Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
ராவணனுக்கு
ஹிதோபதேசம்
செய்தது
1
▾
Meaning
Keep
தம்
ஸமீக்ஷ்ய
மஹாஸத்வம்
ஸத்வவாந்
ஹரிஸத்தம:
|
வாக்ய
மர்த²வ
த³வ்யக்³ர:
தமுவாச
த³ஶாநநம்
||
Prose passage
▾
Meaning
Keep
பராக்கிரமசாலியான
ஹநுமான்
எல்லோரும்
கண்டு
நடுங்கும்
பிரபாவமுள்ள
ராவணனை
லக்ஷ்யம்
செய்யாமல்,
தான்
தனியாக
இருப்பதையும்
கணக்கில்லாத
சத்துருக்கள்
தன்னைச்
சூழ்ந்திருப்பதையும்
கவனிக்காமல்,
தான்
சொல்லும்
விஷயம்
ராவணனுக்குக்
கோபத்தை
உண்டாக்குமென்று
தெரிந்திருந்தும்
பயப்படாமல்,
விசேஷ
அர்த்தங்களடங்கிய
வார்த்தைகளைச்
சொன்னார்.
Prose passage
▾
Meaning
Keep
“லங்கேசுவர!
கிஷ்கிந்தா
நகரத்தில்
அரசு
செய்யும்
ஸுக்ரீவ
மஹாராஜர்
என்னைத்
தங்களிடத்தில்
அனுப்பினார்.
ஸஹோதரனைப்போல்
தங்களிடத்தில்
பிரியம்
வைத்த
மஹாராஜர்
தங்களுடைய
க்ஷேமத்தை
விசாரிக்கிறார்.
மஹாத்மாவாயும்
தங்களுக்கு
ஸஹோதரராயுமிருக்கும்
அவர்
சொல்லியனுப்பின
விஷயங்கள்
இஹபரஸாதகமானவை;
தர்மம்
அர்த்தமென்ற
புருஷார்த்தங்களுக்கு
ஒத்தவை;
ஆகையால்
அதைக்
கவனித்துக்
கேளுங்கள்.
Prose passage
▾
Meaning
Keep
தசரதரென்று
பிரஸித்தி
பெற்ற
ஒரு
அரசர்
இருந்தார்.
அவர்
நிகரில்லாத
சதுரங்கபலத்தையுடையவர்;
தேஜஸில்
இந்திரனைப்போன்றவர்;
பிரஜைகளை
ரக்ஷிப்பதில்
பிதாவைப்போன்றவர்.
அவருடைய
மூத்தபுத்திரனான
ராமன்
மஹாதேஜஸ்வி;
மஹாபலவான்;
எல்லோருக்கும்
ஆனந்தத்தைக்
கொடுப்பவர்;
அனுக்கிரஹிக்கவும்
சிக்ஷிக்கவும்
திறமையுள்ளவர்.
பெரியோர்களுடைய
ஆசாரத்தை
அனுஷ்டித்துப்
பிதாவின்
ஆக்ஞையால்
ராஜ்யத்தை
விட்டு,
லக்ஷ்மணனென்ற
தம்பியோடும்
ஸீதை
என்ற
பாரியையோடும்
தண்டகாரண்யத்தில்
பிரவேசித்தார்.
அங்கே
மஹாபதிவிரதையான
ஸீதை
காணாமற்போனாள்.
அவள்
விதேஹ
தேசத்தரசனான
ஜனகனென்ற
மஹாத்மாவின்
பெண்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
அவ்விருவரும்
அவளைத்
தேடிக்கொண்டு
ரிசியமூகபர்வதத்திற்கு
வந்து
ஸுக்ரீவமஹாராஜாவுடன்
ஸ்நேஹம்
செய்துகொண்டார்கள்.
ஸுக்ரீவன்
ஸீதையைத்
தேடிக்
கண்டுபிடிக்கிறேனென்று
பிரதிக்ஞை
செய்தார்.
ராமன்
ஸுக்ரீவனை
வானர
ராஜ்யத்தில்
அபிஷேகம்
செய்து
வைக்கிறேனென்று
பிரதிக்ஞை
செய்தார்.
அப்படியே
ராமன்
வாலியை
யுத்தத்தில்
கொன்று
ஸுக்ரீவனை
வானரர்களுக்கு
அதிபதியாக்கினார்.
வாலியைத்
தங்களுக்கு
இதற்குமுன்
நன்றாகத்
தெரியுமே.
அந்த
வானரசிரேஷ்டனை
ராமன்
யுத்தத்தில்
ஒரே
பாணத்தால்
அடித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
ஸத்தியவானான
ஸுக்ரீவன்
ஸீதையைத்
தேட
நிச்சயித்து
வானரஸைன்யங்களை
ஸகல
திக்குகளிலும்
அனுப்பினார்.
அவர்கள்
பூமியிலும்
ஆகாசத்திலும்
பாதாளத்திலும்
கூட்டம்கூட்டமாய்க்
கணக்கில்லாமல்
சென்று
அவளைத்
தேடிவருகிறார்கள்.
அவர்களில்
சிலர்
கருடனைப்போன்றவர்கள்;
சிலர்
வாயுவைப்போன்றவர்கள்.
ஆகையால்
அளவற்ற
வேகத்துடன்
எங்கும்
தடையில்லாமல்
செல்லக்கூடியவர்கள்.
என்
பெயர்
ஹநுமான்;
நான்
வாயுபகவானுக்குப்
பிறந்தவன்
ஸீதையைக்
கண்டுபிடிப்பதற்காக
நூறுயோஜனை
விஸ்தீர்ணமுள்ள
ஸமுத்திரத்தைத்
தாண்டி
இங்கே
வந்தேன்.
நகரமெங்கும்
தேடிப்பார்க்கையில்
ஸீதை
தங்களுடைய
கிருஹத்திலிருக்கக்
கண்டேன்.
Prose passage
▾
Meaning
Keep
தாங்கள்
மஹாபுத்திமான்;
ஸகல
சாஸ்திரங்களையும்
புருஷார்த்தங்களின்
ஸ்வரூபத்தையும்
அறிந்தவர்கள்;
கடுமையான
தவம்
செய்து
அபூர்வமான
வரங்களைப்
பெற்றவர்கள்.
ஆகையால்
பிறருடைய
பத்தினிகளை
அபகரித்துப்
பலாத்காரம்
செய்வது
தங்களுக்கு
நியாயமல்ல.
தங்களைப்போன்ற
புத்திமான்கள்
தர்மத்திற்கு
விரோதமாயும்,
பெரிய
ஆபத்துகளுக்குக்
காரணமாயும்
வேருடன்
நாசம்
செய்யக்கூடியதாயும்
இருக்கும்
காரியங்களில்
தலையிட்டுக்கொள்ள
மாட்டார்களல்லவா?
Prose passage
▾
Meaning
Keep
ராமன்
கோபம்
கொண்டு
லக்ஷ்மணனை
ஏவி
அவர்
பாணப்பிரயோகம்
செய்தால்,
தேவாஸுரர்களில்
யாராவது
எதிரில்
நிற்கமுடியுமா?
ரகுவீரனுக்கு
அபராதம்
செய்து
ஸுகமாக
இருந்தவன்
இந்த
மூன்று
லோகங்களிலும்
உண்டோ?
ஆகையால்
மூன்று
காலங்களிலும்
தங்களுக்குப்
பரம
மங்களத்தைச்
செய்யக்கூடியதும்
தர்மத்திற்கும்
அர்த்தத்திற்கும்
ஒத்ததுமான
இந்த
ஹிதோபதேசத்தை
அங்கீகரித்து
ரகுநாதனிடத்தில்
ஸீதையைக்
கொண்டுபோய்
ஒப்புவியுங்கள்.
Prose passage
▾
Meaning
Keep
வெகு
சிரமப்பட்டு
ஸீதையைக்
கண்டுபிடித்தேன்.
மேல்
நடக்கவேண்டிய
காரியங்களுக்கு
ராமனுடைய
ஆக்ஞையை
எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.
ஸீதை
சொல்லமுடியாத
துக்கத்தால்
தவித்துக்கொண்டிருப்பதைக்
கண்டேன்.
அவளை
எடுத்துவந்து
இங்கே
வைத்திருப்பது,
ஐந்துதலை
நாகத்தை
மடியில்
கட்டிக்கொள்வதுபோலாகுமென்று
தங்களுக்குத்
தோன்றவில்லையா?
‘அவளுடைய
கற்பை
அழித்துவிட்டால்
பிறகு
ராமனுக்கு
அவளால்
என்ன
பிரயோஜனம்’
என்றால்,
விஷம்
கலந்த
அன்னத்தை
வயிறு
நிறைய
புஜித்து
ஜீர்ணம்
செய்துகொள்ளமுடியுமா?
தேவாஸுரர்களும்
இவளைக்
கொண்டுபோய்
வைத்துப்
பிழைக்கவும்
முடியுமா?
கடுமையான
தவங்களையும்
சிரேஷ்டமான
தர்மங்களையும்
வெகுகாலம்
அனுஷ்டித்துப்
பெற்ற
இந்த
வஜ்ரதேகத்தையும்
தீர்க்காயுளையும்
ஐசுவரியத்தையும்
நாசம்
செய்துகொள்வது
நியாயமா?
Prose passage
▾
Meaning
Keep
‘நான்
தபோபலத்தால்
தேவர்களாலும்
அஸுரர்களாலும்
மரணமில்லை
என்ற
வரத்தைப்
பெற்றிருக்கிறேன்’
என்று
தாங்கள்
நம்பியிருக்கலாம்.
ஆனால்,
நான்
சொல்லும்
விஷயத்தைக்
கவனியுங்கள்.
ஸுக்ரீவன்
தேவனல்ல,
அஸுரனல்ல,
ராக்ஷஸனல்ல,
தானவனல்ல,
பன்னகனல்ல;
ஆகையால்
அவனிடத்திலிருந்து
எப்படி
பிராணனைக்
காப்பாற்றுவீர்கள்?
Prose passage
▾
Meaning
Keep
‘நான்
இதுவரையிலே
அனேகப்
பாபங்களைச்
செய்திருக்கிறேன்.
அவைகளின்
பலத்தை
அனுபவிக்கவேண்டியது
ஸித்தம்.
உன்
உபதேசத்தால்
பிரயோஜனமென்ன?’
என்று
நினைக்கவேண்டாம்.
ஒருவன்
தர்மத்தையும்
அதர்மத்தையும்
ஒரே
காலத்தில்
சேர்ந்து,
அனுபவிக்கமுடியுமா?
பிரகாசமும்
இருட்டும்
சேர்ந்திருக்குமா?
தர்மம்
ஸுகத்தையே
கொடுக்கும்;
அதர்மம்
துக்கத்தையே
கொடுக்கும்.
Prose passage
▾
Meaning
Keep
‘தர்மத்தால்
பாபத்தைப்
போக்கடிக்கிறான்
என்ற
சுருதிப்படி,
நான்
பூர்வத்தில்
செய்த
தர்மம்
அதர்மத்தை
அழித்துவிடாதா?
என்னை
ரக்ஷிக்காதா?’
என்று
எண்ணவேண்டாம்.
அப்படியல்ல.
தாங்கள்
செய்த
தர்மங்களெல்லாம்
ஸீதையை
அபகரிப்பதற்கு
முந்திச்
செய்தவை.
அவைகளின்
பலனாய்
அளவற்ற
போகங்களை
இதுவரையிலும்
அனுபவித்தீர்கள்.
இனி
அவைகளுக்குச்
சக்தியில்லை.
தாங்கள்
செய்த
அதர்மங்களின்
பலன்
பாக்கியிருக்கிறது.
அது
தீராத
துக்கத்தைக்
கொடுக்கும்;
வேரறுக்கும்.
ஆகையால்
தர்மபலத்தை
நம்பி
மோசம்
போகவேண்டாம்.
அதர்மத்தின்
பலத்தையும்
அதிசீக்கிரத்தில்
அனுபவிப்பீர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இது
ஒரு
அல்பக்குரங்கு
சொல்லும்
வார்த்தை
என்று
அலக்ஷ்யம்
செய்ய
வேண்டாம்;
இதில்
ஸந்தேகமில்லை.
ஆகையால்
அதற்கு
முன்னமே
விசேஷதர்மத்தைச்
செய்தால்
தப்பலாம்.
ஜனஸ்தானத்தில்
பதினாலாயிரம்
ராக்ஷஸ
வீரர்கள்
மடிந்ததையும்,
தங்களைச்
சிறையில்
வைத்த
வாலி
ஒரே
பாணத்தால்
மாண்டதையும்,
ராமனும்
ஸுக்ரீவனும்
ஸ்நேஹம்
செய்துகொண்டிருப்பதையும்
நன்றாய்
ஆலோசித்து
ஹிதமான
காரியத்தைச்
செய்யுங்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
லங்கையை
இதிலுள்ள
ராக்ஷஸர்களுடனும்
ஸைன்யங்களுடனும்
நாசம்
செய்ய
நான்
ஒருவனே
போதும்.
ஆனால்,
ரகுவீரனுக்கு
அப்படிப்பட்ட
உத்தேசமில்லை;
ஸீதையை
அபகரித்தவனை
மூலநாசம்
செய்வேனென்று
ராகவன்
வானரர்களுக்கு
முன்பாக
பிரதிக்ஞை
செய்திருக்கிறார்.
ராமனுக்கு
அபராதம்
செய்து
ஸாக்ஷாத்
தேவேந்திரனும்
பிழைப்பானோ?
அப்படியிருக்கத்
தங்களைப்போன்ற
மற்றவர்களைப்பற்றிச்
சொல்லவும்
வேண்டுமோ?
Prose passage
▾
Meaning
Keep
தங்களுடைய
ஸ்வாதீனத்தில்
இருக்கிறாளென்று
தாங்கள்
எண்ணும்
ஸீதை
லங்கையை
முற்றிலும்
நாசம்
செய்ய
வந்த
காளராத்திரி
என்ற
சக்தியென்று
அறியுங்கள்.
ஸீதையென்ற
காலபாசத்தைத்
தாங்களே
கழுத்தில்
மாட்டிக்கொள்ளவேண்டாம்.
தங்களை
ரக்ஷிக்கும்
வழியைத்
தேடுங்கள்.
மஹாபதிவிரதையான
ஸீதையின்
தவத்தாலும்
ராகவனுடைய
கோபாக்னியாலும்
இந்த
லங்காபுரி
முழுவதும்
எரிக்கப்படுவதைத்
தாங்கள்
பார்க்கவில்லையோ?
தங்களுடைய
நண்பர்களையும்
ஹிதத்தைக்
கோரும்
மந்திரிகளையும்
பந்துக்களையும்
ஸஹோதரர்களையும்
புத்திரர்களையும்
போகங்களையும்
பாரியைகளையும்
இந்த
லங்கையையும்
வீணாக
அழிக்கவேண்டாம்.
Prose passage
▾
Meaning
Keep
நான்
ஸமான்ய
வானரனல்ல;
ஸகலலோகநாதனான
ராமனே
என்னை
அடிமையாய்
ஒப்புக்கொண்டிருக்கிறார்;
என்னை
நம்பித்
தன்
அந்தப்புர
காரியத்தை
என்னிடத்தில்
ஒப்புவித்து
இங்கே
அனுப்பியிருக்கிறார்.
Prose passage
▾
Meaning
Keep
ஸத்தியம்
தர்மம்
தயை
முதலிய
கல்யாணகுணங்களின்
அவதாரமான
ரகுநாயகனுடைய
தாஸனான
நான்
சொல்லும்
வார்த்தைகள்
பொய்யாகுமோ?
பஞ்சபூதங்களால்
அமைக்கப்பட்டு,
சராசர
ஜந்துக்களுடன்
கூடியிருக்கும்
இந்தப்
பிரபஞ்சம்
முழுவதையும்
ரகுநந்தனன்
ருத்திர
ரூபியாய்
ஸம்ஹாரம்
செய்து
அப்படியே
ஸிருஷ்டிக்கச்
சக்தியுள்ளவர்;
அவருக்குப்
பிரபு
ஒருவருமில்லை,
அவருடைய
பெயர்
மஹாகீர்த்தி
என்று
சுருதி
ஸ்மிருதிகளில்
ஸித்தித்தபடி
அவர்
அளவற்ற
கீர்த்திசாலி.
தேவர்கள்,
அஸுரர்கள்,
அரசர்கள்,
யக்ஷர்கள்,
ராக்ஷஸர்கள்,
வித்தியாதரர்கள்,
கந்தர்வர்கள்,
உரகர்கள்,
ஸித்தர்கள்,
கின்னரர்கள்,
பக்ஷிகள்
முதலிய
ஸகல
பூதங்களிலும்
பராக்கிரமத்தில்
மஹாவிஷ்ணுவிற்கு
ஸமமான
ராமனுடன்
எதிர்த்து
யுத்தம்
செய்பவன்
எவ்விடத்திலும்
எக்காலத்திலும்
கிடையவே
கிடையாது.
Prose passage
▾
Meaning
Keep
ஸகல
லோகங்களுக்கும்
நாயகனும்
ராஜாதிராஜனுமான
ராமசந்திரனுக்கு
ஸஹிக்கமுடியாத
அபராதத்தைச்
செய்து
இன்னும்
பிழைத்திருக்கலாமென்று
தங்களுக்கு
ஸந்தேகமுண்டோ?
தேவர்களும்
அஸுரர்களும்
கந்தர்வர்களும்
வித்தியாதரர்களும்
நாகர்களும்
யக்ஷர்களும்
இன்னும்
மற்ற
எவர்களும்
மூன்று
லோகங்களுக்கும்
நாயகனான
ராமனுடன்
யுத்தம்
செய்ய
ஸமர்த்தர்களோ?
இவ்வளவென்ன?
ஒருவனைக்
கொல்லவேண்டுமென்று
ராமன்
ஸங்கல்பம்
செய்தபிறகு
அவரோடு
யுத்தஞ்செய்து
அவனை
இந்திரன்
காப்பாற்றமுடியுமோ?
மூன்று
லோகங்களுக்கும்
அதிபதியாயிருந்தாலும்,
விருத்திரன்
முதலிய
அஸுரர்களைக்
கொன்றிருந்தாலும்,
தன்னைப்போன்ற
முப்பத்துமுக்கோடி
தேவர்களுடைய
ஸஹாயத்தைப்
பெற்றாலும்
ஏதாவது
பிரயோஜனமுண்டோ?
அவன்
போகட்டும்.
Prose passage
▾
Meaning
Keep
‘ஸகல
பிரபஞ்சத்தையும்
ஸம்ஹாரம்
செய்யும்
ருத்திரனால்
முடியாதோ?’
என்றால்,
ஸம்ஹாரகாலத்தில்
அவருக்கு
அந்தச்
சக்தியுண்டே
தவிர
மற்ற
காலங்களில்
கிடையாது.
‘நெற்றிக்
கண்ணால்
மன்மதனையும்
பலவான்களான
திரிபுராஸுரர்களையும்
ஸம்ஹரித்தவருக்கு
இது
லக்ஷ்யமா?’
என்றால்,
அவர்கள்
அபராதிகள்.
ஆகையால்
அவர்களிடத்தில்
நேத்திராக்னி
பிரயோஜனப்படுமேயொழிய
கல்யாணகுணபரிபூர்ணனான
ராமனிடத்தில்
செல்லுமோ?
போகட்டும்.
Prose passage
▾
Meaning
Keep
பகவானுக்கு
மூத்தபுத்திரனான
பிரஹ்மாவால்
முடியாதோ?
அவர்
ருத்திரனுக்கும்
பிதாவல்லவா
என்றால்,
அவரும்
கர்மகதிக்குக்
கட்டுப்பட்டவரே.
‘மற்றவர்களைப்போல்
உத்பத்தியாகாமல்
ஸ்வயம்புவல்லவா?’
என்றால்,
ஸஹாயமில்லாமல்
என்ன
செய்யமுடியும்?
ஒரே
காலத்தில்
ஸகல
வேதங்களையும்
உச்சரிக்கக்கூடிய
மஹிமை
பொருந்தினவரல்லவா
என்றால்,
அந்த
மஹிமையும்
பிரயோஜனப்படாது.
இவர்கள்
ஒன்று
சேர்ந்தாலும்
பிரயோஜனமில்லை”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
ஹநுமான்
மஹாதைரியமாய்த்
தனக்குப்
பிரியமில்லாத
வார்த்தைகளை
ஹிதோபதேசரூபமாய்ச்
சொல்லக்
கேட்டு,
எவ்விதத்திலும்
தனக்கு
நிகரில்லை
என்று
கர்வம்
கொண்ட
ராவணன்,
கோபத்தால்
கண்களை
உருட்டி
விழித்துக்
கொஞ்சம்கூட
யோசியாமல்,
“இந்தக்
குரங்கைக்
கொன்றுவிடுங்கள்”
என்று
ஆக்ஞாபித்தான்.
46
Keep
ஸ ஸௌஷ்ட²வோபேத மதீ³நவாதி³ந:
கபேர் நிஶம்யாப்ரதிமோ (அ)ப்ரியம் வச: |
த³ஶாநந: கோப விவ்ருத்த லோசந:
ஸமாதி³ஶத் தஸ்ய வத⁴ம் மஹாகபே: | |
Previous
←
ராவணனுக்கும் மாருதிக்கும் ஸம்வாதம்
Next
விபீஷணன் ராவணனைத் தடுத்தது
→