Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · பஞ்சஸேனாதிபதிகளின் வதம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
பஞ்சஸேனாதிபதிகளின்
வதம்
1
▾
Meaning
Keep
ஹதாந்
மந்த்ரி
ஸுதாந்
பு³த்³த்⁴வா
வாநரேண
மஹாத்மநா
|
ராவண:
ஸம்வ்ருதாகார:
சகார
மதி
முத்தமாம்
||
Prose passage
▾
Meaning
Keep
தன்
மந்திரி
புத்திரர்கள்
ஆஞ்ஜநேயரால்
மடிந்தார்களென்று
கேட்டு,
ராவணன்
தான்
ஸமான்யக்
குரங்கென்று
நினைத்திருந்த
மாருதியிடத்தில்
தனக்குண்டான
பயத்தை
வெளிக்காட்டாமல்,
மிகுந்த
தைரியத்துடன்
வேறு
யோசனை
செய்தான்.
விரூபாக்ஷன்
யூபாக்ஷன்
துர்த்தரன்
பிரகஸன்
பாஸகர்ணனென்ற
ஐந்து
ஸேனாதிபதிகளை
அழைத்து,
ஹநுமானைப்
பிடித்து
வரும்படி
உத்திரவு
செய்தான்.
அவர்கள்
வீரர்கள்;
யுத்தநீதியில்
தேர்ந்தவர்கள்;
சண்டையில்
வாயுவேகமுள்ளவர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்களைப்
பார்த்து
ராவணன்,
“ஸேனாதிபதிகளே!
கணக்கில்லாத
சதுரங்க
ஸைன்யங்களுடன்
செல்லுங்கள்.
அந்தக்
குரங்கை
நான்
சொல்லுகிற
விதமாக
சிக்ஷியுங்கள்.
அதன்
ஸமீபத்தில்
வெகு
ஜாக்கிரதையாகச்
செல்லுங்கள்.
தேசகாலங்களுக்கு
விரோதமாய்
நடக்கும்
அந்தக்
குரங்கின்
சேஷ்டைகளை
நிறுத்துங்கள்.
அதன்
செய்கைகளை
நான்
நன்றாய்
யோசித்துப்
பார்க்கையில்
அது
ஒருக்காலும்
குரங்கல்ல
என்று
தோன்றுகிறது.
இந்திரனோ
மற்ற
எவரோ
நமக்குக்
கெடுதி
செய்யக்
கடுந்தவத்தால்
இந்த
மஹாபலமுள்ள
பெரிய
பிராணியை
ஸிருஷ்டித்து
விட்டிருக்கிறார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
நாகர்களும்
யக்ஷர்களும்
கந்தர்வர்களும்
தேவர்களும்
அஸுரர்களும்
மஹரிஷிகளும்
உங்களாலும்
என்னாலும்
பலதடவை
ஜயிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள்
நமக்கு
ஏதாவது
கெடுதி
செய்வது
ஆச்சரியமில்லையே.
ஆகையால்
எப்படியாவது
அந்தக்
குரங்கைப்
பிடித்து
வாருங்கள்.
புத்தியிலும்
பராக்கிரமத்திலும்
அளவிற்கு
மிஞ்சிய
அந்தக்
குரங்கை
ஸாமான்யமென்று
அலக்ஷ்யம்
செய்யக்
கூடாது.
Prose passage
▾
Meaning
Keep
வாலியையும்
ஸுக்ரீவனையும்
மஹாபலசாலியான
ஜாம்பவானையும்
ஸேனாதிபதியான
நீலனையும்
த்விவிதன்
முதலிய
மற்ற
வானரர்களையும்
பார்த்திருக்கிறேன்.
அவர்கள்
அதிக
பராக்கிரமசாலிகளானாலும்
அவர்களுடைய
ஸஞ்சாரமும்
தேஜஸும்
பராக்கிரமமும்
புத்தியும்
ஸத்வமும்
உத்ஸாஹமும்
இப்படியல்ல.
இந்தப்
பெரிய
ஜந்து
நினைத்த
ரூபங்களை
எடுக்கக்
கூடியது.
ஆகையால்
நீங்கள்
எப்படியாவது
இதை
ஜயிக்க
வேண்டியது.
இந்திரனும்
தேவர்களும்
அஸுரர்களும்
மனுஷ்யர்களும்
மூன்று
லோகங்களிலுமுள்ள
மற்றப்
பிராணிகளும்
ஒன்று
சேர்ந்தாலும்
உங்களுக்கு
முன்நிற்க
முடியாதென்று
எனக்குத்
தெரியும்.
ஆனாலும்
யுத்தத்தில்
ஜயமும்
அபஜயமும்
நிச்சயமல்ல.
ராஜநீதியை
அறிந்து
யுத்தத்தில்
ஜயம்
பெற
வேண்டுமென்று
விரும்புகிறவன்
தன்னை
நன்றாய்
ரக்ஷித்துக்
கொள்ளவேண்டும்”
என்று
ஆக்ஞாபித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அக்னியைப்போல்
ஜ்வலிக்கும்
அந்தப்
பிரதாபவீரர்கள்
அரசனுடைய
உத்திரவை
அங்கீகரித்துத்
தேர்களோடும்
மதயானைகளோடும்
மஹாவேகமுள்ள
குதிரைகளோடும்
ஸகல
ஸைன்யங்களோடும்
தீக்ஷ்ணமான
ஆயுதங்களை
எடுத்துக்கொண்டு
அதிவேகமாய்
வெளிக்கிளம்பினார்கள்.
பாலஸூர்யனைப்போல்
தன்
தேஜஸாகிற
கிரணங்களால்
சூழப்பட்டு
பிரகாசிக்கும்
ஆஞ்ஜநேயர்
அந்த
தோரணவாசலின்
உச்சியில்
உட்கார்ந்திருப்பதைக்
கண்டார்கள்.
அவர்
உத்ஸாஹத்திலும்
ஸத்வத்திலும்
பலத்திலும்
புத்தியிலும்
வேகத்திலும்
ரூபத்திலும்
நிகரில்லாதவர்.
நான்கு
புறங்களிலிருந்தும்
பயங்கரமான
ஆயுதங்களுடன்
ராக்ஷஸர்கள்
அவர்மேல்
பாய்ந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
துர்த்தரன்,
கருநெய்தல்
புஷ்பத்தைப்போல்
காந்தியுள்ள
ஐந்து
பாணங்களால்
அவருடைய
தலையில்
அடித்தான்.
அவை
இரும்பால்
செய்யப்பட்டவை;
உக்ரமானவை;
பச்சை
வர்ணமுள்ளவை;
ஹிருதயத்தைப்
பிளக்கக்கூடியவை.
உடனே
மாருதி
ஸகல
திக்குகளும்
பிளக்கும்படி
கர்ஜித்துக்கொண்டு
ஆகாசத்தில்
தாவினார்.
பிறகு
துர்த்தரனென்ற
வீரன்
ரதத்திலிருந்து
இடைவிடாமல்
அவர்மேல்
பாணங்களை
வர்ஷித்தான்.
மழைக்காலத்தின்
முடிவில்
காற்று
நீருண்ட
மேகங்களைச்
சிதறவடிப்பதுபோல்
பாணவர்ஷங்களைப்
பொழிகிற
துர்த்தரனை
மாருதி
தன்
வேகத்தால்
தடுத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அவன்
தன்னை
மிகவும்
உபத்திரவிப்பதைக்
கண்டு,
ரூபத்தை
விருத்தி
செய்துகொண்டு,
மஹாவேகத்துடன்
ஆகாசத்தில்
வெகுதூரம்
கிளம்பி
அவனுடைய
தேரில்
இடிக்கூட்டங்கள்
மலையில்
விழுந்தாற்போல்
சீக்கிரமாய்க்
குதித்தார்.
உடனே
அந்தத்
தேர்
ஏர்க்கால்
முறிந்து
தூளாயிற்று;
எட்டுக்
குதிரைகளும்
இறந்தன;
துர்த்தரனும்
பிணமாய்ப்
பூமியில்
விழுந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கண்டு
பிறரால்
ஜயிக்கமுடியாத
யூபாக்ஷனும்
விரூபாக்ஷனும்
வெகு
ரோஷம்
கொண்டு
மாருதியின்மேல்
பாய்ந்து,
முத்கரமென்ற
ஆயுதத்தால்
மார்பில்
அடித்தார்கள்.
கருடனைப்
போன்ற
பலபராக்கிரமமுள்ள
ஆஞ்ஜநேயர்
அவர்களுடைய
வேகத்தை
அடக்கி,
மறுபடியும்
பூமியில்
குதித்து,
ஓர்
ஆச்சாமரத்தைப்
பிடுங்கிக்கொண்டு
அவ்விரண்டு
ராக்ஷஸர்களையும்
அடித்துக்
கொன்றார்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கண்டு
பிரகஸன்
ஒரு
பட்டாக்கத்தியுடனும்
பாஸகர்ணன்
கூர்மையான
நுனியையுடைய
சூலாயுதத்துடனும்
ஆஞ்ஜநேயர்
மேல்
பாய்ந்து
யுத்தம்
செய்தார்கள்.
அவர்களால்
தேகமெங்கும்
காயப்பட்டு
ரத்தத்தால்
பூசப்பட்ட
மயிர்களுடன்
மாருதி
பாலஸூரியனைப்போல்
கோபத்தால்
ஜ்வலித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஒரு
பர்வத
சிகரத்தை
அதில்
வஸிக்கும்
விருக்ஷங்கள்
மிருகங்கள்
துஷ்ட
ஜந்துக்களுடன்
அலக்ஷ்யமாய்ப்
பிடுங்கி,
அதனால்
அந்த
ராக்ஷஸர்களை
அடித்துக்
கொன்று,
மற்ற
ஸைன்யங்களையும்,
குதிரைகளால்
குதிரைகளையும்,
யானைகளால்
யானைகளையும்,
காலாட்களால்
காலாட்களையும்,
ரதங்களால்
ரதங்களையும்,
தேவேந்திரன்
அஸுர
ஸைன்யத்தை
நாசம்
செய்ததுபோல்
மடித்தார்.
அடிபட்ட
யானைகளாலும்
குதிரைகளாலும்
ராக்ஷஸர்களாலும்
முறிபட்ட
ரதங்களாலும்
அந்த
யுத்த
பூமியில்
போக
வழியில்லை.
இப்படி
அந்த
வானர
சிரேஷ்டன்
பஞ்சஸேனாதிபதிகளையும்
அவர்களுடைய
வாஹனங்களையும்
ஸைன்யங்களையும்
நாசம்
செய்து
பிரளயகால
மிருத்யுவைப்போல்
மறுபடியும்
அந்த
வாசற்படியின்மேல்
உட்கார்ந்து
சற்று
இளைப்பாறினார்.
40
▾
Meaning
Keep
தத:
கபிஸ்தாந்
த்⁴வஜிநீபதீந்
ரணே
நிஹத்ய
வீராந்
ஸப³லாந்
ஸவாஹநாந்
|
ஸமீக்ஷ்ய
வீர:
பரிக்³ருஹ்ய
தோரணம்
க்ருதக்ஷண:
கால
இவ
ப்ரஜாக்ஷயே
||
Previous
←
மந்திரி குமாரர்களின் வதம்
Next
அக்ஷகுமாரனுடைய வதம்
→