Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவணன் மஹிமை
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவணன்
மஹிமை
1
▾
Meaning
Keep
தத:
ஸ
கர்மணா
தஸ்ய
விஸ்மிதோ
பீ⁴மவிக்ரம:
|
ஹநூமாந்
ரோஷ
தாம்ராக்ஷோ
ரக்ஷோதி⁴ப
மவைக்ஷத
||
Prose passage
Keep
பயமில்லாமல் லங்கையில் புகுந்து சத்துருக்களைக் கலக்கின மாருதி, ஹா!ஹா! என்ன ஆச்சரியம்! ராக்ஷஸவீரர்களை ஒவ்வொருவராய் நாசம் செய்தால் முடிவில் ராவணன் நம்முடன் யுத்தத்திற்கு வருவான். அப்போது அவனுடைய பலத்தை அறியலாமென்று நான் செய்த யோசனை வீணாயிற்றே! இவன் ஸிம்ஹாஸனத்திலிருந்து இறங்காமலேயே என்னைத் தன்னிடத்திற்கு வரவழைத்துக் கொண்டானே” என்று ஆச்சரியப்பட்டார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
அவன்
ராமனுக்குச்
செய்த
அபராதத்தையும்
ஸீதையை
உபத்திரவித்ததையும்
நினைத்துக்
கோபம்
தாங்காமல்
அவனை
உற்றுப்
பார்த்தார்.
சிரஸில்
நவரத்தினகசிதமான
ஸுவர்ணகிரீடம்
முத்துமாலைகளால்
அலங்கரிக்கப்பட்டு
விளங்கிற்று.
அருமையான
நவரத்தினங்களிழைத்து
மனத்தால்
ஸிருஷ்டிக்கப்பட்டதுபோல்
விசித்திரமாய்ச்
செய்யப்பட்ட
ஸமஸ்த
ஆபரணங்களாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தான்.
விலையுயர்ந்த
வெண்பட்டை
உடுத்துக்கொண்டு,
கஸ்தூரி
புனுகு
ஜவ்வாது
முதலிய
பரிமளத்திரவியங்கள்
கலந்த
சிவப்புச்
சந்தனத்தால்
விசித்திரமான
கோடுகளை
வரைந்து
பூசப்பட்டிருந்தான்.
ரத்தத்தைப்போல்
சிவந்த
இருபது
கண்களால்
ஆஞ்ஜநேயரைப்
பயங்கரமாக
உருட்டி
விழித்தும்
பார்த்துக்கொண்டிருந்தான்.
Prose passage
▾
Meaning
Keep
உதடுகள்
தொங்கிக்கொண்டிருந்தன;
குரூரமான
கோரைப்பற்கள்
ஜ்வலித்தன;
பலவித
குரூர
ஜந்துக்கள்
ஸஞ்சரிக்கும்
சிகரங்களையுடைய
மந்தரகிரியைப்போல்
பத்துத்
தலைகளுடன்
விளங்கினான்;
கறுத்த
மைமலைபோல்
தேககாந்தியுள்ளவன்.
பூர்ண
சந்திரனைப்போல்
நாயகமணியையுடைய
முத்துஹாரம்
கொக்குகளோடு
கூடின
மேகத்தைப்போல்
மார்பில்
பிரகாசித்தது.
புஜங்களில்
கேயூரங்களும்
தோள்வளைகளும்
கட்டப்பட்டு
உத்தமமான
சந்தனம்
பூசப்பட்டிருந்தது.
அவை
ஐந்து
தலை
நாகங்களைப்போன்ற
விரல்களுடன்
பருத்துத்
திரண்டு
விளங்கின.
Prose passage
▾
Meaning
Keep
அவன்
உட்கார்ந்திருந்த
ஆஸனம்
ஸ்படிகத்தால்
செய்யப்பட்டு
சிரேஷ்டமான
ரத்தின
ஸ்தம்பங்களாலும்
விரிப்புகளாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஸர்வாலங்காரமுள்ள
ரூபவதிகள்
ஸமீபத்தில்
நான்கு
பக்கங்களிலும்
இருந்து
சாமரங்களாலும்
விசிறிகளாலும்
உபசரித்துக்கொண்டிருந்தார்கள்.
நான்கு
மஹாஸமுத்திரங்களால்
இந்தப்
பூமி
சூழப்பட்டிருப்பதைப்போல்,
துர்த்தரன்,
பிரஹஸ்தன்,
மஹா
பார்ச்வன்,
நிகும்பன்
என்ற
மந்திரிகளால்
சூழப்பட்டிருந்தான்.
அவர்கள்
மந்திராலோசனையில்
சிறந்தவர்கள்;
பலத்தால்
கர்வம்
கொண்டவர்கள்.
மேலும்,
ராவணனுக்கு
எப்பொழுதும்
மங்களத்தையே
தேடும்
புத்திமான்களான
இதர
மந்திரிகள்,
தேவர்கள்
இந்திரனைச்
சூழ்ந்திருப்பதுபோல்
அவனைச்
சுற்றி
உட்கார்ந்திருந்தார்கள்.
தேஜஸாலும்
காந்தியாலும்
பார்ப்போர்களின்
கண்
கூசும்படி,
மலையருவிகள்
பாயும்
மேருவின்
சிகரத்திலிருக்கும்
கார்
மேகத்தைப்போல்
ஸிம்ஹாஸனத்தில்
இறுமாந்து
வீற்றிருக்கும்
பிரதாபலங்கேசுவரனைப்
பார்த்து
மாருதி,
ராக்ஷஸர்கள்
தன்னை
உபத்திரவிப்பதையும்
மறந்து
அளவற்ற
ஆச்சரியமடைந்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அவனுடைய
தேஜஸால்
மயங்கி,
“என்ன
ரூபம்!
என்ன
தைரியம்!
என்ன
ஸத்வம்!
என்ன
காந்தி!
இவனுடைய
தேஜஸுக்கும்
பிரபாவத்திற்கும்
அளவில்லையோ!
ஸகல
லக்ஷணங்களும்
பொருந்தி
இருக்கின்றன.
இந்தப்
பலவான்
தர்மசாலியாக
இருந்தால்
இந்திரனையும்
ஸ்வர்க்கத்தையும்
காப்பாற்றத்
தகுந்தவனல்லவா?
தேவர்களும்
அஸுரர்களும்
ஸகல
லோகங்களும்
இவனுடைய
குரூரகிருத்யங்களாலும்
லோகத்தார்
நிந்திக்கும்படியான
நடத்தையாலும்
நடுங்குகிறார்கள்.
இவன்
கோபம்
கொண்டால்
இந்தப்
பிரபஞ்சத்தை
நாசம்
செய்து
ஸமுத்திரத்தில்
தூற்றிவிடக்கூடியவன்”
என்று
பலவிதமாக
யோசித்தார்.
20
▾
Meaning
Keep
இதி
சிந்தாம்
ப³ஹுவிதா⁴மகரோந்
மதிமாந்
ஹரி:
|
த்³ருஷ்ட்வா
ராக்ஷஸ
ராஜஸ்ய
ப்ரபா⁴வ
மமிதௌஜஸ:
||
Previous
←
ஹநுமார் பிரஹ்மாஸ்திரத்தால் கட்டுப்பட்டது
Next
ராவணனுக்கும் மாருதிக்கும் ஸம்வாதம்
→