Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · விபீஷணன் ராவணனைத் தடுத்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
விபீஷணன்
ராவணனைத்
தடுத்தது
1
▾
Meaning
Keep
தஸ்ய
தத்³வசநம்
ஶ்ருத்வா
வாநரஸ்ய
மஹாத்மந:
|
ஆஜ்ஞாபயத்³
வத⁴ம்
தஸ்ய
ராவண:
க்ரோத⁴மூர்ச்சி²த:
||
Prose passage
▾
Meaning
Keep
மாருதி
இப்படிச்
சொல்லக்
கேட்டு,
ராவணன்
கோபத்தால்
மெய்மறந்து,
“இந்தக்
குரங்கைக்
கொன்றுவிடுங்கள்”
என்று
கட்டளையிட்டான்.
அதைக்
கேட்டுக்கொண்டிருந்த
விபீஷணன்,
“ஐயோ
தன்
பிரபு
சொல்லியனுப்பிய
ஸமாசாரத்தைத்
தெரியப்படுத்தினால்
அது
தூதனுடைய
அபராதமா?
இவனைக்
கொல்வது
நியாயமல்ல.
ஆனால்
ராவணன்
கடுங்கோபம்கொண்டிருக்கிறான்;
அதிசீக்கிரத்தில்
இவனைக்
கொல்வான்.
இப்பொழுது
என்ன
செய்யலாம்”
என்று
நன்றாய்
யோசித்து,
ஒரு
முடிவு
செய்துகொண்டான்.
Prose passage
▾
Meaning
Keep
மஹாபராக்கிரமசாலியானதால்
ராவணனை
எதிர்க்கிறோமே
என்று
கொஞ்சம்கூடப்
பயப்படவில்லை.
பேசும்
திறமையுள்ளவனாகையால்
தான்
உத்தேசித்த
காரியத்தை
முடிப்போமென்று
நிச்சயமுண்டு.
ஆகையால்
ராவணனை
நமஸ்கரித்து
ஸாமோபாயத்தால்
அவனுக்கு
ஹிதமான
விஷயத்தைச்
சொன்னான்.
Prose passage
▾
Meaning
Keep
“ராக்ஷஸாதிபதியே!
பொறுத்துக்கொள்ளுங்கள்;
கோபத்தை
விடுங்கள்;
மனத்தில்
கலக்கமற்றிருங்கள்;
நான்
சொல்லும்
விஷயத்தைக்
கவனித்துக்
கேளுங்கள்.
நியாய
அநியாயங்களைப்
பகுத்தறியக்கூடிய
யோக்கியர்களான
அரசர்கள்
தூதர்களைக்
கொல்ல
மாட்டார்கள்.
பிரபோ!
இவன்
தூதன்,
அல்பக்
குரங்கு.
இவனைக்
கொல்வது
ராஜதர்மத்திற்கு
விரோதம்;
எல்லோரும்
நிந்திக்கக்கூடியது;
தங்களுடைய
பலத்திற்கும்
பராக்கிரமத்திற்கும்
கீர்த்திக்கும்
அழகல்ல.
Prose passage
▾
Meaning
Keep
தாங்கள்
பிராணிகளுக்குள்
தர்மங்களை
அறிந்தவர்கள்;
ராஜநீதியில்
மஹாநிபுணர்கள்;
நியாயாநியாயங்களைப்
பரீக்ஷித்தறிந்தவர்கள்;
பரமார்த்தஞானத்தில்
மேலானவர்கள்;
அல்ப
உபகாரத்தையும்
மறக்காதவர்கள்;
தங்களைப்போன்ற
பண்டிதர்களே
கோபத்திற்கு
இடம்
கொடுத்தால்,
சாஸ்திரங்களைப்
படிப்பது
வீண்
சிரமமல்லவா?
தாங்கள்
ராக்ஷஸாதிபதி;
ஸகல
சத்துருக்களையும்
நாசம்
செய்யும்
பராக்கிரமத்தையுடையவர்கள்;
ஸகல
விஷயங்களிலும்
தங்களுக்கு
நிகரில்லை;
ஆகையால்
தயவு
செய்து
இந்த
அனாவசியமான
பாபத்தை
நிறுத்துங்கள்.
நியாயாநியாயத்தை
விசாரித்துப்
பிறகு
இவனைத்
தண்டிக்கலாம்”
என்று
பிரார்த்தித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
அதைக்
கேட்டு
ராவணன்,
கோபம்
மேலிட்டு,
“விபீஷண!
பராக்கிரமசாலியாயிருந்தும்
இப்படிச்
சொல்லுகிறாயே.
பாபிகளைக்
கொல்வது
பாபமா?
இவனைப்போல்
பாபியுண்டோ?
ஆகையால்
இவனை
அவசியம்
கொல்லவேண்டும்”
என்று
பதில்
சொன்னான்.
Prose passage
▾
Meaning
Keep
விபீஷணன்
உத்தமபுத்திமானாகையால்,
“ஐயோ!
இவன்
சொல்வது
முற்றிலும்
தர்மவிரோதமாயிருக்கிறது.
கோபத்தால்
மெய்மறந்திருக்கிறான்.
இங்கிருக்கும்
துஷ்டர்களுக்கும்
அது
மிகவும்
பிரியமாயிருக்கிறது.
ஆனாலும்
நாம்
இப்பொழுது
சும்மா
இருக்கக்கூடாது”
என்று
எண்ணி
சிரேஷ்டமான
தத்வங்களடங்கிய
வார்த்தைகளைச்
சொன்னான்.
Prose passage
▾
Meaning
Keep
“லங்கேசுவர!
என்னிடத்தில்
தயவு
செய்யுங்கள்.
புருஷார்த்தங்களுக்கு
விரோதமில்லாமல்
நான்
சொல்லும்
வார்த்தைகளைக்
கேளுங்கள்.
‘எக்காலத்திலும்
எவ்விடத்திலும்
தூதர்களைக்
கொல்லக்கூடாது’
என்று
பெரியோர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.
‘இவன்
தூதன்
மாத்திரமல்ல;
நமது
ஸைன்யங்களையும்
வீரர்களையும்
கொன்ற
சத்ரு.
ஆகையால்
இவனைக்
கொல்வது
தோஷமில்லை’
என்றால்,
இவன்
நமது
சத்ரு.
நமக்கு
விசேஷ
கெடுதியையும்
அவமானத்தையும்
செய்திருக்கிறான்.
இவனை
வளரும்படிவிட்டால்
நம்மை
நாசம்
செய்வான்.
ஆனாலும்,
தூதனாகையால்
இவனைக்
கொல்லக்கூடாது.
Prose passage
▾
Meaning
Keep
தூதர்களைச்
சிக்ஷிப்பதற்குப்
பெரியோர்கள்
அநேக
வழிகளை
ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அங்கங்களை
விகாரப்படுத்தலாம்;
சாட்டையினால்
அடிக்கலாம்;
மொட்டையடிக்கலாம்.
இப்படி
எப்பொழுதும்
அடையாளமிருக்கக்கூடிய
தண்டனைகளை
விதித்திருக்கிறார்களேயன்றிக்
கொல்லச்
சொல்லவில்லை.
தாங்கள்
புருஷார்த்தங்களை
நன்றாக
அறிந்து
அனுஷ்டித்தவர்கள்;
ஹிதாஹிதங்களைப்
பரீக்ஷித்து
நிச்சயமான
ஞானத்தை
ஸம்பாதித்தவர்கள்.
தாங்களே
கோபத்திற்கு
உட்பட்டால்,
பலவான்கள்
கோபத்தை
எப்படி
அடக்கமுடியும்?
தர்ம
விசாரத்திலும்
லோகவியவஹாரத்திலும்
சாஸ்திரார்த்தங்களைப்
பரீக்ஷித்து
அறிவதிலும்
தங்களுக்கு
ஸமமானவர்கள்
ஒருவரும்
இல்லை.
ஸகல
ஸுராஸுரர்களுக்குள்
தாங்களே
சிரேஷ்டர்கள்.
Prose passage
▾
Meaning
Keep
இந்தக்
குரங்கைக்
கொல்வதில்
ஒரு
பிரயோஜனமும்
காணப்படவில்லை.
இவனை
அனுப்பினவர்களையல்லவா
கொல்லவேண்டும்?
சத்துருக்களால்
அனுப்பப்பட்டவன்
ஸாதுவானாலும்
துஷ்டனானாலும்
பிறர்க்குட்பட்டவன்;
பிறர்
சொன்ன
ஸமாசாரத்தைச்
சொல்கிறவன்.
அவனைக்
கொல்வது
தகாது.
இவனைக்
கொன்றுவிட்டால்
ஆகாசமார்க்கமாய்
ஸமுத்திரத்தைத்
தாண்டி
இங்கே
வரக்கூடியவன்
வேறொருவன்
இல்லை
நமது
சத்துருக்களான
ராமலக்ஷ்மணர்களுக்கு
ஸமாசாரத்தைச்
சொல்லி
நம்முடன்
யுத்தம்
செய்ய
அவர்களை
இங்கே
அழைத்து
வருவதற்கு
வேறொருவன்
இல்லை.
அந்தக்
குரூரர்கள்
தூரமான
மார்க்கத்தால்
இங்கே
வராமல்
தடைப்பட்டிருக்கிறார்கள்.
இவனை
விட்டு
விட்டால்
அவர்களை
எப்படியாவது
இங்கே
அழைத்து
வருவான்.
அப்பொழுது
அவர்களைக்
கொல்லலாம்.
Prose passage
▾
Meaning
Keep
பராக்கிரமம்
உத்ஸாஹம்
மனோதைரியம்
பூர்ணமாயுள்ள
தேவாஸுரர்களும்
தங்களை
ஜயிக்கமுடியுமோ?
ராக்ஷஸர்களுடைய
ஸகல
இஷ்டங்களையும்
பூர்த்தி
செய்து
ஸந்தோஷத்தைக்
கொடுக்கும்
தாங்கள்,
ராமலக்ஷ்மணர்களுடன்
எப்பொழுது
யுத்தம்
நேருமென்று
பரபரப்புடன்
தோள்தட்டிக்
கொண்டிருக்கும்
ராக்ஷஸ
வீரர்களுடைய
ஆசையைக்
கெடுக்கலாமா?
தங்களுடைய
ஸைன்யங்கள்
ஹிதத்தையே
கோருகிறவர்கள்;
சூரர்கள்;
ஸன்மானங்களாலும்
கௌரவத்தாலும்
வசப்பட்டவர்கள்;
உத்தம
குலத்தில்
பிறந்தவர்கள்;
காரியங்களை
நன்றாய்
வஹிக்கக்கூடியவர்கள்;
யுத்தத்தில்
கைதேர்ந்தவர்கள்;
கலங்காத
தைரியமுடையவர்கள்;
இன்னும்
அனேக
உத்தம
குணங்களையுடையவர்கள்.
ஆகையால்
இப்பொழுதே
சில
ஸைன்யங்களை
ராமலக்ஷ்மணர்களென்ற
மூடர்களிடத்தில்
அனுப்பி,
அவர்களை
அவமதித்துச்
சத்துருக்களிடத்தில்
தங்களுடைய
மஹிமையை
வெளிப்படுத்துங்கள்”
என்றார்.
Prose passage
▾
Meaning
Keep
ராவணன்
தேவர்களைக்
கதறச்
செய்பவனாயும்,
பலவானாயும்,
பராக்கிரமசாலியாயும்,
ராக்ஷஸாதிபதியாகவும்
இருப்பினும்
விபீஷணன்
ஹிதமாயும்
பிரியமாயும்
சொன்ன
வார்த்தைகளை
அங்கீகரித்தான்.
32
▾
Meaning
Keep
நிஶாசராணா
மதி⁴போ
நுஜஸ்ய
விபீ⁴ஷணஸ்
யோத்தம
வாக்யமிஷ்டம்
|
ஜக்³ராஹ
பு³த்⁴யா
ஸுரலோக
ஶத்ரு:
மஹாப³லோ
ராக்ஷஸராஜமுக்ய:
||
Previous
←
மாருதி ராவணனுக்கு ஹிதோபதேசம் செய்தது
Next
மாருதியின் வாலில் நெருப்பு வைத்தது
→