Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஹநுமார் லங்கையைக் கொளுத்தினது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஹநுமார்
லங்கையைக்
கொளுத்தினது
1
▾
Meaning
Keep
வீக்ஷமாணஸ்
ததோ
லங்காம்
கபி:
க்ருத
மநோரத²:
|
வர்த⁴மாந
ஸமுத்ஸாஹ:
கார்யஶேஷ
மசிந்தயத்
||
Prose passage
▾
Meaning
Keep
“ஸீதையைக்
கண்டுபிடித்து,
ராமனுடைய
விருத்தாந்தத்தை
அவளுக்குத்
தெரிவித்து
ஸமாதானம்
செய்து,
அவளுடைய
விருத்தாந்தத்தைத்
தெரிந்துகொண்டேன்.
ராக்ஷஸர்களுடைய
பலாபலத்தைப்
பரீக்ஷித்துப்
பார்த்தேன்.
ராவணனைக்
கண்டு
பேசி
அவனுடைய
அப்பிராயத்தைத்
தெரிந்துகொண்டேன்.
இனிச்
செய்யவேண்டியது
ஏதாவது
பாக்கியுண்டோ?”
என்று
ஆஞ்ஜநேயர்
வரவர
விருத்தியாகும்
உத்ஸாஹத்துடன்
நான்கு
புறங்களிலும்
கவனித்துப்
பார்த்தார்.
Prose passage
▾
Meaning
Keep
“இந்த
ராக்ஷஸர்களை
வருத்தப்படுத்தக்கூடிய
காரியம்
என்ன
செய்யலாம்?
அசோகவனத்தை
அழித்தேன்;
முக்கியமான
ராக்ஷஸவீரர்களைக்
கொன்றேன்;
ஸைன்யங்களில்
ஒரு
பாகத்தை
மடித்தேன்;
கோட்டையையும்
அரண்களையும்
அழிப்பதுதான்
மிகுதி.
கோட்டையை
அழித்தால்
நான்
இதுவரையிலும்
சிரமப்பட்டுச்
செய்த
காரியங்களெல்லாம்
பிரயோஜனமுள்ளதாகும்.
இந்த
விஷயத்தில்
அதிக
சிரமப்படாமல்
உபாயத்தால்
காரியத்தை
முடிக்கவேண்டியது.
என்னிடத்தில்
பரமகிருபை
செய்திருக்கிற
அக்னிபகவானுக்கு
இந்தக்
கட்டடங்களைப்
பலியாகக்
கொடுத்துத்
திருப்தி
செய்வேன்”
என்று
முடிவு
செய்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு,
மேகங்களில்
பாயும்
மின்னலைப்போல்
மாருதி
எரிகின்ற
வாலுடன்
லங்கையிலுள்ள
வீடுகளின்மேல்
ஸஞ்சரிக்க
ஆரம்பித்தார்.
ராக்ஷஸர்களுடைய
வீடுகளையும்
தோட்டங்களையும்
மாளிகைகளையும்
நன்றாய்ப்
பார்த்துக்கொண்டு
வீட்டிற்கு
வீடு
தாவினார்.
பிரஹஸ்தனுடைய
வீட்டில்
பாய்ந்து
அதில்
நெருப்பை
வைத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
மஹாபார்சுவன்,
வஜ்ரதம்ஷ்ட்ரன்,
சுகன்,
ஸாரணன்
இந்திரஜித்,
ஜம்புமாலி,
ஸுமாலி,
ரச்மிகேது,
ஸூர்யசத்ரு,
ஹ்ரஸ்வகர்ணன்,
தம்ஷ்ட்ரன்,
ரோமசன்,
யுத்தோன்மத்தன்,
மத்தன்,
த்வஜக்ரீவன்,
வித்யுத்ஜிஹ்வன்,
ஹஸ்திமுகன்,
கராளன்,
சோணிதாக்ஷன்,
கும்பகர்ணன்,
மகராக்ஷன்,
யக்ஞசத்ரு,
ப்ரஹ்மசத்ரு,
நராந்தகன்,
கும்பன்,
நிகும்பன்
முதலியவர்களுடைய
வீடுகளையெல்லாம்
வரிசையாய்க்
கொளுத்திக்கொண்டு
வந்தார்.
தனக்கும்
ஸீதைக்கும்
ஹிதத்தைக்
கோரின
விபீஷணனுடைய
கிருஹத்தை
மாத்திரம்
கொளுத்தவில்லை.
அந்தந்த
வீடுகளில்
தனதான்யங்களாலும்
வாஹனங்களாலும்
ஐசுவரியங்களாலும்
விளங்கும்
பாக்கியவான்களுடைய
செல்வத்தை
முற்றிலும்
நாசம்
செய்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
எல்லா
வீடுகளையும்
தாண்டி,
ராக்ஷஸாதிபதியான
ராவணனுடைய
வீட்டிற்கு
வந்தார்.
என்ன
தைரியம்!
ஸகல
லோகங்களிலும்
ஒப்பில்லாத
அந்த
அரண்மனை
பலவகை
ரத்தினங்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேருமந்தரபர்வதங்களைப்போல்
ஆகாசத்தையளாவி
ஸகல
மங்களத்
திரவியங்களாலும்
சோபித்தது.
அந்த
ராஜகிருஹத்தில்
மாருதி
தன்
வாலில்
எரியும்
நெருப்பை
வைத்துக்
கர்ஜித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
உடனே
அக்னிபகவான்
வாயுவுடன்
சேர்ந்து
காலாக்னியைப்போல்
ஜ்வலித்து
விருத்தியடைந்தார்.
வாயுவும்
அந்த
நகரத்திலுள்ள
வீடுகளிலெல்லாம்
நெருப்பைப்
பரவச்
செய்து
அதிவேகமாக
வீசினார்.
முத்துஹாரங்களாலும்
ரத்தினங்களாலும்
ஸ்வர்ண
ஜன்னல்களாலும்
பிரகாசிக்கும்
பெரிய
வீடுகள்
சாம்பலாயின.
புண்ணியத்தால்
ஸ்வர்க்கத்தை
அடைந்தவர்களுடைய
விமானங்கள்
புண்ணியகர்மங்கள்
முடிந்தவுடன்
பூமியில்
விழுவதுபோல்
வீடுகளின்
விமானங்கள்
வெடித்து
விழுந்தன.
Prose passage
▾
Meaning
Keep
ராக்ஷஸர்கள்
தங்களுடைய
வீடுகளைக்
காப்பாற்றிக்கொள்வதில்
உத்ஸாஹமற்று
அங்குமிங்கும்
ஓடிக்கொண்டு,
“ஐயோ!
இங்கே
வந்தது
குரங்கல்ல.
அக்னியே
இந்த
ரூபத்தை
எடுத்துக்கொண்டு
வந்திருக்கிறான்,
என்ன
கஷ்டம்!”
என்று
பெருங்கூச்சலிட்டார்கள்.
மாடி
வீடுகள்
நெருப்புப்
பிடித்தவுடன்
அங்கிருந்த
சில
ஸ்த்ரீகள்
தலைமயிர்
அவிழ்ந்து
அலங்கோலமாய்க்
குழந்தைகளை
எடுத்துக்கொண்டு
மேகங்களிலிருந்து
விழும்
மின்னற்கொடிகளைப்போல்
கீழே
விழுந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
வஜ்ரம்
பவழம்
முத்து
வெள்ளி
முதலியவைகளால்
விசித்திரமாகக்
கட்டப்பட்ட
வீடுகளும்
அங்குள்ள
பொன்
வெள்ளி
முதலிய
தாதுக்களும்
உஷ்ணத்தால்
உருகுவதை
மாருதி
கண்டார்.
எவ்வாறு
கட்டைகளாலும்
காய்ந்த
புற்களாலும்
அந்த
நெருப்பு
திருப்தியடையவில்லையோ
அவ்வாறே
எரிகின்ற
அக்னியால்
ஹநுமார்
திருப்தியடையவில்லை;
மரணமடைந்த
ராக்ஷஸர்களால்
பூமியும்
திருப்தியடையவில்லை!
லங்கை
முழுவதும்
நாசமடைந்தால்
ஒருவேளை
திருப்தியடைந்திருப்பார்.
அக்னிஜ்வாலைகள்
சிலவிடங்களில்
பலாச
புஷ்பங்களைப்போலவும்,
சிலவிடங்களில்
இலவம்
புஷ்பங்களைப்
போலவும்,
சிலவிடங்களில்
குங்குமத்தைப்போலவும்
காணப்பட்டன.
பூர்வ
காலத்தில்
ருத்திரன்
திரிபுரங்களை
எரித்ததுபோல்
ஹநுமான்
லங்கையை
எரித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஆஞ்ஜநேயர்
திரிகூடமென்ற
பர்வதசிகரத்திற்குப்
போனார்.
அவரால்
வைக்கப்பட்ட
அக்னி,
லங்கையில்
எல்லாவிடங்களிலும்
பரவியது.
ராக்ஷஸ
கிருஹங்களில்
பிடித்த
அக்னி
ஆகாசத்தையளாவி,
புகையில்லாமல்
கொழுந்துவிட்டெரிந்து
ராக்ஷஸர்களுடைய
சரீரமென்ற
நெய்யால்
விருத்தி
செய்யப்பட்டது.
அதுவரையில்
ராவணனுக்குப்
பயந்திருந்த
வாயுவும்
அக்னியும்
ஹநுமானால்
பயம்
நீங்கி
ஒன்றுசேர்ந்து
பிரளயகாலாக்னிபோல்
லங்கையை
நாசம்
செய்ய
ஆரம்பித்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
கோடிஸூரிய
தேஜஸுடன்
அந்தப்
பெரும்
அக்னி
லங்கையில்
ஓரிடம்
பாக்கியில்லாமல்
வியாபித்தது;
அங்கங்குள்ள
ஸகல
பதார்த்தங்களும்
வெந்து
வெடிப்பதாலுண்டான
சப்தங்கள்
ப்ரஹ்மாண்டத்தைப்
பிளப்பதுபோலிருந்தன.
பலாச
புஷ்பங்களைப்போன்ற
ஜ்வாலைகளுடன்
அக்னிபகவான்
ஆகாசம்வரையில்
வளர்ந்து
ஓங்கினார்.
அணைந்த
புகையால்
மேகங்களும்
மறைக்கப்பட்டுக்
கருநெய்தல்
புஷ்பங்களைப்போல்
காணப்பட்டன.
Prose passage
▾
Meaning
Keep
லங்கையிலுள்ள
பிராணிகளும்
வீடுகளும்
விருக்ஷங்களும்
அதிசீக்கிரமாய்
எரிந்ததைக்
கண்டு
அங்குள்ள
அனேக
புத்திமான்கள்,
“வஜ்ராயுதத்தைத்
தரித்த
தேவராஜனோ,
விருத்ராஸுரனைக்
கொன்ற
மஹேந்திரனோ,
வருணனோ,
வாயுவோ,
ருத்திரனோ,
அக்னியோ,
ஸூரியனோ,
குபேரனோ,
சந்திரனோ,
அல்லது
ஸாக்ஷாத்
காலனோ?
அல்லது
ஸகலலோகங்களையும்
ஸிருஷ்டித்த
பிரஹ்மதேவருடைய
கோபம்
இந்த
வானரரூபத்தை
எடுத்து
ராக்ஷஸர்களை
நாசம்
செய்ய
இங்கே
வந்திருக்கிறதோ?
அல்லது
தேசகாலவஸ்துக்களுக்குப்
புறம்பாயும்,
இந்திரியங்களுக்கும்
மனத்திற்கும்
எட்டாததாயும்,
ஒன்றாயுமிருக்கும்
மஹாவிஷ்ணுவின்
அத்புதமான
தேஜஸே
தன்
மாயையால்
ராக்ஷஸர்களை
அழிக்க
இப்போது
இந்த
வானர
ரூபத்தை
எடுத்துவந்திருக்கிறதோ?”
என்று
சொல்லிக்கொண்டார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
ராக்ஷஸர்களும்
குதிரைகளும்
யானைகளும்
பக்ஷிகளும்
மிருகங்களும்
விருக்ஷங்களும்
இன்னும்
லங்கையிலுள்ள
ஸகல
பதார்த்தங்களும்
ஹநுமானால்
நாசமடைந்து,
அந்த
நகரம்
கேட்போர்
பரிதவிக்கும்படி
கதறிற்று.
“ஆ!
குழந்தாய்!
ஆ!
அப்பா!
ஆ!
நாதா
ஆ!
மித்திர!
அநியாயமாய்
இறந்தீர்களே!
ஸுகத்தை
இழந்தோம்
பிராணனைப்
பறிகொடுத்தோம்;
இனி
எப்படி
பிழைப்போம்”
என்று
அலறுகிற
ராக்ஷஸர்களின்
கூச்சல்கள்
கோரமாயும்
பயங்கரமாயும்
கிளம்பின.
Prose passage
▾
Meaning
Keep
நெருப்பு
ஜ்வாலைகளால்
சூழப்பட்டு,
வீர
சிரேஷ்டர்கள்
இறந்து,
ஸைன்யங்கள்
மூலைக்குமூலை
ஓடிப்போக,
ஹநுமாருடைய
கோபத்தாலும்
பலத்தாலும்
நாசம்
செய்யப்பட்ட
லங்கை,
சாபத்தால்
அழிந்ததுபோல்
காணப்பட்டது.
பகவானுடைய
ஆக்ஞையால்
அழிந்த
பூமியைப்போல்,
ஜ்வாலைகளோடு
கூடின
அக்னியால்
லங்கை
வெந்து,
அதிலுள்ள
ராக்ஷஸர்கள்
துக்கத்தால்
பரபரப்புடன்
அங்குமிங்கும்
ஓடுவதை
ஆஞ்ஜநேயர்
கண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
நானாவிருக்ஷங்களால்
நிறைந்த
அசோகவனத்தை
அழித்து,
பெயர்
பெற்ற
ராக்ஷஸர்களை
யுத்தத்தில்
கொன்று,
அழகான
வீடுகளையே
ரத்தின
மாலையாகத்
தரித்த
லங்கையைக்
கொளுத்தி,
தான்
வந்த
காரியத்தை
நிறைவேற்றி,
திரிகூடபர்வதத்தின்
சிகரத்தில்
எரிகின்ற
வாலுடன்
உட்கார்ந்திருக்கையில்,
மாருதி
கிரணங்களால்
விளங்கும்
ஸூரியனைப்போல்
தோன்றினார்.
கணக்கற்ற
ராக்ஷஸர்களைக்
கொன்று,
மரங்களடர்ந்த
அசோகவனத்தை
அழித்து,
ராக்ஷஸர்களுடைய
வீடுகளில்
நெருப்பு
வைத்துத்
தான்
வந்த
காரியம்
நிறைவேறிற்றென்று
மனத்தால்
ஸ்ரீ
ராமனை
ஸ்மரித்து,
“ஸ்வாமி!
நான்
தங்களுடைய
ஸன்னிதியைவிட்டு
வந்தது
முதல்
நடந்த
விஷயங்களை
ஸ்தூல
தேகத்துடன்
வந்து
விக்ஞாபனம்
செய்கிறேன்;
அங்கீகரிக்கவேண்டும்”
என்று
பிரார்த்தித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
மஹாபலவானும்
வேகத்தில்
வாயுவிற்கு
ஸமமானவரும்
வாயுபுத்திரனும்
மஹாபுத்திமானும்
வானரசிரேஷ்டருமான
மாருதியை
ஸகல
தேவ
கணங்களும்
கொண்டாடினார்கள்.
அவரும்
அசோகவனத்தை
அழித்து
ராக்ஷஸர்களை
யுத்தத்தில்
கொன்று
லங்கையைக்
கொளுத்தி
மஹாதேஜஸுடன்
விளங்கினார்.
அப்பொழுது
தேவகந்தர்வ
ஸித்தகணங்களும்
மஹரிஷிகளும்,
“என்ன
தைரியம்!
என்ன
பராக்கிரமம்!
நாம்
இதுவரையில்
கண்ணெடுத்துப்
பார்க்கத்
துணியாத
இந்த
லங்கையை
இவன்
ஒருவனே
சாம்பலாக்கிவிட்டானே”
என்று
அடங்காத
ஆச்சரியமடைந்தார்கள்.
Prose passage
▾
Meaning
Keep
பிறரால்
செய்யமுடியாத
காரியங்களைச்
செய்த
மாருதி
திரிகூடசிகரத்தில்
ஜ்வலிப்பதைக்
கண்டு
ஸகலப்
பிராணிகளும்.
“இது
குரங்கல்ல.
ஸாக்ஷாத்
பிரளயகாலாக்னி”
என்று
நினைத்துப்
பயந்தன.
தேவ
கந்தர்வ
வித்யாதர
நாக
யக்ஷகணங்களும்
முனிசிரேஷ்டர்களும்
ஸகல
பூதங்களும்
ஆஞ்ஜநேயருடைய
அத்புத
கிருத்யத்தால்
அளவற்ற
ஸந்தோஷத்தை
அடைந்தார்கள்.
62
▾
Meaning
Keep
தே³வாஶ்ச
ஸர்வே
முநிபுங்க³வாஶ்ச
க³ந்த⁴ர்வ
வித்³யாத⁴ர
நாக³யக்ஷா:
|
பூ⁴தாநி
ஸர்வாணி
மஹாந்தி
தத்ர
ஜக்³மு:
பராம்
ப்ரீதி
மதுல்யரூபாம்
||
Previous
←
மாருதியின் வாலில் நெருப்பு வைத்தது
Next
ஸீதை இறந்ததாக எண்ணி மாருதி துக்கித்தது
→