Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதை துக்கித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதை
துக்கித்தது
1
▾
Meaning
Keep
ததா²
தாஸாம்
வத³ந்தீநாம்
பருஷம்
தா³ருணம்
ப³ஹு
|
ராக்ஷஸீநா
மஸௌம்யாநாம்
ருரோத³
ஜநகாத்மஜா
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அந்தக்
குரூர
ராக்ஷஸிகள்
கடும்
வார்த்தைகளைப்
பயங்கரமாகச்
சொல்வதைக்கேட்டு,
ஸீதை
வாய்
விட்டழுதாள்.
பிறகு
பயத்தாலும்,
கண்ணீராலும்
குரல்
நடுங்க
அவர்களைப்பார்த்து,
“மனுஷ்யஸ்த்ரீ
எப்பொழுதாவது
ராக்ஷஸனுக்குப்
பாரியையாக
முடியுமா?
உங்களிஷ்டப்படி
என்னைக்கொன்று
தின்னுங்கள்.
உங்களுக்கு
உட்படமாட்டேன்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
தேவகன்யைகளுக்கு
ஸமானமான
ஜானகி,
ராவணன்
பயமுறுத்தினதையும்
ராக்ஷஸிகள்
மிரட்டினதையும்
ராமலக்ஷ்மணர்கள்
தன்னைத்
திரும்பிப்
பாராமலிருப்பதையும்
நினைத்து
துக்கம்தாங்காமல்
தேகம்குன்றி
மறைகிறவள்போலவும்,
காட்டில்
தன்
கூட்டத்திலிருந்து
விலகிச்
செந்நாய்களால்
துரத்தப்பட்ட
பெண்மான்
போலவும்
நடுங்கினாள்.
ஹநுமான்
மறைந்திருக்கும்
விசாலமான
சிம்சுபாவிருக்ஷத்தின்
கிளையைப்
பிடித்துக்கொண்டு,
ராமனைப்
பிரிந்த
துக்கத்தால்
வாடி,
‘இனி
அவரைப்
பார்ப்பதேது’
என்று
ஆசையற்று,
ஸ்வபாவத்தாலும்
பழக்கத்தாலும்
அவரையே
தியானித்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
கண்ணீர்த்
தாரைகளால்
தேகமெங்கும்
நனைய
அவரையே
நினைத்துக்
கொண்டு
துக்க
ஸமுத்திரத்தில்
கரைகாணாமல்
தத்தளித்தாள்.
பெருங்காற்றிலடிபட்டு
விழுந்த
இளம்
வாழையைப்
போல்
நடுங்கி,
ராக்ஷஸிகளுடைய
கோரவார்த்தைகளால்
மிரண்டு
முகம்
வெளுத்தாள்.
அப்பொழுது,
நீண்டு
அகன்ற
அவளுடைய
பின்னலும்
நடுங்கிக்கொண்டு
நான்கு
புறங்களிலும்
பாயும்
கிருஷ்ண
ஸர்ப்பம்
போல்
தோன்றிற்று.
ராமனைப்பிரிந்து
புண்பட்ட
மனத்தில்
ராக்ஷஸிகளின்
குரூர
வார்த்தைகள்
தைக்க,
பிரக்ஞையற்று,
பெரு
மூச்சுவிட்டுக்கொண்டு,
கண்ணீர்
பெருக
பிரலாபித்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
“என்ன
கஷ்டம்!
ஹா,
ராம!”
என்பாள்.
மறுபடியும்
துக்கம்
தாங்காமல்,
“ஹா!
லக்ஷ்மண!
என்
மாமியான
கௌஸல்யே!
ஹா!
ஸுமித்ரே!”
என்று
கதறுவாள்.
“ஐயோ!
குரூரராக்ஷஸிகளால்
இப்படி
உபத்திரவிக்கப்பட்டு
ராகவனையும்
பிரிந்து,
சொல்லமுடியாத
துக்கங்களை
அனுபவித்துக்கொண்டு
ஒரு
க்ஷணம்கூடப்
பிழைத்திருக்கிறேனல்லவா?
ஸ்த்ரீயாவது
புருஷனாவது
கர்மத்தாலேற்பட்ட
காலத்திற்கு
முந்தியாவது
பிந்தியாவது
மரணமடையமுடியாது
என்று
பண்டிதர்கள்
சொல்லும்
லோகவசனம்
நிஜமென்றே
தோன்றுகிறது.
ஸமுத்திரத்தின்
நடுவில்
எதிர்க்காற்றால்
அடிக்கப்பட்ட
கப்பல்
பாரம்
தாங்காமல்
முழுகுவதுபோல்,
காப்பாற்றுகிறவர்களிருந்தும்
நான்
அனாதையைப்போல்,
பூர்வஜன்மத்தில்
விசேஷ
புண்ணியம்
செய்யாததால்
உயிரை
விடப்போகிறேன்.
ஆற்றில்
பிரவாகம்
கரைகளை
இடித்துத்
தள்ளுவதுபோல்,
நிகரில்லாத
ஸௌந்தரியத்தையுடைய
என்
பிராணநாதனைக்
காணக்கிடைக்காமல்
இந்த
ராக்ஷஸிகளுடைய
வசத்தில்
அகப்பட்டு,
துக்கத்தால்
மடியப்போகிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
ஸமயத்தில்
ரகு
வீரனுடைய
மலர்ந்த
செந்தாமரையைப்
போன்ற
விசால
நேத்திரங்களையும்
கொழுத்த
ஸிம்ஹத்தின்
நடையைப்போன்ற
நடையையும்
கண்டு
களித்து,
எப்பொழுதும்
எல்லோருக்கும்
பிரியத்தையே
பேசிக்கொண்டு
பிறர்
செய்த
அல்ப
உபகாரத்தையும்
பெரிதாக
எண்ணும்
அந்த
மஹானுபாவனுடைய
அருகில்
இருக்கக்
கிடைத்த
ஜனங்களைப்போன்ற
புண்யசாலிகளும்
உண்டோ?
அவருடைய
தர்மபத்தினியான
எனக்கு
மாத்திரம்
அது
கிடைக்காமற்போயிற்றே!
கொடும்
விஷத்தைத்
தின்றவன்
க்ஷணமாவது
பிழைத்திருப்பானோ?
ஸகல
பதார்த்தங்களின்
நிஜஸ்வரூபத்தை
அறிந்த
அந்தப்
புருஷோத்தமனைப்
பிரிந்து
நான்
ஒரு
நிமிஷமாவது
பிழைத்திருக்கலாமோ?
Prose passage
▾
Meaning
Keep
இவ்விதமான
கஷ்டங்களையும்
கோரமான
துக்கங்களையும்
அனுபவிப்பதற்குப்
பூர்வஜன்மங்களில்
என்ன
மஹாபாபம்
செய்தேனோ?
இந்தக்
குரூர
ராக்ஷஸிகள்
என்னைச்
சூழ்ந்திருக்க
இனி
ராமனை
நான்
பார்க்கப்போகிறேனா?
ஆகையால்
இந்த
மஹாதுக்கத்தை
அனுபவிப்பதைவிட
உயிரைவிடுவது
சிரேஷ்டமென்று
எண்ணுகிறேன்.
ஐயோ!
இந்த
மனுஷ்ய
ஜன்மத்தைச்
சுட
வேண்டும்.
எந்த
விதத்தாலாவது
பிராணனை
விடுவோம்
என்றால்
பரலோகத்தில்
கோரமான
நரகத்தை
அனுபவிக்கவேண்டுமென்று
சாஸ்திரங்கள்
சொல்லுகின்றனவே.
ஆகையால்
எப்படிப்பட்ட
கஷ்டத்தையும்
ஸஹித்துக்கொண்டிருப்பதே
நல்லது.
ஐயோ!
பாரியையின்
தேகம்
பர்த்தாவிற்கு
சொந்தமல்லவா?
இஷ்டப்படி
உயிரைவிட
முடியவில்லையே”
என்று
பிரலாபித்தாள்.
25
▾
Meaning
Keep
தி⁴க³ஸ்து
க²லு
மாநுஷ்யம்
தி⁴க³ஸ்து
பரவஶ்யதாம்
|
ந
ஶக்யம்
யத்
பரித்யக்தும்
ஆத்மச்ச²ந்தே³ந
ஜீவிதம்
||
Previous
←
ராக்ஷஸிகள் ஸீதையை உபத்திரவித்தது
Next
ஸீதை துக்கித்தது (தொடர்ச்சி)
→