Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராக்ஷஸிகள் ஸீதையை உபத்திரவித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராக்ஷஸிகள்
ஸீதையை
உபத்திரவித்தது
1
▾
Meaning
Keep
தத:
ஸீதாமுபாக³ம்ய
ராக்ஷஸ்யோ
விக்ருதாநநா:
|
பருஷம்
பருஷா
நார்ய
ஊசுஸ்தாம்
வாக்ய
மப்ரியம்
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
கடின
ஹிருதயமுள்ள
அந்தக்
கோர
ராக்ஷஸிகள்
ஸீதையைச்
சூழ்ந்து,
பிரியமில்லாத
கடுமையான
வார்த்தைகளைச்
சொல்ல
ஆரம்பித்தார்கள்.
“விலையுயர்ந்த
சயனங்களால்
அலங்கரிக்கப்பட்ட
ராவணனுடைய
அந்தப்புரத்தில்
மஹிஷியாயிருக்க
நீ
ஸம்மதிக்காமலிருப்பதேன்?
ஸமஸ்த
பிராணிகளின்
மனத்தை
அபகரிக்கக்
கூடிய
அழகு
பொருந்திய
உனக்குத்
தகுந்த
அந்தஸ்து
அதுவே.
நீ
மனுஷ்ய
ஸ்த்ரீயானதால்
மனுஷ்யனுக்குப்
பாரியையாக
இருப்பதையே
பெரிதாக
எண்ணுகிறாய்.
Prose passage
▾
Meaning
Keep
ராமனிடத்திலிருந்து
உன்
மனத்தைத்
திருப்பு.
இனி
ஒருபொழுதும்
நீ
அவனுக்குப்
பாரியையாகப்
போகிறதில்லை.
ராக்ஷஸேசுவரனும்
மூன்று
லோகங்களிலுமுள்ள
ஐசுவரியங்களை
அனுபவிப்பவனுமான
ராவணனைப்
பர்த்தாவாக
அடைந்து
இஷ்டமான
போகங்களை
அனுபவி.
ராஜ்யத்திலிருந்து
துரத்தப்பட்டு,
ஸகல
ஐசுவரியங்களையும்
இழந்து,
பயத்தால்
சித்தம்
கலங்கின
ஒரு
அல்பமனுஷ்யனை
நீ
கொண்டாடுகிறாய்;
நீயும்
மனுஷ்ய
ஸ்த்ரீயல்லவா?”
என்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்கேட்டு
ஸீதை
கண்ணீர்
சொரிய,
“நீங்களெல்லோரும்
சேர்ந்து
சொல்லும்
வார்த்தைகள்
எனக்குக்
கோரமாய்த்
தோன்றுகின்றன.
மஹாபாபமென்றும்
ஸகல
ஜந்துக்களும்
நிந்திக்கத்
தகுந்ததென்றும்
உங்களுக்கு
ஏன்
தெரியவில்லை?
மனுஷ்ய
ஸ்த்ரீ
ராக்ஷஸனுக்குப்
பாரியையாவது
யுக்தமா?
உங்களுடைய
இஷ்டப்படி
என்னைத்
தின்றுவிடுங்கள்;
நீங்கள்
சொன்னபடி
செய்யமாட்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
ராமன்
தரித்திரராயிருந்தாலும்
ராஜ்யமற்றவராயிருந்தாலும்
என்
பர்த்தா;
ஆகையால்
என்னால்
பூஜிக்கத்
தகுந்தவர்;
சிரேஷ்டர்.
ஸுவர்ச்சலாதேவி
ஸூரியனைப்
பின்தொடர்வது
போல்
நானும்
அவரிடம்
பிரீதிவைத்து
அவரைப்
பின்தொடர்வேன்.
மஹா
பாக்கியசாலியான
சசீதேவி
இந்திரனையும்,
அருந்ததி
வஸிஷ்டரையும்,
ரோஹிணி
சந்திரனையும்,
லோபாமுத்திரை
அகஸ்தியரையும்,
ஸுகன்யை
ச்யவனரையும்,
ஸாவித்ரி
ஸத்யவானையும்,
தமயந்தி
ஸௌதாஸனையும்,
ஸ்ரீமதி
கபிலரையும்,
கேசினி
ஸகரனையும்,
தமயந்தி
நளனையும்,
இந்துமதி
அஜனையும்
மஹாப்ரேமையுடன்
சேர்ந்திருப்பதைப்போல்,
நானும்
ரகுகுல
சிரேஷ்டனான
ராமனைப்
பதியாக
அடைந்து
ஸந்தோஷிக்கிறேன்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
இப்படிச்
சொல்ல,
ராக்ஷஸிகள்
கோபத்தால்
அறிவிழந்து,
ராவணனுடைய
கட்டளையை
ஞாபகம்
செய்துகொண்டு
குரூரமான
வார்த்தைகளால்
பயமுறுத்தினார்கள்.
ஹநுமான்
சிம்சுபா
விருக்ஷத்தில்
மறைந்துகொண்டு,
இவற்றையெல்லாம்
ஜாக்கிரதையாகக்
கவனித்துக்
கொண்டிருந்தார்.
ராக்ஷஸிகள்
பயத்தால்
நடுங்கிக்கொண்டிருக்கும்
ஸீதையைச்
சுற்றிக்கொண்டு
நெருப்புக்கொழுந்துபோல்
தொங்கிக்கொண்டிருக்கும்
உதடுகளைக்
கோபத்தால்
நக்கிக்கொண்டு,
“ராக்ஷஸாதிபதியான
ராவணனைப்
பர்த்தாவாக
அடைய
இவள்
தகாதவள்”
என்று
கோடலிகளை
ஓங்கிக்கொண்டு
ஓடி
வந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கண்டு
ஸீதை
அவர்களுடைய
ஹிம்ஸையைப்
பொறுக்காமல்
கண்ணீர்
பெருக,
ஹநுமான்
மறைந்திருக்கும்
சிம்சுபா
விருக்ஷத்தை
நோக்கி
வந்து,
அதனடியில்
உட்கார்ந்தாள்.
ராக்ஷஸிகளும்
அவளைச்
சூழ்ந்து,
அவளுடைய
அழுக்கடைந்த
வஸ்திரத்தையும்
துக்கத்தால்
வாடின
முகத்தையும்
பார்த்துக்
கொஞ்சம்கூட
இரங்காமல்
அவளைப்
பயமுறுத்தினார்கள்.
அவர்களில்
வினதை
என்பவள்
மலையைப்
போன்ற
வயிற்றையும்
பயங்கரமான
கண்களையுமுடையவள்.
Prose passage
▾
Meaning
Keep
கோபத்தால்
தேகம்
பதற,
“அடீ!
ஸீதே!
உன்
பர்த்தாவிடத்தில்
நீ
இதுவரையிலும்
வைத்த
பிரீதியும்
விசுவாஸமும்
போதும்.
எந்தக்
காரியத்திலும்
அளவுக்கு
மிஞ்சி
நடப்பது
பிசகல்லவா?
மனுஷ்யர்களுக்குத்
தகுந்தபடி
இதுவரையில்
உன்
பதிவிரதா
தர்மத்தைக்
காப்பாற்றி
வந்தது
எனக்கு
ஸந்தோஷம்.
நான்
சொல்லுகிறபடி
செய்;
உனக்கு
ஸகல
மங்களங்களும்
உண்டாகும்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணனே
ஸகல
ராக்ஷஸர்களுக்கும்
அதிபதி;
மஹாபராக்கிரமசாலி;
அழகில்
மன்மதனை
ஜயித்தவன்;
ஸகல
காரியங்களிலும்
ஸமர்த்தன்;
யாசகர்களுக்குக்
கொடுப்பதில்
ஒப்பற்றவன்;
எல்லோரும்
பார்த்து
பிரியப்படக்கூடியவன்;
தேவதைகளுக்கு
இந்திரனைப்போல்
எங்களுக்கு
நாதன்.
அப்படிப்பட்டவனை
நீ
அடைவது
உனக்கு
மிகவும்
தகுந்தது.
அல்பமனுஷ்யனான
ராமனை
முற்றிலும்
மற;
ராவணனைக்
கைப்பற்று.
திவ்யமான
ஆபரணங்களாலும்,
மாலைகளாலும்,
பூச்சுக்களாலும்
அலங்கரிக்கப்பட்டு
ஸகலலோகங்களுக்கும்
பிரபுவாக
இருக்கலாம்.
இந்திரனுடைய
பத்தினியான
ஸ்வாஹாவும்
உனக்கு
நிகரல்ல.
அல்பாயுளுள்ள
ராமனென்ற
பதரால்
உனக்கென்ன
பிரயோஜனம்?
நான்
சொன்னபடி
செய்யாவிட்டால்
இந்த
நிமிஷமே
உன்னைத்
தின்று
விடுவோம்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
விகடையென்ற
மற்றொருத்தி,
தொங்குகின்ற
ஸ்தனங்களுடன்,
கோபத்தால்
விரல்களை
மடக்கி
உயரத்
தூக்கிக்கொண்டு,
ஸீதையை
நோக்கி
ஓடிவந்து,
“அடீ!
துர்ப்புத்தி
பிடித்தவளே!
நீ
மிருதுவான
சரீரமுடையவளென்றும்
பிரியம்
வைத்துக்கொண்டு
வரப்பட்டவளென்றும்
உன்னிடத்தில்
இரக்கம்
பிறந்து,
நீ
இதுவரையிலும்
சொன்ன
கடும்
வார்த்தைகளையெல்லாம்
ராவணன்
பொறுத்திருந்தான்.
நாங்கள்
கால
தேசங்களுக்குத்
தகுந்தபடி
உனக்கு
ஹிதத்தை
உபதேசிக்கிறோம்.
அப்படிச்
செய்யாமற்போனால்
நீ
பிழைக்க
மாட்டாய்.
Prose passage
▾
Meaning
Keep
பிறரால்
தாண்டமுடியாத
ஸமுத்திரத்தைத்
தாண்டி,
கோர
ராக்ஷஸர்களால்
இரவும்
பகலும்
காக்கப்பட்ட
ராவணனுடைய
அந்தப்புரத்தில்,
இந்த
அசோகவனத்தில்,
எங்களுக்கு
நடுவிலிருக்கும்
உன்னைத்
தப்புவிக்க
வஜ்ராயுதத்தைத்
தரித்த
இந்திரனுக்கும்
சக்தியுண்டோ?
நான்
உனக்கு
ஹிதத்தையே
சொல்லுகிறேன்;
இப்படியே
செய்;
வீணாகத்
துக்கப்படாதே;
கண்ணீர்
விடாதே;
கொஞ்சம்கூட
பிரயோஜனமில்லை.
ராவணனுடன்
ஸ்நேகம்செய்து
ஆனந்தமாய்க்
காலத்தைக்
கழிக்காமல்
எப்பொழுதும்
துக்கப்படுவது
உனக்குத்
தகுமோ?
Prose passage
▾
Meaning
Keep
ஸ்த்ரீகளுடைய
யௌவனம்
நிலையற்றதென்று
உனக்குத்
தெரியுமல்லவா?
உனது
யௌவனப்
பருவம்
கழிவதற்குமுன்,
ஸகல
ஸுகங்களையும்
அனுபவிக்க
வேண்டாமா?
ராவணனுடன்
ஸந்தோஷமாய்
மதுபானம்செய்து,
வனங்களிலும்
தோட்டங்களிலும்
இஷ்டப்படி
ஸஞ்சரி.
ஏழாயிரம்
ராக்ஷஸ
ஸ்த்ரீகள்
உனக்குப்
பணிவிடை
செய்வார்கள்;
ஆகையால்
ராக்ஷஸேசுவரனான
ராவணனைப்
பர்த்தாவாக
அடை;
நான்
சொன்னபடி
செய்யாவிட்டால்
உன்
ஹிருதயத்தைப்
பிடுங்கித்
தின்றுவிடுவோம்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
சண்டோதரி
என்ற
மற்றொருத்தி
பெரிய
சூலத்தைச்
சுழற்றிக்கொண்டு,
கோபத்தால்
கண்கள்
ஜ்வலிக்க
ஸீதையைப்
பார்த்து,
“மானைப்போல்
சஞ்சலமான
இவளுடைய
நேத்திரங்களையும்
பயத்தால்
நடுங்கும்
ஸ்தனங்களையும்
பார்க்கும்பொழுது
எனக்கு
ஆசை
தாங்கமுடியவில்லை.
இவளுடைய
வயிற்றின்
வலது
பக்கத்திலுள்ள
யகிருத்
என்ற
மாம்ஸபிண்டத்தையும்,
மார்பின்
இடது
பக்கத்திலுள்ள
ப்லீஹமென்ற
பசுமையான
மாம்ஸத்தையும்,
அதற்கு
மேலிருக்கும்
உத்பீடமென்ற
மாம்ஸத்தையும்,
நாடிகளோடு
கூடின
இவளுடைய
ஹிருதயத்தையும்,
குடலையும்,
தலையிலுள்ள
மாம்ஸங்களையும்
கடித்துத்
தின்னவேண்டுமென்று
எனக்கு
ஆசையுண்டாகிறது”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
பிரகஸை
என்ற
மற்றொருத்தி,
“இவள்
மிகவும்
பொல்லாதவள்;
இவளுடைய
கழுத்தைத்
திருகுவோம்.
ஏன்
சும்மா
உட்கார்ந்திருக்கிறீர்கள்?
பிறகு,
‘நீ
கொண்டு
வந்த
மனுஷ்யஸ்த்ரீ
துக்கத்தால்
இறந்தாள்’
என்று
ராவணனிடத்தில்
சொல்லுவோம்.
அவளைத்
தின்றுவிடுங்கள்’
என்று
நிச்சயமாய்
நமக்கு
உத்திரவு
செய்வார்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அஜாமுகியென்ற
மற்றொருத்தி
“இந்த
விஷயத்தில்
நாம்
சண்டை
போடக்கூடாது.
இவளைக்
கொன்று
ஸமமாய்ப்
பங்கிட்டுக்
கொள்வோம்.
குடிப்பதற்குப்
பலவித
பானங்களையும்,
துவையல்
பச்சடி
முதலிய
பதார்த்தங்களையும்
கொண்டு
வாருங்கள்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
சூர்ப்பணகையென்ற
மற்றொருத்தி,
“அஜாமுகி
சொல்லும்
வார்த்தை
எனக்கும்
இஷ்டமே.
ஸகல
துக்கங்களையும்
மறக்கச்
செய்யும்
மதுவைக்குடித்து
நமது
நகர
தேவதையான
நிகும்பிலையைக்
குறித்து
நர்த்தனம்
செய்வோம்”
என்றாள்.
(நிகும்பிலை
லங்காபுரியின்
மேற்கேயுள்ள
பத்ரகாளியின்
பெயர்).
இப்படி
ராக்ஷஸிகளால்
கோரமாய்
அதட்டப்பட்ட
ஸீதை
தைரியத்தை
விட்டு
அழுதாள்.
46
▾
Meaning
Keep
ஏவம்
ஸம்ப⁴ர்த்ஸ்யமாநா
ஸா
ஸீதா
ஸுரஸுதோபமா
|
ராக்ஷஸீபி⁴:
ஸுகோ⁴ராபி⁴:
தை⁴ர்ய
முத்ஸ்ருஜ்ய
ரோதி³தி
||
Previous
←
ராக்ஷஸிகள் ஸீதைக்குப் போதித்தது
Next
ஸீதை துக்கித்தது
→