Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராக்ஷஸிகள் ஸீதைக்குப் போதித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராக்ஷஸிகள்
ஸீதைக்குப்
போதித்தது
1
▾
Meaning
Keep
இத்யுக்த்வா
மைதி²லீம்
ராஜா
ராவண:
ஶத்ரு
ராவண:
|
ஸந்தி³ஶ்ய
ச
தத:
ஸர்வா
ராக்ஷஸீர்
நிர்ஜகா³ம
ஹ
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ராவணனால்
ஆக்ஞாபிக்கப்பட்ட
ராக்ஷஸிகள்
அவன்
அந்தப்புரத்திற்குப்
போனவுடன்
ஸீதையின்
ஸமீபத்தில்
வந்து,
கோபத்தால்
நிலை
தெரியாமல்
குரூரமான
வார்த்தைகளைச்
சொன்னார்கள்.
“ஸீதே!
உன்னைப்
பார்யையாக
விரும்பும்
ராவணன்
ஸாமான்யனா?
பிரஜாபதிகளுள்
ஒருவரான
புலஸ்தியருடைய
பௌத்திரன்;
சத்துருக்களைக்
கதற
அடிப்பவன்;
மஹாபுத்திமான்;
பத்துத்தலைகளையுடையவன்;
லோகத்திலுள்ள
ஸகல
ராக்ஷஸர்களுக்கும்
பிரபு.
இவனுக்கு
மனைவியாக
ஆவதை
நீ
பெரிதாக
நினைக்கவில்லையே”
என்று
ஒருத்தி
சொன்னாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
ஏகஜடை
என்ற
மற்றொருத்தி,
சிறுத்த
இடையையுடைய
ஸீதையை
அழைத்துகோபத்தால்
கண்கள்
சிவக்க,
“மரீசி
அத்திரி
அங்கிரஸ்
புலஸ்தியர்
புலஹர்
கிரது
என்ற
ஆறு
பிரஜாபதிகளுக்குள்
நான்காவதான
புலஸ்தியர்
பிரஹ்மதேவருடைய
மானஸபுத்திரர்;
விச்ரவஸ்
என்ற
மஹரிஷி
மஹாதேஜஸ்வியாய்ப்
புலஸ்தியருடைய
மனத்திலிருந்து
உண்டானார்;
அவர்
பிரஹ்மாவிற்கு
ஸமமானவர்.
அவருடைய
புத்திரன்
ராக்ஷஸேச்வரனான
ராவணன்;
சத்ருக்களுடைய
தைரியத்தைக்
குலைத்து
அவர்களைக்
கதறச்
செய்கிறவன்.
நீ
அவனுக்குப்
பாரியையாக
இருக்கத்
தகுந்தவள்.
என்
வார்த்தைகள்
உன்
செவியில்
ஏறவில்லையோ?
என்ன
காரணம்?”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
பூனைக்கண்களையுடைய
ஹரிஜடை
என்பவள்,
நெருப்புப்
பொறிபோன்ற
கண்களையுருட்டி,
“முப்பத்து
முக்கோடி
தேவர்களையும்
தேவேந்திரனையும்
முறியடித்த
ராக்ஷஸராஜாவுக்குப்
பாரியையாகத்
தகுந்தவள்
நீயே”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
பிரகஸை
என்ற
மற்றொருத்தி
கோபம்
மேலிட்டு,
ஸீதையைப்
பயமுறுத்தி,
“எங்களுடைய
அரசன்
பராக்கிரமசாலி,
சூரன்,
யுத்தத்தில்
பின்வாங்காதவன்.
பலத்திலும்
வீர்யத்திலும்
நிகரற்றவன்.
இப்படிப்
பட்டவனுடைய
பாரியையாக
உனக்கேன்
இஷ்டமில்லை?
அவனுடைய
பலமென்ன!
பராக்கிரமமென்ன!
ஸகல
ஸ்த்ரீகளுக்கும்
சிரோமணிபோல்
பிரகாசிக்கும்
மந்தோதரியையும்
லக்ஷ்யம்
செய்யாமல்
உன்னை
வந்தடைகிறான்.
அவள்
ராவணனுடைய
பட்டமஹிஷி;
அவன்
அனுபவிக்கும்
பாக்கியங்களுக்கெல்லாம்
காரணம்;
ஸகலவிதத்திலும்
அவனுடைய
மனத்தை
அபகரிக்கக்
கூடியவள்;
உன்னிடத்தில்
வைத்த
ஆசையால்
அவளையும்
திரும்பிப்
பார்க்கிறதில்லை.
அந்தப்புரத்திலுள்ள
கணக்கில்லாத
ஸ்த்ரீ
ரத்தினங்களையும்
நினைக்கிறதில்லை.
ஆகையால்
உனக்குச்
சக்களத்திகளே
இல்லை”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
விகடை
என்ற
மற்றொருத்தி,
“தேவ
கந்தர்வ
நாக
தானவர்
முதலியவர்களை
யுத்தத்தில்
பல
தடவை
தோற்கடித்த
அந்த
மஹாவீரன்,
பலமற்ற
மனுஷ்யஸ்த்ரீயான
உன்னிடத்தில்
வந்து
பிரார்த்திக்கிறான்.
ஐசுவரியத்திலாவது
புத்தியிலாவது
அவனுக்கு
ஈடுண்டோ?
அந்த
ராக்ஷஸேசுவரனை
விரும்பாத
உன்
புத்தியைச்
சுடவேண்டும்.
இந்தப்
பாக்கியம்
யாருக்குக்
கிடைக்கும்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
துர்முகி
என்ற
மற்றொருத்தி,
“அடி!
முட்டாளே!
ஸூரியசந்திரர்களும்
வாயுவும்
அக்னியும்
அவனைக்
கண்டு
நடுங்குகின்றனர்.
ஸூரியன்
அவனுக்கு
ஸுகமான
உஷ்ணத்துடன்
மாத்திரம்
ஸஞ்சரிக்கிறான்.
அவனுக்கு
இஷ்டமில்லாதபோது
வாயுவும்
வீசாது.
எந்த
ருதுவாயிருந்தாலும்
அவன்
நினைத்தவுடன்
மரங்கள்
வேண்டிய
புஷ்பங்களை
வர்ஷிக்க
வேண்டும்.
பர்வதங்களும்
மேகங்களும்
அவன்
நினைத்தபொழுது
ஜலத்தைச்
சொரியவேண்டும்.
இப்படி
பிரபஞ்சத்திற்கெல்லாம்
அதிபதியாக
இருக்கும்
ராக்ஷஸ
சக்கரவர்த்திக்கு
பிரியபாரியையாக
இருப்பது
உனக்கு
அல்பவிஷயமாய்த்
தோன்றுகிறதோ?
மஹா
ரூபவதியே!
உனக்குப்
பரமஹிதத்தை
எங்களுக்குத்
தெரிந்தவரையில்
எடுத்துச்
சொன்னோம்.
அதை
ஸரியாய்
கிரஹித்து
அப்படியே
நட;
தவறினால்
உன்னை
இப்பொழுதே
கொல்வோம்”
என்றாள்.
20
▾
Meaning
Keep
ஸாது⁴தே
தத்வதோ
தே³வி
கதி²தம்
ஸாது⁴
பா⁴மிநி
|
க்³ருஹாண
ஸுஸ்மிதே
வாக்ய
மந்யதா²
ந
ப⁴விஷ்யஸி
||
Previous
←
ராவணன் ஸீதையைப் பயமுறுத்தினது
Next
ராக்ஷஸிகள் ஸீதையை உபத்திரவித்தது
→