Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஹநுமார் பிரஹ்மாஸ்திரத்தால் கட்டுப்பட்டது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஹநுமார்
பிரஹ்மாஸ்திரத்தால்
கட்டுப்பட்டது
1
▾
Meaning
Keep
தத:
ஸ
ரக்ஷோதி⁴பதிர்
மஹாத்மா
ஹநூமதாக்ஷே
நிஹதே
குமாரே
|
மந:
ஸமாதா⁴ய
ததே³ந்த்³ரகல்பம்
ஸமாதி³தே³ஶேந்த்³ரஜிதம்
ஸரோஷம்
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அக்ஷகுமாரன்
மாருதியால்
கொல்லப்பட்டதைக்
கேட்டு,
ராவணன்
தன்
துக்கத்தை
வெளியில்
காட்டிக்கொள்ளாமல்
மனத்தைத்
தைரியப்படுத்திக்கொண்டு,
வீரியத்தில்
இந்திரனுக்கு
ஸமமான
இந்திரஜித்
என்ற
தன்
குமாரனை
வெகு
கோபத்துடன்
ஆக்ஞாபித்தான்.
“குழந்தாய்!
உனக்கு
பிரஹ்மாஸ்திரத்தின்
ரஹஸ்யம்
தெரியும்;
ஆயுதவித்யையின்
மர்மங்களை
அறிந்தவர்களுக்குள்
உன்னைப்
போன்றவர்கள்
இல்லை
தேவர்களும்
அஸுரர்களும்
உன்
பெயரைக்
கேட்டால்
அலறுகிறார்கள்.
தேவர்களையும்
இந்திரனையும்
நீ
முறியடித்தது
லோகப்பிரஸித்தமல்லவா?
பிரஹ்மதேவரைக்
கடுந்தபஸால்
ஆராதித்து
ஸகல
அஸ்திரங்களையும்
பெற்றிருக்கிறாய்.
யுத்தத்தில்
அஸுரர்களும்
இந்திரனால்
காப்பாற்றப்பட்ட
தேவகணங்களும்
உன்
அஸ்திரபலத்தின்
முன்
நிற்கமுடியவில்லை.
மூன்று
லோகங்களிலுள்ளவர்கள்
யாராயினும்,
ஹரிஹராதிகளாயிருந்தாலும்
உன்னுடன்
யுத்தம்
செய்து
கஷ்டத்தை
அடையாதவர்களில்லை.
Prose passage
▾
Meaning
Keep
புஜபலத்தாலும்
கடுந்தபஸாலும்
தன்னை
ரக்ஷித்துக்
கொண்டு
தேசகாலங்களின்
பேதங்களை
அறிந்த
மஹாபுத்திமான்
நீயே.
யுத்தங்களில்
உன்
பராக்கிரமத்திற்கு
முடியாத
காரியம்
கிடையாது.
யுத்த
ஆலோசனையில்
உன்
புத்திக்கெட்டாத
விஷயமுண்டோ?
மூன்று
லோகங்களிலுமுள்ள
ஸகலப்
பிராணிகளும்
உன்
தேகபலத்தையும்
அஸ்திரபலத்தையும்
அறியார்களா?
தபோபலத்திலும்
அஸ்திரபலத்திலும்
யுத்தத்தில்
பராக்கிரமத்திலும்
என்னைத்
தவிர
உனக்கு
ஈடில்லை.
ஆகையால்
உன்னை
யுத்தத்திற்கு
அனுப்புவதால்
ஜயம்
நிச்சயமென்று
என்
மனம்
கவலையற்றிருக்கிறது.
Prose passage
▾
Meaning
Keep
நான்
அனுப்பின
கிங்கரர்களும்
ஜம்புமாலியும்
வீரர்களான
மந்திரி
குமாரர்களும்
ஐந்து
ஸேனாதிபதிகளும்
அவர்களுடன்
சென்ற
அளவற்ற
சதுரங்கபலமும்
முடிவில்
உன்
அருமைத்
தம்பியான
அக்ஷனும்
ஒரு
அல்பக்குரங்கால்
கொல்லப்பட்டார்கள்.
ஆனால்,
எனக்கு
உன்னிடத்திலிருக்கும்
நம்பிக்கை
அவர்களிடத்தில்
இல்லவேயில்லை.
Prose passage
▾
Meaning
Keep
ஒரு
குரங்கு,
தனியாய்,
ஸஹாயமில்லாமல்,
வெகு
ஜாக்கிரதையாய்
காக்கப்பட்ட
நமது
லங்கையில்
பயமில்லாமல்
பிரவேசித்து,
இவ்வளவு
வீரர்களைக்
கொன்றதையும்,
அவனுடைய
ஸூக்ஷ்மபுத்தியையும்
அபாரபலத்தையும்
சக்தியையும்
பராக்கிரமத்தையும்
நீ
நன்றாக
ஆலோசித்து,
உனது
சக்தியையும்
ஸத்வத்தையும்
நன்றாய்
ஆலோசித்து,
உன்
பலத்திற்குத்
தகுந்த
வேகத்தை
விருத்தி
செய்து
கொள்.
அஸ்திர
ரஹஸ்யங்கள்
உன்னைப்போல்
யாருக்காவது
தெரியுமா?
இதுவரையில்
நீ
ஜயிக்காத
சத்துருக்களுண்டோ?
நீ
அந்தக்
குரங்கை
ஸமீபித்தவுடன்
உன்
ஸேனை
நாசமடையாதபடி
உன்
பலத்தையும்
சத்துருபலத்தையும்
நன்றாக
ஆலோசித்து,
ஜயமுண்டாகும்படி
யுத்தத்திற்கு
ஆரம்பம்
செய்.
Prose passage
▾
Meaning
Keep
வீரசிரேஷ்ட!
பெரிய
ஸைன்யத்தைக்
கூட்டிக்கொண்டு
அவனை
ஜயிக்கலாம்
என்று
எண்ணாதே;
அவைகளை
ஒரு
க்ஷணத்தில்
மடித்துவிடுவான்.
வஜ்ராயுதத்தால்
அவனைக்
கொல்ல
நினைக்காதே;
அவனுடைய
ஸத்வத்திற்கு
இது
ஒரு
பொருட்டா?
வாயுவிற்கும்
இவனுடைய
வேகம்
கிடையாது;
திடீரென்று
எந்தத்
திக்கிலிருந்தாவது
பாய்ந்து
அடிப்பவனிடத்தில்
வஜ்ராயுதத்தால்
பிரயோஜனமென்ன?
ஸமீபத்தில்
வரும்பொழுது
முஷ்டிகளால்
குத்திக்
கொல்வேனென்றால்,
காலாக்னியைப்
போன்றவனை
முஷ்டிகளால்
அடிக்கமுடியுமோ?
Prose passage
▾
Meaning
Keep
ஆகையால்
நான்
இதுவரையில்
சொல்லிவந்த
விஷயங்களை
நன்றாய்
ஆலோசித்துப்
பார்.
நீ
உத்தேசித்த
காரியம்
ஸித்தியாகும்பொருட்டு,
மனத்தைச்
சிதறவிடாமல்
நிறுத்தி,
வில்லை
எடுத்துக்கொண்டு
திவ்வியாஸ்திரங்களின்
மந்திரங்களை
தியானம்
செய்துகொண்டே
போ.
எப்படியாவது
ஜயத்துடன்
திரும்பி
வா.
அஸ்திரபலத்தால்
அவனைக்
கட்டலாமே
தவிர
வேறு
விதத்தால்
முடியாது.
Prose passage
▾
Meaning
Keep
‘இவ்வளவு
பயங்கரமான
சத்துருவிடத்தில்
என்னைப்போன்ற
சிறுவனை
அனுப்பிப்
பரீக்ஷிப்பதைக்
காட்டிலும்
தாங்களே
செல்லக்கூடாதா?’
என்றால்,
தன்
பரிவாரங்களிருக்கையில்
அரசன்
அவர்களை
அனுப்பாமல்
தானே
யுத்தத்திற்குப்
போவது
ராஜதர்மமல்ல;
அவைகளை
அனுஷ்டிக்கும்
எனக்கும்
அழகல்ல.
மேலும்,
யுத்தத்தில்
ஸகல
ஆயுதங்களையும்
பிரயோகிப்பதில்
உன்னைப்
போன்றவன்
இல்லை
என்று
எனக்குத்
தெரியும்.
மேலும்,
யுத்தத்தில்
சத்துருக்களை
நாசம்
செய்து
ஜயமடைவது
நமக்கு
அழகல்லவா?
இப்படிப்பட்ட
ஸமயத்தை
விட்டுவிடலாமோ?
ஆகையால்
உன்னை
அனுப்பினேன்”
என்றான்.
Prose passage
▾
Meaning
Keep
பராக்கிரமத்தில்
தேவர்களைப்
போன்ற
இந்திரஜித்
ஸாமான்ய
பலவானா?
மஹாவீரன்.
ராவணனுடைய
வார்த்தையைக்
கேட்டு,
யுத்தம்
செய்ய
ஆவல்
கொண்டு
பிதாவைப்
பிரதக்ஷிணம்
செய்தான்.
அவனுடைய
பந்துக்களும்
மித்திரர்களும்
கொண்டாட,
யுத்தம்
செய்வதில்
நோக்கமுள்ளவனாய்
வெகு
உத்ஸாஹத்துடன்
யுத்தத்திற்குப்
புறப்பட்டான்.
பிரதாப
லங்கேசுவரனுடைய
மூத்த
குமாரன்;
தாமரை
இதழ்களைப்
போன்ற
நேத்திரங்களை
உடையவன்;
மஹாதேஜஸ்வி;
தைரிய
லக்ஷ்மியால்
ஜ்வலித்துக்கொண்டு
பர்வ
காலங்களில்
பொங்கும்
மஹா
ஸமுத்திரத்தைப்போல்,
அட்டஹாசம்
செய்துகொண்டு
வெளிக்
கிளம்பினான்.
Prose passage
▾
Meaning
Keep
இந்திரனைப்போன்ற
இந்திரஜித்
நான்கு
ஸிம்ஹங்கள்
பூட்டின
உத்தம
ரதத்தில்
ஏறிச்
சென்றான்.
அவை
வேகத்தில்
கருடனைப்
போன்றவை;
ஒன்றிற்கொன்று
ஸமமானவை;
வெளுத்த
கூர்மையான
பற்களையுடையவை;
அந்த
ரதம்
எங்கும்
தடையின்றிச்
செல்லக்
கூடியது.
Prose passage
▾
Meaning
Keep
வில்லாளிகளுக்குள்
சிரேஷ்டனும்,
அஸ்திர
சஸ்திர
வித்யையில்
நிகரில்லாதவனுமான
இந்திரஜித்,
திவ்விய
ரதத்தின்மேல்
ஹநுமானிருக்குமிடத்திற்கு
வந்தான்.
அவர்
ரதகோஷத்தையும்
வில்லின்
நாணோசையையும்
கேட்டு,
நமக்குத்
தகுந்த
சத்துரு
வருகிறானென்று
அளவற்ற
ஸந்தோஷத்தை
அடைந்தார்.
யுத்த
சாஸ்திரத்தில்
நிபுணனான
ராவண
குமாரன்
அதற்குள்
பெரிய
வில்லையும்
எஃகால்
செய்யப்பட்ட
நுனிகளையுடைய
கூர்மையான
பாணங்களையும்
எடுத்துக்கொண்டு
ஆஞ்ஜநேயரை
நோக்கி
வந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
யுத்தத்தில்
உத்ஸாஹம்
கொண்டு
ஆயுதபாணியாய்
இந்திரஜித்
வருகையில்
ஸகல
திக்குகளும்
கலங்கின;
மிருகங்கள்
பயங்கரமாய்க்
கத்தின;
அந்த
அற்புதமான
யுத்தத்தைப்
பார்க்க
நாகர்களும்
யக்ஷர்களும்
ஸித்தர்களும்
மஹரிஷிகளும்
கிரஹதேவதைகளும்
நக்ஷத்திரதேவதைகளும்
கூட்டம்கூட்டமாய்
ஆகாசவீதியில்
நின்றார்கள்.
பக்ஷிகள்
இன்று
நமக்கு
நல்ல
ஆஹாரம்
கிடைக்குமென்று
உரக்கக்
கூவின.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
தன்னை
நோக்கி
ரதத்தில்
ஏறிவரும்
இந்திரஜித்தைப்
பார்த்து
ஆஞ்ஜநேயர்
ஸிம்ஹநாதம்
செய்து
சரீரத்தை
விருத்தி
செய்துகொண்டார்.
இந்திரஜித்தும்
தன்
திவ்விய
ரதத்திலிருந்துகொண்டு
வில்லை
வளைத்துஇடிபோல்
நாணோசை
செய்தான்.
பிறகு
கடும்வேகமுடையவர்களும்
மஹாபலசாலிகளும்
யுத்தவிஷயங்களில்
ஸந்தேகமற்றவர்களுமான
ஆஞ்ஜநேயரும்
இந்திரஜித்தும்
எப்பொழுதும்
விரோதிகளான
தேவாஸுர
சிரேஷ்டர்களைப்போல்
யுத்தத்திற்கு
ஆரம்பித்தார்கள்.
பிரஸித்தமான
வில்லாளியும்
மஹாரதனும்
சூரனும்
யுத்தத்தில்
ஆசையுள்ளவனுமான
ராவணபுத்திரன்
பிரயோகிக்கும்
பாணங்களை
மாருதி
தடுத்துக்கொண்டும்
சரீரத்தை
வரவரப்
பெருக்கிக்கொண்டும்
ஆகாசமார்க்கத்தில்
ஸஞ்சரித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அந்த
ராக்ஷஸன்
தங்கக்கட்டுகளாலும்
இறகுகளாலும்
அலங்கரிக்கப்பட்ட
நிமிர்ந்த
பாணங்களைப்
பிரயோகித்தான்.
அவை
நீண்டு
வெகு
கூர்மையாய்ச்
சத்துருக்களின்மேல்
வஜ்ராயுதத்தைப்போல்
வேகமாய்
விழுந்து
கொல்லும்.
பேரி
மிருதங்கம்
தப்பட்டை
முதலிய
வாத்தியங்களுடைய
சப்தத்தையும்
ரதத்தின்
கர்ஜனையையும்
நாணோசையையும்
ஸைன்யங்களின்
கோஷத்தையும்
கேட்டு,
ஹநுமார்
மறுபடியும்
உயரக்
கிளம்பி,
வில்லாளிகளுக்குள்
சிரேஷ்டனான
இந்திரஜித்
பிரயோகிக்கும்
பாணங்களைத்
தன்மேல்
விழாமல்
செய்துகொண்டு,
அவைகளுக்கு
நடுவில்
புகுந்து
புறப்பட்டு,
வீரியத்தையும்
பலத்தையும்
விருத்திசெய்துகொண்டார்.
அந்த
ராக்ஷஸன்
பாணப்
பிரயோகம்
செய்தபொழுது
கைகளை
நீட்டி
அவைகளை
விலக்கிக்கொண்டு
ஆகாசத்தில்
தாவினார்.
Prose passage
▾
Meaning
Keep
இருவரும்
அளவற்ற
வேகமுள்ளவர்கள்;
யுத்த
விஷயத்தில்
நிபுணர்கள்;
அவர்கள்
செய்யும்
யுத்தத்தைக்
கண்டு
ஸகல
பூதங்களும்
ஆச்சரியமடைந்தன.
இந்திரஜித்
ஹநுமானுடைய
மர்மத்தை
அறியமுடியவில்லை;
இருவரும்
தேவதைகளைப்போல்
பராக்கிரமசாலிகள்;
அவர்கள்
செய்யும்
யுத்தம்
பிறரால்
ஸகிக்க
முடியாமலிருந்தது.
இந்திரஜித்
மஹாபுத்திமான்;
குறிவைப்பதிலும்
அதை
அடிப்பதிலும்
மனத்தைச்
சிதறவிடாமல்
வெகு
ஜாக்கிரதையாக
இருப்பவன்.
Prose passage
▾
Meaning
Keep
“நான்
பிரயோகிக்கும்
பாணங்களெல்லாம்
நான்
நினைத்தபடி
இவன்மேல்
விழுகின்றன.
ஆனால்
இவன்
எப்படியோ
அவைகளுக்கு
அகப்படாமல்
தப்பித்துக்கொண்டு
வருகிறான்.
என்ன
ஆச்சரியம்”
என்று
தீர்க்கமாய்
யோசித்து,
“இவனைப்
பாணங்களால்
கொல்ல
முடியாது.
எப்படியாவது
மூர்ச்சை
அடையும்படி
செய்து
கட்டிக்கொண்டு
போவதே
சிரேஷ்டம்”
என்று
நிச்சயித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஸகல
அஸ்திரங்களின்
ரஹஸ்யத்தை
அறிந்த
இந்திரஜித்
“இவன்
எந்த
அஸ்திரங்களாலும்
மரணமடையான்.
இவனைக்
கட்டக்கூடியது
பிரஹ்மாஸ்திரம்
ஒன்றே”
என்று
கண்டு,
மாருதியின்மேல்
அதைப்
பிரயோகித்து
அவரைக்
கட்டிவிட்டான்.
உடனே
அவர்
செயலற்று
மூர்ச்சையடைந்து
பூமியில்
விழுந்தார்.
சற்று
நேரம்
கழித்துத்
தான்
பிரஹ்மாஸ்திரத்தால்
கட்டுப்பட்டிருப்பதையும்,
அதனால்
தன்
வேகம்
அடங்கினதையும்,
தனக்கு
முன்பு
பிரஹ்மா
கொடுத்திருக்கும்
வரத்தையும்
ஞாபகப்படுத்திக்
கொண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
“பிரஹ்மாஸ்திரத்தைத்
தவிர
என்னைக்
கட்டக்
கூடிய
அஸ்திரம்
வேறொன்றில்லை.
இதிலிருந்து
என்னை
விடுவித்துக்கொள்ள
எனக்குக்
கொஞ்ச
காலம்
சக்தி
கிடையாது.
இந்த
ரஹஸ்யத்தை
அறிந்தே
இந்த
ராக்ஷஸன்
இதைப்
பிரயோகித்திருக்கிறான்.
ஆகையால்
லோககுருவான
பிரஹ்மாவின்
ஆக்ஞைக்கு
நான்
கட்டுப்பட
வேண்டியது.
இந்த
அஸ்திரத்தின்
வீரியமோ
எல்லையற்றது.
Prose passage
▾
Meaning
Keep
ஆனால்
எனக்கு
யாதொரு
உபத்திரவம்
நேராதென்றும்
இதற்கு
ஒரு
முகூர்த்தம்
வரையில்
நான்
கட்டுப்பட்டிருக்கவேண்டுமென்றும்
பிரஹ்மா
எனக்கு
வரம்
கொடுத்திருக்கிறார்.
ஆகையால்
கொஞ்ச
நேரத்திற்கெல்லாம்
இதிலிருந்து
விடுபடுவேன்.
பிரஹ்மா
இந்திரன்
வாயு
முதலியவர்கள்
என்னை
ரக்ஷிக்கையில்,
இந்த
அஸ்திரத்தால்
கட்டப்பட்டிருந்த
போதிலும்
எனக்குக்
கொஞ்சம்கூடப்
பயமில்லை;
இந்த
ராக்ஷஸர்கள்
என்னைக்
கட்டிக்கொண்டு
போவதும்
எனக்கு
லாபம்தான்.
ராவணனைக்
கண்டு
பேசி
அவனுடைய
குணங்களையும்
பராக்கிரமத்தையும்
நன்றாக
அறியலாம்”
என்று
அசைவற்றிருந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ராக்ஷஸர்கள்
ஸமீபத்தில்
வந்து
சணல்
கயிறுகளாலும்
மரவுரிகளாலும்
அவரை
இறுக்கிக்
கட்டி
மிரட்டினார்கள்.
மாருதி
தீர்க்கமான
ஆலோசனையுள்ளவர்;
தான்
செய்யவேண்டிய
காரியத்தை
நன்றாய்
நிச்சயித்துக்கொண்டவர்;
எவ்வித
சத்துருக்களையும்
அலக்ஷ்யமாய்க்
கொல்லக்கூடியவர்;
ஆகையால்
மிகவும்
பயந்தவர்போல்
சேஷ்டையற்று,
“ஒருவேளை
ராவணன்
என்னைப்
பார்க்க
விரும்பி
வரவழைப்பான்”
என்ற
நம்பிக்கையால்
சத்துருக்கள்
தன்னைக்
கட்டுவதையும்
உபத்திரவிப்பதையும்
லக்ஷ்யம்
செய்யவில்லை.
Prose passage
▾
Meaning
Keep
சணல்
கயிற்றால்
கட்டப்பட்டவுடன்
பிரஹ்மாஸ்திரத்திலிருந்து
விடுபட்டார்.
அதனால்
கட்டப்பட்டிருக்கும்
பொழுது
வேறொன்றைக்
கொண்டு
கட்டினால்
அந்த
அஸ்திரத்தின்
வீரியம்
போய்விடும்.
Prose passage
▾
Meaning
Keep
ஹநுமார்
சணல்
கயிறால்
கட்டப்பட்டவுடன்
பிரஹ்மாஸ்திரத்திலிருந்து
விடுபட்டார்
என்றறிந்து,
மஹாபுத்திமானான
இந்திரஜித்,
“ஐயோ!
இந்த
அஸ்திரத்தைப்
பிரயோகித்திருக்கும்
பொழுது
வேறொன்றால்
கட்டக்
கூடாது
என்ற
மந்திர
ரஹஸ்யம்
இந்த
மூடர்களுக்குத்
தெரியவில்லையே!
அருமையான
அஸ்திரம்
வீணாயிற்றே!
என்
உத்தேசமும்
நிறைவேறாமற்
போயிற்றே!
இந்த
அஸ்திரம்
வீணான
பிறகு
வேறு
பிரயோஜனப்படாதே!
சிரமப்பட்டு
செய்த
இந்தப்
பெரும்
காரியத்தைக்
கெடுத்துவிட்டார்களே!
பிரஹ்மாஸ்திரத்தை
மறுபடியும்
பிரயோகிக்க
முடியாது.
இவன்
அதிலிருந்து
விடுபட்டபோதிலும்
கட்டுப்பட்டவன்போல்
காட்டிக்
கொள்கிறான்.
இதன்
ரஹஸ்யம்
எனக்குத்
தெரியவில்லை.
திடீரென்று
கிளம்பி
எல்லோரையும்
நாசம்
செய்தாலும்
செய்வான்”
என்று
கவலை
கொண்டான்.
Prose passage
▾
Meaning
Keep
ஹநுமான்
தான்
பிரஹ்மாஸ்திரத்திலிருந்து
விடுபட்டதாகக்
காட்டிக்
கொள்ளாமல்,
ராக்ஷஸர்கள்
தன்னைக்
கட்டி
இழுப்பதையும்
தடிகளாலும்
முஷ்டிகளாலும்
அடிப்பதையும்
பொறுத்துக்
கொண்டிருந்தார்.
பிறகு
அவரை
ராவணனிருக்குமிடத்திற்குக்
கொண்டு
போனார்கள்.
அங்கே
இந்திரஜித்,
“நமது
ஸைன்யங்களையும்
ஸேனாதிபதிகளையும்
கொன்று
அசோகவனத்தை
அழித்த
குரங்கைப்
பாருங்கள்”
என்று
ராவணனுக்கும்
மந்திரிகளுக்கும்
மாருதியைக்
காட்டினான்.
ஆனால்
அவர்
பிரஹ்மாஸ்திரத்திலிருந்து
விடுபட்டும்
ஏதோ
காரணத்தால்
கட்டுப்பட்டவர்
போலிருக்கிறாரென்று
அவனுக்கு
நன்றாய்த்
தெரியும்.
மயங்கின
மதயானையைப்போல்
கட்டுப்பட்டுக்
கிடக்கும்
அந்த
வானர
சிரேஷ்டனை
ராக்ஷஸர்கள்
ராவணனுக்குத்
தெரிவித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அங்கிருந்த
ராக்ஷஸ
வீரர்கள்
மாருதியைப்
பார்த்து,
“இவன்
யார்?
யாரைச்
சேர்ந்தவன்?
எங்கிருந்து
வந்தான்?
இங்கே
என்ன
காரியம்?
இவனுக்கு
வேண்டியவர்கள்
இவ்விடத்தில்
யார்”?
என்று
பலவிதமாய்
ஒருவர்க்கொருவர்
பேசிக்
கொண்டார்கள்.
பிறகு
அவரைக்
கண்டு
கோபம்
கொண்டு,
“நமது
பந்துக்களையும்
மித்திரர்களையும்
கொன்று
நம்மை
அவமானம்
செய்த
இந்தத்
துஷ்டக்
குரங்கைக்
கொல்லுங்கள்,
கொளுத்துங்கள்,
தின்னுங்கள்,
சித்திரவதை
செய்யுங்கள்”
என்று
இரைந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டுக்
கொண்டே
அந்த
வானரவீரன்
ராஜமார்க்கத்தைத்
தாண்டிச்
சென்று,
ராவணனுடைய
காலடியில்
வயது
சென்ற
மந்திரிகள்
உட்கார்ந்திருப்பதையும்,
நவரத்தினகசிதமான
அந்தக்
கொலுமண்டபத்தின்
அழகையும்
பார்த்தார்.
விகாரரூபமுள்ள
ராக்ஷஸர்களால்
அங்குமிங்கும்
இழுக்கப்பட்ட
அந்த
வானர
சிரேஷ்டனை
மஹாதேஜஸ்வியான
ராவணனும்
பார்த்தான்.
ஆஞ்ஜநேயரும்
கொஞ்சம்கூடப்
பயமில்லாமல்
அந்த
பிரதாப
லங்கேசுவரனை
உற்றுப்
பார்த்தார்.
அவன்
எல்லையற்ற
தேஜஸும்
பலமும்
பொருந்தி,
ஸமஸ்தகிரணங்களுடன்
ஜ்வலிக்கும்
ஆதித்தியனைப்போல்
பிரகாசித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ராக்ஷஸாதிபதி
மாருதியைப்
பார்த்துக்
கோபத்தால்
சிவந்த
கண்களை
உருட்டி
விழித்து,
தன்
பாதத்தடியில்
உட்கார்ந்திருப்பவர்களும்
குலத்தாலும்
ஆசாரத்தாலும்
முதிர்ந்தவர்களுமான
மந்திரிகளை
நோக்கி,
“இவனுடைய
வரலாற்றைக்
கேளுங்கள்”
என்று
ஆக்ஞாபித்தான்.
அப்படியே
அவர்கள்,
“நீ
யார்?
இங்கே
வந்த
காரணமென்ன?
இங்கே
செய்யவேண்டிய
காரியமென்ன?”
என்று
கேட்க,
ஆஞ்ஜநேயர்,
“நான்
ஒரு
தூதன்.
ஸுக்ரீவ
மஹாராஜாவால்
அனுப்பப்பட்டேன்”
என்று
சொன்னார்.
62
▾
Meaning
Keep
யதா³க்ரமம்
தை:
ஸ
கபிர்விப்ருஷ்ட:
கார்யார்த²
மர்த²ஸ்ய
ச
மூலமாதௌ³
|
நிவேத
யாமாஸ
ஹரீஶ்வரஸ்ய
தூ³த:
ஸகாஶாத்³ஹ
மாக³தோஸ்மி
||
Previous
←
அக்ஷகுமாரனுடைய வதம்
Next
ராவணன் மஹிமை
→