Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதை துக்கித்தது (தொடர்ச்சி)
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதை
துக்கித்தது
(தொடர்ச்சி)
1
▾
Meaning
Keep
ப்ரஸக்தாஶ்ரு
முகீ²த்யேவம்
ப்³ருவந்தீ:
ஜநகாத்மஜா
|
அதோ⁴
முக²
முகீ³
பா³லா
விலப்து
முபசக்ரமே
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ஜானகி
ஸகல
ஸுகங்களையும்
அனுபவிக்கத்
தகுந்த
யௌவனத்தில்
கண்ணீர்
பெருகப்
பூமியைப்
பார்த்துக்கொண்டு
புலம்பினாள்.
பிறகு
தன்
பூர்வாஸ்திதியையும்
தற்கால
நிலைமையையும்
நினைத்து
நினைத்துப்
பைத்தியம்
பிடித்தவள்
போலவும்,
மதுபானம்
செய்து
புத்தி
சிதறினவள்
போலவும்,
நெடுந்தூரம்
ஓடிக்களைத்த
பெண்குதிரை
பூமியில்
விழுந்து
புரண்டு
சிரமம்
தீர்த்துக்கொள்வது
போல்மறுபடியும்
வாய்
விட்டழுது
தன்
மனத்திலிருக்கும்
துக்கத்தை
ஆற்றிக்கொள்ளப்
பார்த்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
“ஐயோ!
இந்த
மஹாபாபி
மாயையால்
எந்தரூபத்தையும்
எடுக்கக்கூடியவன்.
ராம
லக்ஷ்மணர்களை
மயக்கி
என்னைப்
பலாத்காரம்
செய்து
பயங்கரமாய்
மிரட்டி
கோவென்று
கதறிக்
கொண்டிருக்கையில்
அதிகவேகமாக
எடுத்துவந்து
விட்டானே!
இந்த
ராக்ஷஸிகளுக்கு
நடுவில்
அகப்பட்டு
ராமனையே
நினைத்துக்
கொண்டு
சொல்ல
முடியாத
துக்கங்களை
அனுபவித்துப்
இனிப்
பிழைத்திருக்க
முடியாது.
அந்த
மஹாவீரனே
என்னைக்
கைவிட்ட
பிறகு
இந்த
ராக்ஷஸிகளின்
நடுவில்
இருந்துகொண்டு
எதற்காக
உயிரை
வைத்துக்
கொண்டிருக்கவேண்டும்?
Prose passage
▾
Meaning
Keep
தனங்களும்
ஆபரணங்களும்,
போகங்களும்
எனக்கு
வேண்டுமோ?
இவ்வளவு
துக்கத்தையும்
தாங்கும்
என்
ஹிருதயம்
கருங்கல்லாற்
செய்ததோ?
நாசமற்றதென்று
விதிக்கப்பட்டதோ?
இன்னும்
பிளக்கக்காணோமே!
என்
பர்த்தாவைப்
பிரிந்து
ஒரு
க்ஷணமாவது
பிழைத்திருக்கலாமோ!
என்னைப்
போன்ற
மஹா
பாபியுண்டோ?
பெரியோர்களும்
பதி
விரதைகளும்
என்னை
நிந்திப்பார்களென்பதில்
ஸந்தேகம்
உண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
கடல்சூழ்ந்த
இந்தப்
பூமிக்கு
அதிபதி;
அமிருதவர்ஷத்தைப்
போன்ற
வார்த்தைகளையுடையவர்;
என்
உயிருக்கு
உயிரானவர்.
அப்படிப்பட்ட
பர்த்தாவை
விட்டு
உயிரோடிருப்பதிலும்
ஸுகங்களை
அனுபவிப்பதிலும்
எனக்கு
என்ன
பிரயோஜனம்?
ஆகையால்,
இந்த
ராக்ஷஸிகள்
என்
தேகத்தை
வெட்டித்
தின்னட்டும்.
ரகுவீரனைப்
பிரிந்திருப்பதைவிட
என்
சரீரத்தை
விடுவது
ஸுலபம்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
ராவணனை
என்
இடது
காலாலும்
தொடுவேனோ?
அப்படியிருக்க
அவனிடத்தில்
பிரியம்
வைக்கவா?
குரூரஸ்வபாவமுள்ள
அந்தப்பாபி
நான்
படும்
கஷ்டங்களை
அறியாமல்
தனக்கு
உட்படும்படி
பிரார்த்திக்கிறானே!
எனக்கு
அவனிடத்திலுள்ள
வெறுப்பு
எவ்வளவென்று
அவனுக்குத்
தெரியுமா?
நான்
பிறந்த
வம்சம்
இன்னதென்றும்
என்
ஸ்வபாவம்
இன்னதென்றும்
அந்த
அல்பனுக்குத்
தெரியுமா?
ஆகையால்
நீங்கள்
எவ்வளவு
நேரம்
உபதேசித்தும்
மிரட்டியும்
பிரயோஜனமில்லை.
என்னைக்
கண்ட
துண்டமாய்
வெட்டுங்கள்;
கோடாலியால்
பிளவுங்கள்;
கிழித்தெறியுங்கள்;
நெருப்பில்
போட்டுக்
கொளுத்துங்கள்;
ராவணனைத்
திரும்பிப்
பார்க்க
மாட்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
என்
ரகுநாதன்
அபராதிகளிடத்திலும்
குணங்களை
கிரஹிக்கிறவர்.
அல்ப
உபகாரத்தையும்
பெரிதாக
எண்ணுகிறவர்.
பிறர்
படும்
அல்ப
கஷ்டத்தையும்
ஸஹிக்கமாட்டார்.
பிறர்
க்ஷேமத்தையடைவதே
தனக்கு
முக்கியப்
பிரயோஜனமாக
எண்ணுகிறவர்.
இந்தக்
கல்யாண
குணங்கள்
அவருடைய
சத்துருக்களாலும்
ஒப்புக்
கொள்ளப்
பட்டவைகளே.
Prose passage
▾
Meaning
Keep
நான்
இவ்விதக்
கஷ்டங்களை
அனுபவிக்கும்
பொழுதும்
என்னைத்
திரும்பிப்
பாராமலிருப்பதேன்?
நான்
பூர்வஜன்மங்களில்
அவ்வளவு
புண்ணியம்
செய்யவில்லை.
என்னை
ரக்ஷிக்கச்
சக்தியில்லை
என்று
நினைக்கலாமோ?
ஜனஸ்தானத்தில்
பதினாயிரம்
ராக்ஷஸவீரர்களையும்
கரதூஷணர்களையும்
ஒரு
முகூர்த்தத்தில்
கொல்லவில்லையே?
Prose passage
▾
Meaning
Keep
என்னை
இங்கே
சிறையில்
வைத்திருக்கும்
இந்த
ராவணனுடைய
வீரியம்
எவ்வளவு?
இவனைக்கொல்வது
ரகுவீரனுக்குப்
பெரிதா?
தண்டகாரண்யத்தில்
மஹாபயங்கரமான
விராதன்
மடிந்ததைக்
காணவில்லையோ?
ஸமுத்திரத்தின்
நடுவிலிருக்கும்
இந்த
லங்கைக்கு
வருவது
அவருக்கு
அஸாத்தியமென்று
நினைக்கலாமோ?
ராமபாணங்கள்
போகமுடியாத
ஸ்தலம்
இந்தப்
பிரபஞ்சத்திலும்
உண்டோ?
அப்படியிருக்கச்
சத்துருக்கள்
அண்ட
முடியாத
பராக்கிரமமுள்ள
ரகுநாதன்
தனக்குப்
பிரியமான
பாரியையை
அல்பராக்ஷஸன்
எடுத்துக்கொண்டு
போகையில்
அந்த
அவமானத்தை
எப்படிப்
பொறுத்திருக்கிறார்?
Prose passage
▾
Meaning
Keep
ஒருவேளை
நான்
இங்கிருப்பதாக
அவருக்குத்
தெரியாதோ?
அபராதிகளிடத்தில்
ராமனுக்குள்ள
அளவற்ற
தயையால்
அவர்
ராவணனை
மன்னித்தாலும்,
கூடவிருக்கும்
லக்ஷ்மணன்
விட்டுவிடுவாரோ?
என்னை
ராகவன்
தன்னிடத்தில்
ஒப்புவித்திருக்க,
ராவணன்
எடுத்துப்
போவதைக்கண்டு,
தான்
வயது
சென்றவராக
இருந்தாலும்
ஜடாயு
அவனுடன்
எதிர்த்துக்
கோரயுத்தம்
செய்து
முடிவில்
உயிரை
விட்டார்.
ஐயோ!
என்
விருத்தாந்தத்தை
ராமனுக்கு
தெரிவிக்கக்கூடிய
அந்த
ஒரு
பிராணியும்போயிற்றல்லவா?
ஆகையால்
ராமனுக்கு
ஸமாசாரம்
தெரியாதென்றே
எண்ணுகிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
நான்
இங்கிருப்பதாக
அவருக்குத்
தெரிந்திருந்தால்,
கோபபரவசராய்ப்
பாணங்களால்
பிரபஞ்சத்தில்
ராக்ஷஸப்
பூண்டில்லாமலேயேசெய்வார்.
ஸமுத்திரத்தை
வற்றச்செய்துஇந்த
லங்காபுரியைத்
தூளாக்கி
நீசனான
ராவணனுடைய
பெயரே
இல்லாமல்
செய்வார்.
நான்
என்
பார்த்தாவைப்
பிரிந்து
கதறுவது
போல்,
இங்குள்ள
ராக்ஷஸிகள்
புருஷர்களைப்
பறிகொடுத்து
வீடுவீடாய்
கதறுவார்கள்.
இதில்
ஸந்தேகமென்ன?
Prose passage
▾
Meaning
Keep
அளவற்ற
ஸாமர்த்திய
முள்ளவர்களாகையால்
தெய்வானுக்ரஹத்தால்
ராமலக்ஷ்மணர்கள்
எப்படியாவது
இந்த
லங்கையைக்
கண்டுபிடித்து
ராக்ஷஸர்களை
நாசம்
செய்வார்கள்.
அவர்களுடைய
கண்ணில்
பட்ட
சத்துரு
ஒரு
க்ஷணமாவது
பிழைப்பதுண்டோ?
இந்த
லங்கையில்
விழும்
பிணங்களைக்
கழுகுகள்
கூட்டம்
கூட்டமாய்ப்
பிடுங்கித்
தின்னும்;
பிணப்
புகையால்
வழிகள்
மறைந்திருக்கும்.
அப்பொழுது
ஒரே
ச்மசானமாகத்
தோன்றும்.
Prose passage
▾
Meaning
Keep
நீங்கள்
செய்யும்
கெட்ட
காரியங்கள்
உங்களையே
கெடுக்கும்
என்று
தெரியவில்லையா?
அதிசீக்கிரத்தில்
என்
எண்ணங்கள்
நிறைவேறும்;
இந்தப்
பட்டணத்தில்
ஸகலவிதமான
அசுபங்களும்
நேரும்;
அவைகளால்
இது
காந்தியற்றுப்
பாழாகும்.
சத்துருக்களால்
அண்ட
முடியாத
இந்த
லங்காபுரி
ராவணனென்ற
நீசனான
பாபி
மடிந்தவுடன்
பர்த்தாவை
இழந்த
சிறுபெண்
கதியில்லாமல்
துக்கத்தால்
இறப்பதுபோல்
அதிசீக்கிரத்தில்
இருந்த
இடம்
தெரியாமற்போகும்.
Prose passage
▾
Meaning
Keep
அரசனை
இழந்து,
மங்களகரமான
காரியங்களற்று,
புருஷர்கள்
இறந்து,
ராக்ஷஸிகள்
நிறைந்த
இந்த
லங்கை,
புருஷனை
இழந்த
விதவையைப்போல்
களையற்றிருக்கும்.
ஒவ்வொரு
வீட்டிலும்
ராக்ஷஸப்
பெண்கள்
துக்கத்தால்
வாய்விட்டு
அழுவதைக்
கேட்கப்போகிறேன்.
ராமபாணங்கள்
இங்கே
வந்து
விழுந்து
ராக்ஷஸ
சிரேஷ்டர்களைக்
கொல்லும்;
லங்கையைக்
கொளுத்தும்.
அப்பொழுது
காந்தியற்று
ஒரே
இருட்டாய்ப்
பார்க்கப்
பயங்கரமாக
இருக்கும்.
நான்
இங்கே
ராவணனால்
வைக்கப்பட்டிருக்கிறேன்
என்று
ரகுவீரனுக்குத்
தெரிந்த
அடுத்த
க்ஷணத்தில்
இவையெல்லாம்
நடக்குமென்பதில்
ஸந்தேக
முண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
குரூரனும்
நீசனுமான
இந்த
ராவணன்
எனக்கு
இட்ட
கெடு
ஸமீபித்துவிட்டது;
இன்னும்
இரண்டு
மாதங்கள்
பாக்கி
இருக்கின்றன.
‘நீ
பயப்படுவதற்காக
அப்படிச்
சொல்லியிருக்கலாமே
தவிர
நிஜமாய்
உன்னைக்
கொல்வார்களா?’
என்றால்,
எப்பொழுதும்
பாபத்தையே
செய்துகொண்டிருக்கிற
இந்த
ராக்ஷஸர்கள்
செய்யத்
துணியாத
காரியம்
உண்டோ?
ஆகையால்,
இவர்களுடைய
அதர்மமான
நடத்தையை
யோசித்துப்
பார்த்தால்
எனக்குப்
பெரிய
ஆபத்து
நேருமென்பதில்
கொஞ்சம்கூட
ஸந்தேகமில்லை.
மாம்ஸத்தையே
ஆகாரமாக
உடைய
ராக்ஷஸர்களுக்குத்
தர்மமென்றும்
அதர்மமென்றும்
உண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
ராவணன்
இட்ட
கெடுக்கழிந்தவுடன்
காலைப்
போஜனத்திற்காக
என்னை
நிச்சயமாய்ப்பக்குவம்
செய்யக்
கட்டளையிடுவான்.
சிவந்த
கடைக்கண்களையும்
அழகான
பார்வையையும்
உடைய
ராமனை
விட்டுச்
சொல்லமுடியாத
துக்கங்களையனுபவித்துக்
கொண்டு
என்ன
செய்வேன்?
இதிலிருந்து
எப்படித்
தப்புவேன்?
பர்த்தாவுடன்
கூடியிருக்க
பிராப்தமில்லாத
எனக்கு
இவ்விடத்தில்
யாராவது
கொஞ்சம்
விஷம்
கொடுத்தால்
அதி
சீக்கிரத்தில்
யமலோகத்திற்குப்
போவேன்.
Prose passage
▾
Meaning
Keep
நான்
பிழைத்திருப்பதாக
ராமலக்ஷ்மணர்களுக்குத்
தெரியாதென்று
எண்ணுகிறேன்.
தெரிந்திருந்தால்
இந்தப்
பூமியெங்கும்
என்னைத்
தேடமாட்டார்களா?
ஆகையால்
நான்
இறந்துவிட்டேன்
என்று
எண்ணிக்
கவனிக்காமல்
இருக்கிறார்களோ?
Prose passage
▾
Meaning
Keep
அல்லது
என்னைப்பிரிந்த
துக்கத்தால்
ராமன்
உயிரை
விட்டாரோ?
தேவர்களும்
கந்தர்வர்களும்
ஸித்தர்களும்
மஹரிஷிகளும்
செந்தாமரைக்கண்ணனான
என்
நாதனை
ஸ்வர்க்கலோகத்தில்
கண்டு
களிப்பார்களல்லவா?
அவர்களே
பாக்கியசாலிகள்,
அல்லது
ஸகல
பதார்த்தங்களின்
ஸ்வரூபத்தை
யறிந்து,
பிரஹ்மஸ்வரூபியாய்,
உத்தம
தர்மத்தையே
நாடும்
அந்த
ராஜரிஷிக்குப்
பாரியையால்
பிரயோஜனமில்லை.
ஆகையால்
பரமவைராக்கியத்தால்
என்னைக்
கவனிக்காமலிருக்கிறாரோ?
அப்படியும்
இருக்காது.
ஜீவன்
முக்தர்கள்
இவ்விதமான
கர்மபந்தங்களை
ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
ஒப்புக்
கொண்டால்
ஸரியாய்
நடத்துவார்களேயன்றி
நடுவில்
விட
மாட்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
நான்
வெகுதூரத்தில்
இருப்பதாலும்,
என்னைப்
பிரிந்து
வெகுகாலமானதாலும்
மறந்தாரோ?
என்னை
அடிக்கடி
பார்த்துக்கொண்டிருந்தால்,
பிரீதி
விருத்தியாகும்;
பார்க்காவிட்டால்
அழியுமல்லவா?
சீ!
இப்படி
எண்ணுவது
முற்றிலும்
பிசகு.
Prose passage
▾
Meaning
Keep
நன்றி
மறந்தவர்களே
இப்படிச்
செய்வார்கள்.
தன்னை
அடுத்தவர்களைத்
தன்னுயிரைக்கொடுத்தும்
காப்பாற்றுவதையே
விரதமாக
உடைய
ரகுவீரனிடத்தில்
இந்ததோஷத்தைச்
சொல்லலாமோ?
ஆகையால்,
அவரைக்
குற்றம்
சாட்டுவதில்
பிரயோஜனமென்ன?
Prose passage
▾
Meaning
Keep
இதுவரையில்
என்னிடத்தில்
பரமப்
பிரீதிவைத்து
ஸகல
விதத்திலும்
காப்பாற்றி
வந்த
ராமன்,
இப்பொழுது
என்னை
மறந்திருப்பதை
யோசித்தால்,
என்னிடத்தில்
ஏதோ
சில
தோஷங்கள்
இருக்கின்றனவென்று
எண்ணுகிறேன்.
அப்படியானால்
நான்
அவருக்கு
யாதொரு
அபசாரமும்
செய்ததாக
ஞாபகமில்லையே!
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்,
பூர்வஜன்மங்களில்
செய்த
பாபத்தால்
என்
பாக்கியம்
குறைந்து
இந்தக்
கஷ்டங்களை
அனுபவிக்கிறேன்
என்பது
நிச்சயம்.
சிரேஷ்டமான
ஆசாரத்தையுடையவரும்
சூரரும்
சத்ருகுலகாலனும்
பெருந்தன்மையான
ஸ்வபாவத்தையுடையவருமான
அந்தப்
புருஷோத்தமனைப்
பிரிந்தும்
நான்
பிழைத்திருப்பதிலும்
இறப்பதே
மேன்மை.
ஆனால்
என்னுடைய
பாக்கியக்குறைவென்று
நிச்சயமாய்ச்
சொல்லவும்
முடியவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ஒருவேளை
அந்தப்
புருஷசிரேஷ்டர்கள்,
‘ஆயுதங்களை
எடுத்ததாலல்லவா
நமக்கு
இவ்வளவு
கஷ்டங்களும்
நேர்ந்தன’
என்று
நிச்சயித்து,
ஆயுதங்களை
விட்டெறிந்து,
வனவாஸிகளாய்ப்
பழம்
கிழங்கு
முதலியவைகளைப்
புஜித்துக்கொண்டு
தவம்
செய்கிறார்களோ?
அப்படியுமிருக்காது.
க்ஷத்திரியனாகப்
பிறந்தவன்
ராக்ஷஸர்களுடன்
விரோதித்துக்கொண்டு
அவர்களை
வேரறுக்காமல்
ஒதுங்கிப்
போவானோ?
Prose passage
▾
Meaning
Keep
அல்லது,
ராவணன்
முன்பு
பொன்மானைக்கொண்டு
அவர்களை
மோசம்
செய்ததுபோல்
மாயையால்
அவர்களை
மயக்கிக்
கொன்றானோ?
இப்படிப்பட்ட
கஷ்டம்
நேர்ந்த
பிறகும்
எவ்விதத்திலாவது
நான்
உயிரைவிடவேண்டியது
அவசியம்.
இந்தத்
துக்கம்கூட
என்னைக்
கொல்லச்
சக்தியற்றதோ?
எனக்கு
மரணமென்பதே
கிடையாதோ?
Prose passage
▾
Meaning
Keep
இந்தத்
துக்கத்தைப்
போக்கக்கூடியது
விவேகமேயல்லாது
வேறுண்டோ?
அக்ஞானத்தால்
மோஹமடையும்
ஜீவகோடிகளுடைய
ஜன்மம்
எதற்குப்
பிரயோஜனம்?
பூர்வஜன்மங்களில்
பலாபேக்ஷையில்லாமல்
தர்மங்களை
அனுஷ்டித்து
சித்தசுத்தியடைந்து,
அழிவற்ற
சமாதியிலிருந்து,
ப்ரஹ்மஸ்வரூபத்தில்
தங்களுடைய
ஆத்மாவைக்
கலந்து,
ஸம்ஸாரஸமுத்திரத்தைத்
தாண்டிய
மஹான்களுக்குப்
பாபபுண்யத்தாலுண்டாகும்
விருப்பமும்
வெறுப்பும்
உண்டோ?
அவர்களைப்
பாபங்கள்
அணுகமுடியுமோ?
தங்களுக்குப்
பிரியமான
வஸ்துவைப்
பிரிந்ததால்
அவர்களுக்குத்
துக்கமில்லை.
பிரியமில்லாத
விஷயங்கள்
நேர்ந்ததால்
விசேஷ
பயமுமில்லை.
இப்படி
விருப்பும்
வெறுப்புமில்லாத
அந்த
மஹாத்மாக்களை
நமஸ்காரம்
செய்கிறேன்.
அவர்களே
உத்தமபுருஷர்கள்.
நானும்
அவர்களைப்போல
ஆகக்கிடைக்குமோ?
Prose passage
▾
Meaning
Keep
என்
அன்பிற்குரிய
ரகுவீரன்
ஸுகதுக்கங்களின்
ஸ்வரூபத்தை
நன்றாயறிந்தவர்.
என்
பிராணநாதனே
என்னைக்
கைவிட்டார்;
மஹாபாபியான
ராவணனுடைய
கையில்
அகப்பட்டேன்;
இவனுக்கு
இணங்கப்போகிறதில்லை;
இவன்
கையால்
மரணமடைவதைவிட,
நானே
உயிரைவிடுவது
நல்லது”
என்று
பிரலாபித்தாள்.
51
▾
Meaning
Keep
ஸாஹம்
த்யக்தா
ப்ரியேணேஹ
ராமேண
விதி³தாத்மநா
|
ப்ராணாம்ஸ்
த்யக்ஷ்யாமி
பாபஸ்ய
ராவணஸ்ய
க³தாவஶம்
||
Previous
←
ஸீதை துக்கித்தது
Next
திரிஜடை கண்ட ஸ்வப்னம்
→