Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · அக்ஷகுமாரனுடைய வதம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
அக்ஷகுமாரனுடைய
வதம்
1
▾
Meaning
Keep
ஸேநாபதீந்
பஞ்ச
ஸ
து
ப்ரமாபிதாந்
ஹநூமதா
ஸாநுசராந்
ஸவாஹநாந்
|
ஸமீக்ஷ்ய
ராஜா
ஸமரோத்³த⁴தோந்முக³ம்
குமாரமக்ஷம்
ப்ரஸமைக்ஷதாக்³ரத:
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ஒரு
வானரனால்
பஞ்சஸேனாதிபதிகளும்
ஸைன்யமும்
நாசமடைந்ததைக்
கேட்டு,
ராவணன்
தன்னைச்
சூழ்ந்திருப்பவர்களில்
யாரை
அனுப்பலாமென்று
பார்க்கையில்,
தன்
குமாரனான
அக்ஷன்
மாருதியோடு
யுத்தம்
செய்து
அவரைப்
பிடித்துவர
ஆவல்
கொண்டவனாய்
முகத்தைத்
தூக்கினான்.
அதைக்
கண்டு
ராவணனும்
கண்
ஜாடையால்
“போய்
வா”
என்று
அவனை
உத்தரவு
செய்ய
அவன்
ஸபையிலிருந்து
வெளியிற்
சென்றான்.
Prose passage
▾
Meaning
Keep
அவன்
பிரதாபசாலி;
பிராம்மண
சிரேஷ்டர்களால்
ஹோமம்
செய்து
வளர்க்கப்பட்ட
அக்கினியைப்போல்
ஜ்வலித்துக்கொண்டு,
ஸ்வர்ணத்தால்
அலங்கரிக்கப்பட்ட
வேலாயுதத்தைக்
கையிலேந்தி
யுத்தத்திற்குப்
புறப்பட்டான்.
உருக்கிவிட்ட
தங்கத்தால்
செய்யப்பட்டு
பாலஸூரியனைப்
போலப்
பிரகாசிக்கும்
பெரிய
ரதத்திலேறி
ஆஞ்ஜநேயரிருக்குமிடத்திற்குச்
சென்றான்.
Prose passage
▾
Meaning
Keep
தேவதைகளுக்கு
ஸமமான
பராக்கிரமத்தையுடைய
அந்த
அக்ஷகுமாரனுடைய
ரதம்
கடுந்தபஸால்
ஸம்பாதிக்கப்பட்டது.
உருக்கின
தங்கத்தால்
செய்யப்பட்ட
ஜன்னல்களை
உடையது.
ரத்னத்தால்
அலங்கரிக்கப்பட்ட
கொடிகளாலும்
த்வஜங்களாலும்
அழகு
பொருந்தினது.
மனோவேகமுள்ள
எட்டுக்
குதிரைகள்
பூட்டினது.
தேவர்களாலும்
அஸுரர்களாலும்
தடுக்க
முடியாதது.
யாதொரு
ஸஹாயமுமில்லாமல்
செல்லக்கூடியது.
ஸூரியனைப்போன்ற
காந்தியையுடையது.
ஆகாசத்தில்
தடையில்லாமல்
ஸஞ்சரிக்கக்கூடியது.
அதில்
அம்பறைகளும்
எட்டுக்
கத்திகளும்
சக்தி
தோமரம்
முதலிய
ஆயுதங்களும்
வரிசையாய்க்
கட்டப்பட்டிருந்தன.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
யுத்தத்திற்கு
வேண்டிய
ஸகல
பதார்த்தங்களாலும்
நிறைந்து
ஸூரியனைப்போலும்
சந்திரனைப்போலும்
மஞ்சள்
நிறமும்
வெண்மையுமுள்ள
கடிவாளங்களையுடைய
அந்த
திவ்யரதம்
ஆகாசத்தில்
ஸூரியன்
உதித்தது
போல்
ஸித்தமாய்
நிற்கக்
கண்டு
அக்ஷகுமாரன்
அதிலேறி
யுத்த
பூமிக்கு
வந்தான்.
இப்படிக்
குதிரை
யானை
ரதம்
காலாட்கள்
இவைகளுடைய
சப்தத்தால்
ஆகாசமும்
பூமியும்
இதிலுள்ள
பர்வதங்களும்
நடுநடுங்க,
யுத்தகளத்தில்
இன்னும்
யார்
வருகிறானென்று
எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
ஹநுமானுடைய
ஸமீபத்தில்
வந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஸிம்ஹத்தைப்போல்
நேத்திரங்களையுடைய
அந்த
ராக்ஷஸன்,
ஸகல
பதார்த்தங்களையும்
நாசம்
செய்யும்
காலாக்னியைப்போல்
ஜ்வலிக்கின்ற
அந்த
வாயுபுத்திரனைக்
கண்டு,
“என்ன
ஆச்சரியம்!
இந்த
ஒரு
குரங்கு
பயமில்லாமல்
நமது
நகரத்தில்
பிரவேசித்து
இவ்வளவு
ஸைன்யங்களையும்
விளையாட்டாய்க்
கொன்று
எவ்வளவு
அலக்ஷ்யமாய்
உட்கார்ந்திருக்கிறது!”
என்று
பரபரப்புடன்
மாருதியிடத்தில்
கௌரவம்
வைத்து
அவரை
உற்றுப்
பார்த்தான்.
Prose passage
▾
Meaning
Keep
மஹாபலவானும்
புத்திசாலியுமாகையால்,
அக்ஷகுமாரன்
ஹநுமானுடைய
தேகத்தையும்
பலத்தையும்
பராக்கிரமத்தையும்
அவருடைய
செய்கைகளால்
ஊஹித்து,
தனது
பலபராக்கிரமத்தையும்
ஒப்பிட்டு,
இவனை
ஜயிப்போமென்று
நிச்சயம்
கொண்டு,
பனி
நீங்கினவுடன்
உதிக்கும்
ஸூரியனைப்போல்
உக்கிரமான
தேஜஸால்
விருத்தியடைந்தான்.
பிறகு
அவருடன்
யுத்தம்
செய்ய
நிச்சயித்து,
அவர்
பிறரால்
தடுக்கமுடியாத
பராக்கிரமசாலி
என்று
கண்டு,
கோபப்பரவசனாக
அமரிக்கையாய்
யுத்தம்
செய்ய
ஏற்பாடு
செய்துகொண்டு,
ஆஞ்ஜநேயரை
மூன்று
கூர்மையான
பாணங்களால்
அடித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்
கொஞ்சம்கூட
சிரமமில்லாமல்
யுத்தம்
செய்துகொண்டு,
சத்ருக்களை
ஜயிப்போமென்ற
நிச்சயத்தால்
கர்வமடைந்திருப்பதைக்
கண்டு,
“இன்றைக்கு
எனக்கு
ஸரியான
யுத்தவீரன்
கிடைத்தான்”
என்று
ஸந்தோஷப்பட்டு
வில்லையும்
பாணங்களையும்
எடுத்துக்
கொண்டு,
மறுபடியும்
மாருதியை
உற்றுப்பார்த்து
பதக்கங்கள்
குண்டலங்கள்
முதலிய
ஸமஸ்த
ஆபரணங்களாலும்
அலங்கரிக்கப்பட்ட
பராக்கிரமசாலியான
அக்ஷகுமாரன்
அதிசீக்கிரமாய்
மாருதிக்கு
ஸமீபத்தில்
வந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
தேவர்களும்
அஸுரர்களும்
பயத்தால்
நடுங்கும்படி
அவ்விருவர்க்கும்
யுத்தம்
நேர்ந்தது;
அதற்கு
உபமானம்
சொல்ல
முடியாது.
அதைக்
கண்டு
பூமி
நடுங்கிற்று;
ஸூரியன்
பயந்து
மறைந்தான்;
காற்று
அடிக்கவில்லை;
மலைகள்
அசைந்தன;
ஆகாசத்தில்
பெரும்சப்தமுண்டாயிற்று;
ஸமுத்திரம்
கலங்கிற்று;
அக்ஷகுமாரன்
மஹாவீரன்;
பாணங்களின்
லக்ஷ்யத்தை
அறிவதிலும்
அவைகளைத்
தொடுப்பதிலும்
பிரயோகிப்பதிலும்
நிபுணன்;
தங்கக்கட்டுகளுடன்
இறகுகளால்
அலங்கரிக்கப்பட்டுக்
கூர்மையான
மூன்று
பாணங்களைக்
கடும்
விஷமுள்ள
மஹா
ஸர்ப்பங்களைப்போல்
ஹநுமானுடைய
தலையில்
பிரயோகித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
ரத்தப்
பிரவாஹத்தால்
அந்த
வானரவீரனுடைய
தேகம்
நனைந்தது;
அவர்
கண்களைக்
கோபத்தால்
உருட்டி
விழித்துப்
பாலஸூரியனைப்போல்
சிவந்து,
பாணங்களாகிற
கிரணங்களால்
சூழப்பட்டு
விளங்கினார்.
ராவணேசுவரனுடைய
புத்திரன்,
பயங்கரமான
ஆயுதங்களையும்
வில்லையும்
தரித்துத்
தன்னுடன்
யுத்தத்திற்கு
வந்து
நிற்பதைக்
கண்டு,
ஸந்தோஷத்தாலும்
யுத்த
ஆவேசத்தாலும்
பூரித்தார்.
உத்தராயணத்தில்
மத்யாஹ்னகாலத்தில்
மந்தர
பர்வதத்தின்
உச்சியிலிருந்து
லோகத்தைக்
கொளுத்தும்
ஸூரியனைப்போல்,
ஹநுமான்
கோபத்தாலும்
பலத்தாலும்
வீரியத்தாலும்
நிறைந்து,
நேத்திரங்களிலிருந்து
பறக்கும்
நெருப்புப்பொறிகளால்
அக்ஷகுமாரனையும்
அவனுடைய
வாஹனங்களையும்
ஸைன்யத்தையும்
எரித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அக்ஷகுமாரனென்ற
காளமேகம்
தங்கத்தால்
அலங்கரிக்கப்பட்ட
வில்லாகிற
இந்திரதனுஸால்
பிரகாசித்துக்கொண்டு,
ஹநுமானென்ற
பர்வதத்தில்
பாணங்களான
மழைத்தாரைகளைப்
பெய்தது.
மஹாமேகங்களுக்கு
ஸமமான
பராக்கிரமத்தையுடைய
மாருதி,
அக்ஷகுமாரன்
யுத்தத்தில்
தீரனாய்
நிமிஷத்திற்கு
நிமிஷம்
அவனுடைய
வீரியமும்
தேஜஸும்
விருத்தியடைவதைக்
கண்டு,
இன்று
நல்ல
யுத்தம்
நடக்குமென்று
ஸந்தோஷத்தால்
கர்ஜித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
காட்டில்
புல்லால்
மூடப்பட்ட
பெருங்கிணற்றில்
மதயானை
வீழ்வதுபோல்
அக்ஷகுமாரன்
பால்யத்தால்
கர்வமடைந்து,
யுத்தம்
செய்வதில்
தனக்கு
நிகரில்லை
என்ற
கொழுப்புடன்
வரவரக்
கோபத்தால்
கண்கள்
ரத்தம்போல்
சிவக்க,
யுத்தத்தில்
நிகரில்லாத
ஆஞ்ஜநேயரை
எதிர்த்தான்.
பாணவர்ஷத்தால்
அவரை
மறைக்க,
மாருதி
மேகம்போல்
கர்ஜித்துப்
புஜங்களையும்
துடைகளையும்
பயங்கரமாய்
தட்டிக்கொண்டு
ஆகாசத்தில்
கிளம்பினார்.
உடனே
பிரதாபசாலியான
அந்த
ராக்ஷஸ
வீரன்
ரதத்தைச்
செலுத்திக்
கார்மேகம்
பர்வதத்தில்
சிலைகளை
வர்ஷிப்பதுபோல்
அந்த
வானர
வீரன்மேல்
பாணங்களைப்
பிரயோகித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
மனோவேகமுள்ள
மாருதி
அதைக்
கண்டு
கோபம்
மேலிட்டு
அவைகளைத்
தன்மேல்
படாமல்
உபாயமாய்த்
தப்பித்துக்
கொண்டு,
அவைகளுக்கு
நடுவில்
காற்றைப்போல்
ஸஞ்சரித்து
ஆகாசமார்க்கத்தில்
உலாவினார்.
அக்ஷகுமாரன்
வில்லை
வளைத்து
யுத்தாவேசம்
கொண்டு
சிரேஷ்டமான
பல
பாணங்களால்
ஆகாசத்தை
மறைப்பதைக்
கண்டு,
அவனை
மெச்சி,
“இவ்வளவு
சாதுரியமாய்
யுத்தம்
செய்பவனை
ஜயிக்கும்
வழி
என்ன?”
என்று
யோசித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
அந்த
ராக்ஷஸன்
மிகவும்
தைரியமாய்
அவரைப்
புஜங்களுக்கு
நடுவில்
பாணங்களால்
பிளக்க,
ஆஞ்ஜநேயர்
பேரிடிபோல்
கர்ஜித்து,
யுத்த
ரஹஸ்யத்தை
நன்றாயறிந்தவராகையால்
அந்தச்
சிறுவனுடைய
பராக்கிரமத்தைப்
பற்றி
சற்று
யோசித்து
“பாலஸூரியனைப்
போல்
பிரகாசிக்கும்
இந்த
ராக்ஷஸன்
மஹாபலவானாய்த்
தோன்றுகிறான்;
வயதில்
சிறுவனாயிருந்தாலும்
யுத்தத்தில்
கைதேர்ந்தவர்கள்
செய்யமுடியாத
ஆச்சரியங்களைச்
செய்கிறான்.
ஸகல
யுத்த
தந்திரங்களையும்
நன்றாக
அறிந்து
பிரயோகிக்கிறான்.
இவனைக்
கொல்ல
எனக்கு
மனமில்லை.
இவன்
மஹாதைரியசாலி;
பராக்கிரமத்தில்
சிறந்தவன்;
அமரிக்கையாய்
யுத்தம்
செய்கிறவன்;
மிகுந்த
பொறுமையுள்ளவன்;
தேவகணங்களும்
மஹரிஷிகளும்
யுத்த
முறைகளில்
இவனுடைய
சௌரியத்தைக்
கண்டு
ஸந்தேகமில்லாமல்
மெச்சுவார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இவனுடைய
பராக்கிரமமும்
உத்ஸாகமும்
வரவர
விருத்தியாகின்றன.
கொஞ்சம்கூட
பயமில்லாமல்
எனக்கெதிரே
வந்து
நின்று
யுத்தத்திற்கு
அழைக்கிறான்.
கண்கூசாமல்
என்னைப்
பார்க்கிறான்.
மனோவேகமுடைய
இந்தச்
சிறுவன்
பராக்கிரமத்தால்
தேவாஸுரர்களின்
ஹிருதயத்தையும்
நடுங்கச்
செய்வான்.
க்ஷணத்திற்கு
க்ஷணம்
இவனுக்கு
யுத்தத்தில்
வீரியம்
விருத்தியடைகின்றது.
இவனை
நான்
அலக்ஷ்யம்
செய்தால்
எப்படி
ஜயிக்கமுடியும்?
ஆகையால்
இவனைக்
கொல்லவேண்டியது
அவசியம்.
வரவரப்பற்றி
எரியும்
நெருப்பை
அலக்ஷ்யம்
செய்யலாமா?”
என்று
சத்துருவின்
பராக்கிரமத்தை
இவ்விதமாய்
ஊஹித்து,
தான்
செய்யவேண்டிய
காரியத்தையும்
நிச்சயித்து,
அவனைக்
கொல்வதில்
புத்தியைச்
செலுத்தினார்.
Prose passage
▾
Meaning
Keep
அவனுடைய
ரதத்தில்
எட்டுக்
குதிரைகள்
கட்டியிருந்தன.
அவை
பலத்தால்
கொழுத்து,
வாயுவேகமுள்ளவைகளாய்,
பலவித
நடைகளிலும்
பழகி,
ரதத்தை
அலக்ஷ்யமாய்
இழுக்கக்
கூடியவை.
Prose passage
▾
Meaning
Keep
முதலில்
இவனை
ரதமில்லாமல்
செய்யவேண்டுமென்று,
ஆஞ்ஜநேயர்
ஆகாசமார்க்கத்தில்
இருந்துகொண்டே
கைகளால்
அவைகளை
அறைந்து
கொன்றார்.
உடனே
அந்தத்
திவ்யரதம்,
ஏர்க்கால்
முறிந்து,
கொடிகளறுந்து,
குதிரைகள்
மடிந்து,
பூமியில்
விழுந்தது.
அப்பொழுது
மஹாரதனான
அக்ஷகுமாரன்
அந்தத்
தேரைவிட்டு
வில்லையும்
கத்தியையும்
எடுத்துக்கொண்டு
ஆகாசத்தில்
பாய்ந்து,
யோகாப்பியாஸத்தால்
ஸ்தூலதேகத்தை
விட்டுத்
திவ்விய
தேகத்துடன்
ஸ்வர்க்கத்திற்குப்
போகும்
முனியைப்போல்
விளங்கினான்.
Prose passage
▾
Meaning
Keep
வாயுவின்
பராக்கிரமத்தையுடைய
வாயுபுத்திரன்,
தன்
தகப்பனும்
கருடனும்
ஸஞ்சரிக்கும்
ஆகாசவீதியில்
பயமில்லாமல்
தன்னை
எதிர்த்து
வரும்
அந்த
ராக்ஷஸவீரனை
ஸமயம்
பார்த்து
நெருங்கி,
அவனுடைய
கால்களை
இறுகப்
பிடித்து,
கருடன்
ஸர்ப்பத்தைச்
சுழற்றுவதுபோல்
அவனைப்
பலவிதமாய்ச்
சுழற்றி
தன்
பிதாவின்
பலத்தைப்
பிரயோகித்து,
அவனை
அடித்து
நொறுக்கித்
தேய்த்துப்
பிண்டமாக்கி
பூமியில்
வீசி
எறிந்தார்.
புஜங்கள்,
துடைகள்,
இடுப்பு,
கழுத்து
முதலிய
அவயவங்கள்
நொறுங்கி,
கட்டுகள்
தளர்ந்து,
ரத்தம்
பெருக,
அக்ஷகுமாரன்
பூமியில்
விழுந்து
உயிரை
விட்டான்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ஹநுமான்
அவனை
அடித்து
முறித்துத்
தேய்த்து
ராவணனுடைய
ஹிருதயத்தைக்
கலக்கினார்.
மஹரிஷிகளும்
கிரஹதேவதைகளும்
மஹாவிரதங்களை
அனுஷ்டித்தவர்களும்
பூதங்களும்
யக்ஷர்களும்
பன்னகர்களும்
தேவர்களும்
இந்திரனும்
ஆச்சரியம்
மேலிட்டு
ஆஞ்ஜநேயரைக்
கண்கொட்டாமல்
பார்த்தார்கள்.
ரத்தத்தைப்
போல்
சிவந்த
நேத்திரங்களையுடையவனும்
இந்திரபுத்திரனான
ஜயந்தனைப்போல்
தேஜஸ்வியுமான
அக்ஷகுமாரனை
இவ்விதமாய்க்
கொன்று,
ஹநுமான்
உத்ஸாஹம்
மேலிட்டு
மறுபடியும்
அந்த
வாசற்படியின்
மேல்
பிரளயகால
மிருத்யுவைப்போல்
நின்றார்.
38
▾
Meaning
Keep
நிஹத்ய
தம்
வஜ்ரஸுதோபம
ப்ரப⁴ம்
குமாரமக்ஷம்
க்ஷதஜோபமேக்ஷணம்
|
தமேவ
வீரோ
பி⁴ஜகா³ம
தோரணம்
க்ருதக்ஷண:
கால
இவ
ப்ரஜாக்ஷயே
||
Previous
←
பஞ்சஸேனாதிபதிகளின் வதம்
Next
ஹநுமார் பிரஹ்மாஸ்திரத்தால் கட்டுப்பட்டது
→