Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஜம்புமாலி வதம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஜம்புமாலி
வதம்
1
▾
Meaning
Keep
ஸந்தி³ஷ்டோ
ராக்ஷஸேந்த்³ரேண
ப்ரஹஸ்தஸ்ய
ஸுதோ
ப³லீ
|
ஜம்பு³மாலீ
மஹாத³ம்ஷ்ட்ரோ
நிர்ஜகா³ம
த⁴நுர்த⁴ர:
||
Prose passage
▾
Meaning
Keep
அதற்குள்
பிரஹஸ்தனுடைய
புத்திரனான
ஜம்புமாலி
ராவணனால்
உத்திரவு
செய்யப்பட்டு
ஆயுதபாணியாய்
யுத்தத்திற்குப்
புறப்பட்டான்.
பெரிய
கோரப்பற்களையுடையவன்;
சிவந்த
மாலைகளாலும்
வஸ்திரங்களாலும்
அலங்கரிக்கப்பட்டவன்;
குண்டலங்களையும்
ஹாரங்களையும்
தரித்துக்கொண்டு
கண்களைச்
சுழற்றிக்கொண்டு
கடுங்கோபத்துடன்
மலைபோல்
நடந்து
வந்தான்.
யுத்தத்தில்
ஜயிக்க
முடியாதவன்;
இந்திர
தனுஸைப்
போன்ற
வில்லையும்
சிரேஷ்டமான
பாணங்களையும்
எடுத்துக்கொண்டு
வஜ்ராயுதம்
விழுந்ததுபோலும்
இடிஇடித்ததுபோலும்
வேகமாய்
நாணேற்றினான்.
அதனால்
ஸகல
திக்குகளும்
மூலைகளும்
ஆகாசமும்
நடுங்கிற்று.
Prose passage
▾
Meaning
Keep
கோவேறு
கழுதைகள்
பூட்டின
ரதத்தில்
ஏறி
வரும்
ஜம்புமாலியைக்
கண்டு
மாருதி
வேகம்
கொண்டு,
இவனுடன்
கொஞ்சநேரம்
யுத்தம்
செய்யலாமென
ஸந்தோஷித்து
ஸிம்ஹநாதம்
செய்தார்.
பருத்த
புஜங்களையுடைய
அந்த
ராக்ஷஸனும்
தோரணவாசலின்
குறுக்கு
மரத்தின்மீதுள்ள
அந்த
வானர
வீரனைக்
கண்டு,
வரும்பொழுதே
முகத்தில்
ஒரு
அர்த்த
சந்திர
பாணத்தாலும்
தலையில்
ஒரு
கர்ணியாலும்
புஜங்களில்
பத்து
நாராசங்களாலும்
அடித்தான்.
(கர்ணி:
யானையின்
மாவெட்டியைப்போல்
நுனியையுடைய
அம்பு.)
அப்பொழுது
சூரிய
கிரணத்தால்
தாக்கப்பட்டு
மலர்ந்திருக்கும்
தாமரையைப்போல்
ஆஞ்ஜநேயரின்
சிவந்த
முகம்
பாணங்களால்
அடிபட்டு
விளங்கிற்று.
ரத்தத்
துளிகளால்
சிவந்த
அவருடைய
சிவப்பான
முகம்
சிவப்புச்
சந்தனத்துளிகளால்
நிறைந்த
பெரிய
தாமரை
ஆகாசத்தில்
மலர்ந்தது
போலிருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
ஜம்புமாலியின்
பாணங்களால்
அடிபட்டு
ஹநுமான்
கோபம்
கொண்டு,
இவனை
முடிக்கும்
வழி
என்ன
என்று
சுற்றிலும்
பார்க்கையில்
ஓரிடத்தில்
ஒரு
பெரிய
பாறையைக்
கண்டார்.
பலவான்களுக்குள்
பலவானான
மாருதி
அதைப்
பெயர்த்து
ராக்ஷஸன்
மேலெறிய,
அவன்
அதைப்
பத்து
பாணங்களால்
உடைத்தான்.
சண்ட
மாருதத்தைப்போல்
வேகமுள்ள
அந்த
வானரவீரன்
தன்
எண்ணம்
வீணானதைக்
கண்டு,
உன்னதமான
ஓர்
ஆச்சாமரத்தைப்
பிடுங்கிக்
கரகரவென்று
சுழற்றினார்.
உடனே
அந்த
ராக்ஷஸன்
நான்கு
பாணங்களால்
அதைத்
துண்டித்து,
ஹநுமானைத்
தோளில்
ஐந்து
பாணங்களாலும்
மார்பில்
ஒரு
பாணத்தாலும்
மார்பின்
மத்தியில்
பத்து
பாணங்களாலும்
அடித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
வானர
சிரேஷ்டன்
தேகமெங்கும்
அம்புகள்
தைக்க,
கடும்
கோபத்துடன்
முன்னிருந்த
இருப்புலக்கையை
எடுத்து
அதிவேகமாய்ச்
சுழற்றினார்.
அளவற்ற
பலசாலி;
நிகரற்ற
வேகமுடையவர்;
அந்த
ஆயுதத்தைத்
தன்
பூர்ணபலத்துடன்
சுழற்றி
ஜம்புமாலியின்
விஸ்தாரமான
மார்பை
நோக்கி
எறிந்தார்.
அதற்குப்பிறகு
ஜம்புமாலியின்
தலையாவது
கைகளாவது
முழங்கால்களாவது
வில்லாவது
பாணங்களாவது
தேராவது
கோவேறு
கழுதைகளாவது
ஒன்றும்
காணப்படவில்லை.
மஹாபலவானான
ஜம்புமாலி
ஆஞ்ஜநேயரால்
அடிபட்டுப்
பொடிப்பொடியாய்ப்
பூமியில்
விழுந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பலசாலிகளான
கிங்கரர்கள்
மடிந்ததையும்
ஜம்புமாலி
நாசமடைந்ததையும்
ராவணன்
கேட்டு
கோபத்தால்
கண்கள்
சிவந்து,
மஹாபராக்கிரமசாலிகளான
தனது
மந்திரி
புத்திரர்களை
நோக்கி,
“அந்தத்
துஷ்டக்
குரங்கைப்
பிடித்து
வாருங்கள்”
என்று
கட்டளையிட்டான்.
22
▾
Meaning
Keep
ஸ
ரோஷ
ஸம்வர்தித
தாம்ர
லோசந:
ப்ரஹஸ்த
புத்ரே
நிஹதே
மஹாப³லே
|
அமாத்ய
புத்ரா
நதிவீர்ய
விக்ரமாந்
ஸமாதி³தே³ஶாஶு
நிஶாசரேஶ்வர:
||
Previous
←
மாருதி உப்பரிகையை இடித்தது
Next
மந்திரி குமாரர்களின் வதம்
→