Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · ஸீதை இறந்ததாக எண்ணி மாருதி துக்கித்தது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
ஸீதை
இறந்ததாக
எண்ணி
மாருதி
துக்கித்தது
1
▾
Meaning
Keep
லங்காம்
ஸமஸ்தாம்
ஸந்தீ³ப்ய
லாங்கூ³லாக்³நிம்
மஹாப³ல:
|
நிர்வாபயாமாஸ
ததா³
ஸமுத்³ரே
ஹரிஸத்தம:
||
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
லங்கை
முழுவதையும்
கொளுத்தி
வாலிலுள்ள
நெருப்பை
ஸமுத்திரத்தில்
அணைத்தார்.
எங்கும்
தீப்பிடித்து
ராக்ஷஸர்கள்
பயத்தால்
கதறச்
சுடுகாடுபோலான
லங்கையைக்
கவனித்துப்
பார்த்து
ஆஞ்ஜநேயர்
கவலை
கொண்டார்.
“ஐயோ!
இந்த
லங்கையைக்
கொளுத்தினதில்
ஒரு
பெரிய
பாபத்தைச்
செய்துவிட்டேனே!
என்ன
புத்திமோசம்
போனேன்”
என்று
அவருக்கு
அடங்காத
பயமும்
தன்னிடத்தில்
வெறுப்பும்
உண்டாயின.
Prose passage
▾
Meaning
Keep
“ஐயோ!
கொழுந்துவிட்டெரியும்
அக்னியை
ஜலத்தால்
அணைப்பதைப்போல்,
மனத்தில்
கோபம்
பொங்கி
எழுந்தபொழுது
அதைப்
புத்தியால்
அடக்குகிற
மஹாத்மாக்களல்லவா
பாக்கியசாலிகள்?
புருஷோத்தமர்கள்?
கோபத்திற்கு
இடம்
கொடுத்தவன்
எந்தப்
பாபத்தைத்தான்
செய்யமாட்டான்?
குருவையும்
கொல்வான்.
கடும்
வார்த்தைகளால்
ஸாதுக்களை
உபத்திரவிப்பான்.
தான்
பேசும்
வார்த்தைகள்
உசிதமா
இல்லையா
என்று
பார்க்கமாட்டான்.
அவன்
செய்யாத
காரியமில்லை;
சொல்லாத
வார்த்தையில்லை.
ஸர்ப்பம்
பழைய
சட்டையை
எப்படி
உரிக்குமோ
அப்படிக்
கோபமுண்டானவுடன்
அதைப்
புத்தியால்
அடக்குகிறவனே
புருஷன்.
Prose passage
▾
Meaning
Keep
நான்
பாபிகளுக்குள்
பாபி;
வெட்கமற்றவன்;
கெட்ட
புத்தியுள்ளவன்;
ஸீதை
இருக்கிறாளென்பதை
மறந்து
லங்கையில்
நெருப்பு
வைத்தேனே.
என்
புத்தியைச்
சுடவேண்டும்.
லங்கை
எரிந்தால்
அதிலுள்ள
ஜானகி
தப்புவாளா?
என்
யஜமானனுடைய
காரியத்தைப்
படுமுட்டாளான
நான்
பாழாக்கிவிட்டேனே!
எதற்காக
இவ்வளவு
காரியங்களையும்
செய்தேனோ
அதைக்
கெடுத்துவிட்டேனே!
ஸீதையை
ரக்ஷிக்கும்
ஏற்பாட்டைச்
செய்யாமல்
லங்கையில்
என்ன
புத்தியால்
நெருப்பு
வைத்தேன்?
இவ்வளவு
சிரமப்பட்டு
ஸீதையைத்
தேடிக்
கண்டுபிடித்ததும்
வீணாயிற்றே!
Prose passage
▾
Meaning
Keep
நான்
கோபத்திற்கு
இடம்
கொடுத்து
முக்கியமான
காரியத்தை
மூலநாசம்
செய்துவிட்டேன்.
லங்கையில்
சாம்பலாகாத
இடத்தைக்
காணேன்.
ஆகையால்
ஜானகி
நிச்சயமாய்
இறந்திருப்பாள்.
என்
புத்திக்
குறைவால்
இவ்வளவு
காரியமும்
வீணானால்
நான்
இப்பொழுதே
பிராணனை
விடுவது
நலம்.
இந்த
லங்கையில்
பற்றி
எரியும்
நெருப்பில்
விழலாமா?
வடவாமுகாக்னியில்
பிரவேசிக்கலாமா?
கடலில்
வாழும்
ஜந்துக்களுக்கு
இரையாக
என்
தேகத்தை
விட்டுவிடலாமா?
Prose passage
▾
Meaning
Keep
நான்
செய்ய
வந்த
ஸகல
காரியங்களையும்
கெடுத்துவிட்டு
ஸுக்ரீவனையும்
ராமலக்ஷ்மணர்களையும்
எந்தத்
தைரியத்தால்
பார்ப்பேன்?
இப்படிக்
கோபத்திற்கு
இடம்
கொடுத்து
மஹாபாபத்தைச்
செய்ததால்
நான்
குரங்கென்றும்
என்
ஜாதிஸ்வபாவமான
சாபல்யத்தைக்
காட்டிக்கொண்டேனென்றும்
மூன்று
லோகங்களிலும்
பிரஸித்தியாகும்.
ஸீதையை
ரக்ஷிக்க
எனக்குச்
சக்தியிருந்தும்
கோபத்திற்கு
இடம்
கொடுத்து
அப்படிச்
செய்ய
மறந்தேனே!
இதற்குக்
காரணமான
ரஜோகுணத்தைப்
பொசுக்கவேண்டும்,
அது
கட்டிற்கு
அடங்காதது;
ஸ்திரமில்லாதது.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதை
இறந்ததைக்
கேட்டால்
ராமலக்ஷ்மணர்கள்
இறப்பார்கள்.
உடனே
ஸுக்ரீவனும்
அவனைச்
சேர்ந்தவர்களும்
உயிரை
விடுவார்கள்.
அதைக்
கேட்டு
ராமனிடத்தில்
ஸகலப்
பிராணன்களையும்
வைத்திருக்கும்
பரதன்
உடனே
இறப்பான்.
அந்தத்
தர்மாத்மா
போனவுடன்
அவனுடைய
நிழல்
போன்ற
சத்ருக்னன்
உயிரோடிருப்பானா?
இப்படி
இக்ஷ்வாகுவம்சம்
அழிந்தால்
ஸகல
பிரஜைகளும்
துக்கத்தால்
துடிப்பார்கள்.
ஆகையால்
புருஷார்த்தங்களை
நன்றாய்
ஸம்பாதிக்காமல்
கோபத்திற்கு
இடம்
கொடுத்துக்
கோபத்திற்குட்பட்ட
நான்,
இந்தப்
பிரபஞ்சம்
முழுவதும்
நாசமடைவதற்குக்
காரணமாகிறேன்.
என்னைப்போன்ற
பாக்கியஹீனனும்
உண்டோ”
என்று
கவலை
கொண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
ஸீதையைத்
தேடிக்
காணாமல்
மனம்
சோர்ந்து
அவர்
உயிரை
விட
நிச்சயித்திருக்கையில்
சுபசகுனங்கள்
நேர்ந்ததுபோல்,
இப்போதும்
உண்டாயின.
அதைக்
கண்டு
மாருதி
ஆச்சரியமடைந்து,
“ஒருவேளை
அந்தப்
புண்ணியவதி
தன்
மஹிமையால்
ஏன்
ரக்ஷிக்கப்படக்கூடாது?
ஸகல
மங்களங்களுக்கும்
இருப்பிடமான
ஜானகிக்கு
நாசமுண்டோ?
நெருப்பு
நெருப்பைக்
கொளுத்துமா?
அளவற்ற
பராக்கிரமசாலியான
ராமமூர்த்தியின்
பாரியை
அவருடைய
தேஜஸாலும்
தன்
பதிவிரதாமஹிமையாலும்
ரக்ஷிக்கப்படுகையில்
அக்னிபகவான்
அவளைத்
தொடமுடியுமா?
ராமனுடைய
கிருபையாலும்
ஸீதையின்
புண்ணியவசத்தாலும்
அந்த
அக்னி
என்னையே
கொளுத்தவில்லையே!
லக்ஷ்மண
பரத
சத்துருக்னர்கள்
பூஜிக்கும்
தேவதையும்,
ராகவனுக்குப்
பிரிய
பாரியையுமானவள்
நாசமடைவாளா?
பதார்த்தங்களை
எரிப்பதே
தொழிலாக
உடைய
அக்னிபகவானும்
என்
வாலைக்
கொளுத்தாமலிருக்க,
ஸீதையை
மாத்திரம்
எப்படிக்
கொளுத்துவார்?”
என்று
யோசித்து
ஸமுத்திர
மத்தியிலிருந்து
மைனாகபர்வதம்
கிளம்பித்
தனக்கு
உபகாரம்
செய்த
ஆச்சரியத்தை
ஞாபகப்படுத்திக்கொண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
“ஸீதை
ஸத்தியம்
தவறாதவள்.
இந்திரியங்களை
அடக்கினவள்.
பர்த்தாவிடத்திலேயே
மனத்தை
நாட்டினவள்.
அக்னி
அவளைத்
தொட்டால்
எரிந்து
போவானே
தவிர,
அவளுக்கு
அக்னியால்
நாசமில்லை”
என்று
ஸீதையின்
பதிவிரதா
தர்மத்தின்
மஹிமையை
ஞாபகப்படுத்திக்கொண்டார்.
Prose passage
▾
Meaning
Keep
அப்பொழுது
ஆகாசத்தில்
ஸஞ்சரிக்கும்
சாரணர்கள்
“என்ன
ஆச்சரியம்!
ஹநுமான்
என்ன
காரியம்
செய்தார்!
லங்கையிலுள்ள
ராக்ஷஸகிருஹங்களில்
ஒன்று
பாக்கியில்லாமல்
நெருப்பு
வைத்துவிட்டார்.
மலையின்
குகையிலிருந்து
ஜந்துக்கள்
கதறுவதுபோல்
லங்கையில்
ராக்ஷஸர்களும்
ஸ்த்ரீகளும்
சிறுவர்களும்
கிழவர்களும்
பெரும்
கூச்சலிடுகிறார்கள்.
லங்கையிலுள்ள
அரண்மனைகளும்
கோபுரங்களும்
உப்பரிகைகளும்
நெருப்புப்பட்டு
அழிந்தன.
ஆனால்,
ஜானகி
யாதொரு
அபாயமும்
இல்லாமலிருக்கிறாள்.
இதுவல்லவா
ஆச்சரியம்”
என்று
பேசிக்கொண்டதை
மாருதி
கேட்டார்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
அனேக
சுப
சகுனங்களாலும்
முக்கியமான
காரணங்களாலும்
ஸீதையின்
க்ஷேமத்தைச்
சொல்லும்
சாரணர்களுடைய
வாக்கியங்களாலும்
ஸந்தோஷமடைந்தார்.
பிறகு
தன்
எண்ணங்கள்
நிறைவேறி,
ஸீதையை
மறுபடியும்
பிரத்யக்ஷமாய்ப்
பார்த்துவிட்டுத்
திரும்பிப்
போகலாமென்று
முடிவு
செய்தார்.
36
▾
Meaning
Keep
தத:
கபி:
ப்ராப்த
மநோரதா²ர்த²:
தாமக்ஷதாம்
ராஜஸுதாம்
விதி³த்வா
|
ப்ரத்யக்ஷதஸ்தாம்
புநரேவ
த்³ருஷ்ட்வா
ப்ரதி
ப்ரயாணாய
மதிம்
சகார
||
Previous
←
ஹநுமார் லங்கையைக் கொளுத்தினது
Next
மாருதி ஸீதையிடம் உத்தரவு பெற்றது
→