Contents
Devotion & Sacred Story
Home
Library
Find
Shelf
Settings
←
Leave
Sundara Kāṇḍam · மாருதி ஸீதையிடம் உத்தரவு பெற்றது
Tap a verse for its meaning
Tamil
Pronunciation
Meaning
Continuous
Sarga title
▾
Meaning
Keep
மாருதி
ஸீதையிடம்
உத்தரவு
பெற்றது
1
▾
Meaning
Keep
ததஸ்து
ஶிம்ஶுபாமூலே
ஜாநகீம்
பர்யவஸ்தி²தாம்
|
அபி⁴வாத்³யாப்³ரவீத்
தி³ஷ்ட்யா
பஶ்யாமி
த்வாமிஹாக்ஷதாம்
||
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
சிம்சுபா
விருக்ஷத்தினடியில்
உட்கார்ந்திருக்கும்
ஸீதையைக்
கண்டு
நமஸ்கரித்து,
“அம்மா!
இந்த
லங்கை
முழுவதும்
பற்றி
எரியும்
பொழுது
தாங்கள்
தெய்வானுக்கிரஹத்தால்
யாதொரு
அபாயமும்
இல்லாமல்
தப்பினது
என்
பாக்கியமே.
நான்
திரும்பிப்
போகும்படி
உத்திரவு
செய்யவேண்டும்”
என்று
பிரார்த்தித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அவர்
புறப்படத்
தயாராக
இருப்பதைக்
கண்டு
ஸீதை
அவரைப்
பிரியத்துடன்
அடிக்கடி
பார்த்து,
“இவன்
அசோகவனத்தை
முறித்து
ராக்ஷஸவீரர்களை
நாசம்
செய்து
லங்கையைக்
கொளுத்தின
மஹா
பராக்கிரமசாலி.
ராகவனிடத்தில்
அவர்களைக்
கொன்று,
ஸீதையை
நானே
கொண்டுவருகிறேன்”
என்று
சொன்னாலும்
சொல்வான்.
ஆனால்
அது
ராமனுக்குக்
குறைவு;
எனக்கும்
இஷ்டமில்லை.
அதைத்
தடுக்கவேண்டும்”
என்று
எண்ணி
இவ்வாறு
சொன்னாள்.
Prose passage
▾
Meaning
Keep
“ஆஞ்ஜநேய!
நீ
ஒருவனே
இங்கிருக்கும்
ஸகல
சத்துருக்களையும்
நாசம்
செய்து
என்னை
இங்கிருந்து
மீட்டுப்
போக
ஸமர்த்தன்.
அது
உனக்கு
அபாரகீர்த்தியைக்
கொடுக்கும்.
ஆனால்
ராகவனுடைய
கீர்த்தியைக்
குறைக்கும்.
ராமன்
பாணவர்ஷத்தால்
லங்கையை
மறைத்து
சத்ருக்களை
ஹதம்
செய்து
என்னை
அழைத்துப்
போவதல்லவா
அவருடைய
கீர்த்திக்கும்
வீரியத்திற்கும்
ராவணன்
செய்த
அவமானத்திற்கும்
பொருத்தமானது?
ஆகையால்
யுத்தத்தில்
பின்வாங்காத
அந்தச்
சூரனுடைய
பராக்கிரமம்
எப்படி
விளங்குமோ
அப்படி
நன்றாக
ஆலோசித்துச்
செய்”
என்றாள்.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
யுக்தியுக்தமாயும்
விநயமாயும்
ராமகாரியத்திற்கு
அனுகூலமாயும்
ஸீதை
சொன்ன
வார்த்தைகளைக்
கேட்டு
ஆஞ்ஜநேயர்,
“அம்மா!
தங்களிஷ்டப்படியே
ரகுவீரன்
வானர
ஸைன்யங்களுடன்
அதிசீக்கிரத்தில்
இங்கே
வந்து
ஸகல
சத்துருக்களையும்
யுத்தத்தில்
நாசம்
செய்து
தங்களை
அழைத்துப்
போவார்.
இது
நிச்சயம்”
என்று
ஜானகியை
ஸமாதானம்
செய்து
திரும்பிப்
போக
உத்தேசித்து
ஸீதையை
நமஸ்கரித்தார்.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
மாருதி,
தான்
வந்த
காரியம்
நிறைவேறினதால்
பிரபுவான
ராகவனைப்
பார்க்க
ஆசை
கொண்டு
அரிஷ்டமென்ற
பர்வதத்தில்
ஏறினார்.
அதில்
உன்னதமான
பத்மக
விருக்ஷங்கள்
செழித்து
வளர்ந்திருந்தன;
வனவரிசைகளால்
கறுப்பாகக்
காணப்பட்டது;
கொடிமுடியின்
நடுவில்
தொங்கும்
மேகங்கள்
உத்தரீயத்தைப்போல்
விளங்கின;
மங்களகரமான
ஸூரியகிரணங்களென்ற
கைகளால்
தட்டி
எழுப்பப்பட்டு
அந்தப்
பர்வதம்
தாதுக்களென்ற
கண்களை
விழித்துப்
பார்த்து,
கம்பீரமாகச்
சப்திக்கும்
மலையருவிகளால்
வேதங்களை
அத்யயனம்
செய்வதுபோலும்;
மலைச்சாரல்களில்
விழும்
நீர்த்தாரைகள்
இனிமையாகப்
பாடுவதுபோலும்;
ஆகாயத்தை
அளாவியிருக்கும்
தேவதாரு
மரங்களால்
கைகளை
மேலே
தூக்கிக்கொண்டிருப்பதுபோலும்;
கற்பாறைகளிலிருந்து
கீழே
விழும்
சுனைகளால்
அழுவதுபோலும்;
காற்றில்
ஆடும்
கறுத்த
ஏழிலைப்பாலை
மரங்களால்
நடுங்குவதுபோலும்;
காற்றால்
அசைக்கப்பட்ட
மூங்கில்களால்
கூவுவதுபோலும்;
பயங்கரமான
ஸர்ப்பங்களின்
சுவாஸத்தால்
கோபம்
மிகுந்து
பெருமூச்சு
விடுவதுபோலும்;
பனியால்
மூடப்பட்டிருக்கும்
குகைகளால்
தியானம்
செய்வதுபோலும்;
மேகங்கள்
இறங்கி
ஸஞ்சரிப்பதுபோலிருக்கும்
மலைத்தாழ்வரைகளால்
நாற்புறங்களிலும்
நடப்பது
போலும்;
மேகமாலைகளால்
அலங்கரிக்கப்பட்ட
சிகரங்களால்
ஆகாசத்தில்
வளர்வதுபோலும்
இருந்தது.
Prose passage
▾
Meaning
Keep
மாருதியின்
பாதங்களால்
உடைந்து
முறிந்த
குகைகளால்
நிறைந்திருந்தது.
ஆச்சா
பனை
அசுவகர்ணம்
முதலிய
விருக்ஷங்களாலும்,
மூங்கில்களாலும்,
பூங்கொத்துக்களையுடைய
கொடிகளாலும்,
மதுரமான
பழம்
கிழங்கு
வேர்
முதலியவைகளாலும்,
பலவித
மிருகங்களாலும்,
தாதுக்களாலும்,
மலையருவிகளாலும்,
கற்பாறைகளாலும்,
குகைகளில்
வஸிக்கும்
ஸிம்ஹங்களாலும்,
புலிக்கூட்டங்களாலும்,
மஹரிஷி
யக்ஷ
கந்தர்வ
கின்னர
உரககணங்களாலும்
நிறைந்த
அந்தப்
பர்வதத்தில்
ஆஞ்ஜநேயர்,
ராமனைப்
பார்க்க
ஆவல்
கொண்டு,
ஸந்தோஷமாய்
ஏறினார்.
அவருடைய
பாதங்களில்
அகப்பட்ட
தாழ்வரைகளிலுள்ள
பாறைகள்
நொறுங்கிப்
பெரும்
சப்தத்துடன்
சிதறி
விழுந்தன.
Prose passage
▾
Meaning
Keep
பிறகு
ஸமுத்திரத்தைத்
தாண்டி
வடகரை
சேர
நினைத்து
தேகத்தை
வளரச்
செய்து,
முன்போல்
இடையூறுகள்
இல்லாமல்
திரும்பிச்
செல்லவேண்டுமென்று
ராகவனைப்
பிரார்த்தித்தார்.
அந்த
மலையில்
ஏறி,
அனேக
ஜலஜந்துக்களால்
நிறைந்து
மிகவும்
பயங்கரமான
ஸமுத்திரத்தைப்
பார்த்து,
வாயுபுத்திரன்
தன்
பிதாவைப்போல்
தானும்
ஆகாசமார்க்கமாய்
அதிசீக்கிரத்தில்
ஸமுத்திரத்தைத்
தாண்டி
வடகரையைச்
சேர
நினைத்தார்.
Prose passage
▾
Meaning
Keep
அந்தப்
பர்வதம்
அவருடைய
காலடிகளால்
அழுந்தி,
அதிலுள்ள
ஜந்துக்களோடும்
பெயர்ந்துவிழும்
சிகரங்களோடும்
முறிந்துவிழும்
விருக்ஷங்களோடும்
பூமிக்குள்
மறைந்துபோவதுபோல்
சப்தித்தது.
அங்குள்ள
புஷ்பித்த
மரங்கள்
வஜ்ராயுதத்தால்
அடிபட்டதுபோல்
அவருடைய
துடைகளின்
வேகத்தால்
முறிந்து
பூமியில்
விழுந்தன.
குகைகளிலுள்ள
ஸிம்ஹங்கள்
தேகம்
நசுங்கி
வீரியம்
குன்றிக்
கதறுகிற
சப்தம்
பயங்கரமாய்
ஆகாசத்தைப்
பிளந்தது.
அங்கே
வஸித்த
வித்தியாதர
ஸ்த்ரீகள்
வஸ்திரங்கள்
நழுவ
ஆபரணங்கள்
சிதற,
அந்தப்
பர்வதத்திலிருந்து
சீக்கிரமாய்
உயரக்
கிளம்பினார்கள்.
பருத்த
தேகத்தையும்
அதிக
பலத்தையும்
உடைய
அங்கிருந்த
மலைப்பாம்புகள்,
பிரகாசமான
நாக்குகளுடன்
கோரமான
விஷங்களைக்
கக்கிக்கொண்டு
தலைகளும்
கழுத்துகளும்
நசுங்கித்
தரையில்
புரண்டன.
Prose passage
▾
Meaning
Keep
இப்படி
மாருதியால்
உபத்ரவிக்கப்பட்ட
அந்த
மலையிலிருந்து
கின்னர
உரக
கந்தர்வ
யக்ஷ
வித்யாதர
கணங்கள்
வேறிடங்களுக்குப்
போனார்கள்.
அவருடைய
பாரத்தையும்
வேகத்தையும்
தாங்காமல்,
முப்பது
யோஜனை
நீளமும்
பத்து
யோஜனை
அகலமுமுள்ள
அந்த
மலை,
மரங்களோடும்
மிருகங்களோடும்
பூமிக்குள்
நுழைந்து
பூமியோடு
ஸமமாயிற்று.
மலைகளைப்போன்ற
அலைகளால்
நிறைந்த
பயங்கரமான
ஸமுத்திரத்தைத்
தாண்ட
உத்தேசித்து
ஹநுமான்
பிறகு
விளையாட்டாய்
ஆகாசத்தில்
தாவினார்.
49
▾
Meaning
Keep
ஸ
லிலங்க⁴யிஷுர்
பீ⁴மம்
ஸலீலம்
லவணார்ணவம்
|
கல்லோலாஸ்போ²ல
வேலாந்தம்
உத்பபாத
நபோ⁴
ஹரி:
||
Previous
←
ஸீதை இறந்ததாக எண்ணி மாருதி துக்கித்தது
Next
மாருதி திரும்பி வந்தது
→