Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஹநுமார் அசோகவனத்தை அழித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஹநுமார்
அசோகவனத்தை
அழித்தது
1
▾
Meaning
Keep
ஸ
ச
வாக்³பி⁴:
ப்ரஶஸ்தாபி⁴:
க³மிஷ்யந்
பூஜிதஸ்தயா
|
தஸ்மாத்³தே³ஶா
த³பாக்ரம்ய
சிந்தயாமாஸ
வாநர:
||
Prose passage
Keep
இப்படி ஸீதை சிறந்த வார்த்தைகளால் தன்னைக் கொண்டாட, ஆஞ்ஜநேயர் திரும்பிப்போக நிச்சயித்து, அங்கிருந்து அப்புறம் சென்று யோசித்தார். “ஸீதையைக்கண்டுபிடிப்பது,ராவணனுடைய இருப்பிடத்தைத் தெரிந்து கொள்வதென்ற இரண்டு காரியங்களைச் செய்ய நிச்சயித்தேன். ஸீதையைக்கண்டு பேசினேன். இனி ராவணனுடைய இருப்பிடத்தைத் தெரிந்து கொள்வதில் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. லங்கையையும் அதிலுள்ள ஸகல ஸ்தலங்களையும் நன்றாகப் பரிசோதித்தேன். ஆனால் ராக்ஷஸர்களுடைய பலாபலங்களையும், ராவணனுடைய அந்தரங்க அபிப்பிராயத்தையும் அறியவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
ஸாமதான
பேதமென்ற
உபாயங்களைக்
காட்டிலும்
தண்டோபாயமே
சிரேஷ்டம்.
ராக்ஷஸர்களிடத்தில்
ஸமாதானம்
செய்ய
முடியாது;
அளவற்ற
ஐசுவரியத்தையுடையவர்களை
திரவியத்தைக்
கொடுத்து
வசப்படுத்த
முடியுமா?
பலக்
கொழுப்படைந்தவர்களுக்குள்
கலஹம்
செய்விப்பது
ஸாத்தியமில்லை.
யுத்தத்தில்
ஜயமும்
அபஜயமும்
நிச்சயமில்லையாகையால்,
ஒரு
பொழுதும்
அந்த
உபாயத்தைக்
கைக்கொள்ளக்கூடாதென்று
பெரியோர்கள்
சொல்கிறார்கள்.
ஆனால்
பலசாலிக்கு
ஸகலமும்
ஹிதமாகவே
முடியுமென்றபடி,
ஒப்பற்ற
பல
பராக்கிரமமுள்ள
எனக்கு
அபஜயமென்பது
ஒருநாளும்
இல்லை.
ஆகையால்
என்
உத்தேசத்தை
நிறைவேற்றுவதற்குப்
பராக்கிரமமே
தகுந்த
உபாய
மென்று
எண்ணுகிறேன்.
Prose passage
▾
Meaning
Keep
இதைத்
தவிர
வேறு
வழியில்லை.
வீரர்களெல்லாரும்
யுத்தத்தில்
மடிந்த
பிறகுதான்
இந்த
ராக்ஷஸர்கள்
கொஞ்சமாவது
அழிவார்கள்.
ஆனால்,
‘ஸீதையைக்
கண்டுபிடித்து
ராவணனிருக்குமிடத்தை
அறிந்து
வா’
என்று
என்னை
ஸுக்ரீவன்
ஆக்ஞாபித்தார்.
அதைத்
தவிர
வேறு
காரியங்களைச்
செய்வது
தோஷமல்லவா
என்றால்,
உத்தேசித்த
காரியத்தைச்
செய்வதில்,
அதற்கு
விரோதமில்லாமல்
அனேக
காரியங்களை
முடிப்பவனே
திறமையுள்ளவன்.
அல்ப
காரியத்தை
முடிப்பதற்கும்
ஒரே
ஸாதனத்தை
நம்பியிருக்கக்
கூடாது;
அனேக
ஸாதனங்களை
ஸித்தமாய்
வைத்திருக்கவேண்டும்.
அப்படிப்
பட்டவனல்லவா
காரியத்தை
ஸாதிப்பான்?
பெரிய
காரியங்களைப்
பற்றிச்
சொல்ல
வேண்டுமோ?
Prose passage
▾
Meaning
Keep
ராக்ஷஸர்களுடைய
பலாபலங்களையும்
யுத்தத்தில்
எனக்கும்
அவர்களுக்கும்
உள்ள
தாரதம்யத்தையும்
நன்றாக
அறிந்து
கொண்டு
மஹாராஜாவினிடத்தில்
திரும்பிச்
சென்றாலொழிய
அவருடைய
கட்டளை
பூர்த்தியாகுமா?
லங்கையையும்
அதிலுள்ள
ராக்ஷஸர்களையும்
பற்றி
என்னைக்
கேட்டால்
நான்
என்ன
பதில்
சொல்வேன்.
ஆகையால்
எனக்கும்
இங்குள்ள
ராக்ஷஸர்களுக்கும்
ஸுலபமாய்
யுத்தம்
நேரும்
உபாயத்தைத்
தேடவேண்டும்.
அப்பொழுதுதான்
ராவணனுக்குத்
தன்
ஸைன்யத்தின்
பலத்திற்கும்
என்
பலத்திற்கும்
பேதம்
தெரியும்.
பிறகு
ராக்ஷஸ
ராஜனையும்
அவனுடைய
மந்திரிகளையும்
ஸேனைத்
தலைவர்களையும்
எதிர்த்து,
அவனுடைய
பலத்தையும்
ஸீதையைப்பற்றி
அவன்
மனத்திலுள்ள
அபிப்பிராயத்தையும்
நன்றாக
அறிந்து
கொண்டு
திரும்பிப்
போவேன்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
அசோகவனம்
விசித்திரமான
விருக்ஷங்களாலும்
கொடிகளாலும்
பார்ப்பவர்களுடைய
கண்களையும்
மனத்தையும்
கவர்கின்றது.
தேவேந்திரனுடைய
நந்தனமென்ற
தோட்டமும்
இதற்கு
ஈடாகுமோ?
காட்டுத்
தீ
உயர்ந்த
மரங்களைப்
பற்றுவதுபோல்
இந்தக்
கொடிய
ராக்ஷஸனுடைய
தோட்டத்தை
நாசம்
செய்தால்
அவனுக்குக்
கடும்
கோபமுண்டாகும்;
என்னைக்
கொல்ல
அனேக
ஸைன்யங்களை
அனுப்புவான்;
அவர்களுக்கும்
எனக்கும்
கோர
யுத்தம்
நடக்கும்.
அந்த
ராக்ஷஸப்
படைகளை
என்
வீரியாக்னியால்
கொளுத்திவிட்டுக்
கிஷ்கிந்தைக்குச்
செல்வேன்”
என்று
ஆலோசித்து
மாருதி
வாயுபகவானைப்போல்
கோபம்
கொண்டு,
தன்
பயங்கரமான
பராக்கிரமத்தைப்
பிரயோகித்து
துடைகளின்
சண்டவேகத்தால்
மஹாவிருக்ஷங்களை
முறிக்க
ஆரம்பித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அந்தப்புரத்திலுள்ள
மரச்சோலையை
அழித்தார்.
நானாபக்ஷிகளாலும்
மரங்களாலும்
விளங்கும்
அந்த
வனத்திலுள்ள
விருக்ஷங்களை
முறித்தார்;
தடாகங்களை
உடைத்தார்;
கிரீடாபர்வதங்களைப்
பொடி
செய்தார்;
பறவைகள்
பயந்துகூச்சலிட்டன;
மரம்கொடிகள்
வாடி
வதங்கின;
தாமரை
முதலிய
புஷ்பங்கள்
காய்ந்து
கருகின;
அந்தச்
சோலை
காட்டுத்
தீ
பற்றி
அழிந்ததுபோல்
விகாரமாய்க்
காணப்பட்டது.
கொடிகள்
ஆதாரமற்று,
பயத்தால்
திகைத்து
நிற்கும்
பெண்களைப்போல
தோன்றின.
கிரீடாகிருஹங்களும்,
கல்
மண்டபங்களும்,
ஸாதாரண
கட்டடங்களும்
கொடிகளால்
அமைக்கப்பட்ட
கிருஹங்களும்
அழிந்தன;
மஹாஸர்ப்பங்களும்
துஷ்ட
மிருகங்களும்
மடிந்தன;
அந்தத்
தோட்டம்
உருவழிந்தது.
Prose passage
▾
Meaning
Keep
வாடாத
நானா
மரம்
கொடிகளுடன்
ஸீதைக்குக்
காவலாயிருந்த
அந்தத்
தோட்டம்
மாருதியின்
வீரியத்தால்
அழிக்கப்பட்டு,
முறிந்துவிழுந்த
விருக்ஷங்களால்
சோகம்
தாங்காமல்
தலைசாய்ந்து
கிடப்பதுபோல்
காணப்பட்டது.
இப்படி
ராக்ஷஸாதிபதியின்
மனத்தைப்
புண்படுத்தி
ஹநுமான்
தான்
ஒருவனே
அனேக
ராக்ஷஸ
வீரர்களுடன்
யுத்தம்
செய்ய
நிச்சயித்து
உத்ஸாஹலக்ஷ்மியால்
ஜ்வலித்துக்
கொண்டு
தோட்டத்தின்
வெளிவாசலில்
காத்திருந்தார்.
21
▾
Meaning
Keep
ஸ
தஸ்ய
க்ருத்வார்த²பதேர்
மஹாகபி:
மஹத்³வ்யலீகம்
மநஸோ
மஹாத்மந:
|
யுயுத்ஸு
ரேகோ
ப³ஹுபி⁴ர்
மஹாப³லை:
ஶ்ரியா
ஜ்வலம்ஸ்தோரண
மாஸ்தி²த:
கபி:
||
Previous
←
மாருதி ஸீதையைத் தேற்றினது (தொடர்ச்சி)
Next
ராவண கிங்கரர்களைக் கொன்றது
→