Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · காகாஸுர விருத்தாந்தம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
காகாஸுர
விருத்தாந்தம்
Śloka
▾
Meaning
Keep
தத:
ஸ
கபிஶார்தூ³ல:
தேந
வாக்யேந
ஹர்ஷித:
|
ஸீதா
முவாச
தச்ச்²ருத்வா
வாக்யம்
வாக்யவிஶாரத³:
||
Prose passage
▾
Meaning
Keep
மஹா
புத்திமானான
அந்த
வானர
சிரேஷ்டன்
ஸீதையின்
வார்த்தையைக்
கேட்டு
மிகுந்த
ஸந்தோஷமடைந்து,
“அம்மா!
தாங்கள்
சொன்ன
வார்த்தைகள்
ஸ்த்ரீகளின்
ஸ்வபாவத்திற்கும்
பதிவிரதைகளுடைய
விநயத்திற்கும்
தகுந்தவை.
நூறுயோஜனை
விஸ்தீர்ணமுள்ள
இந்தப்
பெருங்கடலை
என்
முதுகிலேறித்
தாண்டுவது
ஸ்த்ரீயான
தங்களுக்கு
முடியாதல்லவா?
ராமனைத்
தவிர
வேறு
புருஷனைத்
தொடமாட்டேனென்ற
இரண்டாவது
காரணம்
அந்த
மஹாத்மாவின்
பத்தினியாகிய
தங்களுக்கே
தகும்.
இப்படிப்
பட்ட
வார்த்தையை
வேறொருவரும்
சொல்ல
மாட்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
தங்களுடைய
ஸகல
விருத்தாந்தங்களையும்
வார்த்தைகளையும்
ஒன்று
விடாமல்
ராகவனிடத்தில்
சொல்வேன்.
அவருக்குப்
பிரியமான
காரியத்தைச்
செய்ய
வேண்டுமென்ற
இச்சையாலும்
வேறு
அனேக
காரணங்களாலும்
தங்களிடத்திலுள்ள
ஸ்நேகத்தாலும்
களங்க
மில்லாத
மனத்துடன்
இப்படிச்
சொன்னேனே
தவிர
வேறல்ல.
இந்தப்
பெருங்கடலைத்
தாண்டுவது
கஷ்டம்.
கோர
ராக்ஷஸர்களால்
இரவும்
பகலும்
காக்கப்பட்ட
இந்த
லங்கையில்
பிரவேசிப்பது
அதிலும்
கஷ்டம்;
நான்
சொன்னபடிசெய்ய
எனக்குச்
சக்தியுண்டு;
மற்றவர்களுக்கு
ஸுலபமல்ல.
ஆகையால்
இப்படிச்
சொன்னேன்.
Prose passage
▾
Meaning
Keep
ராகவனிடத்தில்
எனக்குள்ள
ஸ்நேகத்தாலும்,
தங்களிடத்தில்
வைத்த
பக்தியாலும்,
இப்பொழுதே
தங்களை
ராமனோடு
சேர்த்து
வைக்க
வேண்டுமென்று
அளவற்ற
ஆசை
கொண்டிருக்கிறேன்;
இல்லாவிட்டால்
இப்படிச்
சொல்வேனா?
என்னுடன்
ராமனிருக்குமிடத்திற்கு
வருவதற்குத்
தாங்கள்
இஷ்டப்படாவிட்டால்
நான்
தங்களைப்பார்த்தேனென்று
அவர்
நம்பும்படி
சில
அடையாளங்களைக்
கொடுங்கள்”
என்று
பிரார்த்தித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்கேட்டு
ஸீதை
தனக்கும்
ராகவனுக்கும்
ஏகாந்தத்தில்
நடந்த
விருத்தாந்தங்களைச்
சொல்ல
ஆரம்பிக்கையில்,
தான்
முன்பு
அனுபவித்த
ஸுகங்களையும்
இப்பொழுது
படும்
கஷ்டத்தையும்
நினைத்துக்
கண்ணீர்
நெஞ்சையடைக்க
மெதுவாய்,
“ஆஞ்ஜநேய!
சித்திரகூட
பர்வதத்தினடியில்
வடகிழக்கு
மூலையில்
மந்தாகினீ
நதிக்கு
ஸமீபத்தில்
ஒரு
புண்ணியஸ்தலமுண்டு.
அங்கே
ஸித்தர்களும்
தபஸ்விகளும்
ஆனந்தமாய்
வஸிப்பார்கள்.
பழம்
கிழங்கு
ஜலம்
குறைவில்லாமல்
கிடைக்கும்.
நாங்கள்
அங்கே
இருக்கையில்
நடந்த
ஒரு
விருத்தாந்தத்தைச்
சொல்லுகிறேன்.
இந்த
அடையாளத்தை
என்
பர்த்தாவிடம்
சொல்.
Prose passage
▾
Meaning
Keep
“ஒரு
ஸமயத்தில்
பலவித
புஷ்பங்களால்
வாஸனையுள்ள
மரச்சோலைகளில்
நான்
வெகுநேரம்
விளையாடி
வியர்த்துக்
களைத்து
தங்களுடைய
மடியில்
உட்கார்ந்தேன்.
அப்பொழுது
ஒரு
காக்கை
மாம்ஸத்தில்
ஆசைகொண்டு
என்
மார்பின்
மத்தியில்
கொத்திற்று,
நான்
அதன்மேல்
ஒரு
சிறிய
கல்லை
எடுத்தெறிந்து
துரத்தினேன்.
மாம்ஸத்தில்
ஆசைவைத்த
அந்தத்
துஷ்டக்
காக்கை
நான்
எவ்வளவு
துரத்தியும்
மறுபடியும்
என்னை
அடிக்கடி
ஹிம்ஸித்ததேயல்லாமல்,
அவ்விடத்தைவிட்டுப்
போகவே
இல்லை.
அந்த
ஹிம்ஸையைத்
தீர்க்கவேண்டுமென்று
பரபரப்புடன்
எழுந்தேன்;
என்
உத்தரியம்
நழுவ
அதை
ஒட்டியாணத்துடன்
சேர்த்துப்
பிடித்துக்கொண்டு
அந்தக்
காக்கையின்மேல்
மிகுந்த
கோபத்துடன்
நின்றேன்.
அப்பொழுது
என்னைப்
பார்த்தீர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
நான்
அந்தக்
காக்கையை
எவ்வளவு
அடித்துத்
துரத்தியும்
அது
என்னைக்
கொத்திக்கொண்டே
இருந்தது.
அதைக்
கண்டு,
ஒரு
காக்கையை
ஓட்ட
எனக்குச்
சக்தியில்லாததைப்
பற்றித்
தாங்கள்
பரிகாஸம்
செய்தீர்கள்.
அப்பொழுது
எனக்குண்டான
வெட்கமும்
அந்தக்
காக்கையிடத்திலுள்ள
கோபமும்
சொல்லி
முடியாது.
அதைக்கண்டு
தாங்கள்
என்னை
ஸமாதானம்
செய்தீர்கள்.
நான்
மிகவும்
களைத்துத்
தங்களுடைய
மடியில்
மறுபடியும்
வந்து
படுத்தேன்.
ஒரு
காக்கை
நம்மை
இவ்வளவு
பாடுபடுத்திற்றல்லவா
என்று
நினைக்க
எனக்குத்
துக்கம்
தாங்காமல்
கண்ணீரால்
முகம்
நனைந்து
பிறகு
மெள்ள
மெள்ளத்
துடைத்துக்கொண்டேன்
அப்பொழுது
தாங்கள்
என்னைப்
பார்க்க
வில்லையோ?”
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
களைப்பால்
வெகு
நேரம்
அவருடைய
மடியில்
படுத்துத்
தூங்கினேன்.
அவரும்
களைத்து
என்
மடியில்
படுத்துத்
தூங்கிவிட்டார்.
அப்பொழுது
அந்தக்
காக்கை
என்
சமீபத்தில்
வந்து
நான்
விழித்துக்கொண்டு
ராகவனுடைய
மடியிலிருந்து
எழுந்தவுடன்
சீக்கிரமாய்
என்மேல்
பாய்ந்து
மார்பின்
நடுவில்
கொத்திற்று.
அடிக்கடி
கிளம்பிக்
கிளம்பி
என்னைக்
கொத்திக்
கிழிக்கையில்
ரத்தத்
துளிகள்
ரகுநாதன்மேல்
விழ
அவர்
விழித்துக்
கொண்டார்.
அந்தக்
காக்கையின்
ஹிம்சையைப்
பொறுக்கமுடியாமல்
நான்
அவரை
எழுப்பினேன்.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
மஹாவீரன்
நான்
படும்
அவஸ்தையையும்
அந்தக்
காக்கை
என்
மார்பின்
நடுவில்
செய்த
காயத்தையும்
பார்த்துக்
கொண்டு
காலஸர்ப்பத்தைப்போல்
பெருமூச்சுவிட்டு,
“ஸுந்தரீ!
இப்படி
உன்னை
மார்பில்
கொத்திக்
காயப்படுத்தினவன்
யார்?”
வாயைத்
திறந்துகொண்டு
கோபத்துடனிருக்கும்
பாம்புடன்
விளையாடுபவன்
யார்?”
என்று
சொல்லி
நான்கு
புறத்திலும்
பார்க்கையில்
அந்தக்
காக்கை
குரூரமான
நகங்களுடன்
என்
ரத்தத்தால்
பூசப்பட்டு
எனக்கெதிரே
உட்கார்ந்திருப்பதைக்
கண்டார்.
அது
இந்திரனுடைய
புத்திரனான
ஜயந்தன்;
ராகவன்
கோபத்துடன்
தன்னைப்
பார்த்தபொழுது
“ஓஹோ!
மோசம்
வந்ததே”
என்று
வாயுவேகமாய்
பூமிக்குள்
மறைந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்கண்டு
மஹாபுத்திமானான
ரகுவீரன்
அந்தக்
காக்கையின்
நிஜஸ்வரூபத்தையும்
எண்ணத்தையுமறிந்து,
கோபத்தால்
கண்கள்
ஜ்வலிக்க,
அதைக்
குரூரமாக
சிக்ஷிக்கவேண்டுமென்று
நினைத்தார்.
ஆனால்
அங்கே
அவருடைய
கோதண்டமும்
பாணங்களும்
இல்லை.
உடனே
தான்
உட்கார்ந்திருந்த
ஆஸனத்திலிருந்து
ராமன்
ஒரு
தர்ப்பத்தைக்கிள்ளி
அதில்
பிரஹ்மாஸ்திரத்தின்
மந்திரத்தை
ஜபித்து
அந்தக்காக்கையை
உத்தேசித்து
பிரயோகித்தார்.
உடனே
அது
காலாக்னிபோல்
ஜ்வலித்துக்கொண்டு
அந்தக்
காக்கையை
ஆகாசமார்க்கமாய்த்
துரத்த
ஆரம்பித்தது.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்கண்டு
அந்தக்காக்கை
ஓடிற்று,
தாவிற்று,
பறந்தது,
மறைந்தது;
தனக்குத்
தெரிந்த
ஸகல
தந்திரங்களையும்
உபாயங்களையும்
செய்தது.
ஒன்றும்
பலிக்காததைக்கண்டு
என்னைக்
காப்பாற்றுவாருண்டோ
என்று
வாய்விட்டலறிக்கொண்டு
இந்த
லோகமெங்கும்
அலைந்து
திரிந்தது.
என்ன
கஷ்டம்!
பிறகு
தன்
பிதாவான
தேவேந்திரனிடத்தில்
சென்றால்
தன்னைக்
காப்பாற்றுவாரென்று
அங்கே
ஓடிற்று.
தேவேந்திரன்
அஸுரரூபத்தையும்
துக்கத்தையும்
கண்டு,
நடந்த
விருத்தாந்தத்தை
விசாரித்துத்
தெரிந்துகொண்டு
அவனைத்
துரத்திவரும்
பிரஹ்மாஸ்திரத்தையும்
பார்த்தான்.
Prose passage
▾
Meaning
Keep
“ராமன்,
ஒருவனைக்
கொல்லவேண்டுமென்று
நிச்சயித்த
பிறகு
நாம்
அதில்
தலையிட்டுக்கொண்டால்
பிழைப்பதேது?
மேலும்
இவன்
செய்த
துஷ்டகாரியத்திற்கு
இந்தத்தண்டனை
தகுந்ததே,
மேலும்
நான்
ராஜ்யத்தையும்
தேஜஸையும்
பாரியையையும்
கீர்த்தியையும்
இழந்து,
ஓடி
ஒளிந்துத்
தவிக்கும்பொழுது
எனக்கு
ஸகலத்தையும்
கொடுத்துரக்ஷித்த
லோகமாதாவிற்கு
அபராதம்
செய்தவனை
நான்
திரும்பிப்
பார்க்கலாமோ?
ஸகல
லோகங்களுக்கும்
பிதாவான
ஹரியே
அவனைக்
கைவிட்டபின்
எனக்கென்ன?
அவர்
என்
உடன்
பிறந்தவரன்றோ?
அவருக்கு
அபராதம்
செய்தாலென்ன?
எனக்கு
அபராதம்
செய்தாலென்ன?
என்னையும்
தேவர்களையும்
கதறவடிக்கும்
ராவணனை
வதம்செய்யப்
பகவான்
அவதரித்திருக்க,
இவன்
அந்தக்
காரியத்திற்கு
விரோதம்
செய்து
எங்களுடைய
க்ஷேமத்தைக்
கெடுக்க
வந்த
துஷ்டன்;
ஆகையால்
ஒரு
குலத்திற்கு
நாசம்
வராதபடி
அதில்
ஒருவனைத்
தள்ளிவிடுவது
நியாயம்
என்று
புத்தி
பூர்வமாக
ஜயந்தனை
அங்கிருந்து
துரத்திவிட்டான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
தன்னைப்
பெற்றெடுத்த
தாய்
தன்னிடத்தில்
இரங்காமலிருப்பாளோ
என்று
ஜயந்தன்
இந்திராணியிடத்தில்
சென்று
அடைக்கலம்
வேண்டினான்.
அவளும்,
“ஸகலப்
பிராணிகளுக்கும்
மங்களத்தைச்
செய்ய
வேண்டி,
சொல்ல
முடியாத
கஷ்டங்களை
ஸஹித்துக்
கொண்டிருக்கும்
ஜானகிக்குத்
தீராத
அபராதம்
செய்த
இவன்
நமக்குப்
புத்திரனல்ல”
என்று
துரத்திவிட்டாள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
தன்னைப்போன்ற
தேவதைகளிடத்தில்
சென்று
அடைக்கலம்
புகுந்தான்.
அவர்களும்
“எவருடைய
கிருபையால்
நாம்
ஸமுத்திர
மதன
காலத்தில்
அமிருதத்தைப்
பெற்றுச்
சிரஞ்ஜீவிகளாய்
வாழ்கிறோமோ;
எவருடைய
பராக்கிரமத்தால்
அஸுரர்களை
ஜயித்து
ஸ்வர்க்கலோக
ராஜ்யத்தை
ஆளுகிறோமோ
அந்த
நமது
குலதெய்வமான
ராமனுடைய
கண்
சிவந்தால்
நாமெங்கே”
என்று
துரத்திவிட்டார்கள்.
பிறகு
ஜயந்தன்
தன்னைப்போன்ற
பக்ஷிகளிடத்தில்
போய்ச்
சரணமடைந்தான்.
அவைகள்,
“நமக்குப்
பிரபுவான
கருடன்
யாருக்கு
வாஹனமோ
அந்த
மஹாப்பிரபுவைக்
கோபமூட்டினவன்
நம்மிடத்திற்கு
ஏன்
வந்தான்?”
என்று
அடித்துத்
துரத்திவிட்டன.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
மஹரிஷிகளிடத்தில்
சென்று
தன்னைக்
காப்பாற்ற
வேண்டுமென்று
பிரார்த்தித்தான்.
அவர்களும்
மூன்று
காலங்களையும்
அறிந்தவர்களாகையால்,
“நாம்
இவனுக்கு
இடம்
கொடுத்தால்
நமக்கும்
ஆபத்து
நேரும்.
ராமனே
இவனைக்
காப்பாற்றுவார்.
பக்ஷிகளுக்குள்
காக்கை
சண்டாளன்;
நாம்
இவனைப்
பார்ப்பதும்
பிசகு.
ஸகல
ஜீவகோடிகளுக்கும்
புருஷகாரமாய்
நின்று
உத்தம
கதியை
அடைவிக்கும்
லோகரக்ஷிக்கு
அபராதம்
செய்த
இவனுக்கு
கதியுண்டோ?”
என்று
கைவிட்டார்கள்,
இப்படிப்
பூமி
புவர்லோகம்
ஸ்வர்க்கமென்ற
மூன்று
லோகங்களிலும்
சுற்றி
அலைந்தான்.
பூமியில்
மஹரிஷிகளும்
புவர்லோகத்தில்
பக்ஷிகளும்
ஸ்வர்க்கத்தில்
தேவர்களும்
மாதாபிதாக்களும்
கைவிட்டார்கள்.
இன்னும்
ஆசைவிடாமல்
கண்டபேர்களைக்
கேட்டுக்
கண்டவிடங்களில்
வெட்கமில்லாமல்
நுழைந்தும்
அடித்துத்
துரத்தப்பட்டான்.
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்,
முடிவில்
ஸர்வலோக
சரண்யனான
ரகுவீரனையே
சரணடைந்தான்.
மஹாலக்ஷ்மியே
ஒருவன்மேல்
குற்றம்
சொன்னாலும்,
“என்னடியார்
குற்றம்
செய்யார்.
அப்படிச்
செய்தாலும்
அது
குற்றமாயிராது”
என்று
பக்தர்களைக்
காப்பாற்றும்
கருணாமூர்த்தியைச்
சரணமடைந்தான்.
பூர்வத்தில்
இந்திரனுக்கு
ஸஹாயமாய்
அஸுரர்களை
ஜயித்த
ககுத்ஸ்தருடைய
வம்சத்தில்
பிறந்த
ராமன்,
இந்திரனுடைய
புத்திரனிடத்தில்
இரக்கம்
வைத்தார்.
அவன்
செய்த
அபராதத்திற்கு
அவனைக்
கொல்லவேண்டியது;
ஆனாலும்,
அதுவரையில்
வெகு
கஷ்டங்களை
அனுபவித்திருக்கிறான்.
இப்பொழுது
வேறு
கதியற்று
நம்மைச்
சரணமடைந்திருக்கிறான்.
ரக்ஷிப்பது
நமது
விரதமல்லவா
என்று
அவனிடத்தில்
கிருபை
செய்தார்;
ஸகல
ஜீவகோடிகளுக்கும்
அவரைத்
தவிர
வேறு
சரணமுண்டோ?
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
லோகங்களிலும்
அலைந்து
திரிந்து
யாதொரு
பிரயோஜனமும்
இல்லாமல்,
தன்னையே
சரணமடைந்த
அந்தக்
காக்கையின்
துக்கத்தையும்
பரிதாபத்தையும்
அவன்
தன்னையே
கதி
என்று
வந்தடைந்ததையும்
கண்டு,
“இந்த
பிரஹ்மாஸ்திரம்
வீண்
போகாதே;
ஆகையால்,
‘தங்களுடைய
அஸ்திரத்திற்கு
என்
வலது
கண்ணைப்
பலியாகக்
கொடுக்கிறேன்’
என்று
சொல்”
என்றார்.
ஜயந்தனும்
அப்படியே
செய்ய,
அவனது
வலது
கண்ணைப்
பிடுங்கினார்.
இப்படித்
தனது
வலது
கண்ணைக்
கொடுத்து
ராமனுடைய
கடாக்ஷத்தால்
உயிர்
பிழைத்தான்.
பிறகு
அவன்
ரக்ஷகனான
ரகுநாதனையும்
அந்த
மஹானுபாவரைப்
பெற்ற
தசரதசக்கரவர்த்தியையும்
நமஸ்கரித்து
ராமசந்திரனிடத்தில்
உத்திரவு
பெற்றுக்
கொண்டு
ஸ்வர்க்கலோகம்
சென்றான்.
Prose passage
▾
Meaning
Keep
லோகநாத!
எனக்காக
ஒரு
காக்கையின்மேல்
பிரஹ்மாஸ்திரத்தை
பிரயோகிக்கவில்லையா?
இப்பொழுது
என்னைத்
தங்களிடத்திலிருந்து
அபகரித்துத்
தங்களை
அவமானம்
செய்து
என்னை
இப்படி
உபத்திரவிக்கும்
ஒரு
அல்ப
ராக்ஷஸனைப்
பொறுத்திருப்பதற்குக்
காரணமேதோ?
அளவற்ற
உற்சாகத்தையுடைய
தாங்கள்
என்னிடத்தில்
தயவு
செய்யக்கூடாதா?
பிறர்
துக்கப்படுவதைக்
கண்டு
ஸஹிக்க
மாட்டேனென்ற
தாங்கள்
அந்த
வார்த்தையை
நடத்தையில்
காட்டித்
தங்களைச்
சேர்ந்த
நான்
படும்
துக்கத்தைத்
தீர்க்கக்
கூடாதா?
இப்படிச்
செய்யாவிட்டால்
புருஷோத்தமனென்ற
பெயர்
தங்களுக்கு
எப்படித்
தகும்?
அதைக்
காப்பாற்றிக்
கொள்ளுங்கள்.
நான்
தங்களை
நாதனாக
அடைந்தும்
அனாதையைப்போல்
இருக்கிறேனே.
Prose passage
▾
Meaning
Keep
ஓடத்திலேறிய
பிறகு
கூலி
கேட்பதுபோல்,
தங்களுடன்
ஏகாந்தமாக
இருக்கையில்,
‘தங்களுக்கு
மிகவும்
பிரியமான
தர்மம்
எது?’
என்று
நான்
கேட்டிருக்கிறேன்.
‘பிறர்
துக்கப்படுவதைப்
பார்த்தால்
ஸஹிக்காமலிருப்பதே
உத்தமமான
தர்மம்;
அதே
எனக்கும்
பிரியம்;
‘அதுவே
என்
ஸ்வபாவம்’
என்று
தாங்களே
சொல்லக்
கேட்டேன்.
வேறு
தூதன்
முதலியவர்கள்
மூலம்
சொன்னதில்லை.
‘இது
வார்த்தையே’
தவிர
அனுஷ்டானத்திற்கு
வரவில்லையே’
என்று
ஆஞ்ஜநேய!
உன்
பிரபுவைக்
கேள்.
Prose passage
▾
Meaning
Keep
“தாங்கள்
அளவற்ற
வீரியம்
உத்ஸாஹம்
பலம்
முதலிய
அனந்த
கல்யாண
குணபரிபூர்ணரென்றும்,
கம்பீரத்
தன்மையில்
ஸமுத்திரத்தைப்
போன்றவரென்றும்,
பிறரால்
அசைக்கமுடியாதவரென்றும்,
இந்திரன்
எப்படி
ஸ்வர்க்கத்திற்கு
அதிபதியோ
அப்படி
இந்தக்
கடல்சூழ்ந்த
பூமிக்கு
நாதனென்றும்
நான்
அறிவேன்”
என்று
அவரிடத்தில்
சொல்லவேண்டும்.
Prose passage
▾
Meaning
Keep
ஆஞ்ஜநேய!
ரகுவீரன்
சொன்ன
வார்த்தையைத்
தவறுகிறதுண்டோ?
அஸ்திரவித்யையில்
அவருக்கு
நிகருண்டோ?
அவருடைய
பலத்திற்கு
எல்லையுண்டோ?
இப்படியிருந்தும்
வீண்போகாத
அஸ்திரங்களை
ராக்ஷஸர்களிடத்தில்
ஏன்
பிரயோகிக்கக்கூடாது?
யுத்தகளத்தில்
நாகர்களாவது
கந்தர்வர்களாவது
அஸுரர்களாவது
தேவர்களாவது
ராமனுடைய
பாணவேகத்தைத்
தடுக்கமுடியுமா?
அந்த
வீரருக்கு
என்னிடத்தில்
நிஜமான
பிரேமையும்
என்னைச்
சீக்கிரத்தில்
மீட்க
வேண்டுமென்ற
இச்சையும்
இருந்தால்
கூர்மையான
பாணங்களால்
ராக்ஷஸர்களை
ஏன்
நாசம்
செய்யவில்லை?
Prose passage
▾
Meaning
Keep
அவ்வளவென்ன?
லக்ஷ்மணன்
பலவானல்லவா?
வீரனல்லவா?
சத்துருக்களுக்குக்
காலனல்லவா?
ராமனிடத்தில்
உத்தரவு
பெற்றுக்கொண்டு
என்னை
ரக்ஷிக்கக்கூடாதா?
வாயுவிற்கும்
அக்னிக்கும்
ஸமமான
வேகத்தையும்
தேஜஸையும்
உடைய
அவ்விருவர்களும்
தேவர்களாலும்
எதிர்க்கப்படுவார்களா?
அவர்கள்
சேர்ந்திருந்தால்
என்னை
ஏன்
கவனிக்கவில்லை?
சத்துரு
வர்க்கங்களை
வேரறுத்து
என்னை
ரக்ஷிக்க
அவர்களுக்குச்
சக்தியில்லையோ?
இதுவரையில்
அப்படி
செய்யவில்லையோ?
இப்பொழுது
நான்
படும்
அவஸ்தைகளைப்
பார்த்தால்
தங்களுடைய
பிராணனைக்
கொடுத்தாவது
என்னை
ரக்ஷிப்பதற்கு
நான்
தகாதவளோ?
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
அவர்களிடத்திலாவது
என்னிடத்திலாவது
ஏதோ
குற்றமிருக்கவேண்டும்.
அவர்கள்
இப்படிச்
செய்ய
ஸமர்த்தர்களென்று
எவரும்
ஒப்புக்கொள்வார்கள்.
ஆகையால்,
என்னிடத்தில்
பெரிய
குற்றம்
ஏதோ
இருக்கிறது;
ஸந்தேகமில்லை.
நான்
ஸர்வமும்
தெரிந்தவளா?
எனக்குத்
தெரியாமல்
நான்
பாபத்தைச்
செய்திருக்கலாம்.
அதை
அனுபவித்தாலொழியத்
தீருமோ?
காரணமிருக்கையில்
காரியம்
உண்டென்பதில்
ஸந்தேகமோ?
ஒருவேளை
அவர்
என்னை
வனத்திற்கு
அழைத்துப்
போகமாட்டேனென்று
சொன்னபொழுது,
‘தாங்கள்
புருஷவேஷம்
தரித்த
ஸ்த்ரீ
என்பதை
அறியாமல்
அநியாயமாய்
என்
தகப்பனார்
மோசம்
போய்
என்னைத்
தங்களுக்கு
விவாஹம்
செய்துவிட்டாரே’
என்று
சொல்லி
மஹாபராதத்தைச்
செய்திருக்கிறேனல்லவா?
அந்தப்
பாவம்
போதாதா?”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
இப்படித்
தீனமாய்க்
கண்ணீர்
பெருக
பிரலாபிப்பதைக்
கேட்டு
ஆஞ்ஜநேயர்
மனம்
கலங்கி,
“தாயே!
தங்களைப்
பிரிந்த
துக்கத்தால்
ராமன்
இதர
விஷயங்களில்
ஆசையற்றுச்
சோக
ஸமுத்திரத்தில்
முழுகி
இருக்கிறார்.
லக்ஷ்மணன்
பரிதவிக்கிறார்.
ஸத்தியத்தின்
மேல்
ஆணையிட்டுச்
சொல்லுகிறேன்.
இவ்வளவு
கஷ்டப்பட்டுத்
தங்களைக்
கண்டு
பிடித்தேன்.
இனிமேலும்
தாங்கள்
கிலேசப்பட
வேண்டிய
நியாயமென்ன?
இந்த
முகூர்த்தத்தில்
தங்களுடைய
துக்கங்களெல்லாம்
நாசமடைந்தன.
மஹாபலவான்களான
அந்தப்
புருஷ
சிரேஷ்டர்கள்
தங்களைப்பார்க்க
ஆவல்கொண்டு
லங்கையைச்
சாம்பலாக
அழிக்கப்
போகிறார்கள்.
துஷ்டனான
ராவணனையும்
அவனுடைய
பந்துக்களையும்
யுத்தத்தில்
மடித்துத்
தங்களை
அயோத்யைக்கு
அழைத்துக்
கொண்டு
போவார்கள்.
ஆகையால்
ராகவனுக்கும்
லக்ஷ்மணனுக்கும்
தேஜஸ்வியான
ஸுக்ரீவனுக்கும்
வானரர்களுக்கும்
நான்
சொல்ல
வேண்டிய
ஸமாசார
மென்ன?”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
ஸீதை,
சோகத்தால்
குரல்
தழுதழுக்க,
“மாருதே!
லோகத்தில்
ஸ்த்ரீகள்
இஹபர
ஸாதகத்திற்காகவும்,
தங்களை
ரக்ஷிப்பதற்காகவும்
புத்திரர்களைப்
பெறுகிறார்கள்.
என்
மாமியாரான
கௌஸல்யையோ
அப்படிச்
செய்யவில்லை.
பெருந்தன்மையான
ஸ்வபாவமுடையவராகையால்,
ஸகல
லோகங்களையும்
ரக்ஷிக்கும்
புத்திரன்
பிறக்க
வேண்டுமென்று
விரதங்களை
அனுஷ்டித்து
லோகோபகாரத்திற்காக
ரகுவீரனைப்
பெற்றாள்.
அவருடைய
உத்தேசம்
வீணாகுமோ?
அவர்
ரக்ஷிக்க
வேண்டிய
லோகத்தில்
நானும்
சேரவில்லையா?
என்னை
ரக்ஷிக்க
வேண்டுமென்று
நான்
பிரார்த்திப்பதும்
பிசகு;
அந்த
கவலை
அவருக்கல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
கால
தாமதத்தை
ஸஹிக்கமுடியாமல்
நான்
சீக்கிரப்படுவதேதவிர
வேறல்ல.
அவருக்கு
என்னை
ரக்ஷிக்கச்
சக்தியிருந்தால்
போதும்.
அப்பொழுது
எனக்குக்
குறை
என்ன?
அவருக்கு
எப்பொழுதும்
பக்தர்களை
ரக்ஷிக்கும்
சக்தியும்
கருணையும்
குறையாமலிருக்க
வேண்டுமென்று
நாம்
பிரார்த்திக்க
வேண்டியது
மாத்திரமே.
ஆகையால்
ரகுவீரன்
க்ஷேமமாக
இருக்கிறாரா
என்று
நான்
விசாரித்ததாகச்
சொல்.
அவரை
நான்
ஸாஷ்டாங்கமாய்
நமஸ்கரித்தேன்
என்று
சொல்.
ஏனென்றால்
லோகத்தார்களைப்போல்
அவரிடத்தில்
நான்
பிரார்த்திக்க
வேண்டியது
ஏதாவது
இருந்தால்
இந்த
நமஸ்காரத்தைத்தவிர
நான்
செய்ய
வேண்டியது
வேறென்ன?
Prose passage
▾
Meaning
Keep
மாலைகள்,
ரத்தினங்கள்,
பிரியமான
பாரியைகள்
இவைகளையும்
இன்னும்
இந்த
விசாலமான
பூமியில்
அடைய
முடியாத
ஸம்பத்துக்களையும்விட்டு
லக்ஷ்மணன்
மாதாபிதாக்களிடத்தில்
வணக்கமாய்
உத்தரவு
பெற்றுக்கொண்டு,
தமையனிடத்தில்
வைத்த
ஸ்நேஹத்தாலும்
பக்தியாலும்
அவரைப்
பின்தொடர்ந்து,
அவருக்கு
ஸகல
கைங்கரியங்களையும்
செய்து
அரண்யத்தில்
ரக்ஷித்து
வருகிறானல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
ஸிம்ஹத்தைப்போல்,
பலமுள்ள
புஜங்களையும்
நீண்ட
கைகளையுமுடையவன்;
பெருந்தன்மையான
ஸ்வபாவத்தையுடையவன்;
பார்க்கப்
பிரியமானவன்;
தன்
தாயைப்
போல்
என்னையும்,
பிதாவைப்போல்
ராமனையும்
பாவித்துச்
சுச்ரூஷை
செய்பவன்;
பெரியோர்களைப்
பணிகிறவன்;
ராமனுக்கு
ஸகலவித
கைங்கரியத்தையும்
செய்யும்
பாக்கியம்
பெற்றவன்;
ஸகல
காரியங்களையும்
செய்ய
ஸமர்த்தன்;
அதிகமாகப்
பேசாதவன்;
என்
மாமனாரான
தசரதருக்கு
ஸமமானவன்;
அவருக்குப்
பிரியமான
புத்திரன்;
என்
பிரீதிக்கு
எப்பொழுதும்
பாத்திரன்;
சிரேஷ்டன்;
தைரியவான்;
ராமனுக்குத்
தம்பி;
கட்டளையிட்ட
காரியங்களை
நிர்வஹித்துச்
செய்யக்
கூடியவன்;
அவனுடைய
முகத்தைப்
பார்த்து
ராமன்,
தசரதர்
காலம்
சென்றதையும்
நினைக்காதிருக்கிறார்.
Prose passage
▾
Meaning
Keep
எப்பொழுதும்
பரிசுத்தன்;
ஸமர்த்தன்;
மிருதுவான
ஸ்வபாவமுள்ளவன்;
ராகவனுக்குப்
பிரியன்
என்
விஷயத்தை
கவனிக்க
வேண்டுமென்று
அவனை
நான்
க்ஷேமம்
விசாரித்ததாகச்
சொல்.
என்னை
ராவணன்
அபகரித்துக்
கொண்டு
போனானென்று
அவனுக்குத்
தெரியாது.
இல்லாவிட்டால்
இவ்வளவு
காலம்
நான்
கஷ்டப்
பட
வேண்டுமா?
Prose passage
▾
Meaning
Keep
ஆஞ்ஜநேய!
ராகவன்
என்
துக்கத்தை
நாசம்
செய்யும்படி
நீயே
அவருக்குச்
சொல்ல
வேண்டியது.
வானர
சிரேஷ்ட!
இந்தக்
காரியத்தை
நீயே
முடிந்து
வைக்க
வேண்டியது.
உன்
ஸாமர்த்தியத்தால்
ராகவன்
என்னை
மீட்க
ஸகலப்
பிரயத்தனங்களையும்
செய்ய
வேண்டியது.
மஹாசூரனாகவும்
என்
நாதனாகவும்
இருக்கும்
ராமனிடத்தில்
தாசரதே!
நான்
ஒரு
மாதத்திற்கு
மேல்
பிழைத்திருக்க
மாட்டேன்.
இது
ஸத்தியம்.
Prose passage
▾
Meaning
Keep
பூர்வத்தில்
இந்திரன்
விருத்திராஸுரனென்ற
பிராஹ்மணனைக்
கொன்று
அந்த
பிரஹ்மஹத்யையால்
ஸ்வர்க்கத்தையும்
ராஜ்ய
லக்ஷ்மியையும்
இழந்து
தரித்திரனாய்க்
கஷ்டப்
பட்டான்.
அப்பொழுது
நாராயணன்
மற்ற
தேவதைகளுடன்
அசுவமேதமென்ற
வைஷ்ணவயாகத்தைச்
செய்து
அவனுடைய
பாவத்தைப்
போக்கிப்
பூர்வ
ஸ்திதியில்
வைத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
(அவனை
விட்டு
விலகின
கௌசிகி
என்ற
ராஜ்யலக்ஷ்மி
கவாக்ஷமென்ற
புண்ணிய
தீர்த்தத்தில்
வஸித்துக்
கொண்டிருந்தாள்.
தேவர்கள்
அங்கே
சென்றவுடன்
பாதாளத்தில்
மறைந்தாள்.
அப்பொழுது
அவளை
அழைத்து
வரக்
கூடியவர்கள்
யாரென்று
தேவர்கள்
கவலை
கொள்ள,
ஆகாசவாணி,
‘அவளைக்
கொண்டு
வரக்
கூடியவர்
உத்தம
புருஷ
லக்ஷணங்கள்
பொருந்தின
நாராயணனே’
என்று
சொன்னாள்.
அதைக்
கேட்டுத்
தேவர்கள்
பகவானை
பிரார்த்திக்க
அவரும்
லக்ஷ்மியை
அழைப்பித்து
ஸ்வர்க்கத்தில்
வைத்தார்.)
அப்படிப்
பாபியான
ராவணனால்
வஞ்சிக்கப்பட்டு
இங்கே
சிறையில்
வைக்கப்பட்டிருக்கும்
என்னைத்
தாங்களே
ரக்ஷிக்கத்
தகுந்தவர்கள்
என்று
அடிக்கடி
சொல்ல
வேண்டியது”
என்று
ஸமாசாரத்தைத்
தெரிவித்து
ஸீதை
தன்
வஸ்திரத்திலிருந்து
மங்களகரமான
சூடாமணியை
எடுத்து
ராகவனுக்கு
அடையாளமாகக்
காட்டும்படி
ஆஞ்ஜநேயரிடத்தில்
கொடுத்தாள்.
அவர்
அதை
வணக்கமாய்ப்
பெற்றுக்
கொண்டு
விரலில்
தரிக்கப்
பார்த்தார்.
ஆனால்,
தான்
விசுவரூபத்தை
மாற்றி
முன்பெடுத்த
ஸூக்ஷ்மமான
ரூபத்துடன்
இருந்தபடியால்
அது
அந்த
ஆபரணத்திற்கு
ஸரியாகவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
ஹநுமான்
ஸீதையை
நமஸ்கரித்து
பிரதக்ஷிணம்
செய்து
வணக்கமாய்ப்
பக்கத்தில்
நின்றார்.
ஜானகியைக்கண்ட
ஸந்தோஷத்தால்
பூரித்த
தேகம்
லங்கையில்
இருந்தபோதிலும்
மனத்தால்
ராகவனுடைய
திருவடிகளையடைந்து
நமஸ்கரித்தார்.
பெருங்காற்றால்
கொஞ்சம்
அசைந்து,
பிறகு
முன்போல்
ஸ்திரமாயிருக்கும்
மலையைப்போல்,
ஆஞ்ஜநேயர்
ஸீதையைத்
தேடியும்
காணாமல்
கலங்கி
பிராணனை
விட
நிச்சயித்து,
அவளைக்
கண்ட
பிறகு
ஆனந்தப்
பரவசராய்,
அவளிடத்திலிருந்து
சூடாமணியைப்
பெற்றுக்
கொண்டு
ராமனுடைய
ஸன்னிதிக்குத்
திரும்பிப்போக
யத்தனித்தார்.
71
▾
Meaning
Keep
மணிவர
முபக்³ருஹ்ய
தம்
மஹார்ஹம்
ஜநக
ந்ருபாத்மஜயா
த்⁴ருதம்
ப்ரபா⁴வாத்
|
கி³ரிரிவ
பவாநவதூ⁴த
முக்த:
ஸுகி²தமநா:
ப்ரதிஸங்க்ரமம்
ப்ரபேதே³
||
Previous
←
மாருதி ஸீதையைத் தன்னுடன் வரும்படி பிரார்த்தித்தது
Next
மாருதி ஸீதையைத் தேற்றினது
→