Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · சுப சகுனங்கள்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
சுப
சகுனங்கள்
1
▾
Meaning
Keep
ததா²க³தாம்
தாம்
வ்யதி²தாமநிந்தி³தாம்
வ்யபேதஹர்ஷாம்
பரிதீ³ந
மாநஸாம்
|
ஶுபா⁴ம்
நிமித்தாநி
ஶுபா⁴நி
பே⁴ஜிரே
நரம்
ஶ்ரியா
ஜுஷ்ட
மிவோபஜீவிந:
||
Prose passage
▾
Meaning
Keep
சொல்லமுடியாத
துக்கங்களை
அனுபவித்து
ஸகல
ஸந்தோஷமும்
அற்று,
மனம்
நொந்திருக்கும்
ஸீதைக்கு
அநேக
சுபசகுனங்கள்
உண்டாயின.
மங்களஸ்வரூபியும்
குற்றமற்ற
ஆசாரத்தையுடையவளுமான
ஸீதை,
“நான்
ஸுகத்தை
அனுபவித்த
காலமும்
உண்டோ?”
என்று
நினைத்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
(லோகத்தில்
ஒருவனுக்கு
லக்ஷ்மீ
கடாக்ஷம்
பிறந்து
ஸகல
ஐசுவரியங்களும்
அதிகாரமும்
கிடைத்தால்
ஏழைகள்
அவனுக்குத்
தங்களாலியன்ற
உபகாரங்களைச்
செய்து
பிரயோஜனத்தையடைய
விரும்புவதுபோல்
சுபசகுனங்களும்
ஸாக்ஷாத்
மஹாலக்ஷ்மியின்
விஷயத்தில்
தங்களால்
கூடிய
உபகாரத்தைச்
செய்து
சகுனங்களுக்கெல்லாம்
சிரேஷ்டமான
பதவியை
அடைந்தன.)
வளைந்த
இமை
மயிர்களால்
சூழப்பட்டு
ஓரத்தில்
சிவந்து
சுற்றிலும்
வெளுத்து,
நடுவில்
கறுத்த
விசாலமான
இடது
கண்
மீன்களால்
அடிக்கப்பட்ட
தாமரைப்
புஷ்பம்போல்
வேகமாய்த்
துடித்தது.
அழகாய்ப்
பொருந்தி,
பருத்து
உருண்டு
அகில்
சந்தனம்
முதலிய
உத்தம
கந்தங்களால்
அலங்கரிக்கப்பட்டு
பிரியநாயகனால்
தழுவப்பெற்ற
இடதுபுஜம்
அடிக்கடி
வெகுகாலம்
துடித்தது.
Prose passage
▾
Meaning
Keep
மதயானையின்
துதிக்கையைப்
போன்றதும்,
பருத்து
அழகாய்
ஒன்றுக்கொன்று
சேர்ந்ததுமான
அவளுடைய
இடது
துடையும்
அடிக்கடி
துடித்தது,
ரகுநாதன்
சீக்கிரத்தில்
வரப்போகிறாரென்று
தெரிவித்தது.
நிர்மலமான
நேத்திரங்களையும்
மாதுளம்பழத்தின்
விதைபோன்ற
நுனியையுடைய
பற்களையுமுள்ள
ஸீதை
உடுத்திருந்த
தங்கமயமான
வஸ்திரம்
கொஞ்சம்
புழுதி
படிந்து
சரீரத்திலிருந்து
சற்று
நழுவி
விழுந்தது.
இவைகளாலும்
இன்னும்
பெரியோர்களால்
ஒப்புக்
கொள்ளப்பட்ட
மற்ற
சுபசகுனங்களாலும்
தன்
பர்த்தா
வரப்
போகிறாரென்று
நிச்சயம்கொண்டு,
காற்றாலும்
வெயிலாலும்
வாட்டப்பட்டுப்
பூமியில்
மறைந்துபோன
விதை
மழை
பெய்தவுடன்
மறுபடியும்
முளைப்பதுபோல்,
ஸந்தோஷத்தால்
பூரித்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
கோவைக்
கனிபோன்ற
உதடுகளையும்,
சிரேஷ்டமான
கண்களையும்,
புருவங்களையும்,
நுனிமயிரையும்,
கோணலான
இமைகளையும்,
இடைவெளியில்லாமல்
வெண்மையான
பற்களையுடைய
ஸீதையின்
முகம்,
ராகுவால்
பிடிபட்டு
விடப்பட்ட
சந்திரனைப்போல்
மறுபடியும்
விளங்கிற்று.
சோகமும்
புத்தியின்
கல்மஷமும்
ஸந்தாபமும்
நீங்கி;
ஸந்தோஷத்தால்
முகம்
மலர்ந்து
சுக்லபக்ஷத்தில்
சந்திரனால்
வரவரக்
காந்தி
பெற்ற
இரவுபோல்
விளங்கினாள்.
8
▾
Meaning
Keep
ஸா
வீதஶோகா
வ்யபநீத
தந்த்³ரீ
ஶாந்தஜ்வரா
ஹர்ஷ
விவ்ருத்³த⁴ஸத்வா
|
அஶோப⁴தார்யா
வதநேந
ஶுக்லே
ஶீதாம்
ஶுநா
ராத்ரி
ரிவோதி³தேந
||
Previous
←
ஸீதை உயிரை விட யத்தனித்தது
Next
ஹநுமான் ஸீதையிடத்தில் பேச நிச்சயித்தது
→