Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ராவணனுக்கும் மாருதிக்கும் ஸம்வாதம்
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ராவணனுக்கும்
மாருதிக்கும்
ஸம்வாதம்
1
▾
Meaning
Keep
தமுத்³வீக்ஷ்ய
மஹாபாஹு:
பிங்கா³க்ஷம்
புரத:
ஸ்தி³தம்
|
கோபேந
மஹதாவிஷ்டோ
ராவணோ
லோகராவண:
||
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
லோகங்களையும்
கதறச்
செய்யும்
மஹாபலவானான
ராவணன்,
தேஜஸால்
ஜ்வலிக்கும்
ஆஞ்ஜநேயர்
மஞ்சள்
வர்ணமான
நேத்திரங்களுடன்
தனக்கெதிரில்
நிற்பதைக்
கண்டு
கோபம்
கொண்டு
“இவன்
யார்?
பூர்வத்தில்
நான்
கைலாஸகிரியைப்
பெயர்த்து
அசைக்கும்பொழுது
என்னைச்
சபித்த
நந்திகேசுவரபகவான்
இந்த
ரூபமெடுத்து
வந்திருக்கிறாரா?
அல்லது
பாணாஸுரன்
இந்த
ரூபத்துடன்
வந்திருக்கிறானோ?”
என்று
பலவிதமாய்
யோசித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ராவணன்
பிரஹஸ்தனைப்
பார்த்து
விஸ்தாரமான
அர்த்தங்களடங்கிய
வார்த்தையைக்
காலதேசங்களுக்குத்
தகுந்தபடி
சொன்னான்.
“இந்தத்
துஷ்டன்
யார்?
எங்கிருந்து
வந்தான்?
யார்
அனுப்பினார்கள்?
அசோகவனத்தை
அழித்து
ராக்ஷஸர்களை
எதற்காகப்
பயமுறுத்தினான்?
கேள்.
பிறர்
நெருங்கமுடியாத
என்
ராஜதானியில்
ஏன்
வந்தான்?
என்
ஸைன்யங்களுடன்
ஏன்
யுத்தம்
செய்தான்?
கேள்”
என்று
ஆக்ஞாபித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
பிரஹஸ்தன்,
“குரங்கே!
பயப்படாதே;
தைரியப்படுத்திக்கொள்.
உனக்கு
க்ஷேமமுண்டாகட்டும்.
இந்திரன்
உன்னை
இங்கே
அனுப்பி
இருந்தால்
வாஸ்தவத்தைச்
சொல்.
பயப்படாதே;
உன்னை
விட்டுவிடச்
சொல்லுகிறேன்.
குபேரனாவது,
யமனாவது,
வருணனாவது,
விஷ்ணுவாவது,
ராக்ஷஸேசுவரனை
ஜயிக்க
விரும்பி,
உன்னை
இந்த
ரூபத்துடன்
இங்கே
அனுப்பியிருந்தாலும்
சொல்.
நீ
ரூபத்தால்
வானரனே
தவிர
தேஜஸாலும்
பலத்தாலும்
உன்னை
வானரனென்று
சொல்லமுடியுமோ?
நிஜத்தைச்
சொல்;
உன்னை
விட்டுவிடுவோம்.
பொய்யைச்
சொன்னால்
நீ
பிழைப்பது
அரிது.
அரசனுடைய
அந்தப்புரத்தில்
எப்படிப்
பிரவேசித்தாய்?
சொல்.
எதற்காகப்
பிரவேசித்தாய்?”
என்று
கேட்டான்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்கு
ஆஞ்ஜநேயர்,
அவனை
லக்ஷ்யம்
செய்யாமல்
ராவணனைப்
பார்த்து,
இந்திரனாவது
யமனாவது
வருணனாவது
எனக்கு
யஜமானனல்ல.
குபேரனுடன்
எனக்கு
ஸ்நேஹமில்லை.
விஷ்ணு
என்னை
அனுப்பவில்லை.
நான்
வானரன்.
இது
என்
ஸ்வயரூபம்.
ராக்ஷஸ
ராஜனைப்
பார்ப்பதற்காக
இங்கே
வந்தேன்.
அந்த
உத்தேசத்துடன்
அசோகவனத்தை
அழித்தேன்.
உடனே
ராக்ஷஸர்கள்
என்னுடன்
யுத்தம்
செய்ய
வந்தார்கள்.
என்
தேகத்தை
ரக்ஷிப்பதற்காக
அவர்களுடன்
யுத்தம்
செய்தேன்.
Prose passage
▾
Meaning
Keep
தேவர்களும்
அஸுரர்களும்
அஸ்திரங்களும்
என்னைக்
கட்டுப்படுத்தாதென்று
பிரஹ்மா
எனக்கு
வரம்
கொடுத்திருக்கிறார்.
தங்களைப்
பார்க்க
விரும்பியே
பிரஹ்மாஸ்திரத்திற்குக்
கட்டுப்பட்டவன்
போலிருந்து
இந்த
ராக்ஷஸர்கள்
செய்யும்
உபத்திரவங்களை
ஸஹித்துக்
கொண்டிருக்கிறேன்.
ஒரு
ராஜகாரியமாய்த்
தங்களிடத்தில்
வந்திருக்கிறேன்.
அளவற்ற
தேஜஸுடைய
ரகுவீரனால்
நான்
இங்கே
அனுப்பப்பட்டேன்.
லங்கேசுவர!
நான்
சொல்லும்
ஹிதமான
வார்த்தைகளைக்
கேட்கவேண்டும்”
என்றார்.
19
▾
Meaning
Keep
தூ³தோஹமிதி
விஜ்³ஞேயோ
ராக⁴வஸ்
யாமிதௌஜஸ:
|
ஶ்ரூயதாம்
சாபி
வசநம்
மம
பத்²ய
மித³ம்
ப்ரபோ⁴
||
Previous
←
ராவணன் மஹிமை
Next
மாருதி ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்தது
→