Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி ஸீதையைத் தேற்றினது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
ஸீதையைத்
தேற்றினது
1
▾
Meaning
Keep
மணிம்
த³த்வா
தத:
ஸீதா
ஹநுமந்த
மதா²ப்³ரவீத்
|
அபி⁴ஜ்ஞாந
மபி⁴ஜ்ஞாதம்
ஏதத்³ராமஸ்ய
தத்வத:
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஸீதை,
“ஆஞ்ஜநேய!
இந்த
அடையாளம்
ராமனுக்கு
நன்றாகத்
தெரியும்.
எனது
விவாஹ
ஸமயத்தில்
என்
தாய்
என்
பிதாவிடத்திலிருந்து
இதை
வாங்கி
நான்
அணிந்து
கொள்ளும்படி
தசரதரிடத்தில்
கொடுத்ததை
ராமன்
பிரத்யக்ஷமாய்ப்
பார்த்துக்
கொண்டிருந்தார்.
ஆகையால்
இதைக்
கண்டவுடன்
என்னையும்
என்
தாயையும்
தசரதரையும்
ஸ்மரிப்பார்.
இந்தக்
காரியத்தில்
நீ
முன்னைவிட
அதிக
உத்ஸாகமுள்ளவனாய்
மேல்
நடக்க
வேண்டிய
விஷயங்களை
யோசித்துச்
சொல்.
என்
ஸமாசாரத்தைத்
தெரிவித்தவுடன்
எல்லாம்
முடிந்துவிட்டதென்று
எண்ணாதே.
இந்தக்
காரியத்தைத்
தலைக்கட்டுவதற்கு
நீயே
ஸமர்த்தன்.
ஸகலப்
பிரயத்தனங்களையும்
செய்து
என்
துக்கத்தைப்
போக்கு.
ராகவன்
எப்பொழுது
ஸந்தோஷிக்கப்
போகிறாரென்று
நீ
கவலை
கொண்டிருப்பதே
என்
துக்கத்தை
நாசம்
செய்யும்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
மாருதியும்
அந்த
வார்த்தைகளை
மனத்தில்
வைத்துத்
தலை
வணங்கி
அப்படியே
செய்கிறேனென்று
பிரதிக்ஞை
செய்து
போகப்
புறப்பட்டார்.
அதைக்
கண்ட
ஸீதை,
“ஐயோ!
இவன்
போய்விட்டால்
நமக்குக்
கதி
யார்?
சோக
ஸமுத்திரம்
மறுபடியும்
மூடிக்
கொள்ளுமே”
என்று,
கண்ணீரால்
குரல்
தழுதழுக்க,
“ராமலக்ஷ்மணர்களையும்
ஸுக்ரீவனையும்
அவனுடைய
மந்திரிகளையும்
வயது
சென்ற
ஸகல
வானரர்களையும்
அவர்களுடைய
தர்மத்திற்குத்
தகுந்தபடி
நான்
க்ஷேமம்
விசாரித்ததாகச்
சொல்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
துக்க
ஸமுத்திரத்திலிருந்து
ராமன்
என்னைக்
கரையேற்ற
வேண்டியது
உன்னாலேயே.
நான்
உயிரை
விடுவதற்கு
முன்
ராகவன்
என்னைப்
பார்க்கும்படி
நீயே
செய்யவேண்டியது.
அப்படிச்
சொல்லி
விசேஷ
தர்மத்தைக்
கட்டிக்கொள்.
அகில
ஜீவ
கோடிகளையும்
தன்
பந்துக்களையும்
ரக்ஷிப்பவரென்றும்
பிறர்
துக்கப்படுவதை
ஸஹிக்க
மாட்டாரென்றும்
பிரஸித்தி
பெற்ற
ராமன்
அந்தக்
கீர்த்தியைக்
காப்பாற்றிக்
கொள்ளவாவது
என்னைச்
சிறை
மீட்க
வேண்டியது.
நீ
உத்ஸாகத்தைக்
கொடுக்கும்
வார்த்தைகளை
எப்பொழுதும்
சொல்லிக்கொண்டிருந்தால்
அதைக்
கேட்டு
ராமன்
என்னை
அடையும்
விஷயத்தில்
பிரயத்தனம்
செய்வார்;
அவருடைய
பராக்கிரமம்
விருத்தியாகும்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஆஞ்ஜநேயர்
தலைமேல்
கைகூப்பி,
“அம்மா!
ரகுநாதன்
அதிசீக்கிரத்தில்
வானர
ஸைன்யங்களுடன்
இங்கே
வந்து
சத்துருக்களை
ஜயித்துத்
தங்களுடைய
துக்கத்தைப்
போக்குவார்.
அவர்
பாணப்
பிரயோகம்
செய்கையில்
மனுஷ்யர்களாவது
தேவர்களாவது
அஸுரர்களாவது
எதிரில்
நிற்க
முடியுமா?
தங்களைத்
திரும்பியடையும்
விஷயத்தில்
ஸூரியன்
இந்திரன்
யமன்
முதலிய
ஸகல
தேவ
கணங்களையும்
துரத்தியடிப்பதற்கு
ஸமர்த்தரல்லவா?
இந்தக்
கடல்
சூழ்ந்த
பூமியை
ரக்ஷிக்க
அவரே
தகுந்தவர்.
தங்கள்
மூலமாக
அவருக்கு
விசேஷ
லாபமுண்டாகப்
போகிறது”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ஆஞ்ஜநேயர்
நன்றாகவும்
யதார்த்தமாகவும்
சொல்லக்
கேட்டு
ஸீதை
அவரை
மிகவும்
ஆதரித்து
அவர்
போய்விடுகிறாரே
என்று
அவரை
அடிக்கடிப்
பிரியத்துடன்
பார்த்து,
அவருக்கு
உத்திரவு
கொடுக்க
மனம்
வராமல்,
ராகவனுக்குத்
தன்னிடத்திலுள்ள
ஸ்நேஹத்தைக்
குறிக்கும்
சில
வார்த்தைகளைச்
சொன்னாள்.
Prose passage
▾
Meaning
Keep
“வானர
சிரேஷ்ட!
ஒருவேளை
மிகவும்
களைத்திருந்தால்
ஒரு
தினம்
இவ்விடத்தில்
தங்கி
மரங்களாலும்
கொடிகளாலும்
நன்றாக
மறைக்கப்பட்ட
ஓரிடத்தில்
இளைப்பாறி
நாளைப்
போகலாம்.
பாக்கியமற்ற
நான்
உன்
ஸமீபத்திலிருந்தால்
இந்தப்
பெரும்
துக்கத்தைக்
கொஞ்ச
காலம்
மறந்திருப்பேன்.
நீ
இங்கிருந்துபோய்
ராமனுக்கு
ஸமாசாரத்தைத்
தெரிவித்து,
அவரை
அழைத்துக்கொண்டு
திரும்பி
வருவதற்குள்
என்
பிராணன்
நிற்பது
நிச்சயமில்லை.
அதில்
ஸந்தேகமென்ன?
ஆகையால்,
அதற்குள்
ராமன்
இங்கே
வரும்படி
செய்யவேண்டியது.
நீ
வருவதற்கு
முன்
மிக்க
துக்கத்தை
அனுபவித்துக்
கொண்டிருந்தேன்.
உன்னைப்
பார்த்து
அதை
மறந்தேன்.
இப்பொழுது
நீயும்
கண்ணில்படாமல்
போய்விட்டால்
பூர்வ
துக்கம்
முன்னைவிட
அதிகமாய்
என்னைக்
கொளுத்துமே.
Prose passage
▾
Meaning
Keep
வானரவீர!
ஆனால்,
ஒரு
ஸந்தேகம்
மாத்திரம்
இடைவிடாமல்
என்னை
உபத்திரவிக்கிறது
அதாவது,
ராமலக்ஷ்மணர்களும்
வானர
ஸைன்யங்களும்
இந்தக்
கோரமான
பெருங்கடலை
எப்படித்
தாண்ட
முடியும்?
உன்னையும்
கருடனையும்
வாயுவையும்
தவிர
இதைத்
தாண்டக்
கூடியவர்களும்
உண்டோ?
காரியங்களை
ஸாமர்த்தியமாய்
முடிப்பதில்
உனக்கு
நிகரில்லை.
நாம்
உத்தேசித்த
காரியத்திற்குப்
பெரும்
தடையாயிருக்கும்
இதற்கென்ன
உபாயம்
உனக்குத்
தோன்றுகிறது?
நீ
தனியாக
இந்தக்
காரியத்தை
முடிக்கத்
திறமையுள்ளவன்.
இப்படிச்
செய்வதில்
உனக்கு
விசேஷ
கீர்த்தியுண்டாகும்.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்
ராகவன்
ஸைன்யங்களுடன்
இங்கே
வந்து
ராவணனை
யுத்தத்தில்
ஜயித்து
என்னை
அயோத்யைக்கு
அழைத்துக்
கொண்டு
போனாலல்லவா
எனக்குப்
பெருமை?
சத்ருகுல
காலனான
ரகுவீரன்
தீக்ஷணமான
பாணங்களால்
லங்கையைக்
கலக்கி,
என்னை
அழைத்துக்கொண்டு
போனாலல்லவா
அவருக்கு
பெருமை?
ஆகையால்
எனக்கும்
அவருக்கும்
யாதொரு
கீர்த்திக்
குறைவில்லாமலும்
அவருடைய
பராக்கிரமம்
நன்றாய்
விளங்கும்படியும்
உபாயம்
செய்ய
வேண்டியது
உன்
கடமை”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அனேக
அர்த்தங்களடங்கியதாய்
யுக்தியுடன்
ஸீதை
சொன்ன
வார்த்தையைக்
கேட்டு
ஹநுமான்,
“தேவீ!
வானர
ஸைன்யங்களுக்கதிபதியான
ஸுக்ரீவன்
அளவற்ற
பராக்கிரமமுடையவர்;
தங்களை
எப்படியாவது
கண்டு
பிடித்து
ராமனுடன்
சேர்த்து
வைக்க
வேண்டுமென்று
நிச்சயம்
செய்திருக்கிறார்.
கணக்கில்லாத
வானர
ஸைன்யங்களால்
சூழப்பட்டு,
ராக்ஷஸர்களை
நாசம்
செய்யப்
போகிறார்.
அவருக்குட்பட்டவர்களெல்லோரும்
பராக்கிரமசாலிகள்,
மிகுந்த
சக்தியுடையவர்கள்;
பலவான்கள்;
மனோவேகமாய்ச்
செல்லுகிறவர்கள்;
ஸகல
திக்குகளிலும்
தடையில்லாமல்
ஸஞ்சரிப்பவர்கள்;
அளவற்ற
தேஜஸ்விகள்;
பெரியகாரியங்களிலும்
கொஞ்சம்
கூடச்
சிரமத்தையடையாதவர்கள்.
அவர்கள்
வெகு
உத்ஸாஹத்துடன்
ஆகாசமார்க்கமாய்
இந்தப்
பூமியை
அடிக்கடி
சுற்றி
வந்திருக்கிறார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸுக்ரீவனுடைய
ஸபையிலிருப்பவர்கள்
எல்லோரும்
என்னை
மிஞ்சியவர்கள்;
அல்லது
எனக்கு
ஸமமானவர்கள்;
எனக்குக்
குறைந்தவர்கள்
ஒருவரும்
அங்கில்லை.
நான்
இங்கே
வந்திருக்கும்
பொழுது
அந்த
மஹாபலவான்கள்
வரத்
தடையென்ன?
அரசர்கள்
முக்கியமானவர்களை
வெளியில்
அனுப்புவார்களா?
ஸாமான்யர்களையே
தூது
செல்லச்
சொல்வார்கள்.
ஓரேதாண்டாய்
வானராதிபதிகள்
லங்கையில்
வந்து
குதிப்பார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
தாங்கள்
வியஸனப்படவேண்டாம்;
துக்கத்தை
விடுங்கள்,
அளவற்ற
ஸத்வமுடைய
அந்தப்
புருஷ
சிரேஷ்டர்களான
ராமலக்ஷ்மணர்கள்
என்
முதுகிலேறிக்
கொண்டு
ஸூர்ய
சந்திரர்கள்
உதித்ததுபோல்
தாங்களிருக்குமிடம்
வந்து,
லங்கையைப்
பாணங்களால்
கொளுத்துவார்கள்.
ராமன்
ராவணனையும்
அவனுடைய
பரிவாரங்களையும்
யுத்தத்தில்
வதம்
செய்து
தங்களை
அயோத்யைக்கு
அழைத்துப்
போவார்.
ஆகையால்
தாங்கள்
ஆறுதலடைய
வேண்டியது;
தங்களுக்கு
ஸகல
மங்களமும்
உண்டாகட்டும்.
ராவணன்
நாசமடையும்
காலத்தைத்
தாங்கள்
அதிசீக்கிரத்தில்
எதிர்பார்க்கலாம்.
ஜ்வலிக்கும்
அக்னியைப்
போல்
ராகவன்
இவ்விடத்தில்
வருவதையும்,
ராவணனைக்
கொல்வதையும்,
தாங்கள்
துக்க
ஸமுத்திரத்தைத்
தாண்டுவதையும்
சீக்கிரத்தில்
பார்ப்பீர்கள்”
என்று
ஸீதையை
ஸமாதானம்
செய்து
அங்கிருந்து
போகப்
புறப்பட்டு
அவளுக்கு
இன்னும்
அதிக
நம்பிக்கை
உண்டாகும்
பொருட்டு
மறுபடியும்
சொன்னார்.
Prose passage
▾
Meaning
Keep
“அம்மணீ!
சத்துருக்களுக்குக்
காலனான
கோதண்டபாணி
ஸகலப்
பிரயத்தனங்களையும்
குறைவறச்
செய்து
லக்ஷ்மணனுடன்
இந்த
லங்கைக்
கோட்டை
வாசலில்
வந்துநிற்பதையும்;
நகங்களையும்
பற்களையும்
ஆயுதங்களாயுடையவர்களும்,
ஸிம்ஹம்
புலி
இவைகளைப்போல்
பராக்கிரமசாலிகளும்
மதயானைகளைப்போல
காந்தியுள்ளவர்களுமான
வானரவீரர்கள்
ஒன்றுசேர்ந்து
இங்கே
படையெடுத்து
வருவதையும்,
இங்கே
மலயபர்வதத்தின்
தாழ்வரைகளில்
வானர
சிரேஷ்டர்களின்
கூட்டங்கள்
பர்வதங்களைப்போலும்
மேகங்களைப்போலும்
சப்தித்துக்
கொண்டு
பரவியிருப்பதையும்
பார்க்கப்
போகிறீர்கள்.
ஸிம்ஹத்தால்
பீடிக்கப்பட்ட
யானையைப்
போல்
ராகவன்
தங்களைப்
பிரிந்து
மன்மத
பாணத்தால்
ஹிருதயத்தில்
அடிபட்டு
வருந்துகிறார்.
Prose passage
▾
Meaning
Keep
அம்மா!
அழவேண்டாம்;
மனத்தில்
கவலை
வைக்க
வேண்டாம்.
சசீதேவி
கொஞ்சகாலம்
இந்திரனைப்
பிரிந்து
மறுபடியும்
கூடினதுபோல்
ராகவனுடன்
சேருவீர்கள்.
அவருக்கு
மேலானவர்களும்
உண்டோ?
லக்ஷ்மணனைப்போன்றவர்கள்
யார்?
அக்னிக்கும்
வாயுவிற்கும்
ஸமமான
அந்த
ஸகோதரர்கள்
தங்களுக்கு
ஆதாரமாய்
இருக்கிறார்கள்.
ராக்ஷஸர்களால்
நிறைந்த
இந்தக்
கோரமானதேசத்தில்
நெடுங்காலம்தாங்கள்
வஸிக்கப்போகிறதில்லை.
தங்களுடைய
நாதன்
இங்கே
வர
நெடுநாள்
செல்லுமோ?
நான்
போய்
அவரைக்
காணும்
வரையில்
தாங்கள்
பொறுத்திருக்க
வேண்டும்”
என்று
பிரார்த்தித்தார்.
53
▾
Meaning
Keep
நாஸ்மிம்ஶ்சிரம்
வத்ஸ்யஸி
தே³வி
தே³ஶே
ரக்ஷோக³ணைரத்⁴யுஷிதேதி
ரௌத்³ரே
|
ந
தே
சிராதா³க³மநம்
ப்ரியஸ்ய
க்ஷமஸ்வ
மத்ஸங்க³ம
காலமாத்ரம்
||
Previous
←
காகாஸுர விருத்தாந்தம்
Next
மாருதி ஸீதையைத் தேற்றினது (தொடர்ச்சி)
→