Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவண கிங்கரர்களைக் கொன்றது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவண
கிங்கரர்களைக்
கொன்றது
1
▾
Meaning
Keep
தத:
பக்ஷிநிநாதே³ந
வ்ருக்ஷப⁴ங்க³
ஸ்வநேந
ச
|
ப³பூ⁴வுஸ்
த்ராஸ
ஸம்ப்⁴ராந்தா:
ஸர்வே
லங்கா
நிவாஸிந:
||
Prose passage
▾
Meaning
Keep
பக்ஷிகளின்
கூச்சலாலும்
மரங்கள்
முறியும்
சப்தத்தாலும்
லங்கையிலுள்ள
ஸகலப்
பிராணிகளும்
பயந்து
நடுங்கின.
மிருகங்களும்
பக்ஷிகளும்
திகிலடைந்து
நான்கு
திக்குகளிலும்
ஓடி
ஊளையிட்டன.
ராக்ஷஸர்களுக்கு
அநேக
அபசகுனங்கள்
தோன்றின.
Prose passage
▾
Meaning
Keep
அங்கிருந்த
ராக்ஷஸிகள்
திடீரென்று
விழித்துக்
கொண்டு
பார்க்கையில்
அசோகவனம்
அழிந்ததையும்,
ஒரு
வானரவீரன்
அட்டஹாஸம்
செய்வதையும்
கண்டார்கள்.
ஆஞ்ஜநேயர்
அவர்களைப்
பயமுறுத்த
எண்ணிக்
கோரமான
பெரியரூபத்தை
எடுத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
மஹாபர்வதத்தையொத்த
தேகத்தையும்
ஒப்பற்ற
பலத்தையும்
உடைய
அந்தவானரவீரனைக்
கண்டு,
ராக்ஷஸிகள்
ஸீதையைப்
பார்த்து,
“இவன்
யார்?
யாரைச்
சேர்ந்தவன்?
எங்கிருந்து
எதற்காக
வந்தவன்?
உன்னுடன்
இவன்
எப்படிப்
பேசலாயிற்று?
உன்னிடத்தில்
என்ன
சொன்னான்?
பயப்படாமல்
சொல்”
என்று
கேட்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
உத்தம
லக்ஷணங்களும்
பொருந்திய
தேகத்தையுடைய
அந்தப்
பதிவிரதை,
“பயங்கரமான
ரூபமெடுக்கக்
கூடிய
ராக்ஷஸர்களின்
தந்திரங்களை
என்னால்
அறியமுடியுமோ?
இவன்
யாரோ?
என்ன
செய்வானோ?
உங்களுக்கே
நன்றாய்த்
தெரியும்.
பாம்பின்
கால்
பாம்பிற்கல்லவா
தெரியும்?
இதிலென்ன
ஸந்தேகம்?
உங்களைப்
போலவே
நானும்
இவனைக்கண்டு
பயந்து
கொண்டிருக்கிறேன்.
இவனைப்பற்றி
எனக்கு
ஒன்றும்
தெரியாது.
நினைத்த
ரூபங்களை
எடுக்கக்கூடிய
ராக்ஷஸன்
வந்திருக்கிறான்
என்றே
நினைக்கிறேன்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதையின்
வார்த்தையைக்
கேட்டு
ராக்ஷஸிகள்
நான்கு
புறங்களிலும்
ஓடி
மறைந்தார்கள்.
சில
விவகார
முகமுள்ள
ராக்ஷஸிகள்
ராவணனிடத்திற்கு
ஓடி
அந்தக்
கோரரூபமுள்ள
வானர
வீரனைப்
பற்றிச்
சொல்ல
ஆரம்பித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ஸ்வாமி!
ஒரு
குரங்கு
நமது
அசோகவனத்தில்
வந்து
ஸீதையுடன்
ரஹஸ்யமாகப்
பேசிற்று.
இப்பொழுதும்
அங்கேயே
இருக்கிறது.
அதன்
பராக்கிரமத்திற்கோ
அளவில்லை.
நாங்கள்
பலவிதமாய்க்
கேட்டும்
ஸீதை
அதைப்
பற்றி
யாதொன்றும்
சொல்லவில்லை.
இந்திரனுடைய
தூதனோ?
குபேரனுடைய
தூதனோ?
ஸீதையைத்
தேடுவதற்கு
ராமனால்
அனுப்பப்பட்ட
தூதனோ?
Prose passage
▾
Meaning
Keep
அத்புதமான
ரூபமுள்ள
அந்தக்
குரங்கு
நானா
விருக்ஷங்களும்
மிருகங்களுமுள்ள
அழகான
அந்தப்புரத்
தோட்டத்தைச்
சின்னாபின்னமாக்கி
விட்டது.
ஸீதை
இருக்குமிடத்தைத்
தவிர
மற்ற
இடமெல்லாம்
நாசமாயிற்று.
ஸீதையைக்
காப்பாற்றுவதற்கோ
அல்லது
சிரமத்தாலோ
தெரியவில்லை?
அதற்கு
அது
ஒரு
சிரமமா?
அவளை
ரக்ஷிப்பதற்காகவே
அப்படிச்
செய்திருக்க
வேண்டும்.
அவளிருக்குமிடத்தில்
அழகான
துளிர்களோடும்
புஷ்பங்களோடும்
விளங்கும்
சிம்சுபாவிருக்ஷத்தை
அது
தொடவே
இல்லை.
Prose passage
▾
Meaning
Keep
பயங்கரமான
பராக்கிரமமுடைய
ஸ்வாமி!
பயங்கரமான
ரூபத்துடன்
கூடிய
அந்த
வானரனைத்
தாங்களே
தண்டிக்கும்படி
ஆக்ஞாபிக்கவேண்டும்.
அவன்
ஸீதையுடன்
ரஹஸ்யமாகப்
பேசியிருக்கிறான்.
நமது
வனத்தையும்
அழித்திருக்கிறான்.
கணக்கில்லாத
ராக்ஷஸ
ஸைன்யங்களுக்குத்
தாங்கள்
அதிபதியல்லவா?
தாங்கள்
மனத்தால்
விரும்பிய
இந்த
ஸீதையுடன்
பேசியும்
ஒருவன்
உயிருடனிருப்பது
தகுமா?”
என்று
தெரிவித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
பிரதாபலங்கேசுவரன்
கோபத்தால்
கண்கள்
சுழல,
அக்னியில்
ஆஹுதி
செய்ததுபோல்
ஜ்வலித்தான்.
எரியும்
இரண்டு
தீபங்களிலிருந்து
எண்ணெய்ச்
சுடர்
கொதித்து
விழுவதுபோல்
கோபாவேசம்
கொண்ட
அவனுடைய
நேத்திரங்களிலிருந்து
நீர்த்
துளிகள்
விழுந்தன.
பலபராக்கிரமத்தில்
தனக்கு
ஸமமான
கிங்கரர்களென்று
பெயர்
பெற்ற
ராக்ஷஸவீரர்களை
அழைத்து
ஹநுமானைச்
சிக்ஷிக்கும்படி
ஆக்ஞாபித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பலசாலிகளான
அந்த
எண்பதினாயிரம்
கிங்கரர்களும்
பல
ஆயுதங்களுடன்
அரண்மனையிலிருந்து
வெளிப்பட்டார்கள்.
பெரிய
வயிறு
பற்களுடையவர்கள்;
கோரரூபமுள்ளவர்கள்;
மஹாபலவான்கள்;
யுத்தம்
செய்வதில்
ஆசை
கொண்டவர்கள்;
ஆஞ்ஜநேயரைப்
பிடிப்பதிலேயே
நோக்கமுள்ளவர்கள்;
தோட்டத்தின்
வாசலில்
தயாராய்
உட்கார்ந்திருக்கும்
அந்த
வானரவீரனை
நெருங்கி,
விட்டில்பூச்சிகள்
நெருப்பில்
விழுவதுபோல்
அதிவேகமாய்
அவர்மேல்
பாய்ந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
விசித்திரமான
கதாயுதங்களாலும்,
தங்கபிடி
கட்டின
பரிகை,
ஸூரியகாந்தியுள்ள
பாணங்கள்,
இருப்புலக்கைகள்,
பெரிய
கத்திகள்,
சூலம்,
பிராஸம்,
எறிவல்லயம்,
சுத்தி
முதலிய
ஆயுதங்களால்
நான்கு
புறங்களிலிருந்தும்
மாருதியை
அடித்தார்கள்.
தேஜஸாலும்
காந்தியாலும்
ஜ்வலிக்கும்
வாயுபுத்திரனும்
பெரிய
மலையைப்போல்
அசையாமல்
நின்று,
பூமியில்
வாலை
அடித்துத்
திக்குகள்
நடுங்கும்படி
கர்ஜித்தார்.
பிறகு
தன்
சரீரத்தை
மிகவும்
பெரிதாய்ச்
செய்து
கொண்டு
லங்கை
கிடுகிடென்று
நடுங்கும்படி
ஸிம்ஹநாதம்
செய்தார்.
சுற்றிலுமிருந்த
பர்வதங்களிலிருந்து
ஆயிரமடங்காய்
எதிரொலியுண்டாக,
ஆகாசத்தில்
பறந்த
பக்ஷிகள்
மெய்மறந்து
பூமியில்
விழுந்தன.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஆஞ்ஜநேயர்
அந்த
ராக்ஷஸர்களைப்
பார்த்து,
“பலபராக்கிரமத்தில்
நிகரற்ற
ராமனுக்கும்
மஹாபலவானான
லக்ஷ்மணனுக்கும்
ராகவனால்
காப்பாற்றப்பட்ட
ஸுக்ரீவ
மஹாராஜாவுக்கும்
ஸமமானவர்களுண்டோ?
ஸகலப்
பிராணிகளுக்கும்
ஹிதத்தைச்
செய்யும்
இக்ஷ்வாகு
குலதிலகரான
ராமமூர்த்திக்கு
நான்
அடிமை;
என்
பெயர்
ஹநுமான்;
சத்ருஸைன்யங்களுக்குக்
காலன்;
வாயுபகவானுடைய
புத்திரன்;
கற்களாலும்
விருக்ஷங்களாலும்
யுத்தம்
செய்கிறவன்;
ராக்ஷஸர்களை
ஆயிரக்கணக்காய்
மடிப்பேன்;
உங்கள்
அரசனான
ராவணனைப்போல்
ஆயிரம்
ராக்ஷஸர்கள்
ஒன்று
சேர்ந்தாலும்
எனக்கு
ஈடோ?
உங்களுடைய
காவல்களைக்
கடந்து
இந்த
லங்கையில்
பிரவேசித்து,
ஸீதையை
நமஸ்கரித்து,
அவளுடைய
விருத்தாந்தத்தை
அறிந்து,
நீங்கள்
பார்த்துக்
கொண்டிருக்கும்பொழுதே
இந்த
நகரத்தை
நாசம்
செய்து,
நான்
வந்த
காரியத்தை
முடித்துக்
கொண்டு
ஸுகமாய்த்
திரும்பிப்
போவேன்”
என்று
கர்ஜித்தார்
Prose passage
▾
Meaning
Keep
அந்தச்
சப்தத்தால்
ராக்ஷஸர்கள்
பயந்து,
ஸந்தியா
காலத்து
மேகம்போல்
ஆகாசத்தை
அளாவி
நிற்கும்
ஆஞ்ஜநேயரைக்
கண்டு
நடுங்கினார்கள்.
ஆனாலும்
ராவணனுடைய
கடுமையான
உத்தரவால்
இவனுடன்
நாம்
யுத்தம்
செய்வது
நமக்கு
நன்மையா
என்ற
ஸந்தேகம்
தீர்ந்து,
பயங்கரமான
பலவித
ஆயுதங்களால்
மாருதியை
அடித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்களால்
சூழப்பட்டு
ஹநுமான்
நான்கு
புறங்களிலும்
பார்க்கையில்,
வாசற்படிக்கு
ஸமீபத்தில்
ஒரு
பயங்கரமான
இருப்புலக்கையைக்
கண்டு,
அதைப்
பிடுங்கி,
கையிலெடுத்துக்கொண்டு
ராக்ஷஸர்களை
அடித்துக்
கொன்றார்.
கருடன்
காந்தி
பொருந்திய
ஸர்ப்பங்களை
எடுத்துக்கொண்டு
ஆகாசத்தில்
செல்வதுபோல்
ஹநுமான்
அந்த
இருப்புலக்கையைச்
சுழற்றிக்
கொண்டு
ஆகாசத்தில்
ஸஞ்சரித்தார்.
இப்படி
ராவணன்
அனுப்பிய
கிங்கரர்களை
நாசம்
செய்து
மறுபடியும்
எவர்
யுத்தத்திற்கு
வருவார்களென்று
வாசற்படியின்
மேல்
நின்று
பார்த்துக்
கொண்டிருந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்குள்
சில
ராக்ஷஸர்கள்
மாருதியைக்
கண்டு
பயந்து
யுத்தம்
செய்யாமல்
ராவணனிடத்திற்கு
ஓடி,
கிங்கரர்கள்
நாசமடைந்ததைத்
தெரிவித்தார்கள்.
அதைக்
கேட்டு
அந்த
ராக்ஷஸேசுவரன்
கண்களை
உருட்டிவிழித்து,
நிகரில்லாத
பராக்கிரமசாலியும்
யுத்தத்தில்
ஜயிக்க
முடியாதவனுமான
ஜம்புமாலியை
அனுப்பினான்.
(இவன்
ராவணனுக்கு
முக்கிய
மந்திரியான
பிரஹஸ்தனுடைய
புத்திரன்.)
43
▾
Meaning
Keep
ஸ
ராக்ஷஸாநாம்
நிஹதம்
மஹத்³ப³லம்
நிஶம்ய
ராஜா
பரிவ்ருத்த
லோசந:
|
ஸமாதி³தே³ஶாப்ரதிமம்
பராக்ரமே
ப்ரஹஸ்தபுத்ரம்
ஸமரே
ஸுது³ர்ஜயம்
||
Previous
←
ஹநுமார் அசோகவனத்தை அழித்தது
Next
மாருதி உப்பரிகையை இடித்தது
→