்
சிமிட்டினார்கள்;
சிலர்
தலையை
ஆட்டினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்கண்ட
ஸீதை
தைரியம்கொண்டு,
தன்
பதிவிரதா
மஹிமையாலும்
பர்த்தாவின்
பராக்கிரமத்தாலும்
அவனை
அலக்ஷ்யம்
செய்து,
மறுபடியும்
அவனுக்கு
ஹிதத்தை
உபதேசித்தாள்.
“ராவண!
லோகத்தார்கள்
நிந்திக்கும்
இந்த
கெட்ட
செய்கையிலிருந்து
உன்னைத்திருப்பி
ஸன்மார்க்கத்தில்
நடக்கும்படி
செய்பவர்கள்
உன்
ராஜ்யத்தில்
ஒருவரும்
இல்லையென்று
நிச்சயமாய்த்
தெரிகிறது.
எல்லோரும்
உன்
அன்னத்தைத்தின்று
உனக்கு
துரோகம்
நினைப்பவர்களே.
இந்திரனுடைய
பத்தினியான
சசிதேவியைப்
போன்ற
என்னை
ஸகல
லோகங்களிலும்
உன்னைத்தவிர
எவனாவது
மனத்தாலும்
விரும்பத்
துணிவானா?
தர்மஸ்வரூபியான
ராமனுடைய
பாரியையைப்பார்த்து
இப்படிப்பட்ட
பாபவார்த்தைகளைச்
சொன்ன
பிறகும்,
அளவற்ற
தேஜஸையுடைய
அந்த
மஹாவீரனிடத்திலிருந்து
தப்பித்துக்கொள்ள
எங்கே
ஒளிந்துகொள்ளப்
போகிறாய்?
Prose passage
▾
Meaning
Keep
காட்டில்
மதயானையும்
முயலும்
யுத்தம்
செய்தால்
முடிவென்ன?
ஸ்ரீராமனே
அந்த
மதயானை;
நீயோ
அல்பஜந்துவான
முயல்.
கபடத்தால்
அவரை
ஆசிரமத்திலிருந்து
வெளியில்
இழுத்து,
என்னைத்திருடின
உனக்கு
வெட்கமென்பது
கிடையாதோ?
ஐயோ!
ஒரு
நிமிஷமாவது
அவருடைய
கண்ணில்
படாமல்
போய்விட்டாயே!
Prose passage
▾
Meaning
Keep
உன்
விகார
ரூபமுள்ள
குரூரநேத்திரங்கள்
வெட்கமில்லாமல்
பரஸ்த்ரீயை
ஆசையுடன்
பார்க்கத்
துணிந்தபொழுதே
பூமியில்
ஏன்
விழவில்லை?
ஸாதுவான
தசரத
சக்கரவர்த்திக்கு
நாட்டுப்பெண்ணும்
தர்மாத்மாவான
ராமனுக்குப்
பாரியையும்
பரபுருஷனையே
ஸ்மரிக்காதவளுமான
என்னைப்
பார்த்துக்
காமவிகாரத்தோடு
தகாத
வார்த்தைகளைச்
சொல்லும்
உன்
நாக்கு
ஏன்
அறுந்து
விழவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
‘உனக்கு
அபராதம்
செய்தவர்களுக்குச்
சாபம்
கொடு’
என்று
ராமன்
எனக்கு
உத்தரவு
செய்யவில்லை.
நான்
பதிவிரதா
தர்மத்தைக்
காப்பாற்றுகிறவள்.
பர்த்தா
இருக்கையில்
அவரை
மீறி
அவர்
தண்டிக்க
வேண்டியவர்களை
நான்
தண்டிக்கத்
துணியமாட்டேன்.
ஆகையால்
என்
கோபாக்னியால்
சாம்பலாக்கத்
தகுந்த
உன்னை
இதுவரையிலும்
சாம்பலாக்கவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
மஹாபுத்திமானான
ராமனிடத்திலிருந்து
என்னை
யாராவது
அபகரிக்கமுடியுமா?
உன்
உத்தேசம்
அவருக்குத்
தெரியாததோ?
நீ
மரணமடைவதற்கு
நான்
காரணமென்று
விதி
ஏற்பட்டிருந்ததால்
இப்படி
நடந்தது.
இதில்
ஸந்தேகம்
உண்டோ?
ஆகையால்
நீ
ஸாமர்த்தியமாய்
என்னை
அபகரித்தாயென்று
பெருமையடையாதே.
நீ
அநேக
யுத்தங்களில்
கைதேர்ந்த
சூரனென்று
பெயர்
பெற்றவன்;
குபேரனுக்கு
ஸஹோதரன்;
அளவற்ற
சதுரங்க
பலத்தையுடையவன்.
இப்படியிருக்க
ராமலக்ஷ்மணர்களை
மோசம்
செய்து
என்னைத்
திருடி
வந்ததற்குக்
காரணமென்ன?”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
இப்படிச்
சொல்லக்கேட்ட,
ராவணன்
கோபத்தால்
கண்களை
உருட்டிவிழித்து,
ஜானகியைப்
பயங்கரமாய்ப்
பார்த்தான்.
நீருண்ட
மேகம்போல்
கறுத்த
தேகத்தையுடையவன்;
பர்வதசிகரங்களைப்
போன்ற
புஜங்களையுடையவன்;
கொழுத்த
ஸிம்ஹத்தைப்போல்
பலத்தையும்
நடையையும்
உடையவன்;
நெருப்புக்
கொழுந்துக்களைப்
போன்ற
நாக்கின்
நுனியையும்
கண்களையும்
உடையவன்;
அசைகிற
நுனிகளையுடைய
கிரீடத்தால்
உயர்ந்தவன்;
விசித்திரமான
மாலைகளாலும்
பூச்சுக்களாலும்
சிவந்த
வஸ்திரங்களாலும்
நேர்த்தியான
தங்கத்தால்
செய்யப்பட்ட
தோள்வளை
முதலிய
ஆபரணங்களாலும்
அலங்கரிக்கப்பட்டவன்;
அமிருதத்திற்காக
ஸமுத்திரத்தைக்
கடைந்தகாலத்தில்
மந்தரபர்வதம்
வாஸுகி
என்ற
மஹாஸர்ப்பத்தால்
கட்டப்பட்டதுபோல்
நீல
நிறமுள்ள
அரைநூல்
மாலையால்
அலங்கரிக்கப்பட்ட
இடுப்பையுடையவன்;
இரண்டு
புஜங்களால்
இரண்டு
உன்னத
சிகரங்களுடன்
விளங்கும்
மந்தரகிரியைப்போல்
பிரகாசித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
சிவந்த
புஷ்பங்களாலும்
தளிர்களாலும்
நிறைந்த
அசோக
மரங்களால்
அழகுபெற்றிருக்கும்
மலையைப்போல்,
பாலஸூரியர்களுக்கு
ஸமமான
காந்தியுடன்
ஜ்வலிக்கும்
இரண்டு
குண்டலங்களைத்
தரித்திருந்தான்.
வஸந்தருதுவே
உருவெடுத்து
வந்தது
போலிருந்தாலும்,
ஸகல
விதமாய்
அலங்கரிக்கப்பட்டிருந்தாலும்,
ஸ்மசானத்திலுள்ள
விருக்ஷத்தைப்போல்
பார்க்கப்
பயங்கரமாயிருந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
கோபத்தால்
சிவந்த
கண்களுடன்
ஸீதையை
வெறிக்கப்
பார்த்து,
காலஸர்ப்பத்தைப்போல்
சீறிக்கொண்டு,
“நீதி
நெறியில்லாமல்
ஸகலத்தையும்
இழந்து
திரியும்
ராமனிடத்தில்
இன்னும்
பிரியம்
வைத்த
உன்னை
ஸூரியன்
ஸந்தியாகால
இருட்டை
அழிப்பதுபோல்
இப்பொழுதே
வதம்
செய்கிறேன்”
என்று,
சத்துருக்களைக்
கதறவடிக்கும்
ராக்ஷஸேசுவரன்
கோரமான
பார்வையுள்ள
ராக்ஷஸிகளைப்
பார்த்துப்
பின்வருமாறு
ஆக்ஞாபித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்களில்
ஒருத்தி
ஒரே
கண்ணுடையவள்;
ஒருத்தி
ஒரே
காதுடையவள்;
ஒருத்தியின்
காது
தலையை
மூடிக்கொண்டிருந்தது;
யானை
பசு
முதலியவைகளைப்போல்
காதுடையவர்கள்
சிலர்.
ஒருத்திக்குக்
காது
நீளமாய்த்
தொங்கிக்கொண்டிருந்தது;
ஒருத்திக்குக்
காதே
இல்லை.
யானை
குதிரை
பசு
முதலியவைகளைப்போல்
பாதங்களையுடையவர்
சிலர்;
ஒருத்திக்கு
ஒரே
கால்,
ஒருத்திக்குப்
பெருங்கால்;
ஒருத்திக்குக்
காலே
இல்லை;
ஒருத்திக்குத்
தலையும்
கழுத்தும்,
ஒருத்திக்கு
ஸ்தனமும்
வயிறும்,
ஒருத்திக்கு
வாயும்
கண்ணும்
அளவுக்கு
மிஞ்சியிருந்தன.
ஒருத்தியின்
நாக்கு
தொங்கிக்கொண்டிருந்தது,
ஒருத்திக்கு
நாக்கே
இல்லை,
ஒருத்திக்கு
மூக்கேயில்லை.
ஸிம்ஹத்தைப்போல்
ஒருத்திக்கு
முகம்.
பன்றியைப்போல்
ஒருத்திக்கு
முகம்.
பசுவைப்போல்
ஒருத்திக்கு
முகம்.
Prose passage
▾
Meaning
Keep
இவர்களைப்
பார்த்து
ராவணன்,
“ராக்ஷஸிகளே!
நீங்களெல்லோரும்
இவள்
எனக்கு
அதிசீக்கிரத்தில்
ஸ்வாதீனப்படும்படி
செய்ய
வேண்டியது.
இவளுடன்
அனுகூலமாய்ப்
பேசியும்
பிரதிகூலமாய்ப்
பேசியும்
ஸாம
தான
பேதமென்ற
மற்ற
மூன்று
உபாயங்களாலும்
வசப்படுத்துங்கள்.
அப்படியும்
முடியா
விட்டால்
தண்டோபாயத்தைக்
காட்டுவதன்
மூலமும்
வசப்படுத்துங்கள்”
என்று
கடுமையாய்
ஆக்ஞாபித்து
காமத்தாலும்
கோபத்தாலும்
நிறைந்த
மனத்தையுடையவனாய்
ஸீதையை
அடிக்கடி
மிரட்டினான்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
அவனுடைய
பிரியபார்யையான
தான்யமாலினி
என்பவள்,
சீக்கிரமாய்
ஸமீபத்தில்
வந்து
ராவணனை
இறுகத்தழுவி,
“மஹாராஜா!
என்னுடன்
க்ரீடிக்க
வாரும்,
இவளோ
மனுஷ்யஸ்த்ரீ;
உம்மிடத்தில்
இஷ்டமில்லாதவள்;
முகம்
வெளுத்து
விகாரமாயிருப்பவள்;
இவளால்
உமக்கென்ன
பிரயோஜனம்?
உமது
புஜபலத்தால்
ஸம்பாதிக்கப்பட்ட
உத்தமபோகங்களை
அனுபவிக்கவேண்டுமென்று
பிரஹ்மா
இவளுடைய
தலையில்
எழுதவில்லை
என்பது
நிச்சயம்.
தன்னிடத்தில்
பிரியமில்லாத
ஸ்த்ரீயை
விரும்பி
வருத்துகிறவனுடைய
தேகம்
தாபத்தை
அடையும்.
தன்னிடத்தில்
ஆசை
வைப்பவளை
விரும்பினால்
உத்தமமான
ஸந்தோஷமுண்டாகும்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
காளமேகம்
போல்
கறுத்த
அந்த
மஹா
பலவான்,
தான்யமாலினி
இப்படிச்
சொல்லித்
தன்னை
அவ்விடம்
விட்டு
இழுத்துக்கொண்டு
போவதைக்
கண்டு,
கோபம்
தணிந்து
சிரித்துக்கொண்டு
அங்கிருந்து
திரும்பினான்.
அவனுடைய
நடையைத்
தாங்காமல்
பூமி
நடுங்க,
ஜ்வலிக்கும்
ஸூரியனைப்போல்
காந்தியுடைய
தன்
அரண்மனைக்குள்
சென்றான்.
தேவ
கந்தர்வ
நாககன்யைகளும்
அவனைப்
பின்தொடர்ந்தார்கள்.
பதிவிரதா
தர்மத்தைக்
காப்பாற்றுவதிலேயே
நோக்கமுள்ளவளாய்ப்
பயத்தால்
நடுங்கும்
ஸீதையை
ராவணன்
இவ்விதமாய்
மிரட்டி,
அங்கிருந்து
புறப்பட்டுக்
காமத்தால்
கலங்கின
மனத்துடன்
பிரகாசமுள்ள
தனது
கிருஹத்தில்
பிரவேசித்தான்.
46
▾
Meaning
Keep
ஸ
மைதி²லீம்
த⁴ர்மபரா
மவஸ்தி²தாம்
ப்ரவேபமாநாம்
பரிப⁴ர்த்ஸ்ய
ராவண:
|
விஹாய
ஸீதாம்
மத³நேந
மோஹித:
ஸ்வமேவ
வேஶ்ம
ப்ரவிவேஶ
பா⁴ஸ்வரம்
||
Previous
←
ஸீதை ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்தது
Next
ராக்ஷஸிகள் ஸீதைக்குப் போதித்தது
→