Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதியின் வாலில் நெருப்பு வைத்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதியின்
வாலில்
நெருப்பு
வைத்தது
1
▾
Meaning
Keep
தஸ்ய
தத்³வசநம்
ஶ்ருத்வா
த³ஶக்³ரீவோ
மஹாப³ல:
|
தே³ஶகாலஹிதம்
வாக்யம்
ப்⁴ராது
ருத்தரமப்³ரவீத்
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படித்
தேசகாலங்களுக்குத்
தகுந்தபடி
விபீஷணர்
சொல்லக்
கேட்டு,
ராவணன்,
“விபீஷண!
தூதர்களைக்
கொல்லக்கூடாதென்று
நீ
சொன்னது
யுக்தம்.
ஆகையால்
இவனுக்கு
வேறு
முக்கியமான
தண்டனை
தரப்படவேண்டும்.
குரங்குகளுக்குப்
பிரியமான
ஆபரணம்
வாலல்லவா?
ஆகையால்
அதில்
நெருப்பை
வைத்து
இவனை
அடித்துத்
துரத்துங்கள்.
இவனுடைய
மித்திரர்களும்
பந்துக்களும்
இவன்
அங்கஹீனமாய்
உத்ஸாஹமற்றிருப்பதைப்
பார்க்கட்டும்.
வாலில்
நெருப்பு
வைத்து
இவனை
இந்தப்
பட்டணம்
முழுவதிலும்
ஓரிடம்
பாக்கியில்லாமல்
அழைத்துப்
போங்கள்”
என்று
ஆக்ஞாபித்தான்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
ராக்ஷஸர்கள்,
மாருதி
தங்களைச்
சேர்ந்தவர்களைக்
கொன்றாரென்ற
கோபத்தால்
அவருடைய
வாலில்
பழைய
வஸ்திரங்களைச்
சுற்றினார்கள்.
காட்டில்
உலர்ந்த
கட்டைகளில்
பிடித்த
அக்னியைப்
போல்
மாருதி
விருத்தியடைந்தார்.
பிறகு
அவர்கள்
வாலின்
மேல்
எண்ணெயைக்
கொட்டி
நெருப்பு
வைத்தார்கள்.
கோபத்தாலும்
ரோஷத்தாலும்
பால
ஸூரியனைப்போல்
ஜ்வலிக்கும்
ஆஞ்ஜநேயர்,
எரிந்துகொண்டிருக்கும்
வாலால்
ராக்ஷஸர்களை
அடித்துத்
தள்ளினார்.
துஷ்டக்
குரங்கின்
வாலில்
நெருப்பு
வைத்ததைப்
பார்க்க
ஸ்த்ரீகளும்
சிறுவர்களும்
கிழவர்களும்
ஸந்தோஷமாய்
ஓடிவந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அடித்துத்
தள்ளிய
பிறகும்
மேல்
விழுந்து
தன்னைக்
கட்டுவதைக்
கண்டு,
“இவர்கள்
என்னை
எந்த
விதமாய்க்
கட்டினாலும்,
ஒரு
பொருட்டா?
நினைத்தவுடன்
கட்டுகளை
அறுத்தெறிந்து
இவர்களைப்
பொடி
செய்வேன்.
நான்
இவர்களுக்குச்
செய்த
கெடுதிக்கு
சிக்ஷையாகுமா?
இவ்வளவு
ராக்ஷஸர்களையும்
நான்
ஒருவனே
யுத்தத்தில்
கொல்லக்கூடியவன்.
ஆனால்
ராவணனையும்
லங்கையையும்
நாசம்
செய்வதாக
ராமன்
பிரதிக்ஞை
செய்திருக்கிறபடியால்
நான்
யுத்தம்
செய்வதை
விட்டு
லங்கையைச்
சுற்றிப்
பார்த்துப்
போவேன்.
இவர்கள்
செய்யும்
அவமானங்களையெல்லாம்
பொறுப்பேன்.
Prose passage
▾
Meaning
Keep
இந்த
லங்கா
நகரத்தையும்,
கோட்டைகள்,
கொத்தளங்கள்,
அரண்கள்
முதலியவைகளையும்
ராத்திரியில்
பார்த்தேன்.
ஆனால்
பகலில்
மறுபடியும்
கவனித்துப்
பார்க்கவேண்டும்.
என்னை
ஓரிடம்
பாக்கியில்லாமல்
கொண்டு
போகும்படி
ராவணன்
உத்தரவு
செய்தது
இந்தக்
காரியத்திற்கும்
அனுகூலமாகவே
இருக்கிறது.
பிறகு
இங்கே
யுத்தம்
செய்யும்பொழுதும்,
இந்தப்
பாபிகள்
ஸீதையை
எவ்விடத்தில்
ஒளித்தாலும்
கண்டுபிடிக்கும்படிக்கு
நான்
போகும்போது
எல்லா
இடங்களையும்
கவனித்துக்கொண்டு
போகவேண்டும்.
இவர்கள்
என்னைக்
கட்டி
வாலைக்
கொளுத்தி
வேண்டியவரையில்
ஹிம்ஸிக்கட்டும்.
என்
மனதில்
கொஞ்சம்கூட
ஆயாஸமுண்டாகவில்லை”
என்று
முடிவு
செய்தார்.
Prose passage
▾
Meaning
Keep
மஹாபலவானானாலும்,
தன்
ஸ்வபாவத்தை
மறைத்து
அல்பக்
குரங்கைப்போல்
காட்டிக்கொள்ளும்
ஆஞ்ஜநேயரை
ராக்ஷஸர்கள்
பிடித்துக்கொண்டு
வெகு
ஸந்தோஷமாய்
நகரத்தைச்
சுற்றிவந்தார்கள்.
“கணக்கில்லாத
ராக்ஷஸவீரர்களைக்
கொன்ற
இந்தத்
துஷ்டக்
குரங்கைக்
கட்டிக்கொண்டு
வந்திருக்கிறோம்”
என்று
தோள்தட்டிக்
கர்ஜித்து,
சங்கம்
பேரி
முதலிய
வாத்திய
கோஷத்துடன்,
மாருதியை
அழைத்துச்
சென்றார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
எந்த
சத்துருக்களையும்
விளையாட்டாய்
நாசம்
செய்யக்கூடிய
வாயுபுத்திரன்,
ராக்ஷஸர்களால்
சூழப்பட்டு
லங்காநகரத்தை
ஜாக்கிரதையாய்ப்
பார்த்துக்கொண்டே
சென்றார்
விசித்திரமான
விமானங்களையும்
மறைவான
பூமிகிருஹங்களையும்
நன்றாய்ப்
பிரிக்கப்பட்ட
நாற்சந்திகளையும்
ராஜவீதிகளையும்,
சிறு
வீதிகளையும்,
பெரிய
உப்பரிகைகளையும்
சிறு
வீடுகளையும்
பார்த்தார்.
காவற்காரர்கள்
ராஜமார்க்கங்களிலும்
நாற்சந்திகளிலும்
மண்டபங்களிலும்
நின்று,
“இதோ
நமது
ரஹஸ்யங்களைக்
கண்டுபிடிக்க
வந்த
தூதனைப்
பாருங்கள்”
என்று
கூச்சலிட்டார்கள்.
உடனே
ஸ்த்ரீகளும்
சிறுவர்களும்
வயது
சென்றவர்களும்
ஹநுமாரையும்,
அவருடைய
வால்
நெருப்புப்பற்றி
எரிவதையும்
பார்க்க
ஆவலுடன்
கூட்டம்
கூட்டமாக
வந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
அதற்குள்
அசோகவனத்திலிருந்த
ராக்ஷஸிகள்
ஜானகியிடத்தில்
சென்று,
“ஸீதே!
சிவந்த
முகமுள்ள
ஒரு
குரங்கு
உன்னுடன்
பேசிக்கொண்டிருந்ததல்லவா?
அதன்
வாலில்
நெருப்பு
வைத்து
நகரத்தைச்
சுற்றி
அழைத்துக்கொண்டு
போகிறார்கள்”
என்றார்கள்.
தான்
உயிரைவிடப்போகும்
ஸமயத்தில்
தன்னைத்
தடுத்து,
பிரிய
நாயகனுடைய
க்ஷேமஸமாசாரத்தைத்
தெரிவித்துத்
தனக்குப்
பிராணனையும்
ஸந்தோஷத்தையும்
கீர்த்தியையும்
கொடுத்த
ஹநுமானுக்கு
இந்த
அபாயம்
நேர்ந்ததென்று
கேட்டவுடன்,
ஸீதை
தன்
பிராணனைப்
பறி
கொடுத்ததுபோல்
துக்கத்தால்
துடிதுடித்து,
மாருதிக்கு
க்ஷேமமுண்டாவதற்காக
அக்னிபகவானை
உபாஸித்தாள்.
Prose passage
▾
Meaning
Keep
மாருதியிடத்தில்
வைத்த
பிரியத்தால்
கண்கள்
மலர்ந்து,
அவருக்கு
மங்களமுண்டாகவேண்டுமென்று
கோரி,
தன்னைச்
சுத்தி
செய்துகொண்டு
அக்னியை
ஆராதித்தாள்.
“நான்
பர்த்தாவிற்கு
ஸகல
சுச்ரூஷையும்
செய்தது
நிச்சயமானால்,
நான்
இந்திரியங்களை
அடக்கி
அவரையே
தியானித்துக்கொண்டிருப்பது
நிஜமானால்,
நான்
பதிவிரதை
என்பது
நிஜமானால்,
இவற்றிற்குப்
பலனாக
தாங்கள்
ஹநுமானைத்
தஹிக்காமல்
குளிர்ந்திருக்கவேண்டும்.
மஹா
ஞானியான
ராகவனுக்கு
என்னிடத்தில்
கொஞ்சமாவது
தயை
இருப்பது
நிச்சயமானால்,
நான்
இந்தத்
துக்கத்திலிருந்து
நீங்கி
என்
நாதனுடன்
சேரும்
பாக்கியம்
எனக்கிருப்பது
நிஜமானால்,
மாருதியைத்
தஹிக்காமல்
குளிர்ந்திருக்கவேண்டும்.
நான்
நல்ல
நடத்தையுள்ளவளென்றும்,
என்
நாதனைச்
சேர
ஆவல்
கொண்டவளென்றும்
தர்மாத்மாவான
ஹநுமானுக்குத்
தெரிந்திருப்பது
நிஜமானால்,
அவனுடைய
தேகத்தைத்
தஹிக்காமல்
குளிர்ந்திருக்கவேண்டும்.
Prose passage
▾
Meaning
Keep
ஸத்தியம்
தவறாத
ஸுக்ரீவன்,
இந்தத்
துக்க
ஸமுத்திரத்திலிருந்து
என்னைக்
கரையேற்றுவாரென்பது
நிஜமானால்,
ஹநுமானைக்
கொளுத்தாமல்
குளிர்ந்திரும்”
என்று
பிரார்த்தித்தவுடன்,
அக்னிபகவான்
ஸீதைக்கு
மாருதியின்
க்ஷேமத்தைச்
சொல்லுகிறவர்போல்
உஷ்ணமான
ஜ்வாலைகளை
அடக்கிப்
பிரதக்ஷிணமாய்
அசையாமல்
எரிந்துகொண்டிருந்தார்.
வாயுபகவான்
ஸீதைக்கு
ஹிதம்
செய்ய
விரும்பி
எரிகின்ற
வாலால்
வீசும்
உஷ்ணக்காற்றைப்
பனிக்கட்டியைப்போல்
குளிர்ச்சியாக
மாற்றினார்.
Prose passage
▾
Meaning
Keep
வாலில்
நெருப்புப்பற்றி
எரிவதைக்
கண்டு
மாருதி,
“என்ன
ஆச்சரியம்!
வால்
எரிந்துகொண்டிருக்கிறது.
நெருப்பு
ஜ்வாலைகள்
வரவர
விருத்தியாகின்றன;
ஆனால்,
எனக்குக்
கொஞ்சம்கூட
உபத்திரவமில்லை.
வாலின்
நுனியில்
குளிர்ந்த
பதார்த்தங்களெல்லாவற்றையும்
ஒன்றுசேர்த்து
வைத்ததுபோலிருக்கிறது.
ஆனால்
ராமகாரியமாய்
நான்
கடலைத்
தாண்டும்பொழுது
ராகவனுடைய
மஹிமையால்
என்
சிரமநிவர்த்திக்காக
மைநாகபர்வதம்
ஸமுத்திரத்திலிருந்து
கிளம்பிற்றல்லவா?
இதுவும்
அதைப்போலிருக்கலாம்.
ஸமுத்திரத்திற்கும்
மைநாகத்திற்கும்
ராமகைங்கரியத்தில்
இருக்கும்
பரபரப்பு
அக்னிபகவானுக்கு
ஏன்
இருக்கக்கூடாது?
Prose passage
▾
Meaning
Keep
ஸீதையின்
அபாரகிருபையாலும்
ராகவனுடைய
மஹிமையாலும்
என்
பிதாவிடத்திலுள்ள
ஸ்நேஹத்தாலும்
அக்னிபகவான்
என்னைக்
கொளுத்தவில்லை”
என்று
ஒரு
முகூர்த்தகாலம்
மேல்
நடக்கவேண்டிய
ஸங்கதிகளை
யோசித்துத்
திடீரென்று
கிளம்பி
கர்ஜித்துக்கொண்டு,
பர்வதசிகரத்தைப்போல்
உயர்ந்த
நகரத்து
வாசலின்மேல்
ஏறினார்.
ஒரு
க்ஷணத்தில்
மலையைப்போல்
தேகத்தைப்
பெருக்கிக்கொண்டு,
உடனே
அதிஸூக்ஷ்மமாகச்
செய்துகொண்டு
கட்டுகளை
உதறினார்.
பிறகு
முன்போல்
பெரியரூபத்தை
எடுத்துக்கொண்டு
சுற்றிப்
பார்க்கையில்
வாசற்படியில்
வைத்திருந்த
இருப்புத்
தடியைக்
கண்டார்.
அதைக்கொண்டு
அங்கிருந்த
காவற்காரர்களையும்
சுற்றுமிருந்த
அரக்கர்களையும்
அடித்துக்
கொன்றார்.
அந்த
வானர
வீரன்
நகரத்தை
நன்றாகச்
சுற்றிப்
பார்த்து
வருகையில்
வாலின்
நுனியில்
கொழுந்துவிட்டெரியும்
அக்னியால்
ஆயிரம்
கிரணங்களோடு
விளங்கும்
ஆதித்தியனைப்போல்
தோன்றினார்.
60
▾
Meaning
Keep
ஸ
தாந்
நிஹத்வா
ரணசண்ட³விக்ரம:
ஸமீக்ஷமாண:
புநரேவ
லங்காம்
|
ப்ரதீ³ப்த
லாங்கூ³ல
க்ருதார்சிமாலீ
ப்ரகாஶ
தாதி³த்ய
இவார்சிமாலீ
||
Previous
←
விபீஷணன் ராவணனைத் தடுத்தது
Next
ஹநுமார் லங்கையைக் கொளுத்தினது
→