Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஹநுமான் ஸீதையிடத்தில் பேச நிச்சயித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஹநுமான்
ஸீதையிடத்தில்
பேச
நிச்சயித்தது
1
▾
Meaning
Keep
ஹநுமாநபி
விக்ராந்த:
ஸர்வம்
ஶுஶ்ராவ
தத்வத:
|
ஸீதாயாஸ்
த்ரிஜடாயாஶ்ச
ராக்ஷஸீநாம்
ச
தர்ஜநம்
Prose passage
▾
Meaning
Keep
பராக்கிரமசாலியான
ஆஞ்ஜநேயர்
ஸீதைக்கும்
ராக்ஷஸிகளுக்கும்
நடந்த
ஸம்வாதத்தையும்
திரிஜடை
சொன்ன
ஸ்வப்பனத்தையும்
கேட்டுக்
கொண்டிருந்தார்.
பிறகு
இந்திரனுடைய
நந்தவனத்தில்
விளங்கும்
தேவஸ்த்ரீயைப்
போன்ற
ஸீதையைக்
கவனித்துப்
பார்த்து
பலவிதமாக
ஆலோசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“கணக்கில்லாத
வானரர்கள்
ஸகல
திக்குகளிலும்
தேடிக்கொண்டிருக்கும்
ஸீதையை
நான்
பார்க்கக்
கிடைத்தது.
இந்த
லங்காபுரியையும்,
ராவணனுடைய
மஹிமையையும்,
ராக்ஷஸர்களுடைய
விசேஷத்தையும்
நான்
மறைந்திருந்து,
சத்துருவின்
சக்தியை
ரஹஸ்யமாக
அறிகிற
தூதனைப்போல்
நடந்து
பல
விஷயங்களைத்
தெரிந்துகொண்டேன்.
அளவற்ற
பராக்கிரமசாலியும்,
ஸகல
பூதங்களிடத்திலும்
தயையுள்ளவருமான
ராமனுடைய
பாரியை
அவரைப்
பார்க்கவேண்டுமென்று
ஆசைகொண்டிருக்கிறாள்.
அவளுக்கு
ஆறுதல்
சொல்லவேண்டியது
அவசியம்.
Prose passage
▾
Meaning
Keep
துக்கமென்பதையே
அறியாமல்,
துக்கத்தால்
பீடிக்கப்பட்டு,
துக்கஸமுத்திரத்தின்
கரையைக்
காணாத
இந்தச்
சந்திரமுகியை
நான்
அவசியம்
ஸமாதானம்
செய்யவேண்டும்.
சோகத்தால்
கலங்கின
மனத்தையுடைய
இவளுக்குத்
தேறுதல்
சொல்லாமல்
நான்
திரும்பிப்
போனால்
மஹாதோஷத்திற்குள்ளாவேன்.
அபார
கீர்த்திசாலியான
இந்த
ராஜபுத்திரி,
ரக்ஷிப்பவர்கள்
இருப்பார்களென்பதை
அறியாமல்,
நான்
வானரர்களிருக்குமிடத்திற்குப்
போவதற்குள்
பிராணனை
விடுவாள்.
பூர்ணசந்திரனைப்போல்
எல்லோருக்கும்
ஆனந்தத்தைக்
கொடுக்கும்
முகத்தையுடைய
மஹாவீரனான
ரகுநாதன்
ஸீதையைப்
பார்க்க
ஆவல்
கொண்டிருக்கிறார்.
அவருக்கு
இவளுடைய
விருத்தாந்தத்தைச்
சொல்லி
ஸமாதானம்
சொல்ல
வேண்டியதும்
அவசியமே.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்,
ராக்ஷஸிகள்
விழித்துக்கொண்டிருக்கையில்
ஸீதையுடன்
பேசுவது
அஸாத்தியம்.
அதற்கு
வழியென்ன?
ஒன்றிற்கொன்று
விரோதமாயிருக்கிறதே.
இந்த
ராத்ரி
கொஞ்சம்
பாக்கி
இருக்கிறது.
அதற்குள்
அவளை
ஸமாதானம்
செய்யாவிட்டால்
எப்படியாவது
பிராணனை
விடுவாள்
என்பதில்
ஸந்தேகமில்லை.
இவளுடன்
பேசாமற்போனால்,
‘ஸீதை
எனக்கு
என்ன
ஸமாசாரம்
சொல்லியனுப்பினாள்?’
என்று
ராமன்
என்னைக்
கேட்டால்
என்ன
பதில்
சொல்வேன்?
Prose passage
▾
Meaning
Keep
இவளிடத்திலிருந்து
யாதொரு
ஸமாசாரத்தையும்
கொண்டு
போகாமல்
அதிசீக்கிரமாய்த்
திரும்பிப்
போனால்,
ராமனுக்குக்
கோபம்
மேலிட்டு
கோபப்
பார்வையால்
என்னைக்
கொளுத்திவிடுவார்.
இவளுடன்பேசி,
ராமனுடைய
ஸமாசாரத்தைத்
தெரிவித்து
இவளைத்
தேற்றாமல்
திரும்பிப்போய்,
ஸுக்ரீவனை
ராவணனோடு
யுத்தம்
செய்வதற்காக
இவ்விடத்திற்கு
அழைத்து
வந்தாலும்
என்ன
பிரயோஜனம்?
அவரும்
அவருடைய
ஸைன்யங்களும்
இங்கே
வருவதற்குள்
இவள்
பிராணனை
விடுவாள்.
ஆகையால்,
நான்
இந்த
மரத்திலிருந்துகொண்டே
ராக்ஷஸிகள்
அப்புறம்
போவதையாவது
தூங்குவதையாவது
பார்த்து
அந்த
ஸமயத்தில்
துக்கத்தால்
தவிக்கும்
ராமபாரியையைக்
கொஞ்சம்
கொஞ்சமாகத்
தேற்ற
வேண்டும்.
Prose passage
▾
Meaning
Keep
வானரனான
நான்
அதிஸூக்ஷ்மரூபத்துடன்
மனுஷ்யவார்த்தையால்
பேசலாமா?
அல்லது,
வியாகரணலக்ஷணங்கள்
பொருந்திய
ஸம்ஸ்கிருத
வார்த்தையால்
பேசலாமா?
பிராஹ்மணனைப்போல்
ஸம்ஸ்கிருத
பாஷையில்
பேசினால்,
‘குரங்கிற்குப்
பிறரோடு
ஸம்ஸ்கிருத
பாஷையில்
பேசப்
பழக்கமெங்கே?
ஆகையால்,
ராவணனே
நம்மை
மோசம்
செய்ய
இந்த
ரூபத்துடன்
வந்திருக்கிறான்’
என்று
ஸீதை
பயப்படுவாள்.
சிரேஷ்டமான
அர்த்தங்களடங்கிய
மனுஷ்ய
பாஷையிலேயே
இவளுடன்
பேசுவது
நலம்.
இவளை
வேறுவிதமாக
ஸமாதானம்
செய்ய
முடியாது.
கோஸல
தேசத்திலுள்ளவர்கள்
பேசும்
பாஷையிலேயே
இவளுடன்
பேச
வேண்டும்.
Prose passage
▾
Meaning
Keep
இருக்கட்டும்.
இந்த
வானரரூபத்துடன்
அவள்
எதிரில்
போய்
நின்று
பேசினால்,
என்
ரூபத்தையும்
அதற்கு
விரோதமான
மனுஷ்ய
பாஷையையும்
கவனித்து,
முன்பே
ராக்ஷஸர்களால்
பல
விதமாய்
பயமுறுத்தப்
பட்டவளாகையால்
அதிக
பயமடைந்து,
நினைத்த
ரூபத்தைத்
தரிக்கக்
கூடிய
ராவணனென்றே
என்னை
நினைத்துப்
பெருங்கூச்சலிடுவாள்.
அதைக்கேட்டு,
ராக்ஷஸர்கள்
பல
ஆயுதங்களை
எடுத்துக்
கொண்டு
ஓடி
வருவார்கள்.
அவர்கள்
விகாரமான
முகங்களுடன்
யமனைப்போல்
என்னைச்
சூழ்ந்து
அவர்களுடைய
பலத்திற்குத்
தகுந்தபடி
என்னைப்பிடிக்கவாவது
கொல்லவாவது
பிரயத்தனம்
செய்வார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பெரிய
விருக்ஷங்களுடைய
கிளைகளையும்
கீழ்க்கிளைகளையும்
அடிமரத்தையும்
பிடித்துக்
கொண்டு
தாவும்
என்னைப்
பார்த்து,
நான்
அவர்களுடன்
யுத்தம்
செய்வதற்காக
எடுக்கும்
பெரிய
ரூபத்தைக்
கண்டு
பயந்து,
‘காட்டில்
திரியும்
குரங்கிற்கு
இந்தப்
பெரிய
ரூபம்
ஏது?
இவன்
சத்துருவால்
அனுப்பப்பட்டு
நினைத்த
ரூபங்களை
எடுக்கக்கூடிய
தூதனாயிருக்க
வேண்டும்’
என்று
ஸந்தேகிப்பார்கள்.
பிறகு,
ராவணனுடைய
அரண்மனையில்
காவல்
காப்பவர்களை
அழைத்துக்கொண்டு
வருவார்கள்.
அவர்களும்,
சூலம்
சக்தி
முதலிய
ஆயுதங்களுடன்
அதிவேகமாய்ப்
பயங்கரமான
யுத்தம்
செய்வார்கள்.
அவர்களால்
சூழப்பட்டு
அவர்களைச்
சின்ன
பின்னமாயடித்துக்கொண்டிருக்கும்
பொழுது
மிகவும்
களைத்துப்போவேன்;
பிறகு
ஸமுத்திரத்தைத்
தாண்டிச்
செல்ல
முடியாது.
Prose passage
▾
Meaning
Keep
ஒருவேளை
பல
ராக்ஷஸர்கள்
சேர்ந்து
என்னைப்
பிடித்து
விட்டால்,
இவளுக்கு
ராமனுடைய
விருத்தாந்தமே
தெரியாமற்
போகும்.
பிராணிகளை
ஹிம்ஸிப்பதிலேயே
ஆசையுள்ள
இந்த
ராக்ஷஸர்கள்,
‘இவன்
யார்?
சொல்’
என்று
இவளை
உபத்திரவிப்பார்கள்.
அப்பொழுது,
ராமனும்
ஸுக்ரீவனும்
உத்தேசித்த
காரியம்
கெடும்.
இவளைக்
கடுங்காவல்
வைத்திருக்கும்
லங்கையோ
கடலால்
சூழப்பட்டது;
அதற்குப்
போகும்
வழி
மற்றவர்களுக்குத்
தெரியாது;
ராக்ஷஸர்கள்
இராப்பகலாகக்
காத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள்
என்னை
யுத்தத்தில்
பிடித்து
விட்டாலும்,
கொன்று
விட்டாலும்,
என்னைத்
தவிர
வேறு
வானரன்
நன்றாய்
விசாரித்துக்கொண்டு
நூறுயோஜனை
விஸ்தீரணமுள்ள
இந்தப்
பெருங்கடலைத்
தாண்டி
வந்து,
ராம்
காரியத்தை
நிறைவேற்றுவதில்
ஸஹாயம்
செய்வானென்று
நான்
எண்ணவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ராக்ஷஸர்கள்
கணக்கில்லாமல்
வந்தாலும்
அவர்களைக்
கொல்வேனென்பதில்
ஸந்தேகமில்லை.
ஆனால்,
ஸமுத்திரத்தை
மறுபடியும்
தாண்டமுடியாதென்று
எண்ணுகிறேன்.
யுத்தத்தில்
ஜயமும்
அபஜயமும்
ஒருவனுக்கு
நிச்சயமில்லை.
அப்படி,
ஸந்தேகமுள்ள
விஷயத்தில்
தலையிட
எனக்கு
இஷ்டமில்லை.
எந்த
புத்திமானாவது
ஸந்தேகப்
படக்கூடிய
காரியத்தைச்
செய்வானா?
ஸீதையுடன்
பேசாவிட்டால்
அவள்
பிராணனை
விடுவாள்;
இந்த
ரூபத்துடன்
அவளிடத்தில்
பேசினால்
மேற்
சொன்ன
அபாயங்கள்
நேரும்.
Prose passage
▾
Meaning
Keep
ஏறக்குறைய
முடிந்த
காரியங்களும்
விவேகமற்ற
தூதனிடத்தில்
ஒப்புவிக்கப்
பட்டால்
ஸூரியோதயத்தில்
இருள்
நாசமடைவது
போல்
காலதேசங்களுக்கு
ஒவ்வாமல்
கெடுகின்றன.
அரசர்கள்
மந்திரிகளுடன்
நன்றாய்
யோசித்துச்
செய்யும்
காரியங்களும்
விவேகமற்ற
தூதனிடத்தில்
அகப்பட்டால்
விளங்குகிறதில்லை.
அவர்கள்
தங்களை
மிகவும்
தெரிந்தவர்களாக
நினைத்துக்
கொண்டு
காரியங்களைக்
கெடுத்து
விடுகிறார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ராமனுடைய
காரியம்
நிறைவேற
வேண்டும்;
நான்
புத்திஹீனனென்று
பெயரெடுக்கக்கூடாது.
ஸமுத்திரத்தைத்
தாண்டினதும்
இங்கே
தேடினதும்
வீணாகக்
கூடாது.
நான்
சொல்ல
வந்த
ஸமாசாரத்தை
ஸீதை
பயப்படாமல்
கேட்டு
ஆறுதலடைய
வேண்டும்.
இவைகளை
ஒன்றிற்கொன்று
விரோதமில்லாமல்
எப்படி
முடிக்கலாம்?
Prose passage
▾
Meaning
Keep
சிரேஷ்டமான
ஆசாரத்தையுடையவரும்
இவளுக்கு
பிரிய
பந்துவுமான
ராமருடைய
விருத்தாந்தத்தை
இங்கே
மறைந்திருந்தே
சொல்லவேண்டும்.
அப்பொழுது
அவரிடத்திலேயே
நாடின
மனத்தையுடையவளாய்ப்
பயப்படமாட்டாள்.
இக்ஷ்வாகுகுல
திலகரும்
மஹாக்ஞானியுமான
ஸ்ரீராமமூர்த்தியின்
ஸமஸ்த
கல்யாண
குணங்களையும்
மதுரமான
வார்த்தைகளால்
வர்ணிக்கவேண்டும்.
மங்களகரமாயும்
தர்மத்தை
அனுசரித்ததாயும்
இருக்கும்
அந்த
விருத்தாந்தங்களைக்
கேட்ட
பிறகுதான்
என்னிடத்தில்
இவளுக்கு
நம்பிக்கையுண்டாகும்”
என்று
லோகநாதனான
ராமனுடைய
பாரியையைப்
பற்றி
இப்படிப்
பலவிதமாய்
யோசித்து,
பிறகு
நிகரற்ற
ஸாமர்த்தியமுள்ள
ஆஞ்ஜநேயர்
மரக்கிளைகளில்
மறைந்து
கொண்டே
பின்வரும்
உத்தமமான
வாக்கியங்களை
மதுரமாய்ச்
சொல்ல
ஆரம்பித்தார்.
44
▾
Meaning
Keep
இதி
ஸ
ப³ஹுவித⁴ம்
மஹாநுபா⁴வோ
ஜக³திபதே:
ப்ரமதா³மவேக்ஷமாண:
|
மது⁴ர
மவிதத²ம்
ஜகா³த³
வாக்யம்
த்³ரும
விடபாந்தரமாஸ்தி²தோ
ஹநூமாந்
||
Previous
←
சுப சகுனங்கள்
Next
மாருதி ராம சரித்திரத்தை வர்ணித்தது
→