Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி ராம சரித்திரத்தை வர்ணித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
ராம
சரித்திரத்தை
வர்ணித்தது
1
▾
Meaning
Keep
ஏவம்
ப³ஹுவிதா⁴ம்
சிந்தாம்
சிந்தயித்வா
மஹாகபி:
|
ஸம்ஶ்ரவே
மது⁴ரம்
வாக்யம்
வைதே³ஹ்யா
வ்யாஜஹார
ஹ
||
Prose passage
▾
Meaning
Keep
ஆஞ்ஜநேயர்
இப்படி
மேல்
நடத்த
வேண்டிய
காரியத்தை
அனேகவிதமாய்
நிச்சயித்து,
ஸீதைக்கு
நன்றாகக்
கேட்கும்படியான
தூரத்திலிருந்து
பின்வரும்
மதுரமான
வார்த்தைகளைச்
சொன்னார்.
Prose passage
▾
Meaning
Keep
“இக்ஷ்வாகு
குலத்தில்
தசரதரென்று
ஒரு
ராஜா
இருந்தார்.
அவருடைய
சதுரங்க
பலத்திற்கு
எல்லையில்லை;
புண்யத்தையே
ஸ்வபாவமாக
உடையவர்;
விஸ்தாரமான
கீர்த்தி
பெற்றவர்;
நியாய
மார்க்கத்திலேயே
நடப்பவர்;
எல்லோராலும்
கொண்டாடப்
பட்டவர்;
ராஜரிஷிகளுக்குள்
குணங்களால்
மேலானவர்;
தவத்தில்
ரிஷிகளைப்
போன்றவர்;
சக்கரவர்த்திகளுடைய
வம்சத்தில்
பிறந்தவர்;
பராக்கிரமத்தில்
இந்திரனுக்கு
ஸமமானவர்;
பிறர்க்கு
ஹிம்ஸை
செய்யாமலிருப்பதிலேயே
பிரியமுள்ளவர்;
பெருந்தன்மை
பொருந்தினவர்;
அளவற்ற
கருணையுடையவர்;
அவருடைய
பராக்கிரமம்
வீண்போகாது;
இக்ஷ்வாகு
குலத்து
அரசர்களுக்குள்
பிரதானமானவர்;
ராஜ்யலக்ஷ்மி
பொருந்தினவர்;
அவரால்
அந்த
ராஜ்யத்திற்கு
லக்ஷ்மீ
கடாக்ஷம்
விருத்தியாயிற்று;
ஸகலராஜலக்ஷணங்களும்
குறைவில்லாமல்
பொருந்தினவர்;
எல்லையற்ற
ஜயலக்ஷ்மியால்
விளங்கினவர்;
ராஜசிரேஷ்டர்;
அவருடைய
கீர்த்தி
பரவாத
இடமே
பூமியில்
இல்லை;
தன்னை
அண்டினவர்களுக்கு
ஸகல
ஸுகத்தையும்
அளிப்பவர்;
ஸகல
ஸுகங்களையும்
அனுபவித்தவர்;
அவருடைய
மூத்த
குமாரனுக்கு
ராமனென்று
பெயர்;
தகப்பனுக்கு
மிகவும்
அருமையானவர்;
பூர்ண
சந்திரனைப்
போன்ற
முகத்தையுடையவர்;
ஸகல
சாஸ்திரங்களையும்
அறிந்தவர்;
ஸகல
வில்லாளிகளுக்கும்
மேலானவர்;
தனக்குரிய
தர்மத்தைக்
குறைவற
நடத்துகிறவர்;
தன்னைச்
சேர்ந்தவர்களை
ரக்ஷிக்கிறவர்;
ஸகலப்
பிராணிகளுடைய
தர்மங்களையும்
ஸரியாய்
நடத்தி
வைப்பவர்;
தன்
தேஜஸாலேயே
சத்துருக்களை
எரிப்பவர்;
வீரசிகாமணி;
அவர்
ஸத்தியம்
தவறாத
தன்
வயது
சென்ற
பிதா
செய்த
பிரதிக்ஞையை
நிறைவேற்றத்
தன்
பத்னியோடும்
தம்பியோடும்
ராஜ்யத்தைவிட்டு
வனத்திற்கு
வந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அங்கே
வேட்டையாடும்
பொழுது,
இஷ்டமான
ரூபத்தை
எடுக்கக்
கூடிய
அனேக
ராக்ஷஸ
வீரர்களைக்
கொன்றார்.
கரதூஷணர்களும்
ஜனஸ்தானத்திலுள்ள
ராக்ஷஸர்களும்
ராமனால்
மடிந்ததைக்கேட்டு
ராவணன்
கோபம்
கொண்டு,
பொன்மானென்ற
மாயையால்
ராமலக்ஷ்மணர்களை
வஞ்சித்து,
ராமனுடைய
பாரியையான
ஸீதையை
அபகரித்தான்.
பிறகு
ராமன்
அவளைத்
தேடிக்கொண்டு
வருகையில்,
காட்டில்
ஸுக்ரீவனென்ற
வானரனுடன்
ஸ்நேஹம்
செய்தார்.
மஹாபலவானும்
சத்துருக்களை
வேரறுப்பவருமான
ராமமூர்த்தி
ஸுக்ரீவனுக்கு
விரோதியான
வாலி
என்ற
வானர
ராஜனைக்
கொன்று,
தன்
மித்திரனுக்கு
அந்த
ராஜ்யத்தைக்
கொடுத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
ஸுக்ரீவன்
தனக்குட்பட்ட
வானரர்களைக்
கட்டளையிட,
நினைத்த
ரூபத்தை
எடுக்கக்கூடிய
அந்த
வீரர்கள்
ஆயிரக்கணக்காக
ஸகல
திக்குகளிலும்
ஸீதையைத்
தேடுகிறார்கள்.
அவள்
இங்கே
இருக்கிறாளென்று
ஸம்பாதி
என்ற
கழுகு
சொல்லக்
கேட்டு,
நானும்
அவளைப்
பார்க்க
விரும்பி
நூறு
யோஜனை
விஸ்தீர்ணமுள்ள
இந்த
ஸமுத்திரத்தை
அதிவேகமாகத்
தாண்டினேன்.
இங்கே
தேடும்பொழுது
‘என்
பாக்கியவசத்தால்
அவளைக்
கண்டேன்;
சரீரத்திலும்
ரூபத்திலும்
வர்ணத்திலும்
காந்தியிலும்
ராமன்
எனக்கு
வர்ணித்தது
போலவே
இருக்கிறாள்”
என்று
முடித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டுக்கொண்டிருந்த
ஜானகிக்கு
உண்டான
ஆச்சரியத்தைச்
சொல்லி
முடியாது.
கறுத்து
நீண்டு
சுருண்டு
நுனியில்
கொஞ்சம்
வளைந்த
தலைமயிரையுடைய
ஸீதை,
பிராணனைப்
போக்கிக்கொள்வதற்காகப்
பின்னலால்
சுற்றப்பட்ட
முகத்தை
நிமிர்த்தி,
இவ்வளவு
பிரியமான
விஷயத்தைச்
சொல்லுகிறவனுடைய
ரூபம்
எப்படியிருக்குமோ
என்று,
பயத்துடன்
அந்தச்
சிம்சுபாவிருக்ஷத்தைப்
பார்த்தாள்.
அந்த
வானர
சிரேஷ்டனுடைய
வார்த்தையைக்
கேட்டு
ஸகல
திக்குகளையும்
ஜாக்கிரதையாக
கவனித்துக்கொண்டு,
ஸர்வகாலத்திலும்
ராமனையே
தியானித்துக்
கொண்டிருப்பவளாகையால்
எல்லையற்ற
ஆனந்தத்தை
அடைந்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
இரு
பக்கங்களிலும்
பார்த்தாள்;
ராக்ஷஸிகள்
தூங்கிக்
கொண்டிருப்பதைத்தவிர
வேறொருவரையும்
காணவில்லை.
நமது
கஷ்டத்தைப்
பார்த்துத்
தேவ
கணங்களில்
யாராவது
இரங்கி
இந்த
ஸமாசாரத்தைச்
சொன்னார்களோ?”
என்று
மேலே
பார்த்தாள்;
ஒருவரையும்
காணோம்.
“பாதாளலோகவாஸிகளில்
யாராவது
கருணை
புரிந்து
இந்த
உபகாரத்தைச்
செய்தார்களோ?
என்னைப்பெற்ற
பூமிதேவி
தான்
இப்படி
ஆறுதல்
செய்கிறாளோ?”
என்று
கீழே
பார்த்தாள்.
ஒன்றும்
கண்ணில்
படவில்லை.
பிறகு
மரக்கிளைகளைக்
கவனித்துப்
பார்க்கையில்
ஏதோ
ஒரு
ரூபம்
மஹாதேஜஸ்
உள்ளதாகக்
காணப்பட்டது.
Prose passage
▾
Meaning
Keep
குரலைக்கொண்டு
ஸகலலோக
கண்டகனான
ராவணனுடைய
நகரத்தில்
பிரவேசித்து,
ஒருவருக்கும்
தெரியாமல்
எங்கும்
தேடி,
ராக்ஷஸர்களுடைய
காவல்களைக்
கடந்து,
இந்த
ராக்ஷஸிகளுக்கு
நடுவிலிருக்கும்
தன்னை
அவர்களுக்குத்
தெரியாமல்
கண்டு
பேசினவன்
ஒப்பற்ற
புத்திமானாக
இருக்கவேண்டும்.
வணக்கமாயும்
மிருதுவாயும்
பேசுவதால்
இவன்
பிறர்க்குக்
கீழ்ப்பட்டவன்;
பேசும்
திறமையால்
சிறந்த
யோசனை
சொல்லக்கூடிய
மந்திரி;
இவனுடைய
மதுரமான
மங்களவாக்கியங்களால்
நான்
தற்கொலை
செய்துகொள்வதிலிருந்து
தப்பி
உயிர்
பெற்றேன்;
நான்
உயிரோடிருந்தால்
ராமன்
பிழைத்திருப்பார்.
ராமன்
உயிருடனிருந்தால்
ஸகல
பிராணிகளும்
ஜீவித்திருக்கும்.
இப்படி
ஸகல
ஜீவகோடிகளுக்கும்
பிராண
தானம்
செய்த
இவன்,
அவைகளுக்கு
பிராணாதாரமான
வாயுபகவானுடைய
புத்திரனாக
இருக்கவேண்டும்;
இவன்
வானர
ராஜனால்
ராஜகாரியமாக
அனுப்பப்பட்ட
தூதன்”
என்று
முடிவு
செய்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
உதிக்கும்
ஸூரியனுடைய
வரவைத்
தெரிவிக்கும்
அருணனைப்
போல்
என்
பிரிய
நாதனான
ராமமூர்த்தி
வருவதைத்
தெரிவிக்க
வந்த
தூதனோ?”
என்று
ஆனந்தம்
கொண்டாள்.
19
▾
Meaning
Keep
ஸா
திர்யகூ³ர்த்⁴வம்
ச
ததா²ப்யத⁴ஸ்தாத்
நிரீக்ஷமாணா
தமசிந்த்ய
பு³த்³தி⁴ம்
|
த³த³ர்ஶ
பிங்கா³தி⁴பதே
ரமாத்யம்
வாதாத்மஜம்
ஸூர்யமிவோத³யஸ்த²ம்
||
Previous
←
ஹநுமான் ஸீதையிடத்தில் பேச நிச்சயித்தது
Next
ஸீதையின் ஸந்தேகம்
→