Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மந்திரி குமாரர்களின் வதம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மந்திரி
குமாரர்களின்
வதம்
1
▾
Meaning
Keep
ததஸ்தே
ராக்ஷஸேந்த்³ரேண
சோதி³தா
மந்த்ரிணாம்
ஸுதா:
|
நிர்யயுர்
ப⁴வநாத்
தஸ்மாத்
ஸப்த
ஸப்தார்சி
வர்சஸ:
||
Prose passage
▾
Meaning
Keep
அக்னியைப்போல்
தேஜஸால்
ஜ்வலிக்கும்
அந்த
ஏழு
மந்திரி
புத்திரர்களும்
ராவணனால்
ஏவப்பட்டு
ஸபையிலிருந்து
புறப்பட்டார்கள்.
மஹாபலவான்கள்:
அஸ்திரவித்யை
தெரிந்தவர்களுக்குள்
சிரேஷ்டர்கள்;
ஒருவர்க்கொருவர்
ஜயிக்க
வேண்டுமென்று
ஆசைப்படுபவர்கள்;
அளவற்ற
பராக்கிரமசாலிகள்;
கணக்கில்லாத
வீரர்களால்
சூழப்பட்டு,
ஸ்வர்ணமயமான
ஜன்னல்களாலும்
கொடிகளாலும்
பாவட்டாக்களாலும்
விளங்கி
மேகத்தைப்போல்
சப்திக்கும்
பெரிய
ரதங்களில்
ஏறிக்கொண்டு,
உருக்கின
தங்கத்தால்
செய்த
வில்லுகளை
நாணேற்றி
டங்காரம்
செய்துகொண்டு,
மின்னல்கள்
பாயும்
மேகங்களைப்போல்
ஸுலபமாய்
ஜயிப்போம்
என்ற
ஸந்தோஷத்துடன்
வெளிக்கிளம்பினார்கள்.
அவர்களுடைய
தாய்களும்
பந்துக்களும்
மித்திரர்களும்
பலசாலிகளான
கிங்கரர்களே
மடிந்தார்களென்பதைக்
கேட்டு
சோகத்தால்
துடித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அந்த
மந்திரி
புத்திரர்கள்,
“நான்
முந்தி
நான்
முந்தி”
என்று
மேல்விழுந்து
தோரணவாசற்படிமேலிருக்கும்
ஹநுமானுக்கு
ஸமீபத்தில்
வந்தார்கள்.
மழைக்காலத்து
மேகங்கள்போல்
பாணங்களை
வர்ஷித்துக்கொண்டு,
இடிபோல்
குமுறுகின்ற
ரதங்களுடன்
ஆஞ்ஜநேயரைச்
சூழ்ந்துகொண்டார்கள்.
அவர்
தேகமெங்கும்
பாணவர்ஷத்தால்
நிறைந்து,
மழைத்
தாரைகளால்
மூடப்பட்ட
மஹாபர்வதம்போல்
விளங்கினார்.
நிர்மலமான
ஆகாசத்தில்
அதிவேகமாய்
ஸஞ்சரித்துக்
கொண்டு
அந்த
மந்திரி
புத்திரர்களுடைய
பாணங்களின்
குறியையும்
ரதங்களின்
வேகத்தையும்
பிரயோஜனமில்லாமல்
செய்தார்.
வான
வில்லால்
அலங்கரிக்கப்பட்ட
மேகங்களுடன்
வாயுபகவான்
ஆகாசத்தில்
விளையாடுவதுபோல்,
மாருதி
ஆகாசத்தில்
அந்த
வில்லாளிகளுடன்
விளையாட்டு
யுத்தம்
செய்துகொண்டு
விளங்கினார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
பயங்கரமான
ஒரு
சப்தமிட்டு
அந்த
ராக்ஷஸ
ஸைன்யத்தை
பயத்தால்
நடுங்கச்
செய்து,
அதிவேகமாய்
அவர்களுக்கு
நடுவில்
பாய்ந்தார்.
சிலரைக்
கைகளால்
அறைந்து
கொன்றார்;
சிலரைக்
கால்களால்
உதைத்தார்;
சிலரை
முஷ்டியால்
குத்தினார்;
சிலரை
நகங்களால்
கிழித்தார்;
சிலரை
மார்பால்
இடித்தார்;
சிலரைத்
துடைகளால்
மோதினார்;
சிலர்
அவருடைய
ஸிம்ஹநாதத்தால்
பூமியில்
விழுந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
மந்திரி
புத்திரர்கள்
இறந்து
பூமியில்
விழுந்ததைக்
கண்டு,
அந்த
ஸைன்யம்
முழுவதும்
பயம்
பிடித்து
மூலைக்குமூலை
ஓடிவிட்டது.
யானைகள்
விகாரமாய்
வீறிட்டன;
குதிரைகள்
பூமியில்
சுருண்டு
விழுந்தன;
த்வஜம்
குடை
முதலியவைகள்
முறிந்து
ரதங்கள்
பூமியெங்கும்
கிடந்தன;
வழியிலுள்ள
ஆறுகளில்
ரத்தப்
பிரவாகம்
ஓடிற்று;
லங்கை
நகரம்
முழுவதும்
விகாரமான
சப்தங்களால்
நிறைந்தது.
Prose passage
▾
Meaning
Keep
மஹாபலவானும்
பிறரால்
தடுக்கமுடியாத
பராக்கிரமசாலியுமான
மாருதி,
பெயர்
பெற்ற
அந்த
ராக்ஷஸர்களைக்
கொன்று
இன்னும்
பலசாலிகளிருந்தால்
ஒருகை
பார்ப்போம்
என்று
அந்த
வாசற்படியில்
இருந்தார்.
17
▾
Meaning
Keep
ஸ
தாந்
ப்ரவ்ருத்³தா⁴ந்
விநிஹத்ய
ராக்ஷஸாந்
மஹா
ப³லஶ்சண்ட³
பராக்ரம:
கபி:
|
யுயுத்ஸுரந்யை:
புநரேவ
ராக்ஷஸை:
தமேவ
வீரோபி⁴
ஜகா³ம
தோரணம்
||
Previous
←
ஜம்புமாலி வதம்
Next
பஞ்சஸேனாதிபதிகளின் வதம்
→