Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · திரிஜடை கண்ட ஸ்வப்னம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
திரிஜடை
கண்ட
ஸ்வப்னம்
1
▾
Meaning
Keep
இத்யுக்தா:
ஸீதயா
கோ⁴ரா
ராக்ஷஸ்ய:
க்ரோத⁴மூர்ச்சி²தா:
|
காஶ்சித்
ஜக்³முஸ்³ததா³க்²யாதும்
ராவணஸ்ய
தரஸ்விந:
||
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
இப்படிச்
சொல்லக்
கேட்டு
சில
ராக்ஷஸிகள்
கோபம்
மேலிட்டு
அந்த
ஸமாசாரத்தை
ராவணனிடத்தில்
சொல்ல
ஓடினார்கள்.
பிறகு
மற்றவர்கள்
கோரமான
வேஷங்களுடன்
ஸீதையைச்
சூழ்ந்து,
அவளுக்குக்
கெடுதி
நேருமென்ற
ஒரே
விஷயத்தைப்
பல
விதமாய்
கொடும்
வார்த்தைகளால்
சொல்லிப்
பயமுறுத்தினார்கள்.
“ஸீதே!
நீ
தற்கொலைசெய்துகொண்டு
எங்களிடத்திலிருந்து
தப்பப்
பார்க்கிறாயோ?
உன்னை
இப்பொழுதே
கொன்று
உன்
மாம்ஸத்தை
நாங்கள்
பங்கிட்டுத்
தின்னப்
போகிறோம்”
என்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அந்தத்
துஷ்ட
ராக்ஷஸிகள்
ஸீதையை
மிரட்டுவதை
திரிஜடை
என்பவள்
பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள்
விபீஷணனுடைய
பெண்;
வயதிலும்
ஞானத்திலும்
அனுபவத்திலும்
முதிர்ந்தவள்.
Prose passage
▾
Meaning
Keep
அதுவரையில்
தூங்கிக்கொண்டிருந்து,
திடீரென்று
விழித்துக்கொண்டு,
அந்த
ராக்ஷஸிகளைப்
பார்த்து,
“துஷ்டைகளே!
ஜனகருக்கு
புத்திரியும்
தசரதசக்ரவர்த்திக்கு
நாட்டுப்
பெண்ணுமான
இவளைத்
தொடவேண்டாம்.
உங்களுக்குப்
பசித்தால்
உங்களுடைய
தேகங்களையே
பிடுங்கித்
தின்னுங்கள்;
இப்பொழுதுதான்
ஒரு
பயங்கரமான
ஸ்வப்னத்தைக்
கண்டேன்.
அதை
நினைக்க
எனக்கு
மயிர்க்கூச்சலெடுக்கிறது.
ஸீதையின்
பர்த்தாவிற்கு
ஸகல
மங்களங்களும்
ராக்ஷஸர்களுக்கு
நாசமும்
ஸமீபித்திருக்கின்றன”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
முன்பு
கோப
பரவசர்களான
ராக்ஷஸிகளுக்குப்
பயம்
பிடித்து
எல்லோரும்
திரிஜடையைச்
சூழ்ந்துகொண்டு,
“விடியற்காலத்தில்
கண்ட
ஸ்வப்னம்
வீண்போகாது.
ஆகையால்
அதை
எங்களுக்கு
விஸ்தாரமாய்ச்
சொல்”
என்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
ராக்ஷஸிகள்
சொல்லிய
வார்த்தையைக்
கேட்டு
திரிஜடை,
தான்
ஸ்வப்பனத்தில்
கண்டதைச்
சொல்லுகிறாள்.
“கேளுங்கள்,
ராகவன்
லக்ஷ்மணனுடன்
வெண்மையான
வஸ்திரங்களையும்
மாலைகளையும்
தரித்துக்கொண்டு
கணக்கில்லாத
ஹம்ஸங்களால்
தாங்கப்பட்ட
ஒரு
தந்தப்பல்லக்கில்
ஆகாச
மார்க்கமாய்
இந்த
லங்கைக்கு
வந்தார்;
பிறகு
ஸீதை
வெண்மையான
வஸ்திரத்தால்
அலங்கரிக்கப்பட்டு
க்ஷீரஸமுத்திர
மத்தியிலுள்ள
ஒரு
வெண்மையான
பர்வதத்தில்
உட்கார்ந்திருந்தாள்.
பிறகு
ஸூரியகாந்தி
ஸூர்யனுடன்
சேர்வதைப்போல்
இந்தப்
பாக்கியசாலி
ரகுநாதனுடன்
சேர்ந்திருக்கக்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ராமலக்ஷ்மணர்கள்
அந்தப்
பல்லக்கைவிட்டு
நான்கு
தந்தங்களையுடையதும்
மஹாபர்வதத்தைப்போன்றதுமான
ஒரு
பெரிய
யானையின்
மேலேறி,
ஸீதையை
நோக்கி
வந்தார்கள்.
(பசு,
காளை,
யானை,
அரண்மனை,
பர்வதம்,
விருக்ஷங்கள்
முதலியவைகளில்
ஏறுவதாயும்,
அழுவதாயும்,
தான்
மரணமடைவதாயும்,
சேரக்கூடாதவர்களுடன்
சேருவதாயும்
ஸ்வப்னத்தில்
காண்பது
மங்களகரம்
—
ஸ்வப்னாத்தியாயம்).
அந்த
ராஜபுத்திரர்கள்
தேஜஸால்
ஜ்வலித்துக்கொண்டு
வெண்மையான
வஸ்திராபரணங்களுடன்
ஸீதை
இருக்கும்
பர்வத
சிகரத்திற்கு
வந்தார்கள்.
ராமன்
ஸீதையை
எடுத்து
யானையின்
கழுத்தில்
உட்காரவைப்பதைக்
கண்டேன்.
பிறகு
சந்தோஷத்தால்
மலர்ந்த
கண்களுடன்
ஸீதை
ராமனுடைய
மடியிலிருந்து
கிளம்பி
சந்திரஸூரியர்களைக்
கையால்
தொட்டாள்.
Prose passage
▾
Meaning
Keep
(ஸூரியமண்டலத்தையாவது
சந்திரமண்டலத்தையாவது
ஸ்வப்னத்தில்
கைகளால்
தொடுகிறவன்
ராஜ்யத்தை
ஆள்வான்
—
ஸ்வப்னாத்தியாயம்.)
பிறகு
அந்த
யானை
ராமலக்ஷ்மணர்களுடனும்
ஸீதையுடனும்
லங்கைக்குப்போய்
நின்றது.
பிறகு
ராமன்
ஸீதையுடன்
எட்டு
வெள்ளைக்காளைகள்
பூட்டின
திவ்விய
ரதத்தில்
இங்கே
வந்தார்.
பிறகு
ஸீதையோடும்
லக்ஷ்மணனோடும்
ஸூரியனைப்போல்
ஜ்வலிக்கும்
புஷ்பக
விமானத்தில்
ஏறி
வடக்குநோக்கிச்
சென்றார்.
ப்ராக்கிரமத்தில்
விஷ்ணுவிற்கு
ஸமமான
ராமனையும்
லக்ஷ்மணனையும்,
ஸீதையையும்
ஸ்வப்னத்தில்
காணும்
பாக்கியம்
பெற்றேன்.
முட்டாள்களே!
மஹாபாபிகளுக்கு
மோக்ஷம்
கிடைக்குமோ?
அப்படித்
தேவர்கள்
அஸுரர்கள்
ராக்ஷஸர்கள்
மற்றும்
இந்தப்
பிரபஞ்சத்திலுள்ள
ஸகலப்பிராணிகளும்
சேர்ந்தாலும்
மஹாதேஜஸ்வியான
ரகுவீரனை
ஜெயிக்க
முடியுமா?
Prose passage
▾
Meaning
Keep
ராவணன்
தைலத்தை
தேகமெங்கும்
பூசிக்கொண்டு,
சிவப்பு
வஸ்திரத்தை
உடுத்து,
மதுபானத்தால்
கொழுப்படைந்து
அலரிப்
பூமாலையைத்
தரித்துக்கொண்டு
பூமியில்
சஞ்சரிப்பதைக்
கண்டேன்.
பிறகு
மொட்டைத்
தலையுடன்
கறுப்பு
வஸ்திரத்தை
உடுத்துக்கொண்டு
புஷ்பகவிமானத்திலிருந்து
கீழே
விழுந்தான்.
ஒரு
ஸ்த்ரீ
அவனை
இழுத்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
சிவந்த
மாலையாலும்
சந்தனத்தாலும்
அலங்கரிக்கப்பட்டுத்
தைலத்தைக்
குடித்துக்கொண்டு
சித்தப்பிரமையுடையவனாய்
இந்திரியஸ்வாதீனமற்றுச்
சிரித்துக்கொண்டும்
கூத்தாடிக்கொண்டும்
கழுதைகள்
பூட்டிய
தேரிலேறி
அதிகவேகமாகத்
தெற்கே
போவதைக்
கண்டேன்.
பிறகு
கழுதையின்மேலிருந்து
ராவணன்
பயத்தால்
நடுங்கிப்
பூமியில்
தலைகீழாக
விழுவதைக்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
சீக்கிரமாக
எழுந்து
பயத்தால்
கலங்கி
பைத்தியம்
பிடித்ததுபோலும்
குடிவெறிக்கொண்டதுபோலும்
வஸ்திரமே
இல்லாமல்
பலவிதமாய்க்
கெட்ட
வார்த்தைகளைப்
பிதற்றிக்கொண்டு,
அழுக்குப்படிந்த
சேற்றில்
திடீரென்றுமுழுகி
மறைந்தான்.
ஸஹிக்க
முடியாததும்
கெட்ட
நாற்றமுடையதும்
இருள்
மூடியதுமான
நரகத்தைப்போல்
பயங்கரமாயும்
இருந்தது.
பிறகு,
கறுப்பு
நிறமுள்ள
ஒரு
ஸ்த்ரீ
தேகமெங்கும்
அழுக்கடைந்து
சிவப்பு
வஸ்திரம்
தரித்து
ராவணனுடைய
கழுத்தில்
கையைப்போட்டுத்
தெற்கே
இழுத்துக்கொண்டு
போனாள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படியே
கும்பகர்ணனும்
இருக்கக்
கண்டேன்.
ராவணனுடைய
புத்திரர்கள்
எல்லோரும்
தைலத்தைப்
பூசிக்கொண்டு
நின்றார்கள்.
ராவணன்
பன்றியின்மேலும்,
இந்திரஜித்
முதலைமேலும்,
கும்பகர்ணன்
ஒட்டகத்தின்மேலும்,
அதிவேகமாய்த்
தெற்கே
சென்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
விபீஷணன்
வெண்மையான
மாலைகளையும்
வஸ்திரங்களையும்
சந்தனப்பூச்சுகளையும்
தரித்துக்கொண்டு
சங்கம்,
துந்துபி
முதலிய
வாத்திய
கோஷங்களாலும்
பாட்டு
நாட்டியம்
முதலியவைகளாலும்
உபசரிக்கப்பட்டு
பர்வதத்தைப்
போன்ற
சரீரத்துடன்
மேகங்களைப்போல்
கர்ஜிக்கும்
நான்கு
தந்தங்களுள்ள
ஒரு
யானையின்
மேலேறி
நான்கு
மந்திரிகளுடன்
ஆகாசமார்க்கத்தில்
நிற்கக்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ராக்ஷஸர்கள்
சிவப்பு
வஸ்திரங்களையும்
மாலைகளையும்
தரித்து
மதுபானம்
செய்து
கோரவாத்தியங்களைச்
சப்தித்துக்கொண்டு
கூட்டம்
கூட்டமாய்
நிற்பதைக்
கண்டேன்.
பிறகு
இந்த
அழகிய
லங்காபுரி;
ரதகஜதுரகபதாதிகளுடன்
உப்பரிகைகளும்
கோபுரங்களும்
வாசற்படிகளும்
இடிந்து
ஸமுத்திரத்தில்
விழக்கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணன்
அதிக
ஜாக்கிரதையுடன்
காப்பாற்றிவரும்
இந்தப்
பட்டணத்தை
ராமதூதனான
ஒரு
வானரவீரன்
கொளுத்தக்
கண்டேன்.
சாம்பலாய்க்கிடந்த
இந்த
நகரத்தில்
ராக்ஷஸிகள்
தைலத்தைக்
குடித்துப்
பாடிக்கொண்டும்
ஆடிக்கொண்டும்
பெருங்கூச்சலுடன்
பிரவேசிக்கக்
கண்டேன்.
கும்பகர்ணன்
முதலான
ராக்ஷஸ
சிரேஷ்டர்கள்
சிவப்பு
வஸ்திரங்களை
உடுத்திக்கொண்டு
சாணத்தால்
நிறைந்த
மடுவில்
முழுகினார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ரகுவீரன்
அதிசீக்கிரத்தில்
இங்கே
வந்து
ஸீதையை
அழைத்துக்கொண்டு
போவார்.
அவருடைய
கோபாக்னியால்
நீங்களும்
ராவணனும்
இதர
ராக்ஷஸர்களும்
சாம்பலாவீர்கள்.
ஓடிப்போங்கள்.
எங்கேயாவது
ஒளிந்துகொள்ளுங்கள்.
இவள்
ராமனுக்கு
மிகவும்
பிரியமானவள்;
இவளிடத்தில்
அவருக்கு
விசேஷ
மதிப்பும்
கௌரவமும்
உண்டு,
தான்
எவ்வளவு
தடுத்தும்
கேட்காமல்
தன்னுடன்
வனத்திற்கு
வந்தவள்;
இப்படிப்பட்டவளை
நீங்கள்
பயமுறுத்தி
ஹிம்ஸிப்பதைப்பார்த்து
ஸஹிப்பாரோ?
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
இனி
கொடியவார்த்தைகளைச்
சொல்லவேண்டாம்.
அவளை
ஸமாதானம்
செய்து
கோபத்தைத்
தணியுங்கள்.
‘ராமனுடைய
கோபத்திலிருந்து
எங்களைக்
காப்பாற்றவேண்டும்’
என்று
இவளை
பிரார்த்திப்பதே
நமக்குப்
பரமஹிதமென்று
எனக்குத்
தோன்றுகிறது;
மிகுந்த
துக்கத்தை
அனுபவித்துக்கொண்டிருக்கும்
இந்த
ஸீதை
ஸகலகஷ்டங்களும்
தீர்ந்து
உத்தமமான
பர்த்தாவுடன்
கூடி
சந்தோஷிக்கப்போகிறாளென்று
நான்
கண்ட
ஸ்வப்னத்தால்
விளங்கவில்லையா?
Prose passage
▾
Meaning
Keep
நீங்கள்
இவளை
விசேஷமாகப்
பயமுறுத்தி
ஹிம்ஸித்திருக்கிறீர்கள்;
ஆனாலும்
‘எங்களைக்
காப்பாற்ற
வேண்டும்’
என்று
பிரார்த்தியுங்கள்;
‘நாம்
இவ்வளவு
உபத்திரவித்திருக்க
நம்மிடத்தில்
இவளுக்குத்
தயை
உண்டாகுமா’
என்று
சந்தேகப்படவேண்டாம்.
ராக்ஷஸர்களுக்கு
ராமனால்
உண்டாகப்போகிற
நாசத்தை
நினைக்கும்பொழுது
எந்த
உபாயத்தாலாவது
நாம்
தப்பவேண்டியது
அவசியமென்று
தெரிகிறது.
இவளுடைய
ஸ்வபாவம்
உங்களுக்குந்
தெரியாது.
இவளை
ஒருவன்
சரணமடைந்தாலே
போதும்;
அவன்
செய்த
ஸகல
அபராதங்களையும்
மறந்து
அவனுக்குப்
பரம
உபகாரத்தைச்
செய்வாள்.
ஆகையால்
நம்மை
இந்தக்
கோரமான
ஆபத்திலிருந்து
தப்புவிக்க
இவளுக்கே
உரிமையுண்டு.
Prose passage
▾
Meaning
Keep
மேலும்,
இவளுடைய
அவயவங்களில்
விகாரமான
அடையாளங்கள்
கொஞ்சமாவது
காணப்படவில்லை.
காந்தி
மாத்திரம்
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.
ஆகையால்,
துக்கத்தை
அனுபவிக்கவே
தகாதவளும்,
தேவபோகங்களை
அனுபவிக்கத்
தகுந்தவளுமான
இந்த
ராஜகுமாரிக்கு
இந்தச்
சோகம்
நேர்ந்திருக்கிறது.
இவளுடைய
காரியம்
ஸித்தியாகுமென்றும்
ரகுநாதன்
ஜயமடைவாரென்றும்
ராவணன்
அழிவானென்றும்
எனக்கு
நன்றாகத்
தெரிகிறது.
இவளுக்கு
அதிசீக்கிரத்தில்
பிரியமான
ஸமாசாரம்
கிடைக்கப்போகிறதென்பதற்கு
அனேக
அடையாளங்கள்
தோன்றுகின்றன.
Prose passage
▾
Meaning
Keep
தாமரை
இதழ்
போன்ற
இவளுடைய
விசாலமான
இடது
கண்
மிகுந்த
காந்தி
பெற்று
விளங்குகிறது.
இடது
புஜமும்,
யானைத்
துதிக்கை
போன்ற
இடது
துடையும்
கொஞ்சம்
மயிர்க்கூச்சமடைந்து
துடிக்கின்றன.
இந்தச்
சகுனங்களால்
இவள்
அதிசீக்கிரத்தில்
ராகவனைச்
சேர்ந்து
ஸுகமடைவாள்
என்பது
நிச்சயம்.
Prose passage
▾
Meaning
Keep
இதோ
பாருங்கள்.
அந்த
மரக்கிளையில்
ஒரு
பக்ஷி
விஸ்தாரமான
இறக்கைகளை
விரித்துக்கொண்டு,
பிரதக்ஷிணமாய்
வந்து
மேலே
கிளம்பிக்
கீழே
இறங்கி,
மலர்ந்த
புஷ்பங்களாலும்
தளிர்களாலும்
விளங்கும்
கிளையின்மேல்
நன்றாக
உட்கார்ந்திருக்கிறது.
இது
ஒரு
சுபசகுனம்.
அது
அங்குள்ள
அதிமதுரமான
பழங்களைப்
புஜித்து
தென்றலை
அனுபவித்து
ஆனந்தத்தால்
மெய்
மறந்திருக்கிறது.
Prose passage
▾
Meaning
Keep
அது
அடிக்கடி
இனிமையாய்க்
கூவுவதைப்
பார்த்தால்,
‘ஸீதே!
நீ
ஏன்
வருத்தப்
படுகிறாய்?
உன்
பர்த்தா
அதிசீக்கிரத்தில்
இங்கே
வந்து
உன்
கஷ்டங்களைத்
தீர்த்து
அயோத்யைக்கு
அழைத்துக்கொண்டு
போவார்.
நீ
படும்
துக்கம்
அதிகமென்று
தோன்றினாலும்
அவருடைய
வருத்தத்திற்கு
ஈடாமோ?
ஆகையால்
உன்
நாயகனை
எதிர்
கொண்டழைக்க
நீ
தகுந்தபடி
ஸ்நானம்செய்து
அலங்கரித்துக்
கொள்ளாமல்
கண்ணும்
கண்ணீருமாக
இருப்பது
அழகல்ல,
எழுந்திரு.
உன்
பிரிய
நாயகன்
வரப்போகிறானென்ற
ஸந்தோஷ
ஸமாசாரத்தை
நினைக்க
எனக்கும்
ஆனந்தத்தால்
மயிர்க்
கூச்சமிடுகிறது’
என்று
ஸீதையின்
துக்கத்தைத்
தணிப்பது
போலிருக்கின்றது.
Prose passage
▾
Meaning
Keep
(அநாதி
காலமாய்ப்
பகவானுடைய
ஸம்பந்தம்
பெற்ற
ஜீவனைக்
கடைத்
தேற்றுவதற்கு
ஆசாரியன்
செய்யும்
பிரயத்தனங்கள்
இந்தக்
காண்டத்தில்
கதாருபமாய்
வர்ணிக்கப்
படுகின்றன.
லங்கையே
சரீரம்;
ஸீதையைக்
காக்கும்
ராக்ஷஸிகளே
இந்திரியங்கள்;
ராவணனும்
கும்பகர்ணனும்
நான்
என்னுடையது
என்ற
அஹங்கார
மமகாரங்கள்;
இந்திரஜித்
முதலியவர்கள்
காமக்குரோத
லோப
மோஹ
மத
மாத்ஸர்ய
தம்பம்
முதலியவை.
ஜீவனுக்கு
பகவத்
ஸ்வரூபத்தை
உபதேசிக்க
வந்த
ஆசாரியனே
ஹநுமான்.
Prose passage
▾
Meaning
Keep
ஆசாரிய
லக்ஷணங்களாவன:
உத்தம
கதிக்கு
ஸாதனங்களான
ஞான
கர்மங்களைப்
பூர்ணமாய்
அனுஷ்டித்தவர்;
யக்ஞத்தாலும்
தானத்தாலும்
அழிவற்ற
தவத்தாலும்
அடைய
விரும்பும்
பிரஹ்ம
ஞானிகள்,
சாஸ்திரங்களின்
அர்த்தங்களைத்
தான்
பரிசோதித்தறிவதாலும்
பிறர்
அவைகளை
அனுஷ்டிக்கும்படி
செய்வதாலும்
தானே
அனுஷ்டித்துக்
காட்டுவதாலும்,
ஆசாரிய
பதவியை
அடைந்தவர்;
வேத
சாகைகளை
இடைவிடாமல்
அத்யயனம்
செய்து,
அவைகளின்
அர்த்தங்களை
சிரவண
மனன
நிதித்யாஸனமென்ற
அனுஷ்டானத்திற்குக்
கொண்டு
வந்தவர்;
வேதங்களைக்
கரைகண்டவர்;
பகவானிடத்தில்
எல்லையற்ற
பக்தியுள்ளவர்;
பொறாமையில்லாதவர்;
மந்திரங்களின்
ரஹஸ்யத்தை
அறிந்து
அவைகளில்
பக்திவைத்து
எப்பொழுதும்
அவைகளையே
கதியென்று
ஆசிரயிப்பவர்;
சுத்தமான
ஆசாரமுள்ளவர்;
புராணங்களின்
தத்வார்த்தங்களை
அறிந்தவர்;
குருபக்தியுள்ளவர்;
ஆனந்தத்தால்
கண்ணீர்
பெருகத்
தேகமெங்கும்
மயிர்க்
கூச்சலுடன்
பரமாத்மாவின்
கல்யாண
குணங்களிலேயே
ஈடுபட்டிருப்பவர்;
புருஷோத்தமனுடைய
குணங்களையும்
மஹிமையையும்
அடிக்கடி
சிஷ்யனுக்கு
உபதேசிப்பவர்.
ஆசாரியன்
அலுத்துப்
போகாமல்
சிஷ்யன்
போன
வழியே
விட்டு
அவனைச்
சீர்திருத்தத்
திருமந்திரத்தை
உபதேசித்து
அவனைப்
பகவானிடத்தில்
சேர்ப்பிக்கிறார்.)
64
▾
Meaning
Keep
பக்ஷீ
ச
ஶாகா²நிலய:
ப்ரஹ்ருஷ்ட:
புந:
புநஶ்சோத்தம
ஸாந்த்வவாதீ³
|
ஸுஸ்வாக³தாம்
வாசமுதீ³ரயாந:
புந:
புநஶ்சோத³யதீவ
ஹ்ருஷ்ட:
||
Previous
←
ஸீதை துக்கித்தது (தொடர்ச்சி)
Next
ஸீதை உயிரை விட யத்தனித்தது
→